Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதல் மின்னல்
காதல் மின்னல்
காதல் மின்னல்
Ebook112 pages39 minutes

காதல் மின்னல்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுதாமதி வீட்டிற்கு மூத்த பெண். முதல் பெண் பார்க்கும் படலம். அதனால் வீடு புது விதமான உற்சாகத்தோடு இயங்கியது.
 தரகர் சொன்னதைப் போல் ஞாயித்துக்கிழமை பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்தார். சரியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் வருவதாகத் தொலைபேசி செய்து சொன்னார். சுந்தரம் பிள்ளை மதியம் கடைக்குச் செல்லவில்லை. சுந்தரம் பிள்ளை நண்பர் சிலருடன் சேர்ந்து மருந்துக்கடை வைத்திருந்தார்.
 ஏற்கெனவே சுத்தமாக இருந்த வீட்டை இன்னும் சுத்தமாக்கிக் கொண்டிருந்தார்.
 சோபாக்களை இடம் மாற்றிப் போட்டுப் பார்த்தார். தொலைக்காட்சி, தொலைபேசி போன்றவற்றைத் துடைத்தார். அவருடன் சேர்ந்து சித்ராவும் சுத்தமாக்கும் வேலையில் இறங்கினாள்.
 சித்ரா அவருடைய கடைசிப் பெண். பத்தாம் வகுப்பும் படிப்பவள்.
 சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களை எடுத்துத் துடைத்து மறுபடி மாட்டினாள்.
 "சித்ரா... அம்மாவைக் கூப்பிடு." மகளிடம் கூறியவாறே கடிகாரத்தைப் பார்த்தார், சுந்தரம் பிள்ளை. மணி மூன்றாகி விட்டிருந்தது.
 "அம்மா... அப்பா கூப்பிடறார்." சித்ரா உள் நோக்கிக் குரல் கொடுத்தாள். சமையலறையிலிருந்து விசாலாட்சி வெளியே வந்தாள்.
 "ஏன் கூப்பிட்டீங்க?" என்று கணவரின் அருகே வந்தாள்.
 "விசாலாட்சி... என்ன டிபன் பண்ணப் போறே?"
 "என்ன பண்ணலாம்ன்னு நீங்களே சொல்லுங்க," என்று சிரித்தாள்"எது செய்தாலும் அருமையா செய்யணும். அதான் முக்கியம்."
 "அப்படின்னா… நான் அருமையா இதுவரை செய்த இல்லையா?" சட்டென்று முகம் சுருக்கினாள் விசாலாட்சி.
 "நான் என்ன அந்த அர்த்தத்திலா சொன்னேன்? வர்றவங்க எதையும் குறை சொல்ல முடியாத அளவுக்குச் செய்யணும். ஏன்னா... அவங்களுக்குப் போட்டோவில பொண்ணைப் பார்த்ததுமே பிடிச்சுப் போய்ட்டதாம். தரகர் சொன்னார். அதனால இன்னைக்கே பேசி முடிச்சு நிச்சயத்திற்கு நாள் குறிச்சாலும் குறிச்சுடுவாங்க."
 "கடவுள் புண்ணியத்துல நினைச்ச மாதிரியே நடக்கணும்." அனிச்சையாய் நெஞ்சுக்கு நேரே கைகளைக் குவித்து வேண்டிக் கொண்டாள் விசாலாட்சி.
 "கேரட் அல்வா பண்ணிடு. இனிப்புக்கு இருக்கட்டும் முட்டைகோஸ், கேரட் துருவிப் போட்டு பண்ணுவியே பஜ்ஜி அது பண்ணிடு. கடையிலேர்ந்து மிக்சர் வாங்கிட்டு வரவா?"
 "சரி."
 "சுதாமதி என்ன பண்றா?"
 "தூங்கறான்னு நினைக்கிறேன்."
 "தூங்கட்டும். தூங்கி எழுந்தா முகம் ஃபிரஷ்ஷாயிருக்கும் கீதாவை வச்சுக்கிட்டு நீ டிபனை ரெடி பண்ணு."
 "சரி..." என்றவாறு விசாலாட்சி மாடிப்படிகளில் ஏறினாள்
 மேலே வந்து அறைக் கதவைத் திறந்தவளுக்குத் திகைப்பாகயிருந்தது. சுதாமதியும், கீதாவும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்து வந்தவளுக்கு அலங்காரத்தில் ஈடுபட்டிருந்த இருவரையும் பார்த்ததும் சிரிப்பு வந்தது.
 'என்ன பெண்கள் இவர்கள். ஐந்து மணிக்குத்தானே மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர். அதற்குள் இந்த பெண்கள் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ளனரே! பெண்ணே... கல்யாண ஆசை வந்துவிட்டதா உனக்கு?'
 முகத்தில் சிரிப்புப் பொங்க விசாலாட்சி உள்ளே வந்தாள் அடர்ந்த குங்கும நிறக் கலரில் கையளவு ஜரிகை போட்ட பட்டுப் புடவையில் சுதாமதி அழகோவியமாகக் கண்ணாடி முன் நின்றிருந்தாள். அழகாகப் பின்னியநீண்ட கரிய ஜடையின் உச்சியில் கனகாம்பரமும் முல்லையும் கலந்து இறுக்கமாகத் தொடுத்த பூச்சரம் சூடியிருந்தாள். அழகான முகத்தில் சீராகத் தீட்டிய புருவமும் சிவந்த இதழ்களும் மை தீட்டிய விழிகளும் பெற்ற மனதையே மயக்கின.
 'என்ன அழகு என் மகள்!' என இதயம் சிலிர்த்தாள், கீதா அக்காவின் சேலையைச் சரி செய்து கொண்டிருந்தாள்.
 "என்னடி... இது? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அஞ்சு மணிக்குத்தானே வர்றதா சொல்லியிருக்காங்க. மூணு மணிக்கெல்லாம் எதுக்கடி அக்காவுக்கு அலங்காரம் பண்ணி வச்சிருக்கே? அப்பறம் அலங்காரமெல்லாம் கலைஞ்சிடாதா?"
 "அஞ்சு மணிக்கா? அக்கா மூணு மணிக்கெல்லாம் டாண்ணு வந்திடுவாங்கன்னு என்னை அவசரம் அவசரமா அலங்காரம் பண்ணச் சொன்னாளே!"
 "ஆமாண்டி. இவகிட்டதான் மாப்பிள்ளை போன் பண்ணிச் சொன்னார்? எதையும் சரியாக் காதுல வாங்கிக்கிறதில்லை. நான் இன்னும் டிபன் செய்ய ஆரம்பிக்கவேயில்லை. கீதா, நீ கொஞ்சம் கிச்சனுக்கு வந்து எனக்கு உதவி பண்ணு...'
 அவள் சொன்ன அதே நேரம் சர்ரென வாசலில் வாகனம் ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்டது. விசாலாட்சி திடுக்கிட்டு ஜன்னல் வழியே பார்வையை ஓட விட்டாள். அம்மாவின் தோள் வழியே முகத்தை நீட்டிக் கீதாவும் எட்டிப் பார்த்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224930104
காதல் மின்னல்

