Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஓரிடம் நீ தருவாய்
ஓரிடம் நீ தருவாய்
ஓரிடம் நீ தருவாய்
Ebook83 pages28 minutes

ஓரிடம் நீ தருவாய்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வண்டியை நிறுத்தி இறங்கிய நடராஜன் படிகளிலேயே அமர்ந்திருக்கும் அம்மாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
 "என்னம்மா... வாசல்லயே உட்கார்ந்திட்டீங்க?" என்றான்.
 அம்மா படியினின்றும் எழுந்தாள்.
 "நடராஜ்... மதுராவை இன்னும் காணோம். அதான் வர்றாளான்னு பார்க்க உட்கார்ந்துக்கிட்டிருக்கேன். நீயும் வந்திட்டே இன்னும் வரலை அவ" என்றாள்.
 "இன்னும் வரலையா? ஏன் லேட்?" என்றான்.
 "தெரியலை. சரி...வா." என அம்மா உள்ளே சென்றாள்.
 "ஏம்மா... நான் வேணும்னா போய் பார்த்துட்டு வந்துடவா?"
 "வேண்டாம். ஏதாவது வேலையாயிருந்திருக்கும். வந்துடுவா நீ வா டிபன் வைக்கிறேன்" என உள்ளே சென்றாள் வளர்மதி.
 அம்மாவைத் தொடர்ந்து சென்றான். உடை மாற்றிக் கொண்டு கைகால் கழுவிக் கொண்டு வந்தான்.
 "நட்ராஜ்... டிபன் வச்சிருக்கேன் வா" என்றாள் வளர்மதி.
 "அவளும் வந்திடட்டும்மா. சேர்ந்து சாப்பிடறேன்" என்றபடி காலையில் படித்துவிட்டு போட்டு விட்டுப் போன செய்தித்தாளை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். படிக்காமல் விட்ட செய்திகளைத் தேடி படித்தான்.
 அம்மா அவனருகே வந்து அமர்ந்தாள்.
 "அவ வர்றபடி வரட்டும். நீ சாப்பிடேன்" என்றாள் மறுபடி"இல்லம்மா அவ வந்துடுவா. சேர்ந்தே சாப்பிடறேன்."
 நிமிடங்கள் நகர்ந்தன. மணி சரியாக ஏழு ஆனது. மதுரா வரவில்லை வளர்மதி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு கேட்டாள்.
 "என்னடா இது... மணி ஏழாயிட்டு. இன்னம் ஆளைக் காணும். எனக்கென்னமோ பயமா இருக்கு. காலம் கெட்டுக்கிடக்கு. பார்க்க கண்ணுக்கு லட்சணமா வேற இருக்கா." அம்மா இப்படி சொன்னதும் முதன்முறையாய் நடராஜனுக்கும் பயம் வந்தது. செய்தித்தாளில் மேற்கொண்டு கவனம் செல்லவில்லை. மடக்கிப் போட்டான்.
 "அம்மா... அவளுக்கு வேலை கிடைச்சப்பவே நான் அவளைப் போக வேண்டாம்னு சொன்னேன். நான் சம்பாதிக்கறது போதாதா? இவ வேற சம்பாதிக்கணுமா? வீட்ல உங்களுக்குத் துணையா இருக்கட்டுமேன்னு சொன்னா நீங்கதான் கேட்கலை. வீட்லேயே அடைஞ்சு கிடந்தா அவளுக்கு போரடிக்கும்னு வேலைக்குப் போகச் சொன்னீங்க. இப்ப பயப்படறீங்க?"
 "என்னடா இது? ஊர் உலகத்துல யாரும் பொம்பளைங்க வேலைக்குப் போகலையா? இந்த காலத்துல நாம கட்டுப்பெட்டியா இருக்க முடியுமா? அதனாலதான் போகச் சொன்னேன். நான் நல்லாத்தானே இருக்கேன். இந்த வீட்ல என்ன வேலை இருக்கு. எனக்கு ஏதோ முடியலைன்னா அவ உதவியை எதிர்பார்க்கலாம். இந்த காலத்து பொண்ணுங்களை வீட்ல அடைச்சுப் போடறதும் தப்பு. என்னமோ இன்னைக்கு லேட்டாயிட்டு" என்றாள்.
 "இருந்தாலும் நீங்க மாமியார் போல நடந்துக்கற இல்லை."
 "என்ன... என்னை அதிகாரம் பண்ணச் சொல்றியா? நான் அதிகாரம் பண்ற அளவுக்கு அவ ஒண்ணும் தவறா எதையும் செய்யலையே..."
 "அம்மா நீ என்னைக்கும் மருமகளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவே..." என அவன் சொன்ன அதே நேரம் வாசலில் மதுராவின் ஸ்கூட்டி நிற்கும் ஓசை கேட்டது.
 வளர்மதிக்கு நெஞ்சில் நிம்மதி பரவியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223571261
ஓரிடம் நீ தருவாய்

