Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நிலவே முகம் காட்டு!
நிலவே முகம் காட்டு!
நிலவே முகம் காட்டு!
Ebook180 pages43 minutes

நிலவே முகம் காட்டு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஹலோ.. அப்பா..."
 "என்னடா.. எப்படியிருக்கே?"
 "நல்லாயிருக்கேம்பா. நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா?"
 "ம்.. நல்லாயிருக்கோம். நாளைக்கு கடைசி பரீட்சை இல்லையா?"
 "ஆமாப்பா!"
 "அப்போ நாளைக்கு பரீட்சை முடிஞ்சதும் கிளம்பிடுவே இல்லையா?"
 "இல்லப்பா! ஒரு வாரம் கழிச்சுதான் கிளம்பறதா ப்ளான். ஒரு வாரம் முழுசும் எல்லாரும் வெளியில போய் ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு இருக்கோம்."
 "என்னம்மா நீ? நீ நாளைக்கே கிளம்பிடுவேன்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். உனக்காக ஒரு சர்ப்பரைஸ் கூட வச்சிருக்கேன்."
 "சர்ப்ரைஸா... என்னப்பா?" பரபரத்தாள்.
 "நீயே கண்டுபிடி!"
 யோசித்தாள். அப்பா கார் வாங்க வேண்டுமென்று வெகுநாட்களாக சொல்லிக் கொண்டிருந்தார். வாங்கியிருப்பாரோ?
 "ம்... கண்டுப்படிச்சுட்டேன்."சொல்லு..."
 "கார் வாங்கியிருக்கீங்க."
 "நீ இல்லாம கார் வாங்குவேனா? உனக்குப் பிடிச்ச கலர்ல உன்னை அழைச்சுட்டுப் போய்தான் வாங்குவேன்."
 "ம்... அப்பறம் வேற என்ன?"
 "நேர்ல வந்து பார்த்து தெரிஞ்சுக்க."
 எவ்வளவு கேட்டும் அப்பா இதையே பதிலாக சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
 அந்த நிமிடத்திலிருந்து பைரவிக்கு மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
 'என்னவாயிருக்கும்?
 காராகத்தான் இருக்குமோ? ஆனால் அப்பா இல்லை என்றாரே. அப்பா சொல்வது உண்மைதான்.
 அப்பா என்னுடைய விருப்பப்படிதான் எதையும் செய்வார். எனக்குப் பிடித்த கலரில்தான் - எனக்குப் பிடித்த மாடலில்தான் வாங்க வேண்டும் என நினைப்பார்.
 அதனால் காராக இருக்காது.
 வேறு என்னவாக இருக்கும்? ஏதாவது நகை வாங்கியிருப்பாரோ? ச்சே! அதையும் என் விருப்பப்படிதானே வாங்குவார். வேறு என்னவாகத்தான் இருக்கும்?'
 யோசித்து யோசித்து குழப்பத்தில் மண்டை வெடித்து விடும் போலிருந்துது. 
 மறுநாள்-
 பரீட்சை ஹாலில் கூட எழுதிக் கொண்டிருக்கும்போது இடையிடையே இந்த சிந்தனை குறுக்கிடவே செய்தது.
 விடைத்தாளைக் கொடுத்துவிட்டு வெளியே வரும்போது முடிவு செய்துவிட்டாள் -  உடனே கிளம்புவதென்றுஒருவாரம் கழித்துதான் செல்லவேண்டும் என்று எல்லோருக்கும் மீட்டிங் போட்டு கண்டிப்புடன் சொன்னவள் இப்பொழுது எப்படி உடனே கிளம்புவது?
 'என்ன காரணத்தை சொல்வது?
 ஊருக்கு போகிறேன் என்றால் உதைக்க மாட்டார்களா?
 உருப்படியான ஒரு பொய்யை சொல்ல வேண்டுமே? என்ன சொல்லுவது?
 அம்மா அப்பா இருவரில் யாருக்காவது உடம்புக்கு முடியவில்லை ஹாஸ்பிடலில் அட்மிட் என்று சொல்லலாமா?
 ச்சே! அம்மா அப்பாவைப் பற்றி அப்படி சொல்வது தப்பு. பிறகு? அத்தைக்கு உடம்பு சரியில்லை. சீரியஸ் என்று கூறலாமா?
 ச்சே! பாவம் அத்தை! பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறான் என ஏற்கெனவே தனிமையில் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
 பொய் சொல்ல போய் உண்மையிலேயே உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் என்ன செய்வது?
 ஏற்கெனவே கரிநாக்குகாரி! நீ எது சொன்னாலும் பலித்துவிடும் என அடிக்கடி அத்தை சொல்லிக் கொண்டிருப்பாளே! அது பலித்துவிட்டால் தொல்லை!
 பின்னே என்ன சொல்லலாம்?
 தாத்தா செத்துவிட்டார் என்று சொல்லலாமா? தாத்தாதான் ஏற்கனவே செத்துப் போய்விட்டாரே!
 செத்துவரை எழுப்பி இன்னொரு முறை சாகடித்துவிட்டால் போகிறது.
 செத்துப் பிழைத்தேன் என்பதைப் போல் செத்து பிழைத்து சாகட்டுமே! என்ன... முகத்தில் வருத்தத்தையும் கண்களில் கண்ணீரையும் காட்டவேண்டும்.'
 ஆனால் -
 நடிப்பு என்பது அத்தனை சுலபம் இல்லை என்பது புரிந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223256137
நிலவே முகம் காட்டு!

