Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கூடு மறந்த குயில்கள்
கூடு மறந்த குயில்கள்
கூடு மறந்த குயில்கள்
Ebook179 pages1 hour

கூடு மறந்த குயில்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலையில் கருணாகரன் எழுந்து காலைக் கடமைகளை முடித்துவிட்டு வந்தபோது ரூபா படித்துக் கொண்டிருந்தாள். பொழுது விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது. மீனா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.
 உள்ளே சாவித்திரி காபி போட்டுக் கொண்டிருந்தாள். மீனா உறங்குவதைப் பார்த்ததும் இரவு உண்டான கோபம் மறுபடியும் உண்டானது.
 மனைவியிடம் வந்தார். அவள் ரவா உப்புமாவுடன் போராடிக் கொண்டிருந்தாள்.
 "சாவித்திரி..."
 "சொல்லுங்க"
 "மீனாவைப் போய் பாரு..."
 "ஏன் அவளுக்கென்ன?" என்றாள் கொஞ்சம் எண்ணெயை ஊற்றிக் கொண்டே.
 "மணி ஏழாகப் போகுது. இன்னும் தூங்கறா. இந்த வருஷம் இப்படியே தூங்கினா..."
 "போதும் அவளைக் கரிச்சுக் கொட்டறதே உங்களுக்கு வேலையாப் போச்சு. ராத்திரி சினிமாவுக்குப் போனதுல ரொம்ப டயர்டா இருப்பா. தூங்கட்டுமே."
 "இந்த வருஷம் அவ ப்ளஸ் டூ. காலையில எழுந்து ரூபா படிச்சுக்கிட்டிருக்கறா... இவ தூங்கறா. இந்த வருஷம் அரசாங்கத் தேர்வு அவ எழுதணும். ஞாபகம் இருக்கா."
 சாவித்திரியின் முகம் மாறியது.
 "இதப்பாருங்க... மீனாவைப் பத்தி எனக்குத் தெரியும். அவ எத்தனை நாளைக்குத் தூங்கினாலும் வகுப்புல முதல் ஆளா வருவா. ஆனா...நீங்க தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடறீங்களே. அருமைப்பொண்ணு ரூபா அவதான் விடிய விடியப் படிச்சாலும் பாஸ் மார்க் வாங்கறதே அதிகம்" என்றாள்."இதப்பார். எது பேசினாலும் எதிர்த்துப் பேசறதே உனக்குப் பொழப்பா போயிடுச்சு. அவ இந்த வருஷம் அரசாங்கத் தேர்வு எழுதணும்னு சொல்றேன். நீ என்னடான்னா தூங்கினா பரவாயில்லைங்கறே. நீயே இப்படி அவளுக்கு ஒத்துப்பாடினா உருப்படுவாளா? அவளை எதுக்கு சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போனே?"
 "துணைக்கு யாரும் இல்லை அதான் கூட்டிட்டுப் போனேன்" அவளிடமிருந்து வேறுபட்ட குரலில் பதில் வந்தது.
 "துணைக்கு யாரும் இல்லைங்கறதுக்காக படிக்கற பொண்ணைக் கூட்டிட்டுப் போனியா? வீட்ல புள்ளைங்க எப்படி இருந்தாங்க தெரியுமா? சின்னதுங்க ரெண்டும் புழுதியில ஆடிக்கிட்டு இருக்குது. ரூபாவுக்கு இன்னைக்கு டெஸ்ட்டாம். அவ படிக்க வேண்டாமா? நீ பாட்டுக்கு போட்டது போட்டபடி போய்ட்டே. பாவம் அவ சமைக்கிறா. அவளை சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போய் படிக்கவிடாமப் பண்ணிட்டே. இவளை வீட்டு வேலை சொல்லிச் சொல்லி படிக்கவிடாமப் பண்ணிட்டே. புள்ளைங்களோட எதிர்காலம் ரொம்ப முக்கியம். அதை முதல்ல தெரிஞ்சுக்க. நம்மோட ஆசையெல்லாம் அப்பறம்தான்.."
