Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பொன் நிலாவில் என் கனாவே!
பொன் நிலாவில் என் கனாவே!
பொன் நிலாவில் என் கனாவே!
Ebook108 pages39 minutes

பொன் நிலாவில் என் கனாவே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோலமாவைக் கையில் வைத்தபடி முகத்தில் படர்ந்த பயத்துடன் சிலை போல் அமர்ந்திருந்த பத்மினியை லதா பாவமாகப் பார்த்தாள். பத்மினியின் பயம் அவளுக்குப் புரிந்தது.
 காலையில் கணக்குப் போட தன் வீட்டுக்கு வந்த பத்மினியிடம் கோவிலில் கோலம் போட வேண்டும் என்று சொன்னபோது அவள் முகத்தில் உண்டான பயம் இப்பொழுது மறுபடி அவளுடைய முகத்தில் படர்ந்ததைப் பார்த்தாள்.
 "பத்மினி... இன்னைக்குக் கோவிலுக்கு யாரோ ஒரு மகான் வர்றாராம். அதனால அப்பா கோவில்ல கோலம் போடச் சொன்னார். வா... போய் போடலாம்!" என்று லதா சொன்னபோதே பெரிதாக அலறினாள் பத்மினி.
 "ஐய்யய்யோ நான் வரலைப்பா... எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா என்னை வெட்டிப் போட்டுடுவாரு..."
 பத்மினி எப்பொழுதும் இப்படித்தான் கோவில், குளம் என்றாலே அலறுவாள். காரணம் ஆனந்தனுக்கு... பத்மினியின் தந்தைக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அந்த நம்பிக்கையை வீடே பின்பற்ற வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பவர். வீட்டில் பூஜை, புனஸ்காரம் என்று எதுவும் கூடாது. கடவுள் படம் என்று எதுவும் இருக்கக் கூடாது. மனைவி அவர் சொற்படி நடப்பாள்.
 வீட்டில் பூஜை, நல்ல நாள் கிழமை எதுவும் கொண்டாடக் கூடாது. அதோடு மட்டுமல்ல... பக்கத்து வீட்டிலிருந்து சாமிக்குப் படைத்த உணவுப் பண்டங்கள், பலகாரங்கள் என எதுவும் வீட்டிற்கு வரக்கூடாது.
 அக்கம் பக்கத்தாருக்கும் அவரைப் பற்றித் தெரியுமாதலால் யாரும் எதுவும் வீட்டிற்குக் கொடுத்து விட மாட்டார்கள். சம்போதி மட்டும் நைசாக அவர்கள் வீட்டிற்குச் சென்று மூக்கைப் பிடிக்கச் சாப்பிட்டு விட்டு வந்து விடுவான்.பொதுவாகவே ஓட்டை வாயான சம்போதி எந்த ரகசியத்தையும் பாதுகாக்க மாட்டான். அப்படிப்பட்டவன் பாதுகாக்கும் ஒரே ரகசியம்... இப்படிப் பக்கத்து வீட்டில் சாப்பிட்டதைச் சொல்லாமல் இருப்பதுதான்.
 இன்னும் சொல்லப் போனால்... ஆனந்தனுக்கு பத்மினி லதாவின் வீட்டிற்குச் செல்வதோ... அவளுடன் பழகுவதோ சுத்தமாகப் பிடிக்காது.
 காரணம்... லதாவின் தந்தை கோவில் குருக்கள். கோவிலே வீடாக... வீடே கோவிலாக வாழ்பவர். சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்கு, கடவுள் நம்பிக்கை இவையே மூச்சாக வாழும் மனிதர். அந்தக் குடும்பத்தில் பிறந்த லதாவுடன் மகள் பழகுவதே ஆனந்தனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்.