Read more from R.Sumathi

Related to நிலவே முகம் காட்டு!

Related ebooks

Related categories

Reviews for நிலவே முகம் காட்டு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நிலவே முகம் காட்டு! - R.Sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அந்த ஹாஸ்டலே வழக்கத்திற்கு மாறான அமைதியில் கட்டுண்டு கிடந்தது. எப்பொழுதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கலகலப்பிற்கு பஞ்சமில்லாத அந்த ஹாஸ்டல் இப்படி அமைதியில் இருப்பதற்குக் காரணம் நடந்து கொண்டிருக்கும் பரீட்சைதான்.

    எல்லா அறைகளிலும் மாணவிகள் படித்துக் கொண்டிருந்தனர்.

    வராண்டாக்களிலும் மரத்தடி பெஞ்ச்சுகளிலும் ஆக்ரமிப்பு செய்திருந்தனர்.

    தன் அறையில் படித்துக் கொண்டிருந்த பைரவி புத்தகத்தை மூடினாள்.

    எழுந்து நின்று கைகளை உயர்த்தி உடம்பை வளைத்து சோம்பல் முறித்த பைரவி அழகுப் பெண்ணாக இருந்தாள். வளைத்து வரைந்த புருவங்கள். பிறரை தொலைத்து விடும் விழிகள். சுருள் சுருளாக இடைவரை பறந்த கூந்தல் இயற்கையின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். இருள் நிற அக்கூந்தல் அருள்வந்து ஆடும் பக்தனைப்போல் ஜன்னல் வழியே வந்த காற்றிற்கு ஆடியது.

    மென்மையான இடை. அதை வன்மையாய் பிடித்த உடை. தன்மையாய் தழுவிய துப்பட்டா.

    மனசோர்வை விலக்கும் மனமகிழ் பருவம். ஜன்னலோரம் அமர்ந்து தூங்கு மூஞ்சி மரத்தில் பாங்கியோடு பாடிக் கொண்டிருந்த குயிலையும் அதைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த அதன் ஜோடியையும் பார்த்தவாறே படித்துக் கொண்டிருந்த கங்காவின் அருகே வந்தாள்.

    அவளுடைய புத்தகத்தை மூடி வைத்தாள்.

