Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்பில் வந்த காவியம்
அன்பில் வந்த காவியம்
அன்பில் வந்த காவியம்
Ebook124 pages42 minutes

அன்பில் வந்த காவியம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"சந்தியா வந்த பிறகு தான் வழக்கமா காணாமப் போகும். இப்ப முன்கூட்டியே காணாமப் போய்ட்டா" என்றபடியே ரவியும் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடித்தவாறே அம்மாவின் அருகே வந்தான்.
 "எல்லாம் வரும்முன் காப்போம் ஏற்பாடும்மா" தோள்களை குலுக்கினான் சிவாஸ்.
 "என்னடா?" புரியாமல் அம்மா முறைத்தாள்.
 "நாளைக்கு சந்தியா வர்றாளே. அதான் நான் எடுத்து என் பீரோவில் வச்சு பூட்டிட்டேன். என் பீரோவை மட்டும் தானே அவ திறக்க மாட்டா."
 "சிவாஸ்... நல்ல வேலை செய்தே. நல்ல நேரத்துல ஞாபகப்படுத்தினே! நானும் மறைக்க வேண்டியதை எல்லாம் மறைச்சு ஒளிக்க வேண்டியதையெல்லாம் ஒளிச்சு வச்சுடறேன்."
 அம்மா இடுப்பில் கைபதித்து எரிச்சல் மிளிர ஏறிட்டாள்.
 "உங்களுக்கு வெட்கமாயில்லை. இந்த வீட்ல பிறந்தவ சந்தியா. அவ வர்றான்னதும் அதையும் இதையும் எடுத்து ஒளிச்சு வைக்கறீங்களே!"
 "வந்து ஒழுங்காயிருந்தா சரி. போறபோது எல்லாத்தையும் கிளப்பிக்கிட்டு போனா... எப்படி? போன தடவை வந்தப்ப நான் பேட்மிட்டன்ல வின் பண்ணின வெள்ளி டம்ளர் ரெண்டை சுருட்டிக்கிட்டு போய்ட்டா தெரியும் தானே!""ப்ச்! விடுடா! யார் எடுத்துகிட்டு போனா? உன் அக்கா தானே. உடன்பிறந்தவளுக்கு கொடுத்தாத்தான்டா செல்வம் உயரும்."
 "விட்டுத் தரமாட்டியே பொண்ணுங்களை!"
 "எப்படிடா விட்டுத்தர முடியும்? உங்கப்பா திடுதிப்புன்னு ஹார்ட் அட்டாக்ல போனதும் உருக்குலைஞ்சு போன இந்தக் குடும்பத்தை தாங்கி பிடிச்சது யாருடா? அவளுங்கதானே. நண்டும் சிண்டுமா குழந்தைகளை வச்சுகிட்டு அவளுங்க குழந்தைகளையும் கவனிச்சுக்கிட்டு வீட்டு வேலைகளையும் செய்துகிட்டு உங்க ரெண்டு பேர் முகத்திலேயும் சோகம் படியாம பார்த்துக்கிட்டாளுங்களே! அதுக்குக் கோடி கொடுத்தாலும் தகுமாடா? இதைத்தான் 'இக்கட்டான நிலைக்கு பொன்னு வேணும். எதையாவது இழந்த நிலைக்கு பெண் வேணும்'னு சொல்லுவாங்க."
 அம்மா கண்கலங்கச் சொன்னதும் ஒரு நிமிடம் அங்கே பலத்த மெளனம் நிலவியது.
 இதயங்கள் கனத்து போயின.
 அம்மா சொல்வது உண்மைதான். அப்பாவை இழந்த சோகத்தை அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் தான் துடைத்தெறிந்தனர்.
 சூழ்நிலையின் இறுக்கத்தை சட்டென்று மாற்ற சிவாஸ்.
 "ஆனாலும் சந்தியாவுக்கு பேராசைம்மா. போதும்கற மனசே கிடையாது. இத்தனைக்கும் பணக்கார இடத்துல வாழ்க்கைப்பட்டும் அவளோட சுருட்ற புத்தி போகலையே" என்று சொல்ல ரவியும் கலகலப்பிற்கு மாறினான்.
 "என்னயிருந்தாலும் செளந்தர்யா மாதிரி ஆகாது. சந்தியாவுக்கு எடுக்கற குணம்ன்னா செளந்தர்யாவுக்கு கொடுக்கற குணம். ஒரே வயித்துல பிறந்த பொண்ணுங்களுக்குள்ளே என்ன வித்தியாசம் பாரு."
 "ஆமா! நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையில அப்படியே ராமர் லட்சுமணர் தான்."
 "ஏன்... எங்க ஒற்றுமைக்கு என்ன குறைச்சல்?" இருவரும் ஒருவர் தோள் மேல் ஒருவர் கரங்களைப் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்க.."எப்படியோ கடைசி வரை இதே மாதிரி ஒற்றுமையாயிருந்தா சரி தான்" என்றபடி உள்ளே போனாள்.
 பேச்சளவில் தான் சகோதரிகளைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள் என்பதை அடுத்த சில மணி நேரங்களிலேயே நிரூபித்து விட்டனர் சிவாஸும் ரவியும்.
 கடலின் மேற்பரப்பில் தான் அலைகள், ஆழத்தில் அமைதி. அவர்களுடைய மனமும் அப்படித்தான். ஆழத்தில் அமைதியான அன்பு இருக்கிறது. கடல் தான் அலைகளாகிறது. அலைகளிலிருந்து கடல் உருவாவதில்லை.
 அன்பு கடல் என்றால் அலைகள் பிரச்சினை. ஆழ்ந்த அன்பில் பிரச்சினைகள் உருவாகலாம். பிரச்சினைகள் அன்பை உருவாக்க முடியாது. அது தோன்றி தோன்றி மறையும் அலைகளைப் போல.
 அக்காக்களை பற்றிய ஏளனப் பேச்சும் இளக்காரச் சிரிப்பும் மேலோட்டம் தான். அதை நிரூபிப்பதைப் போல் கைநிறையப் பைகளோடு வந்தனர்.
 எல்லாம் பொம்மைகளும் ஆடைகளும். குழந்தைகளுக்காக பணத்தை தண்ணீராக்கி தாராளமாக்கியிருந்தனர்.
 ஒவ்வொரு முறையும் இப்படித்தான், அவர்கள் வந்ததிலிருந்து போகும் வரை தினமும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருவர்.
 சங்கரிக்கு பெருமை மனமெங்கும் நிரம்பி வழியும்.
 "காலம்பூரா இதே மாதிரி நீங்க செய்யணும்டா" என்றாள்.
 "காலம் பூரா இப்படியே செய்தா எங்க கையில திருவோடு தான் இருக்கும்" என்று இருவரும் சிரித்தனர்.
 அவர்களுடைய இதயம் அந்த நிமிடத்திலிருந்தே சகோதரிகளின் வரவிற்காகக் காத்திருக்கத் தொடங்கி விட்டது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223175490
அன்பில் வந்த காவியம்

