Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravugal Idhyathile
Uravugal Idhyathile
Uravugal Idhyathile
Ebook108 pages40 minutes

Uravugal Idhyathile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466572
Uravugal Idhyathile

Read more from V.Thamilzhagan

Related authors

Related to Uravugal Idhyathile

Related ebooks

Related categories

Reviews for Uravugal Idhyathile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravugal Idhyathile - V.Thamilzhagan

    16

    1

    அப்போதுதான் மலர்ந்த பூங்கொத்தின் மெருகோடு புத்தொளி சிந்தப் பார்த்தாள் இனியா. பூபாளத்தைப் பிரசவித்தபடி மவுனிக்கும் புல்லாங்குழலாய் கிடந்தது அவள் மனம்.

    அமுதவன் அங்கே வருவானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனது அருகாமை தந்த மயக்கத்தில் இன்புற்றுப் புலகாங்கிதமடைந்த இனியாவின் நெஞ்சில் இனம் புரியாத் தவிப்பு.

    பருவச் சுடரின் இதமான வெப்பத்தில் மின்மினியாய்த் தள்ளாடின் வார்த்தைகள். கண்களுக்கு எத்தனை தாகமோ உருவங்களை பருகிக் கொண்டன. தாபம் பொங்கிய உதடுகளை இதழ் பிரித்துக் கேட்டாள் இனியா,

    எப்போ வந்தீங்க அமுதவன்?

    நீ இசை ஆராதனை செய்து கொண்டிருந்தாயே, அப்போதே வந்து விட்டேன். இனியா. நான் எதைப் பார்க்கட்டும், எதை கேட்கட்டும், எதை ரசிக்கட்டும்... என்று ஒன்றுமே புரியவில்லை. ஆகவே அப்படியே ஸ்தம்பித்து விட்டேன். மெய் மறந்து நின்று விட்டேன் என்று அவள் முகம் தொட்டு நிமிர்த்தினான்.

    வெட்கத்தில் சிவந்த அவளது கன்னம் பொன் மெருகேறியது. விகசித்த ஆசைகளின் இதயத்துளிகளாய் அவனது வார்த்தைகள் வெளி மலர்ந்தன.

    பார்க்கவும், கேட்கவும், ரசிக்கவும் அப்படி என்னிடத்தில் எதைக் கண்டீர்கள் அமுதன்?

    தேவதையின் அழகைப் பார்க்கவும், தேனினும் இனிய இசையை கேட்கவும், அழகும், இனிமையும் கலந்து ஓர் அதி உன்னத தெய்வீகத்தை ரசிக்கவும் எதுவெல்லாம் தேவையோ, அதைத்தான் சொன்னேன். - என்றவன் இனியாவின் கரம் பற்றி கொன்றை மர நிழலின் பச்சைப் புல்வெளியில் அமர்ந்தான்.

    பறவைகளின் கீர்த்தனங்கள் இவளது குரலை பிரதிபளிப்பது போலவே இருந்தது. தென்றலின் மெல்லிய குறும்பில் செவியோரம் அவளது சுருண்ட குழல் அசைந்தது.

    அமுதவனின் வார்த்தைச் சுவையில் இனிமையுற்ற அவள் உள்ளம் தவித்தது.

    இன்று நேற்றா அவன் அவள் நெஞ்சத்தில் குடியிருக்கிறான்? கல்லூரிப் படிப்பில் துவங்கிய அவர்களது நட்பின் நேசம் விருட்சமாய் விரிந்து, படர்ந்து... காதல் உலகம் முழுவதினும் விரவிக் கிடக்கிறதே!

    படிப்பெல்லாம் முடிந்து, ஒரே பள்ளியில் இருவரும் ஆசிரியர்களாய் வந்துவிட்டனர். தமிழும் இலக்கியமும்; இலக்கியமும் இசையும் என... தனது பண்முகப்புலமையினை எல்லாம் தனித்துவமாய் வெளிப்படுத்தினாள் இனியா.

    இலக்கிய ஆசிரியையும் அவள் தான். இசை ஆசிரியையும் அவள்தான். அப்படி, மாணவிகளிடையே இசைச் சொல்லித் தந்து கொண்டிருந்த போதுதான் வந்தான் அமுதவன்.

    ‘பழந்தமிழ் இலக்கியத்தில் தாள முழக்கியல்’ என்பது பற்றிப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள் இனியா.

    ‘ஒரு தாளம் என்பது எண்ணிக்கை அளவுகளைக் கொண்டு மீண்டும் மீண்டும் சுற்றி வருவது. தாளவட்டணை (Cycle of Rhythm) மூன்றெண் தாளம், நான்கு என் தாளம் எனப் பல எண் தாளம் அமைந்துள்ளன...’ எனச் சொல்லி நிறுத்தினாள்.