 அவர் சொன்னதுதான் தாமதம். அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி டக்கென்று ஓசையுடன் தரையில் வைத்தாள். கோபம் கொந்தளிக்க அவரைப் பார்த்தாள்.
 "உங்க பொண்ணுங்களோட முன்னேற்றத்தை நான்தான் தடுக்குறேனா? நான் என்ன மாற்றாந்தாயா? நான் என்ன கெட்ட எண்ணம் பிடிச்சவளா? ஒரு நாள் சினிமாவுக்கு அவ படிப்புப் போய்ட்டுதா? ஒருவேளை பொண்ணு சமைச்சதை உங்களால வேலைக்காரியா? காலம் முழுவதும் உங்களுக்கு வடிச்சுக் கொட்ட? சொல்லுங்க . உங்களுக்கெல்லாம் ஆக்கி அவிச்சுக் கொட்டறதும், நீங்களெல்லாம் அவுத்துப் போடற துணியைத் துவைக்கிறதும்தான் எனக்கு வேலையா? அதுக்குத்தான் எங்கம்மா என்னைப் பெத்துப் போட்டிருக்கங்களா? நானும் எங்க வீட்ல செல்லமா வளர்ந்தவத்தான். ஒரே பொண்ணுன்னு எங்கம்மா என்னை சீரட்டிப் பாராட்டி வளர்த்தாங்க. இப்படி உங்ககிட்ட வந்து வாங்கணும்னு எனக்குத் தலையெழுத்து. ஒரு சினிமாவுக்குப் போகக்கூட எனக்கு உரிமை இல்லை" அவள் ஒரேயடியாக கத ஆரம்பித்ததில் ரூபாவால் படிக்க முடியவில்லைஅந்த சத்தத்தில் மீனாவும் எழுந்து விட்டாள். எழுந்து உட்கார்ந்து கொண்டு உடலைத் திமிர் முறித்தாள். சத்தமாய் கொட்டாவி விட்டாள்.
 கருணாகரன் தன் குரலை தழைத்துக் கொண்டு சொன்னார்.
 "சாவித்திரி...இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கத்தறே... பொண்ணுங்களோட படிப்புல நாம அக்கறையா இருக்க வேண்டாமா? அதுங்க நல்லா படிச்சு ஒரு வேலைக்குப் போக வேண்டாமா? பொம்பளைப் புள்ளைங்க அதுங்க தன்னோட கால்ல தான் நிக்கணும். அப்பதான் அதுங்க வாழ்க்கை நல்லாயிருக்கும்.பெத்தவங்களாயிருக்கற நாமே அதுக்குத் தடையா இருக்கலாமா?
 போன வாரம்தான் சினிமாவுக்குப் போனே. அதுக்குள்ள சினிமாவா? அதுமட்டுமா? வீட்ல வந்து சாப்பிடாம ரெண்டு பேரும் ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கீங்க தேவையா இது? என்னோட வருமானத்துல நாலு புள்ளைங்களைப் படிக்க வைக்கறதும், வளர்க்கறதும் எவ்வளவு கஷ்டம்? ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறே? ஒருத்தி வயசுக்கு வந்திட்டா. இன்னொருத்தி வர்றமாதிரி இருக்கா. இதுங்களை கட்டிக்கொடுக்க வேண்டாமா? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம ஏன் நடந்துக்கறே...?"
 அவர் அமைதியாக நிதானமாகப் பேச அவள் சுருசுருவெனக் கோபம் கொண்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798223833130
கூடு மறந்த குயில்கள்