Read more from R.Sumathi

Related to அன்பில் வந்த காவியம்

Related ebooks

Reviews for அன்பில் வந்த காவியம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்பில் வந்த காவியம் - R.Sumathi

    1

    ‘அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை

    மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ;

    தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,

    ஆலயந் தோறும் அணி பெற விளங்கும்.

    தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே!’

    பூஜையறையிலிருந்து கணீரென்ற இனிமையான குரல் பரவசமாக மிதந்து வந்து எல்லா அறையையும் நிரப்பியது. புரண்டு படுத்தான் ரவி.

    அம்மாவின் குரல் அவள் ஹார்லிக்ஸ் கலந்து கொடுப்பதற்கு முன்பாகவே புத்துணர்வையும் தெம்பையும் தந்தது. இரு கரங்களையும் கோர்த்து தலைக்கு கீழே வைத்துக் கொண்டு இமைகளை மூடி அம்மாவின் குரலினிமையை அனுபவித்தான். அம்மா வித்தியாசமானவள். பூஜையறையில் ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட மாட்டாள்.

    அம்மா பாரதியின் பாடல்களில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவள். அத்தனை பாடல்களும் அத்துப்படி. பாரதியின் மொழிபெயர்ப்புப் பாடல்களைக் கூட விடுவதில்லை. வங்காளத்தில் பங்கிம் சந்திரர் எழுதி பாரதி மொழி பெயர்த்த பாடலைத்தான் தற்சமயம் இதயம் உருகி இசைத்துக் கொண்டிருக்கிறாள்.

