Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பார்த்தால்... காதல் வரும்!
பார்த்தால்... காதல் வரும்!
பார்த்தால்... காதல் வரும்!
Ebook132 pages48 minutes

பார்த்தால்... காதல் வரும்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அம்மா... எனக்கு பயங்கர பசி சாப்பாடு எடுத்து வைங்க" முரளி அம்மாவிடம் சொல்லி விட்டு கை கால் முகம் கழுவ குளியலறைக்குள் நுழைந்தான். முகம் கழுவி துடைத்துக் கொண்டு வெளியே வந்தபோது தங்கம் சாப்பாட்டு மேஜையில் சூடாக இட்லியும், சாம்பாரும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
 "அம்மா, அப்பா சாப்பிட்டாச்சா?"
 "இன்னும் இல்லைப்பா."
 "சுகர் பேஷண்ட். நேரா நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா?" எங்கே போனார்?"
 "தரகர் கூடவே போனவர்தான். இன்னும் ஆளைக்காணும் வீட்டிலேயே கொண்டு போய் விட்டுட்டு வர்றாரோ என்னவோ? ஆமா தினமும் சீக்கிரம் வர்ற நீ ஏன் லேட்டு. ஆபீஸ்ல ஏதாவது வேலையா?"
 "வேலையெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. ஆதவன் முதியோர் இல்லம் வரைக்கும் போய்ட்டு வந்தேன்."
 ஊற்றுவதற்காக சாம்பாரை எடுத்த தங்கம் அப்படியே வைத்தாள்.
 "சாம்பார் ஊத்தும்மா" என நிமிர்ந்தவன் மாறிவிட்ட அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.
 "அந்த பைத்தியத்தைப் போய் பார்த்துட்டு வர்றியா?" அம்மாவின், இந்தக் கேள்வியில் இப்போது அவனுடைய முகம் மாறியது.
 "சாரதாம்மாவைப் பார்த்துட்டு வர்றேன்."
 "நானும் அதைத்தான் சொன்னேன். பைத்தியம் தானே அந்த பொம்பளை."
 "அம்மா அவங்க பைத்தியம் இல்லை. ஏதோ ஒரு சோகத்தால பாதிக்கப்பட்டு மனநலம் சரியில்லாம இருக்காங்க. அவ்வளவு தான்."எப்படி வேணாயிருந்துட்டுப் போகட்டுமே. நமக்கென்ன வந்தது? ரோட்ல சுத்திக்கிட்டிருந்த பைத்தியத்தை இழுத்துக் கொண்டு போய் முதியோர் இல்லத்துல சேர்த்திருக்கே. அதுக்கு மாசா மாசம் தண்ட செலவு. அது போதாதுன்னு அப்பப்ப போய் பார்த்துட்டு வர்றே? ஏண்டா இப்படியிருக்கே? உன்னை மாதிரி உள்ள பசங்களெல்லாம் இப்படியாயிருக்காங்க? வாழ்க்கையில பாதி நாள் சோஷியல் சர்வீஸுன்னு அலையறே."
 "அம்மா... என்னால இப்படித்தான் வாழ முடியும். மத்தவங்களை என்னோட ஒப்பிடாதே."
 "நீ இப்படியேயிருந்தா திருந்த மாட்டே! உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வர்றவ வந்து நாலு இடி இடிச்சாள்ன்னாத்தான் கேட்பே. தரகர் ஒரு வரன் கொண்டு வந்திருக்கார். நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறோம். சாயந்தரம் இப்படி அனாதை இல்லம், முதியோர் இல்லம்னு சுத்திட்டு இன்னைக்கு மாதிரி லேட்டா வராதே. சீக்கிரமா வா...
 "அம்மா... எனக்கு வர்ற பொண்ணுக்கும் என்னை மாதிரியே சமூக சேவையில் நாட்டம் இருக்கணும்."
 "கெட்டுது போ..."
 அம்மா தலையிலடித்துக் கொண்டாள்.
 மறுநாள் முரளி எங்கே தாமதமாக வந்து விடுவானோ என்று தங்கம் நான்கு மணி வாக்கில் ஒரு முறை அவனுக்கு தொலைபேசி செய்தாள்.
 "அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடு. பொண்ணு பார்க்கப் போறோம். ஞாபகம் இருக்கில்ல?"
 முரளி சிரித்தான். "இருக்கும்மா, கண்டிப்பா வந்துடறேன்." சொன்னதைப் போலவே டாண்ணு அஞ்சு மணிக்கெல்லாம் வந்து விட்டான்.
 அவனுக்குள்ளும் பரபரப்பு. 'தனக்கு வரப்போகும் பெண் எப்படியிருப்பாளோ? பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும். என்னுடைய விருப்பங்களெல்லாம் அவளுடன் ஒத்துப் போகிறதா என்று பார்க்க வேண்டும். முக்கியமாக என்னைப் போல் அவளுக்கும் சமூக சேவையில் அக்கறை இருக்க வேண்டும்' உற்சாகமாகக் கிளம்பினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223445807
பார்த்தால்... காதல் வரும்!