 கையில் கோலமாவுடன் பயந்த முகத்துடன் அமர்ந்திருந்த பத்மினியைப் பார்த்த லதா அவளை அசைத்தாள். "யேய்... கோலத்தைப் போடு!"
 "எனக்குப் பயமாயிருக்குடி!"
 "என்ன பயம்?"
 "உனக்குத்தான் தெரியுமே... இப்படிக் கோவில் குளம்னு போவதெல்லாம் எங்கப்பாவுக்குப் பிடிக்காதுன்னு. நான் கோவில்ல வந்து கோலம் போட்டது தெரிஞ்சுதுன்னா அவ்வளவுதான்... என்னை வெட்டிப் போட்டுடுவாரு. சம்போதி போய் என்னைச் சக்கையா மாட்டி விட்டுடுவான். வீடே ரெண்டாகப் போகுது..."
 "ப்ச்! உங்கப்பாவை நினைச்சா எனக்கு எரிச்சல்தான் வருது. கடவுள் நம்பிக்கைங்கிறது அவங்கவங்க தனிப்பட்ட விஷயம். மனசு சம்பந்தப்பட்ட நம்பிக்கை. ஒருத்தங்க வற்புறுத்துறதால பக்தியை வரவழைச்சிட முடியாது. ஒருத்தரைத் தடை பண்றதால அவங்க மனசுல இருந்து நம்பிக்கையை எடுத்துட முடியாது...
 உங்கப்பாவுக்குக் கடவுள் மேல நம்பிக்கை இல்லைங்கறதால வீட்டுல உள்ளவங்க சாமி கும்பிடக் கூடாது. வீட்டுல சாமி படங்கள் வைக்கக் கூடாது. நல்ல நாள் விசேஷங்கள் கொண்டாடக் கூடாதுன்னு சட்டம் போட்டு அமல்படுத்தறது என்ன நியாயம்? உங்கப்பா உன்னை இன்னைக்குத் திட்டினா நீ எதிர்த்துக் கேளு..."ஐய்யய்யோ... எங்கப்பாவை எதிர்த்துப் பேசுறதா? கடவுளே... அது இமயமலையை எதிர்க்கிறதுக்குச் சமம்! அந்தத் தைரியம் யாருக்குமே இல்லை..."
 "உங்கப்பா ஆரம்பத்திலேருந்தே இப்படித்தானா?"
 "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. எங்கப்பாவும் ஆரம்பத்துல கடவுள் நம்பிக்கை உள்ளவராத்தான் இருந்தாராம். கோவில், குளம்னு போய்கிட்டு இருந்தவர்தானாம். எங்க வீட்டுலயும் எல்லாப் பக்தி விசேஷங்களும் நடந்துக்கிட்டுத்தான் இருந்ததாம்..."
 "அப்புறம் எப்படி உங்கப்பா இப்படி மாறினார்? உங்கப்பாவை யார் மாற்றினா?"
 "யாரும் மாற்றலை... என் தம்பி இப்படிப் பிறந்ததிலேருந்து எங்கப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை போயிடுச்சாம். அதிலேருந்துதான் இப்படி நடந்துக்கிட்டிருக்கார்.
 கடவுள் மேல மட்டும் வெறுப்பு இல்லை. என் தம்பி மேலயும் அந்த வெறுப்பைக் காட்டுவார். அவனைப் பார்த்தாலே அவருக்கு மூடு அவுட்டாயிடும். எரிச்சலாப் பேசுவார். சில சமயம் பி.பி. அதிகமான மாதிரிக் கத்த ஆரம்பிச்சுடுவார்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223233480
பொன் நிலாவில் என் கனாவே!