    மேலே மேலே உயர்ந்து மேகக் கூட்டத்தினுள் நுழைந்து அங்கு சுழலும் ஏதோ ஒரு ஜீவ ஒளியில் நுழைந்து கொண்டிருப்பதைப் போல் மயங்கி கிறங்கிக் கொண்டேயிருக்க...

    பெரு விரலுக்கும் அடுத்த விரலை பிடித்து இழுத்து சொடுக்கு போட்டதில் துடித்துப் பிடித்து எழுந்தபோது எதிரே அம்மா.

    புன்னகையை பொன்னகையாக மாற்றிக் காட்டினாள்.

    சோம்பேறி, எழுந்திருடா, சிவாஸை பாரு, காலையில எழுந்து ஜாகிங் போறான். நீயும் தான் இருக்கியே!

    அவன் மீதிருந்த போர்வையை உருவினாள். உதறினாள். மடித்தாள். அதனாலேயே ரெண்டு அடியும் கொடுத்தாள்.

    என்னம்மா நீ...? சிவாஸ் ஜாகிங் எதுக்கு போறான்னு நினைக்கிறே? காலையில் காட்டியும் கூட ஜாகிங் போற பொண்ணுங்களை சைட்டடிக்கத்தான்.

    போதுண்டா! உன் சோம்பேறித்தனத்துக்கு நீ சொல்ற காரணம் செல்லமாக காதை திருக வந்தாள்.

    ரவி எழுந்து உட்கார்ந்தான். கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்தான்.

    வயசுப் புள்ளை காலையில எழுந்து உடற்பயிற்சி செய்யணும்பா. அப்பத்தான் உடம்பும் மனசும் புத்துணர்வாயிருக்கும்

    அம்மா! காலையில நீ பூஜையறையில் பாடற பாட்டை விடவா உடற்பயிற்சி புத்துணர்வைத் தரப்போகுது. நோ... ம்மா. உன்னோட அமுதகானம் ஆரோக்யமான அருமையான குரல் என் காதுல படும்போது உடம்புக்குள்ள அத்தனை செல்லும் சுவிட்ச் போட்ட மாதிரி சுறுசுறுப்பு அடையுது தெரியுமா உனக்கு? எப்படிம்மா இப்படிப் பாட முடியுது உன்னால?

    டேய்... போதுண்டா ஐஸ் வச்சது என்றபடியே உள்ளே அரைக்கால் சட்டை பனியனுடன் நுழைந்தான் சிவாஸ்.

    அச்சு அசலாக ரவியின் இன்னொரு உருவம்.

    ரவியும், சிவாஸும் இரட்டையர்கள். முதலில் ரவியும் பின்பு சிவாஸும் பிறந்தார்கள். தோற்றம் மட்டுமே இருவருக்கும் ஒற்றுமை. இரு துருவங்கள் போல் குணங்கள். ரவிக்கு அம்மாவின் குரலினிமை மேல் அலாதி ஈடுபாடு. அவ்வப்போது அவன் கூட அம்மாவைப் போல் பாடிப் பார்ப்பான். அம்மா படிக்கும் இலக்கியப் பக்கங்களை எப்பொழுதாவது திருப்புவான். அமைதியானவன்.

    சிவாஸ் தடாலடி பேர்வழி. டீன் ஏஜ் வயதில் இவன் கொண்டு வந்த வம்புகளை எண்ணி பார்த்தால் இன்றைக்கும் அம்மா சங்கரிக்கு கழுத்து சங்கு நெரிபடுவதைப் போலிருக்கும். டிகிரி முடித்த கையோடு வேலை வாய்ப்பிற்காக சில கம்ப்யூட்டர் கோர்ஸ்களை செய்து விட்டு திருப்திகரமான சம்பளத்தில் ஒரு கம்பெனியில் வேலையில் அமர்ந்து விட்டான் ரவி.

    சிவாஸின் கனவுகள் அனுமார் வாலாக நீண்டு கொண்டே போக அவன் படிப்பும் நீண்டு கொண்டே போனது. நிறைய படிக்க வேண்டும். வெளிநாடு செல்ல வேண்டும். காரும் பங்களாவுமாக வாழ வேண்டும் என்ற ஆசைகளோடு எம்.சி.ஏ. படிப்பின் இறுதியாண்டில் இருப்பவன்.

    அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சிவாஸிடம் வந்தான் ரவி.

    என்ன... என்ன ஐஸ்...?