Read more from R.Sumathi

Related to கூடு மறந்த குயில்கள்

Related ebooks

Related categories

Reviews for கூடு மறந்த குயில்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கூடு மறந்த குயில்கள் - R.Sumathi

    1

    கருணாகரன் வீட்டிற்கு வந்தபோது மணி இரவு ஏழு. வீட்டு வாசலில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு அவருடைய குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தன.

    நிலவு கொஞ்சமாய் வெளிச்சம் தந்து கொண்டிருந்தது. ஆனாலும் அதன் ஒளியில் தெருவிளக்கு மந்தமாக எரிந்து கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.

    தெருவில் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளெல்லாம் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரே சத்தம். கராமுராவென கத்திக் கொண்டும், சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தன.

    மற்றவர்கள் ஒரு நிமிடம் கருணாகரனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மறுபடி விளையாட்டைத் தொடர்ந்தனர்.

    அந்தச் சிறுவர் கூட்டத்தை நெருங்கியதும் அந்தக் கூட்டத்திலிருந்து இரண்டு பேர் மட்டும் பிரிந்து டேய்...அப்பா வந்தாச்சு - என்ற சத்தத்தோடு வீட்டினுள் ஓடினர்.

    கருணாகரன் அந்த வீட்டினுள் நுழைந்தார்.

    வீடு சிறிய ஓட்டு வீடு. வாடகை வீடுதான். ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை, சிறிய கூடம் இவைதான்.

    வெளியே சிறிய வராண்டா போலிருந்த இடத்தில் காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே வந்தபோது, தரையில் விளையாடியதால் உண்டான புழுதி நிறைந்த கால்களோடு சுமனும், கீர்த்தனாவும் அவசரத்தில் பிரித்த பக்கத்தில் கிடைத்த பாராவை வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்தனர்.

    கருணாகரன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். சூடாய் ஒரு டம்ளர் காபி குடித்தால் தேவலாம் போலிருந்தது. அதைக் கேட்க நினைத்தவருக்கு சுமனையும், கீர்த்தனாவையும் பார்த்ததில் கோபம் வந்ததால் காபி எண்ணத்தை மறந்து இருவரையும் பார்த்தார்.

    பார்த்ததும் கோபம் அதிகரித்தது. ஏய்...ரெண்டு பேரும் இங்க வாங்க என்றார்.

    இருவரும் எழுந்து தயக்கமாய் நடந்து வந்தனர். ஒருவரை ஒருவர் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டனர்.

    சுமன் இரண்டாம் வகுப்பு படிக்கின்றான். கீர்த்தனா ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.

    அப்பாவின் எதிரே இருவரும் நின்றனர். கருணாகரன் அவர்களைத் தலைமுதல் கால்வரை பார்த்தார். அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளெல்லாம் அழுக்காகியிருந்தது. முகம் கைகால் எங்கும் மண் புழுதி.

    மணி என்ன? என்றார்,

    சுமனுக்கு மணி பார்க்கத் தெரியாது. கீர்த்தனா சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தப் பார்த்தாள்.

    ஏழு... என்றாள் இழுத்தபடி.

    ஏழு மணி வரைக்கும் விளையாடணுமா? என்றார்.

    இருவரும் மௌனமாக நின்றனர். பயத்தில் அவர்களுடைய மேனி நடுங்குவதைப் பார்த்தார்.

    இது என்ன துணிமணியெல்லாம் இப்படியிருக்கு. ஆறுமணி ஆன உடனே கை, கால் கழுவிட்டு படிக்க உட்கார்ந்திடணும்னு சொல்லியிருக்கேன்ல. ஏழு மணி வரைக்கும் என்ன விளையாட்டு அவர் அதட்டவும் அவர்கள் மேலும் பயந்தனர்.

    அவருக்கு மனைவியின் மேல்தான் எரிச்சல் வந்தது. ‘ச்சை...எத்தனை தடவை சொல்லு. அறிவே கிடையாது. குழந்தைகளைக் கவனிப்பதில் அக்கறையே இல்லை. இப்படிப் புழுதியில் ஆடிக் கொண்டிருக்க இவர்களை விட்டு விட்டு இவள் என்ன செய்கிறாள்?’

    பற்களைக் கடித்தார்.