Read more from R.Sumathi

Related to பார்த்தால்... காதல் வரும்!

Related ebooks

Related categories

Reviews for பார்த்தால்... காதல் வரும்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பார்த்தால்... காதல் வரும்! - R.Sumathi

    1

    அந்த முதியோர் இல்லத்தின் எதிரில் முரளி தன் பைக்கை நிறுத்தினான்.

    இறங்கியவன் அந்த இல்லத்தின் வெளியில் தொங்கிய பெயர் பலகையை ஒரு கணம் பார்த்தான்.

    ‘ஆதவன் முதியோர் இல்லம்.’

    பெயரே ஒரு கம்பீரத்தையும், கருணையையும் உணர்த்தியது. ‘ஆதவன் தன் கரங்களால் இந்த உலகைக் காப்பதைப் போல் முதியவர்களைக் காப்போம்’ என்ற பொருள் படும்படி பெயர் சூட்டப்பட்டிருந்தது.

    வரும்போது வழியிலேயே வாங்கி வந்திருந்த பழங்கள் இருந்த பையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான். எதிர்ப்பட்ட அந்த இல்லத்தின் ஊழியர்கள் அவனைப் பார்த்து சினேகமாய்ப் புன்னகைத்தனர்.

    பெரிய அளவில் அழகாக அமைக்கப்பட்ட தோட்டத்தில் வயதானவர்கள் நடந்து பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

    சிலர் புத்தகம், செய்தித்தாள் என வாசித்துக் கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி தோட்டத்திலிருந்து மாலை நேர பூஜைக்கு வேண்டிய பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பெண்மணி ஒரு கைக்குட்டையில் பூ வேலை செய்து கொண்டிருந்தார்.

    அவர்களும் அவனைப் பார்த்துச் சிரித்தனர்.

    அம்மா... எப்படியிருக்கீங்க? என அவர்களை நலம் விசாரித்து விட்டு உள்ளே சென்றான்.

    நேராக நிர்வாகியின் அறையை நோக்கிச் சென்றான்.

    திறந்தே இருந்த கதவு வழியே அவன் வருவதைப் பார்த்த நடுத்தர வயதுப் பெண்மணியாகயிருந்த நிர்வாகி நிமிர்ந்தார்.

    புன்னகையுடன் வரவேற்றார்.

    வாங்க மிஸ்டர் முரளி. எப்படியிருக்கீங்க?

    நல்லாயிருக்கேன் மேடம். நீங்க எப்படியிருக்கீங்க?

    ரொம்ப நல்லாயிருக்கேன். உட்காருங்க.

    அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.

    மேடம்… சாரதாம்மா எப்படியிருக்காங்க? ஏதாவது முன்னேற்றம் தெரியுதா? டாக்டர் வந்து செக்கப் பண்ணினாரா?

    அதெல்லாம் முறையா நடக்குது முரளி. ஆனா அவங்கக்கிட்ட எந்த முன்னேற்றமும் தெரியலை. அப்படியே தான் இருக்காங்க. உங்களோட நல்ல மனசுக்காகவாவது அவங்க குணமாகணும். பேசணும் உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கணும். நீங்க அவங்களுக்காகச் செய்யற உதவிகளைத் தெரிஞ்சிக்கணும் முரளி சிரித்தான்.