Read more from R.Sumathi

Related to ஓரிடம் நீ தருவாய்

Related ebooks

Related categories

Reviews for ஓரிடம் நீ தருவாய்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஓரிடம் நீ தருவாய் - R.Sumathi

    1

    வளர்மதி பூஜையறையில் ஏற்றிய தீபத்துடன் வாசலுக்கு வந்தாள். வாசலில் வலது பக்க மாடத்தில் வைத்தாள். சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த தீபச் சுடரையே இமைக்காமல் பார்த்தாள். ஒரு கணம் இமைகளை மூடி மனம் முழுவதும் அமைதியை நிரப்பிக் கொண்டாள். பிறகு விழி திறந்தாள்.

    மாடத்தினின்றும் அகன்று தெருப்படியில் இறங்கி நின்றாள்.

    அவளுடைய பார்வை தெருவை ஒருமுறை அலசியது தெரு அமைதியாக இருந்தது. எல்லா வீடுகளும் அமைதியாக இருந்தன. நெருக்கமில்லாத வீடுகள் கணிசமான இடைவெளி விட்டு கட்டப்பட்டிருந்தன.

    தெருப்படியில் நின்று பார்த்தால் தெருமுனை வரை தெரியும்.

    மணி ஆறாகப் போகிறது. நடராஜனையும் காணோம். மதுராவையும் காணோம்.

    இருவருமே ஐந்தரைக்கெல்லாம் வந்து விடுவார்கள். இன்றைக்கு ஆறாகியும் காணவில்லை.

    வளர்மதிக்கு போரடித்தது. காலையிலிருந்து மாலை வரை இந்த வீட்டில் தனியாக இருக்கிறாள்.

    நடராஜனும், மதுராவும் காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டுப் போய் விடுவார்கள்.

    அவர்கள் சென்றபின் வீடு வெறிச்சென்றிருக்கும். வீட்டு வேலைகளை முடித்து விட்டு சற்று நேரம் தொலைக் காட்சியின் எதிரில் அமர்வாள். எவ்வளவு நேரம்தான் தொலைக்காட்சி பார்ப்பது? அக்கம் பக்கம் அவள் வயதுக்கு யாரும் இல்லை. எல்லோரும் வேலைக்கு செல்பவர்கள். அலுத்து சலித்து வரும் அவர்கள் அக்கம் பக்கத்தாருடன் உட்கார்ந்து அரட்டையடிப்பதை விரும்புவதில்லை.

    ஆனால் மதுரா நேர்மாறானவள்.

    அலுவலகத்திலிருந்து வந்ததும் அன்றைக்கு அலுவலகத்தில் வழியில் நடந்த சம்பவங்களையெல்லாம் அவளுக்கு பேசியாக வேண்டும்.

    கலகலப்பான பேர்வழி அவள். நடராஜன் அதற்கு எதிர்மாறானவன். அமைதியிலேயே உருவாக்கப்பட்டவனைப் போல் வளைய வருவான். மதுரா வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள். நடராஜனுக்கு அதையெல்லாம் கேட்க பொறுமை இல்லை. அதனால் மாமியார்தான் அவளுக்கு நெருங்கிய தோழி.