    அதை மட்டுமே அவரால் செய்ய முடியும். அவளைக் கடித்துக் குதறும் தைரியம் அவருக்கு இல்லை.

    உள்ளிருந்து சமையல் வாசனை வந்தது. எழுந்து நின்றார். கோபத்தை விழுங்கினார். போய் இந்த டிரஸ்ஸை கழற்றிப் போட்டுட்டு கைகால், முகமெல்லாம் கழுவிட்டு வந்து உட்கார்ந்து படிங்க என்றார். இருவரும் குளியலறையை நோக்கிச் செல்ல இவர் சட்டையைக் கழற்றினார்.

    அப்பா... ரூபாவின் குரல் கேட்டது.

    திரும்பினார்.

    ரூபாவின் கையில் காபி இருந்தது.

    அப்பா காபி குடிங்க.

    அதை வாங்கிக் கொண்டவர், அம்மா எங்கம்மா? என்றார்.

    அம்மா சினிமாவுக்குப் போயிருக்காங்கப்பா.

    ஆத்திரம் நெஞ்சில் எழ காபியைக் குடிக்க முடியலை.

    ம்... என்றவர் ஒரு வாய் சிரமப்பட்டு உறிஞ்சினார்.

    மீனா எங்கம்மா? டியூஷன்லேர்ந்து இன்னும் வரலையா? என்றார்.

    அவளும் அம்மாவோட சேர்ந்து போயிருக்காப்பா...

    திக்கென்றது அவருக்கு. ‘அவள் இந்த வருடம் ப்ளஸ் டூ. அவளை இவள் அடிக்கடி சினிமாவிற்கு அழைத்துப் போகிறாள்.’

    மறுபடியும் நெஞ்சுவரை கோபம் வந்தது. அடக்கிக் கொண்டார். காபியை முழுவதுமாகக் குடித்துவிட்டு டம்ளரை மகளிடம் கொடுத்தார்.

    அதை வாங்கிக் கொண்டு அவள் சமையலறைக்குள் சென்று விட்டாள். கருணாகரன் பேண்ட்டிலிருந்து கைலிக்கு மாறினார்.

    சுமனும், கீர்த்தனாவும் கைகால்களைக் கழுவிவிட்டு வேறு உடைக்கு மாறி வந்து உட்கார்ந்து புத்தகத்தைப் பிரித்தனர்.

    கருணாகரன் சமையலறைக்குள் நுழைந்தார்.

    ரூபா இடது கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு வாய்விட்டுப் படித்தவாறே அடுப்பில் வெங்காயத்தை வதக்கிக் கொண்டிருந்தாள்.

    அதைக் கண்டதும் அவருக்கு மனதில் என்னவோ உண்டானது.

    ஏம்மா... நீ சினிமாவுக்குப் போகலையா?

    இல்லைப்பா. எனக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு படிக்கணும்.

    உனக்கு டெஸ்ட் இருக்குன்னு அம்மாவுக்குத் தெரியுமா?

    தெரியும்ப்பா.

    தெரிஞ்சுக்கிட்டே உன்னைச் சமைக்கச் சொல்லிட்டுப் போனாளா? ரூபா எதுவும் பேசவில்லை. மௌனமாக வெங்காயத்தை வதக்கினாள். கருணாகரனுக்கு ஆத்திரம் மறுபடியும் நெஞ்சுக்குள் சுழன்றது. அடக்கினார்.

    சரி...நீ போய் படி... நான் பார்த்துக்கறேன்.

    வேண்டாம்பா. நீங்க இப்பத்தான் வேலைவிட்டு வந்திருக்கீங்க. களைப்பா இருக்கும். நீங்க போய் ரெஸ்ட் எடுங்கப்பா.

    ம்... என்னோட ரெஸ்ட் முக்கியம் இல்லைம்மா. உன்னோட படிப்புதான் முக்கியம் போய் படி... என்றார்.

    அப்பா...

    போம்மா. போய்ப் படி என்றார்.