Read more from R.Sumathi

Related to பொன் நிலாவில் என் கனாவே!

Related ebooks

Related categories

Reviews for பொன் நிலாவில் என் கனாவே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பொன் நிலாவில் என் கனாவே! - R.Sumathi

    1

    பத்மினியைத் தேடி பொன்னி வந்தபோது மலர்விழி பின் பக்கம் துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.

    அக்கா... பத்மினி இருக்காளா?

    ம்க்கும்... அவ இருந்தா நான் ஏன் இப்படி மாங்கு மாங்குன்னு துணி துவைக்கிறேன். அவ தலையில கட்டிட்டு காலை நீட்டிப் படுத்துட மாட்டேன்? கழுதை காலையில போனதுதான். மதியானம் கொட்டிக்கக்கூட வரலை. அதுக்கென்ன ஐயர் வூட்டுச் சாப்பாடும் அரைச்சு விட்ட சாம்பாரும் நெய் கத்திரிக்காயும் வக்கணையாக கிடைச்சிருக்கும். சப்புக்கொட்டிச் சாப்பிட்டுட்டு வந்து ராத்திரிக்கு என் குழம்பை ஆயிரம் குத்தம் குறை சொல்லும்.

    மலர்விழி சோப்பு நுரையைப் போல் முகமெங்கும் கோபத்தை பெருக்கிக் காட்டினாள்.

    லதா வீட்டுக்குப் போயிருக்காளா?

    ஆமா! கழுதை கெட்டா குட்டிச்சுவர். லதாவை விட்டா இவளுக்கு வேற யாரு ஃப்ரண்ட்? லீவு நாளும் அதுவுமா வீட்லயிருந்து வேலையைப் பார்ப்போம். கூடமாட அம்மாவுக்கு ஒத்தாசை செய்வோம்னு இல்லாம இந்தப் பொண்ணு என்னமோ ரெக்கார்டு நோட் புக் எழுதணும்னு காலையில அவ வீட்டுக்குப் போனதுதான்... இன்னும் வந்த பாடு இல்லை. ஆமா நீ எதுக்குடி அவளைத் தேடி?

    என் பையனுக்கு என்னமோ கணக்குப் போட வரலையாம். அதைப் போடாமப் போனா வாத்தியாரு வெளியில நிக்க வச்சுடுவாராம். ஒரே அழுகை. அதான் இவளைக் கூட்டிக்கிட்டுப் போய் சொல்லிக் கொடுக்க வைக்கலாம்னு வந்தேன்.

    இந்தச் சம்போதிப் பயலை விட்டு அவளைக் கூட்டியாரச் சொல்லலாம்னு பார்த்தா... இந்தக் கழுதையும் எங்கோ போய் தொலைஞ்சுட்டு. அவங்க அப்பா வந்தா... பொண்ணு வீட்ல இல்லைன்னா காச்மூச்சுன்னு கத்துவாரு.

    சம்போதி எங்க வீட்லதான் இருக்கான். என் புள்ளையோட விளையாடிக்கிட்டிருந்தான். கணக்குத் தெரியலைன்னு அவன் அழ ஆரம்பிச்சதும்... நான் சொல்லித் தர்றேன் வாடான்னு அவனைச் சமாதானப் படுத்திக்கிட்டிருந்தான்.

    ஆமா! கிழிச்சான். நீ போய் சம்போதியை அனுப்பி பத்மினியை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லு.

    சரிக்கா... என்றவாறே பொன்னி சென்றாள்.

    பொன்னி சென்ற பின்பும் மலர்விழி பத்மினியை ஏதேதோ திட்டியவாறே துணி துவைப்பதைத் தொடர்ந்தாள்.

    லதாவின் வீடு நோக்கி சம்போதி துள்ளித் துள்ளி ஓடினான். முகம் ஒரு பக்கம் கோணிக் கொண்டு வானத்தைப் பார்த்தது. வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. கண் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு மூக்கு ஒரு பக்கம் விடைத்துக் கொண்டு தாறுமாறாகப் பற்கள் முகத்தை அசிங்கமாக்கியிருந்தது.

    ஒரு கால் உந்தி உந்தி நடக்கும் நிலையில் இருந்தது. ஒல்லியான உடல்வாகு அரைக்கால் சட்டை. மேலே வெள்ளை பனியன் மட்டும். கழுத்தில் எவர்சில்வர் செயின்.

    பார்க்கும்போதே தெரிந்தது, அவன் ஒரு மனநலம் குன்றிய மனிதன் என்று.

    எட்டாவது ஒன்பதாவது படிக்கும் வயது அவனுக்கு. ஆனால் பள்ளிக்கூடம் அவனை அனுமதிக்கவில்லை. அவளைப் போன்ற சிறுவர்கள் படிப்பதற்கான பள்ளிக் கூடத்தில் வசதி இருந்தும் சேர்க்கவில்லை ஆனந்தன் - பத்மினியின் தந்தை. மனசு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    லதாவின் வீடு இருந்த அக்ரஹாரத் தெருவிற்குள் ஏதோ ஒரு பாட்டைப் பாடிக் கொண்டு உற்சாகமாக ஓடினான் சம்போதி. பள்ளிக்கூடம் சென்று படிக்கவில்லையே தவிர... படிக்கும் பிள்ளைகளுடன் சென்று உட்கார்ந்து கிடப்பான். அவனுக்கு எதுவுமே தெரியாது. ஆனால் ‘நான் சொல்லித் தரட்டுமா?’ என்பான்.