    ஏய்.. என்னது?

    படிச்சது போதும் எழுந்திரு!

    எங்கே?

    மீட்டிங் ஹாலுக்கு.

    மீட்டிங் ஹாலுக்கா..? எதுக்கு?

    சரியா மூணு மணிக்கெல்லாம் வார்டன் எல்லாரையும் மீட்டிங் ஹாலுக்கு வரச் சொல்லியிருந்தாங்க.

    எப்போ சொன்னாங்க? எனக்குத் தெரியாதே!

    தெரியாட்டி என்ன? அதான் சொல்லிட்டேன்ல. எழுந்திரி.

    மத்தவங்களுக்கெல்லாம் தெரியுமா?

    இனிமேதான் சொல்லணும்.

    நீ முதல்ல போய் சொல்லு. நான் வர்றேன்.

    சரி வா! என்றவள் அறையை விட்டு வெளியே வந்தாள். வராண்டாவில் காலை நீட்டிக் கொண்டும், குத்துக்காலிட்டுக் கொண்டும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டும் படித்துக் கொண்டிருந்த பெண்களிடம்,

    ஹாய்... ஃபிரண்ட்ஸ்! ஒரு முக்கிய அறிவிப்பு என்றாள். அனைவரும் என்ன என்பதை போல் நிமிர்ந்தனர்.

    என்ன... எக்ஸாம் டேட் தள்ளிப் போய்ட்டா? என்றாள் ஒருத்தி.

    ஆமா! எல்லா எக்ஸாமும் முடிஞ்சுட்டு. ஒரு எக்ஸாம்தான் பாக்கி. அதை இன்னும் ஒரு மாசம் கழிச்சு வைக்கப்போறாங்க. ஆளைப்பாரு.

    வேற என்னடி முக்கிய அறிவிப்பு. காலேஜ் எக்ஸாம்ல என்ன மார்க் வாங்கினாலும் பரவாயில்லை. ஆள் பாஸுன்னு ஏதாவது அறிவிப்பு வந்திருக்கா..?

    ஆமாடி! நீ படிக்கவே வேண்டாம். ஸீரோ மார்க் வாங்கினாலும் யுனிவர்சிட்டி உனக்கு பட்டம் கொடுக்கறதா முடிவு பண்ணிட்டு. புத்தகத்தை தூக்கி பரண்ல போட்டுட்டு தூங்கு.

    ஏய்... விஷயத்தை சொல்லு.

    நம்ம வார்டன் எல்லாத்தையும் மீட்டிங் ஹாலுக்கு கூப்பிட்டிருக்காங்க. வாங்க.

    எதுக்கு?

    ம்... உனக்கு ஏதோ அவார்டு கொடுக்கப் போறாங்க.

    ஏய்... அந்த கிழத்துக்கு வேற வேலை இல்லை. ஹாஸ்டல் ஃபீஸ் யார் யார் கட்டலை? ரூம் ஜன்னல் க்ளாஸை யார் யார் உடைச்சு வச்சிருக்கோம் - இதையெல்லாம் சொல்லப் போகுது! பாத்ரூம்ல லவ்வர் பேரை எழுதி வச்சவளெல்லாம் அதையெல்லாம் அழிக்கணும். தரையில கொட்டின நெயில் பாலிஷையெல்லாம் சுரண்டணும். இதையெல்லாம் பண்ணினாத்தான் எக்ஸாம் முடிஞ்சு எல்லாரும் மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்ப முடியும்னு சொல்லப்போகுது. அதுக்குத்தான் இந்த மீட்டிங்!

    இதுக்குத்தான் என் லவ்வர் பேரை அதோ தெரியுதே அந்த தூங்கு மூஞ்சி மரத்துல செதுக்கி வச்சிருக்கேன். காலத்தால அழியாத காவியச் சின்னம் ஒருத்தி பெருமிதமாக தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

    அதான்... உன் லவ்வர் சதா சர்வ காலமும் தூங்கி வழியறான். நேத்து கூட எக்ஸாம் ஹால்ல ஒரு கேள்விக்கு கூட பதில் எழுதலை. பேப்பர் மேலேயே தலையை வச்சு தூங்கறான் முட்டாள்.