    அவள் தயக்கமாய் வெளியேறினாள், சில நிமிடங்களில் அவள் உற்சாகமாய் படிக்கத் தொடங்கினாள். அவள் படிப்பது அவருக்குள் ஏதோ ஒரு உற்சாகத்தைத் தர சமையலைத் தொடர்ந்தார்.

    வதக்கிய வெங்காயத்துடன் ரூபா நறுக்கி வைத்திருந்த அவரைக்காயைப் போட்டு உப்பு, காரம் சேர்த்து கூட்டு தயாரித்தார். மதியம் வைத்த குழம்பு இருந்தது. சாதம் வடித்து, செய்து வைத்த கூட்டை ருசி பார்த்தார். பரவாயில்லை என்று தோன்றியது.

    களைப்பாக இருந்தது. படுத்து விடலாம் போலிருந்தது. ஓடியாடி வேலை செய்ததில் இடுப்பு வலித்தது.

    வேலை முடித்து களைப்பாக அவர் வீடு வந்தால் அன்பாய் அரவணைத்து ஆசையாய் காபி கொடுக்க மனைவி இல்லை.

    இது இன்றைக்கு மட்டுமல்ல. பழக்கமாகி விட்டது. அவருக்கு அலுத்து விட்டது. அவருக்கு சமையலைக் கற்றுத்தந்ததே அவள்தான். அடிக்கடி அவள் இப்படிப் போய்விடுவாள். திருமணமான புதிதிலிருந்தே அவளுடைய சுபாவம் இப்படித்தான் இருந்தது. அதனால் அவர் அடைந்த வேதனை கொஞ்சமில்லை.

    திருந்துவாள் திருந்துவாள் என அவரும் எதிர்பார்த்தார். ஆனால் குழந்தைகள் வளர்ந்தார்கள். அவர்களுக்கு உண்டான அறிவுகூட அவளுக்கு உண்டாகவில்லையே என்று நினைத்தார்.

    அவள் சினிமாவிற்கு போவது கூட அவருக்குக் கோபத்தை அதிகம் உண்டாக்கவில்லை. போனவள் தனியாகப் போனால் என்ன? எதற்காக அரசுத் தேர்வு எழுத வேண்டிய மீனாவையும் உடன் அழைத்துச் சென்றாள், என்பது தான் அவருக்கு இன்னும் கோபத்தை உண்டாக்கியது.

    மீனாவைப் பற்றி அவருக்கு பயம் இருந்தது. அவளுக்கும் அப்படியே அம்மாவின் குணம் இருந்தது. அம்மாவைப் போலவே இவளும் வளர்கிறாளே என கவலை கொண்டார்.

    அவளைப் படி என சொல்லிவிட்டுப் போகாமல், இவள் எதற்கு அழைத்துக் கொண்டு போனாள்?

    ஆத்திரம் வந்தது.

    சமைத்து முடித்து வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தபோது சுமனும், கீர்த்தனாவும் புத்தகத்தின் எதிரே கண்களைப் பாதி மூடிக்கொண்டு சொக்கி சொக்கி விழுந்தனர்.

    பசியின் முகவரி முகத்தில் தெரிந்தது.

    கீர்த்தனா...

    அவருடைய குரலுக்கு சுமனும், கீர்த்தனாவும் திடுக்கிட்டு முழுவதுமாக விழிகளைத் திறந்து படிப்பதாக காட்டிக் கொள்ள எதையோ உளறினார்.

    அவர்களுடைய செய்கை அவருக்கு சிரிப்பையே உண்டாக்கியது.

    படிச்சது போதும். சாப்பிட வாங்க என்றார்.

    இருவரும் புத்தகத்தை மூடிவிட்டு ஓடி வந்தனர்.

    ரூபா படிப்பதை நிறுத்திவிட்டு அப்பாவைப் பார்த்தாள்.

    அப்பா நான் சாப்பாடு போடறேன். நீங்க போங்கப்பா என்றாள்.