    வளர்மதிக்கும் மருமகளை பார்க்காவிட்டால் தலை வெடித்துவிடும். அவள் அலுவலகத்திலிருந்து வர ஐந்து நிமிடம் தாமதமானாலும் தவித்து விடுவாள். மருமகளை மகள் போல் பாவித்தாள். கோவில் குளம் என எங்கு சென்றாலும் மருமகளுடன்தான் செல்வாள். அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் மருமகளைப் பற்றி குறை சொல்ல மாட்டாள். பெருமையாகவே சொல்வாள்.

    உண்மையும் அதுதான்.

    மதுராவை, மனம் போலமைந்த மருமகள் என்றே சொல்ல வேண்டும். மாமியாரின் மேல் அவளுக்கு மிகுந்த மரியாதை. அளவு கடந்த பாசம்.

    காரணம்...

    மதுரா தாய் - தந்தையை இளம் வயதிலேயே இழந்தவள். பெரியப்பா வீட்டில் வளர்ந்தவள். பெரியப்பாவிற்கு மூன்றும் பெண்கள். மூவரும் மதுராவிற்கு இளையவர்கள்தான். மதுராதான் மூத்தவள். அவளை கரையேற்ற பெரியப்பா வரன் தேடியபோது பெரியம்மாவிற்கு மனதில் பெரிய பாரம் அழுத்தியது.

    இவளுக்கு திருமணம் செய்து வைத்தால் அந்த கடனை எப்படி அடைப்பது? தனக்கும் மூன்று பெண்கள் இருக்கிறார்களே என பொருளாதாரத்தை எண்ணி பொருமினாள். மதுராவை மனதளவில் வெறுத்தாள்.

    அவளுடைய வேதனையிலும் தவறில்லை. இன்றைய சூழ்நிலையில் பெற்ற மகளை கட்டிக் கொடுக்கவே அவரவர் திண்டாடும் காலத்தில் மற்றவர் மகளை மணம் செய்து கொடுப்பதென்பது எளிதான காரியமா?

    மதுராவிற்கு செலவு செய்வதை தண்டம் என்று நினைத்தாள்.

    அந்த சமயத்தில்தான் வளர்மதி தன் மகனுக்காக மதுராவைப் பெண் பார்க்க வந்தாள்.

    நடராஜன் படித்து வேலையில் இருந்தும் உலகத்து மாமியார்களைப் போல் வரதட்சணை, சீர் என அடுக்கிக் கொண்டு போகவில்லை.

    பெண்ணைப் பார்த்தாள். அவளது படிப்பும் அழகும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே மணம் பேசினாள்.

    உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று கூறிவிட்டாள்.

    மதுராவின் பெரியப்பாவிற்கும், பெரியம்மாவிற்கும் அளவில்லாத ஆனந்தம்.

    பெரியப்பாவின் ஆனந்தம், நல்ல இடம் வாய்த்ததே என்பது பெரியம்மாவின் ஆனந்தம் அதிக செலவு இல்லையே என்பது.

    திருமணத்தைக் கூட வளர்மதியே செய்தாள். திருமணம் ஆன பிறகும் கூட வளர்மதி மதுராவை ஊர் உலகத்து மாமியார் போல் அதிகாரம் செய்யவில்லை. அன்புடன் நடத்தினாள். இருவரும் தோழிகள் போல் இருந்தனர். பார்ப்பவர்களெல்லாம் பொறாமைப் பட்டனர். மதுரா மாமியாரின் மேல் உயிரையே வைத்திருந்தாள்.

    அதனால்தான் மதுராவை காணவில்லை என்றால் வளர்மதிக்கு தவிப்பு உண்டானது.

    தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள் கவலையாக.

    தூரத்தே…

    நடராஜன் தன்னுடைய யமஹாவில் வருவது தெரிந்தது.

    நடராஜன் வருவதற்கு முன்பே எப்பொழுதும் வந்துவிடுவாள் மதுரா.

    Enjoying the preview?
    Page 1 of 1