    யேய்... வாயிலேயே போடுவேன். என் ஆளை முட்டாள் கிட்டாள்னு சொன்னே முகரை பேந்துடும்.

    ஆஹா... அறிவுல அப்படியே அப்துல்கலாம்தான்.

    யேய்... சண்டையை அப்பறம் போட்டுக்கலாம். வாங்கடி முதல்ல. அப்புறம் அந்த வார்டன் கொள்ளிவாய் பிசாசு மாதரி அலறும்.

    அடுத்த பத்து நிமிடத்தில் அனைவரும் அந்த மீட்டிங் ஹாலில் கூடினர்.

    வார்டன் என்ன சொல்லப் போகிறாரோ என ஆளாளுக்கு கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

    நம்மையெல்லாம் வரச் சொல்லிட்டு இந்த பைரவி எங்கே போனா?

    பைரவி கடைசி ஆளாக உள்ளே வந்தாள்.

    ஸாரி ஃபிரண்ட்ஸ். உங்களையெல்லாம் கூப்பிட்டது நான்தான். வார்டன் பாட்டி நல்லா தூங்கிட்டு இருக்கு.

    என்னது வார்டன் கூப்பிடலையா? எங்க படிப்பைக் கெடுத்து எதுக்கு இங்க வரவழைச்சே?

    இருக்கு. விஷயம் இருக்கு. சொல்றேன் என்று நடுநாயகமாக நின்று கொண்டு கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டிக் கொண்டாள்.

    சீக்கிரம் சொல்லு. எங்களுக்குப் படிக்கிற வேலையிருக்கு.

    ஆமா! அப்படியே படிச்சு யுனிவர்சிடி ஃபர்ஸ்ட் வந்துடப் போறீங்க!

    யேய்... சொல்லுடி!

    ஓ.கே! நாளைக்கு நமக்கெல்லாம் கடைசிப் பரீட்சை இல்லையா?

    ஆமா! அதுக்கென்ன?

    பரீட்சை முடிஞ்சதுமே எல்லாரும் மூட்டை முடிச்சைக்கட்டிக்கிட்டு ஊரைப் பார்க்க கிளம்பிடக்கூடாது.

    எக்ஸாம் முடிஞ்சதும் வேற என்ன பண்றதாம்?

    எல்லாரும் ஒரு வாரம் கழிச்சுத்தான் போறோம்.

    ஏன்?

    ஒரு வாரம் முழுசும் ஜாலியா தினமும் வெளியே போறோம். சினிமா, ஹோட்டல், பார்க், பீச்... இப்படி சுத்தப் போறோம். அப்புறமாத்தான் ஊருக்கு கிளம்பணும்.

    அய்யோ... என்னால முடியாதுப்பா. எனக்கு உடனே எங்க அம்மா அப்பாவைப் பார்க்கணும்.

    ஆமா! நேத்துதான் பொறந்த குழந்தை. அம்மாக்கிட்டே போய் பால் குடிக்கணும். மூஞ்சைப் பாரு, நோ... எக்ஸ்க்யூஸ். எல்லாரும் என்ஜாய் பண்றோம். அப்புறம் ஊரை நோக்கி சிறகை விரிக்கிறோம். சரியா?

    எல்லோரும் வேறு வழி இன்றி அரைமனதாக தலையாட்டினர்.

    ஓ... கே! இப்ப எல்லாரும் போய் படிக்கலாம்.

    எல்லாரும் கலகலப்பாக எழுந்து கலைந்து சென்றனர்.

    கங்கா

    Enjoying the preview?
    Page 1 of 1