    மேடம்... அவங்க சுய நினைவை அடைந்தால் அவங்க யாரு என்னங்கற விஷயத்தையெல்லாம் தெரிஞ்சு அவங்களோட சொந்தக்காரங்ககிட்ட சேர்த்துடலாம். பாவம் அவங்களும் இவங்களைக் காணாம எப்படித் தவிக்கிறாங்களோ?

    "அப்படி தவிக்கிறவங்களாயிருந்தா நாம பேப்பர், டி.வி.ன்னு கொடுத்த விவரத்தைப் படிச்சுட்டு இந்நேரம் வந்திருக்க மாட்டாங்களா? நான் நினைக்கிறேன் அவங்களுக்கு யாரும் இல்லை’ன்னு!

    அப்படி நினைக்காதீங்க மேடம். இந்த உலகத்துல அனாதைன்னு ஒருத்தர் கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்.

    நீங்க ஒருத்தர் மட்டும் நினைச்சா போதுமா முரளி ஒவ்வொருத்தரும் அப்படி நினைக்கணும். அப்படி நினைக்க ஆரம்பிச்சுட்டா இந்த நாட்ல அனாதைகளே இருக்க மாட்டாங்க.

    அவர் கூறியதை ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டினான் முரளி.

    மேடம் நான் சாரதாம்மாவைப் பார்க்கிறேன் என்றவாறு எழுந்து கொண்டான்.

    சரி நீங்க போய்ப் பாருங்க என்றபடி பார்த்துக் கொண்டிருந்த கோப்பில் மறுபடியும் முகத்தைப் புதைத்துக் கொண்டார் அவர்.

    முரளி வெளியே வந்து நீண்ட வராண்டாவில் நடந்தான். அறை எண் பத்து என்றிருந்த கதவை மெல்லத் தள்ளினான்.

    அங்கே...

    கட்டிலில் அமைதியாக யோக நிலையில் அமர்ந்திருப்பதைப் போல் அமர்ந்திருந்தாள் சாரதா.

    வயோதிக உடம்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் அந்தளவிற்கு தளர்ந்து போயிருந்தாள். நடுத்தர வயதிற்கும் சற்றே கூடுதலாக ஒன்றிரண்டு வயதிருக்கலாம். நரைக்கத் தொடங்கிய கேசம்.

    சோகம் அப்பிய முகம். அவள் எதையும் பேசாவிட்டாலும் பெரிய சோகத்தைச் சந்தித்திருக்கிறாள் என்பதை மட்டும் உணர்த்தியது முகம்.

    அம்மா... என அவளருகே வந்து அமர்ந்தான் முரளி. அந்தக் குரலில் மெல்ல திரும்பினாள் சாரதா. சினேகமான புன்னகை இல்லை. ஆனால் பரிச்சயமான முகத்தைப் பார்த்த பளிச்சிடல் கண்களில் தெரிந்தது.

    வாஞ்சையுடன் அவளுடைய கரத்தைத் தொட்டான்.

    எப்படிம்மாயிருக்கீங்க? அவனுடைய கேள்விக்கு மறுபடியும் கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியதே தவிர வாய் பேசவில்லை. அந்த முகத்தை ஆழ்ந்து நோக்கினான் முரளி.

    அவனுக்கு மனதை கலக்கியது. அவனுடைய அம்மாவின் வயது தான் இருக்கும் இவளுக்கும்.

    ‘இந்த வயதிற்கு என்னைப் போன்ற வயதில் மகனோ, மகளோ இருக்க வேண்டும். கணவர் பிள்ளைகள் என எதுவுமே இல்லாத பெண்மணியா இவள்? மேடம் சொன்னதைப் போல் யாருமற்ற அனாதையா இவள்?"

    நினைக்கும் போதே நெஞ்சு கனத்தது.

    அங்கு வந்த பணிப்பெண்ணிடம் வாங்கி வந்த ஆப்பிள் பழங்களில் சிலவற்றைக் கொடுத்து நறுக்கித் தருமாறு சொன்னான்.

    அந்தப் பெண் நறுக்கி வைத்துக் கொண்டு வந்து கொடுத்த தட்டை வாங்கிக் கொண்டான்.

