Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Snehavin Kaadhal
Snehavin Kaadhal
Snehavin Kaadhal
Ebook118 pages47 minutes

Snehavin Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஓடியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் இக்கால இளைஞர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள், அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் விதங்களைச் சொல்கிறது. பாலைவனத்தில் குளிர்ந்த நீர்ச்சுனை போல் சினேகா, பரத்தின் இனிய காதல். அது உண்மையிலேயே நீர்ச்சுனையா அல்லது கானல் நீரா? என்பதைக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்."

Languageதமிழ்
Release dateApr 22, 2023
ISBN6580162009754
Snehavin Kaadhal

Related to Snehavin Kaadhal

Related ebooks

Reviews for Snehavin Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Snehavin Kaadhal - Vasantha Govindarajan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    சினேகாவின் காதல்

    Snehavin Kaadhal

    Author:

    வசந்தா கோவிந்தராஜன்

    Vasantha Govindarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vasantha-govindarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பாகம் 1

    பாகம் 2

    பாகம் 3

    பாகம் 4

    பாகம் 5

    பாகம் 6

    பாகம் 7

    பாகம் 8

    பாகம் 9

    பாகம் 10

    பாகம் 11

    பாகம் 12

    பாகம் 13

    பாகம் 14

    பாகம் 15

    பாகம் 16

    பாகம் 17

    பாகம் 18

    பாகம் 19

    பாகம் 20

    பாகம் 21

    பாகம் 22

    பாகம் 23

    பாகம் 1

    சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாகனங்கள் காலை நேரப் பரபரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தன. காலையில் தாமதமாகக் கண் விழித்து காலை டிஃபனைக்கூடச் சாப்பிடாமல் பரபரப்பாகக் கிளம்பி வந்த இளைஞர்கள் அடி அடியாய் நகரும் டிராபிக்கைப் பார்த்து கடுப்பாகிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கதையின் நாயகி சினேகா வழக்கம் போல் அவளது டூ வீலரில் சீக்கிரமாக வந்து விட்டாள். அவளது அலுவலகம் அந்தக் கட்டிடத்தின் பத்தாவது மாடியில் எட்டாயிரம் சதுர அடி நிலப்பரப்பில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. லிஃப்டில் ஏறும்போதே அவள் மேனேஜர் ராமகிருஷ்ணனும் உள்ளே இருப்பதைப் பார்த்ததும் ‘சே! அடுத்ததில் ஏறியிருக்கலாமே’ என்று மனசுக்குள் முனகிக் கொண்டே அவரைப் பார்த்து சிரித்து வைத்தாள்.

    இதற்காகவே காத்திருந்த அவரும் ‘ஈ’யென இளித்தார். லிஃப்ட் கண்ணாடியில் ஒரு முறை அனிச்சையாகத் தன்னைப் பார்த்துக் கொண்டாள். வழக்கம்போல் சுடிதார் அணியாமல் இன்று ஜீன்ஸ், டீஷர்ட் அணிந்திருந்தது அவளை இன்னும் இளமையாக, வனப்பாகக் காட்டியது. கண்ணாடியில் ராமகிருஷ்ணன் ஜொள்ளு விடுவது தெரிந்து இன்று துப்பட்டா கூட இல்லையே என்று கவலைப்பட்டாள். கூட இருந்தவர்கள் யாரும் யாரையும் கவனிக்கவில்லை. அவரவர் தளம் வந்ததும் இறங்கிப்போய்க் கொண்டே இருந்தார்கள். இவள் தளம் வந்து விட்டது. இறங்கி வேகமாக நடந்தாள். அவள் அடையாள அட்டையை செருகி வருகையைப் பதிவு செய்து விட்டு அவள் இருக்கையில் போய் தொப்பென உட்கார்ந்தாள்.

    முகத்தில் வியர்வை அரும்புகள். கைப்பையுடன் பாத்ரூம் போய் லேசான ஒப்பனையுடன் வெளியே வந்தாள். இன்னும் நான்கு நாட்களில் முடிக்க வேண்டிய Projectஐ நினைத்தால் மலைப்பாய் இருந்தது. அவள் வேலையைத் தொடரட்டும். அதற்குள் அவளை உங்களுக்கு அறிமுகம் செய்து விடுகிறேன்.

    சினேகா பிறந்து வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலியில் தான். அவள் அப்பா அங்குள்ள மாவட்ட ஆட்சியர் (District Collector) அலுவலகத்தில் கிளார்க்காக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பதவி உயர்வு பெற்று இப்போது Gazetted officerஆக வேலை பார்க்கிறார். இவள் பள்ளி இறுதிவரை திருநெல்வேலியில் படித்து முடித்து நல்ல மார்க் வாங்கி சென்னையில் பொறியியல் படிக்கப் பல கனவுகளுடன் வந்து சேர்ந்தாள்.