    வேண்டாம்மா. நீயும் வா... சாப்பிட்டுட்டுப் போய்ப் படி என்றார்.

    நான் அப்புறம் சாப்பிடறேனே.

    வாம்மா... சாப்பிட்டுட்டு படிக்கலாம் என்று அழைத்தார். புத்தகத்தை வைத்துவிட்டு அவளும் வந்தாள்.

    கருணாகரன் மூவருக்கும் தட்டுக்களை வைத்தார். ரூபாவும் அப்பாவிற்கு உதவியாக உணவுப் பாத்திரங்களைக் கொண்டு வந்து வைத்தாள். தண்ணீர் கொண்டு வந்தாள். அப்பா மூன்று தட்டுக்களிலும் உணவைப் பரிமாறினார். பசியின் வேகத்தில் ரூபாவைத் தவிர மற்ற இருவரும் அவசர அவசரமாக சாப்பிடுவதைப் பார்த்தார்.

    மனதிற்குள் ஏனோ பாவமாக இருந்தது. மனைவி வந்ததும் சாப்பிடலாம் என்று தோன்றியது. மனைவியின் கையால் சாப்பிடத்தான் அவருக்கு ஆசை.

    ஆனால்-

    அவருக்கு பசிக்கின்ற வேளையில் அவள் இப்படித்தான்; இருக்கமாட்டாள்.

    இப்பொழுது அவள் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றியது. திருமணமான புதிதில்...அதைத் தொடர்ந்த பல வருடங்களில் அவள் அவரைப் படுத்திய பாடு. ச்சை!...

    இப்பொழுது நினைத்தாலும் எரிச்சல் வருகிறது.

    குழந்தைகள் கொஞ்சம் வளர வளர சற்று மாறியிருப்பதாகத் தோன்றியது. ஆனால், இப்படித்தான்...திடீரென காணாமல் போய்விடுவாள். சினிமா, கோவில், தெரிந்தவர் வீடு...இப்படி. பெரும்பாலும் சினிமாதான் முதலிடம் வகிக்கும்.

    அப்படி அவள் சென்றுவிட்ட நாட்களில் இப்படித்தான் வீட்டில் அவர் சமைக்க நேரிடும்.

    பழையபடி அவளைத் திட்டவும் முடியவில்லை அவரால்.

    வயதுவந்த பெண்ணை வைத்துக்கொண்டு அவளைத் திட்டுவதற்கு அவருக்கு ஒருமாதிரியாக இருந்தது. ஆனால் அதற்கு அவள் நேர்மாறாக இருந்தாள். யார் முன்னிலையில் வேண்டுமானாலும் திட்டி விடுவாள்.

    அது அவளுடைய சுபாவம். ஆரம்பத்தில் வலித்தது. பிறகு பழகிப் போய்விட்டது.

    மனைவி வந்து சாப்பிடலாம் என்று மனம் சொன்னது. ஆனால் வயிறு ஒத்துக் கொள்ளவில்லை.

    இவ்வுலகில் எதற்கும் அடங்காத ஒன்று இந்த வயிறுதான். எல்லோரும் அதற்குத்தான் அடங்க வேண்டும்.

    சாப்பிட்டு முடித்ததும் ரூபா எல்லாத் தட்டுகளையும் எடுத்துச் சென்றாள். கழுவி வைத்துவிட்டு வந்து கேட்டாள்.

    அப்பா, உங்களுக்கும் சாப்பாடு போடட்டுமா? என்றாள்.

    நீ போய் படிம்மா. நான் போட்டுக்கறேன் என்றார்.

    இல்லப்பா. நானே போட்டுட்டு வர்றேன் என்று சாப்பாடு போட்டுக் கொண்டு வந்து வைத்தாள்.

    சாப்பிட்டுவிட்டுக் கை கழுவியதும் தூக்கம் கண்களை வருடியது. ரூபா மட்டும் படித்துக் கொண்டிருந்தாள். அறையில் கீர்த்தனா

    Enjoying the preview?
    Page 1 of 1