    அன்பையும் கனிவையும் குழைத்து அவளிடம் எடுத்து ஒவ்வொரு துண்டாகக் கொடுத்தான்.

    அவள் ஆசையுடன் அதை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினாள்.

    அவன் அங்கிருந்து கிளம்பும்போது மணி ஏழாகி விட்டது. சற்று நேரம் மற்ற வயோதிகர்களிடம் பேசிக் கொண்டிருந்ததில் மணி ஏழைத் தொட்டு விட்டது.

    அங்கு உள்ளவர்களுக்கெல்லாம் முரளி வித்தியாசமானவன். அவர்களுடைய பார்வையில் மிக உயர்ந்தவன், சிறந்தவன். இருக்க மாட்டானா பின்னே?

    பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோர்களைப் பாசமோ, பற்றோ இல்லாமல் கொண்டு வந்து முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டுப் போன தங்களின் பிள்ளைகள் மத்தியில் எங்கோ மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்த சாரதாவை கொண்டு வந்து முதியோர் இல்லத்தில் சேர்த்து அதற்கான செலவுகளையும் தானே ஏற்று கொண்டு மருத்துவமும் செய்யும் முரளி நிச்சயம் வித்தியாசாமான மனிதன் தானே?

    இப்படிப்பட்ட பிள்ளையை நாங்கள் பெறவில்லையே என்று அவர்கள் நொந்து கொள்ளுமளவிற்கு முரளி உயர்ந்தவனாகயிருந்தான்.

    அங்கிருந்து புறப்பட்டு வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த முரளியின் எண்ணங்களெல்லாம் சாரதாவைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தன.

    சாரதாவைச் சந்தித்து அவளை இந்த முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து சரியாக ஒரு வருடம் ஆகி விட்டது இன்னும் அவள் யார்? எங்கே அவளுடைய வீடு? அவங்களுடைய உறவினர்கள் யார்? எதுவுமே தெரியவில்லை.

    வங்கியிலிருந்து வெளியே வந்த ஒரு தினத்தில் பக்கத்து கட்டிடத்தில் பிச்சைக்காரக் கோலத்தில் ஆடைகள் கலைந்து கிழிந்து அழுக்கேறி சுருண்டு கிடந்தாள் சாரதா.

    பார்த்த நிமிடத்திலேயே அவளுடைய வயது தோற்றமெல்லாம் அவனுடைய அம்மாவை நினைவூட்ட, அருகே சென்று விசாரித்தான்.

    "பத்து பதினைந்து நாளா இங்க தான் சுத்திக்கிட்டு கிடக்கு இந்த பொம்பளை. யார் கிட்டேயும் எதுவும் கேட்கறதில்லை. தானா யாராவது ஏதாவது கொடுத்தா மட்டும் வாங்கிச் சாப்பிடும். பசிக்குமோ, பசிக்காதோ... அப்படியே கிடக்கும். பைத்தியம்னு நினைக்கிறேன். இப்படித்தான் அவனிடம் சொன்னார்கள்.

    பக்கத்துக் கடையில் டீயும் பன்னும் வாங்கிக் கொண்டு போய் அவளருகில் அமர்ந்து தொட்டு எழுப்பிக் கொடுத்த போது சக ஊழியர்கள் சிரித்தனர்.

    ‘அன்னை தெரசா, ஆண் உருவத்துல மறுபடி பிறந்திருக்காங்க’ என கிண்டல் செய்தனர்.

    கிண்டலோ, கேலியோ அவன் அப்படித்தான். ஆணுக்கு விதிக்கப்பட்ட இரக்க குணத்தை விட அவனுக்கு இரட்டிப்பு இரக்க குணம் இருந்தது.

    தன் பெண்ணு, தன் பிள்ளை என்பவர்கள் மத்தியில் சமூக நலன், தொண்டு நிறுவனங்கள், அனாதை இல்லங்கள் எனத் தொடர்பு கொண்டிருப்பவன்.

    எங்காவது ஏதாவது சேதம் என்றால் முதலில் போய் நிற்பவன். சினிமாவில் சித்தரிக்கப்பட்ட ஹீரோ நிஜ வாழ்க்கையில் இருந்தால் எப்படியோ அப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1