    சென்னை வந்த புதிதில் குறைந்த மதிப்பெண் எடுத்த தோழிகள் கூடச் சரளமாக ஆங்கிலம் பேசுவது பார்த்து ஆச்சரியப்பட்டாள். அப்படிப் பேசுபவர்களிடமிருந்து ஒதுங்கிப் போனாள். அவர்கள் இவளை இழுத்து வைத்துப் பேசுவார்கள். பிறகுதான் புரிந்தது, ஆங்கிலம் பேசுவது பெரிய வித்தையல்ல என்பது. பேசப் பேச எளிதாய், சரளமாய் அவளுக்கும் வந்தது. கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி இப்போது பணிபுரியும் நிறுவனத்தில் வேலை கிடைத்து கிட்டத்தட்ட அவள் அப்பா இத்தனை வருட அனுபவத்திற்குப்பின் வாங்கும் சம்பளத்தை இப்போதே வாங்குகிறாள். அவளது இருபத்தி இரண்டு வயதிற்கான இளமையும், அதீத ஒப்பனை எதுவும் தேவைப்படாத இயற்கையான அழகும், புத்திசாலித்தனத்தை அறிவிக்கும் பளிச்சிடும் விழிகளும் பெண்களையே இன்னொரு முறை திரும்பிப் பார்க்க வைக்கும். அம்மாவின் அழகு அப்படியே அவளுக்கு வந்திருக்கு.

    அவள் அம்மாவுக்கு உலகமே அவள் வீடுதான். அவள் கணவர், குழந்தைகள், வயதான மாமியார் என திருநெல்வேலி தாண்டி வெளியே வருவதே அபூர்வம். இளைய மகன் சுரேஷ் படிப்பை விட அதிகமாக கிரிக்கெட்டை நேசிப்பவன். மாநில அளவில் விளையாடத் தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறான். அதற்கு வசதியாக சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் தான் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். இனிமேல் சினேகாவை கவனிப்போம்.

    அவளுடைய மொபைல் சத்தமில்லாமல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தாள். பரத். அவள் முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு. கொஞ்ச நேரம் இமைக்காமல் திரையில் தெரியும் அவன் முகத்தைப் பார்த்தாள். ஹாய்! என்ன இந்த நேரத்துல? என்றாள்.

    வீடியோ காலில் வரவா? உன்னை இப்பவே பார்க்கணும் போல இருக்கு என்றான். அவளுக்குக் காது மடல்கள் சூடான மாதிரி இருந்தது. இப்ப பேசறதே கஷ்டம். எல்லாரும் பக்கத்துல இருக்காங்க. மெசேஜ் பண்ணு என்றாள் மெதுவாக. மெசேஜ் பண்றேன், இப்ப Yes மட்டும் சொல்லு இன்னிக்கு evening Besant Nagar beach வரயா? என்று கேட்டான்.

    அவளுக்கும் பெசன்ட் நகர் பீச்சும் அஷ்டலஷ்மி கோவிலும் பிடிக்கும். இன்னிக்கு வெள்ளிக்கிழமை, போகலாம் என்று தோன்றியது. சரி என்று சொல்லி கட் பண்ணி விட்டு மாலை ஆறு மணிக்கு அஷ்டலட்சுமி கோவில் பக்கம் வருவதாக WhatsApp மெசேஜ் பண்ணினாள். பரத் தம்ஸ்அப் காட்டினான். எப்படியோ வர ஒத்துக்கொண்டாளே என்ற திருப்தி அவனுக்கு.

    அதன்பின் வேலையில் மூழ்கிவிட்டாள். தோழி சுனைனா வழக்கம் போல் லஞ்ச்பாக்சுடன் வந்த பிறகுதான் நேரம் பார்த்தாள். 1.30. அடடா, இந்த வேலையை நாலு நாளில் முடிக்க முடியாது போல இருக்கே, சனி, ஞாயிறு வேலை பார்க்கச் சொல்லுவார்களோ என்ற யோசனையுடன் கேண்டீனுக்குக் கிளம்பினாள்.

    அவள் இப்போது திருவான்மியூரில் ஒரு P.G.ல் தான் தங்கி இருக்கிறாள். சாப்பாடு சுமார் ரகம் என்றாலும் பாதுகாப்பாக இருப்பதால் இங்கேயே தொடர்கிறாள். சுனைனா தான் கொண்டு வரும் வீட்டு சாப்பாட்டை இவளிடம் கொடுத்து விட்டு இவள் கொண்டு போகும் ஏதோவொரு கலந்த சாதத்தை தான் சாப்பிட்டுக்கொள்வாள். கேட்டால் காலையில் வீட்டில் இதேதான் சாப்பிட்டேன் என்று சொல்லி இவளை சமாதானப்படுத்தி விடுவாள்.

    சுனைனாவுக்கு இவளும் பரத்தும் பழகுவது தெரியும். அதனால் இவளைக் கலாய்க்க ஆரம்பித்தாள். இந்த Week end என்ன புரோகிராம்? Movie book பண்ணி இருக்கீங்களா? இல்லை, ஏதாவது மால் போகப்போறீங்களா? எங்கிட்டக் கேட்டா ஏதாவது மொக்கைப் படத்துக்குப் போய் உட்கார்ந்து ஜாலியா enjoy பண்ணுங்க என்று கண்ணடித்தாள். சினேகாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. "சீ,

    Enjoying the preview?
    Page 1 of 1