    ஒரு வீட்டின் திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டு கால்களை ஆட்டியபடி உற்சாகமாகக் குரல் கொடுத்தான்.

    லதா... லதாக்கா... லதாக்கா...

    லதாக்காவிற்கு பதில் அவளுடைய அம்மாதான் வைரமூக்குத்தி மினுக்க வாசலுக்கு வந்தாள்.

    என்னடா சம்போதி... என்ன விஷயம்?

    எங்க பத்மினி எங்க? அவளை அம்மா கூட்டியாரச் சொல்லுச்சு. அது ரொம்பக் கோவமாயிருக்கு... அத கூப்பிடுங்க. நான் கூட்டிட்டுப் போவணும்...

    ஆமா! உங்கம்மா கோவத்துல அப்படியே மவளை வெட்டிப் போட்டுடப் போவுது. பெருமா கோயில்ல பத்மினியும், லதாவும் கோலம் போட்டுக்கிட்டிருக்காங்க. போ... போய் கூட்டிக்கிட்டுப் போ...

    கோலம் போடுதா? அப்ப படிக்கறதுக்கு வரலையா?

    என்னைக்கு அவ வந்து இங்க படிச்சா? ரெண்டு பேரும் சேர்ந்துட்டா... ஆட்டம் பாட்டம் விளையாட்டுதான். ஏதோ இன்னைக்குக் கோவில்ல விசேஷம்ங்கறதால கோலம் போடப் போனாளுங்க. இல்லாட்டி வீட்டையே ரெண்டாக்கியிருப்பாளுங்க.

    அப்பாகிட்ட பத்மினி மாட்டிக்கிட்டா! மாட்டிக்கிட்டா! - எழுந்து கூக்குரலிட்டவாறு இறங்கி ஓடினான்.

    ‘பெருமாளே! இவன்கிட்ட போய் சொன்னேன் பாரு... இவன் போய் அவள் அப்பன்கிட்டச் சொன்னா அவ தொலைஞ்சா. அவ அப்பனே ஒரு கோவக்காரன். என்னமோ போ! நீதான் பத்மினியைக் காக்கணும்...’ - வேண்டிக் கொண்ட லதாவின் தாய் உள்ளே போனாள்.

    பெருமாள் கோவில் அந்தத் தெருவின் கடைசியில் இருந்தது. கோவில் மிகவும் பெரியதாக இருந்தது. சம்போதி படிக்கட்டுகளில் ஏறும்போதே லதாவும், பத்மினியும் கோலமிட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. மிகப்பெரிய வண்ணக் கோலம். இரண்டு மயில்கள் தோகை விரித்து ஆடுவதைப் போல் வரைந்து வண்ணப் பொடிகளைத் தூவி உயிரூட்டிக் கொண்டிருந்தனர்.

    கிட்டத்தட்ட முழுவதும் முடிந்த நிலை. ஆனாலும் எழ மனமில்லாதவர்களைப் போல் கை எடுக்க மனம் இல்லாதவர்களைப் போல் மேலும் மேலும் மெருகூட்டிக் கொண்டிருந்தனர். மயில்களை வரைந்து கொண்டிருந்த இருவருமே இரு அழகான மயில்களைப் போல்தான் இருந்தனர்.

    கல்லூரிப் படிப்பின் கடைசி வருடம். பருவம் உருவத்திற்கு புதுமெருகு ஏற்றிக் கன்னங்களில் செழுமையை ஏற்றி... உடல் வண்ணத்தில் வளமையை ஏற்றியிருந்தது.

    தோகை விரித்தாடும் வண்ணமயில்களையே வைத்த கண் வாங்காமல் விழி விரித்து ஆச்சரியமாகப் பார்த்தபடி நின்றான் சம்போதி. அவனுடைய வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. அந்த ஆச்சரியத்தை அதிகப்படுத்துவதைப் போல் ஆள்காட்டி விரலை வாயில் விட்டபடி கோலத்தை ரசித்தான் சம்போதி.

    அவனைப் பார்த்து விட்ட பத்மினி, ஏய்... சம்போதி! நீ எப்ப வந்தே? என்றான்.

    "நானா... இப்பத்தான் வந்தேன். அக்கா... அக்கா... பத்மினியக்கா

    Enjoying the preview?
    Page 1 of 1