    அம்மாவை ஒரேடியா புகழ்ந்துக் கிட்டிருக்கியே. என்ன... இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷலா டிபன் செய்யச் சொல்லப் போறியா? இல்லே... உன் ஃபிரண்ட்ஸுங்கள்ல யாராவது வீட்டுக்கு அழைச்சுட்டு வரப்போறியா?

    இப்ப நீ என்கிட்ட வாங்கப் போறே! நீதான் ரசனைக் கெட்ட ஜென்மம். அம்மா பாடறதை ஒரு நாளாவது உட்கார்ந்து கேட்டிருக்கியா?

    கேட்கற மாதிரியிருந்தா உட்காரலாம். அதான் காலையில பொழுது விடியக் காட்டியும் விழுந்தடிச்சு ஓட வைக்கிறாங்களே!

    அம்மா... பாரும்மா. உன் பாட்டை கேட்க முடியாமத்தான் இவன் காலையில ஓடறானாம். மற்றபடி எக்ஸசைன்னு எதுவுமில்லையாம்.

    உண்மை தான்டா. நான் பாடற பாட்டு யாரோட பாட்டு. பாரதியோட பாட்டு. அது ஓடத்தான்டா வைக்கும். காங்கிரஸ் மீட்டிங் நடக்கும் போதெல்லாம் எங்க தாத்தா பாரதியோட பாட்டையெல்லாம் மேடையில உணர்ச்சி பொங்க பாடுவார். வெள்ளைக்காரனை ஓட வச்சுட்டுல்ல... அம்மா பெருமையாக சிரித்தாள்.

    அட... டா... உங்க தொல்லை பத்தாதுன்னு உங்க தாத்தாவை வேற இழுக்கறீங்களா? சிவாஸ் அலுத்துக் கொள்ள, அவன் கிடக்குறான். நீ வாடா கண்ணா. உனக்கு இன்னைக்கு என்ன டிபன் பண்ணணும்னு சொல்லு பண்ணித்தர்றேன் அம்மா ரவியை செல்லம் கொஞ்ச, சிவாஸ் எழுந்தான்.

    ஓ.கே. என் பங்குக்கு நானும் ஐஸ் வச்சுடறேன். அம்மா உன் பாட்டு இருக்கே...

    வேண்டாம்ப்பா... முதல்ல ரெண்டு பேரும் பல்லைத் தேய்ச்சுட்டு வாங்க. ஹார்லிக்ஸ் தர்றேன் என்று கூறிவிட்டு அவசரமாக அம்மா சமையலறைக்குள் நுழைந்தாள்.

    ரவியும், சிவாஸும் குளித்து முடித்து மடிப்பு கலையாத உடையில் ஜம்மென்று சாப்பாட்டு மேஜைக்கு வந்த போது பூரியும் குருமாவையும் பரிமாறிக் கொண்டிருந்த சங்கரியின் விழிகளில் திடீர் ஒளிவெள்ளம்.

    ‘ஒரே சமயத்தில் எடையே இல்லாமல் இரு அணில் குஞ்சுகளைப் போல் பிறந்த குழந்தைகளா இவர்கள்?’ நெஞ்சில் ஆச்சரியம் மிஞ்சியது.

    வாட்டசாட்டமாக வாலிபம் தோள் கொட்டும் கம்பீரத்துடன் இரு காளைகளைப் போல் நின்றிருந்தனர்.

    பூரியையும் குருமாவையும் பார்த்ததும் சிறு குழந்தைகளைப் போல் குதூகலித்த அவர்களிடம்,

    உங்க ரெண்டு பேருக்கும் குட் நியூஸ் ஒண்ணு சொல்லப் போறேன் என்றாள்.

    என்னம்மா... சீக்கிரம் சொல்லு இருவரும் சாப்பிடுவதை நிறுத்தி, பரபரத்தனர்.

    உங்க அக்காமார்கள் சந்தியாவும் செளந்தர்யாவும் கோடை லீவுக்கு நாளைக்கு வரப்போறாங்க.

    இருவரும் தலையில் கை வைத்துக் கொண்டனர்.

    கடவுளே! இது குட் நியூஸா. வெரி பேட் நியூஸ்...

    "இப்ப இப்படித்தான்டா சொல்லுவீங்க. அவங்க ரெண்டு பேரும்

    Enjoying the preview?
    Page 1 of 1