Read more from R.Sumathi

Related to காதல் மின்னல்

Related ebooks

Reviews for காதல் மின்னல்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதல் மின்னல் - R.Sumathi

    webook_preview_excerpt.html[n#~IYp.Nl' .@e\@CKB 'LUows(ـ!K3=U_}ӽ_oVݾkw|casG~}sS=m~<N9e_3k{nZCr46b`gHFWE7{:xa]À6$Xރd4n:y:IMf[DċtH;cxʹ%ąpyDsxM ɂmk_,id ӷ;Hjdgy:,o"i?PҲ>nU/dny+(롈iU43l&_~`D!LFNd[aJd($7m+ͻv.*f4M3;x3nѣ#X!{ ?#q;U!z)aˁhA1':YSp>&eJf 7Yl`K"̱G<΃WI1E}L*2]ָ%-BsF Q|Uv$eT-ztS r3ƄpdLMC&{'N'f Ǽ%)3њf6cFS{J"؇1U(0(S#oGrVM!@O6i M y-IvIAQ3GG)ՀJVي VK ў}qsI7Zb:ff0dQN$}uvfL9bȔ;.ie:DxԹ%HukWd-oM􋨡Iƈ5&a*^_;mT MrM)8T5JF\ c{}-RR(IqIƟK[(^X*x XsH?OUyss4Ox~M*;ũ!b1Hj͐қ4o[fV.: P:ڋ7KoIR\#%m|UGRew%UZڥδ8WTskR $oHdU+r ^†"]+eXe06}%*\{F48g]Z̯;pe6TP$aA9ue45 #KIm{kur 4I}5a}L{ Sַ9M`6ɍExr}0[1*s`)q[QysH1+9ǖ$NzzS 1fWWT6𢹩Ć]LT:6 /}658G4P,N@E[²&o~6u/+O\2/:6ueDX]b׻wduIRLELRffC^ ]ڬ{_T^.OՆTF8rBy[d8mK=+iʅ+F͉6S~+^dXa}>?mJ' uS]gm̈713HOkZHuj1h,^Q63CNS|2_1r+w.e%UtpFp X&Ylek_q Ơ5^G`G#.QH+u(c.`w\RÓ%CL ܦ;=' g5A$m4 ߺuC TFLVrNOݝMERId͉=@JZ8nˢzAwF-IonafPBdkx|Q8947mYV8O|o:Vs3|:IY& A>&CN[甊KH|?D ?+K)Ď؃"6OUl[3^휒/ho#?kV_o0^gCٓaW}P~P,j'0#sT9Մݻ}gܳ0T8v65
    Enjoying the preview?
    Page 1 of 1