    ராகவி எனும் மாணவி எழுந்து, தாள வகைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாமா டீச்சர்? எனக் கேட்டாள்.

    தாராளமாக கேட்கலாம் ராகவி. என்ற இனியா தாளவகை பற்றிச் சொல்லத் துவங்கினாள்.

    ‘தகதின தகதின - ஈரெண்தாளம்.’ - இது ஏக தாளம் (அ) ஒற்றைத் தாளம்.

    ‘தகதின தகதின - தகதோம்’ - இது மூவெண் சாய்ப்புத் தாளம். ‘ரூபகம்’ என்று சொல்லலாம்.

    ‘தகதிமி, தகதிமி - தகதிமி ஏகதோம்’ - இது நாலெண் மட்டத்தாளம் ‘சதுரச்சார தாளம்’ என்றும் சொல்லலாம்."

    என்று ‘கண்ட சாப்பு தாளம்’ ஏழன் சாய்ப்புத்தாளம் (மிசுர சாய்ப்புத் தாளம்) போன்ற ஐவகை தாளங்களையும் படித்துத் தந்த அழகையும், அபிநயத்தையும் பார்த்த விழி பார்த்தபடி அப்படியே மெய்மறந்து நின்றான்.

    படபடவென கரவொலி எழுப்ப மாணவியர் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். வகுப்பு நேரம் முடியவே புறப்பட்டு அவனைக் கடந்து போயினர்.

    பசுமையான மலையின் நடு உச்சியில் தோன்றும் அருவியாய் உன்னிடம் இசையமுதம் கொட்டிக் கிடக்கிறது. இனியா எனும் இசைவெள்ளத்தில் மூழ்கி மூழ்கி மூச்சுத் திணற வேண்டும் போல் என் நெஞ்சம் ஏங்குகிறது. எளிமையாய் நீ புகழடைந்து விடும் காலம் தொலைவில் இல்லை என்றான் அமுதவன்.

    புகழ் அடைவதற்கு எளிமையான பாதை ஒன்றும் இல்லை. வாழ்க்கை என்பதும் எளிய விளையாட்டு அல்ல. நாம் அதன் பரிசுகளை விரும்பினால் மன உறுதியோடும், தீர்மானத்தோடும் அதற்காகத் தயாராக வேண்டும் என்றாள்.

    தயாராகவும் - தாயாராகவும் நீதான் தயாராக இருக்க வேண்டும் இனியா. நான் தயாராகவே இருக்கிறேன். வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் தான் இருக்கிறது. நாளை மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைக்கும் நினைப்பிலேயே நாம் இன்றைய பொழுதை வீணாக்கக் கூடாது. என்றவன் அவள் கரங்களைப் பற்றி முத்தமிட்டான்.

    மரங்களிலிருந்து கூட்டமாய் எழுந்த பறவைகள் தோரணமாய் வானில் பறந்தன. உறவுத் தோரணங்களாய் அதன் அசைவும், வளைவும் உன்னதமான எழிலைப் பொழிந்தன.

    சிலிர்ப்பு மின்னலின் புல்லரிப்புத்தந்த கிரக்கத்தோடு அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள். இதய வீணையின் ஏக்கநாதங்களை மீட்டி அதிரவைத்து விட்டான். முத்து முத்தான தேன் துளிகளைச் சுமந்தபடி அசையும் மலரைப்போல... அவள் இதழ்கள் ஈரம் சுரந்தன.

    நிகழ் காலத்தை முழுமையாக வாழ்வதென்று உறுதி செய்யுங்கள் அமுதவன். நமது வாழ்க்கையின் எல்லைக் கோட்டிற்குள் சந்தோஷத்தை உண்டாக்குவது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. என்றாள்.

    இசைத் தமிழை படிக்கப் படிக்க உண்டாகும் ரசனையைப் போல அவள் பேசுவதையே ரசித்துக் கொண்டிருந்தான் அமுதவன்.

    நாம் சாதிக்க நினைத்துக் கொண்டிருக்கும்போதே ரகசியமாய் சில தோல்விகளையும் சந்திக்க நேரலாம் என நீ நினைப்பதை நான் யூகிக்கிறேன் இனியா. ஆனால் அது போல ஒரு சந்தர்ப்பத்திற்கே நாம் வாழ்வில் இடமில்லை. வெற்றிமாலையை உன்தோள் சேர்க்க நினைந்திருக்கையில் நீ பலதையும் சிந்தித்துக் கவலையுறலாமா?" என்று தன் காதலையும், நேசத்தையும் உறுதிபடுத்தினான்.

    "உங்கள் மீதுள்ள என் காதலுக்கு வானம் தான் அளவு. ஆனால், காலச் சூழலில் நமக்கு அசௌகரியத்தை விளைவிக்கிற பல அனுபவங்கள் நமக்கு ஏற்படலாம். பாடங்களை கற்றுத் தரலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1