Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhyam Kalantha Urave
Idhyam Kalantha Urave
Idhyam Kalantha Urave
Ebook98 pages1 hour

Idhyam Kalantha Urave

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466565
Idhyam Kalantha Urave

Read more from V.Thamilzhagan

Related to Idhyam Kalantha Urave

Related ebooks

Related categories

Reviews for Idhyam Kalantha Urave

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhyam Kalantha Urave - V.Thamilzhagan

    18

    1

    முகிலாவின் பூரண மதி முகமும், சுடரொளி சிந்தும் அகன்ற விழிகளின் ஈர்க்கும் காந்தமும். சுகமதியை பிரமிக்க வைத்தது. இயல்பு நிலைக்குத் திரும்பிய அவள், மோகனா ஜெகன் இருவரையும் பார்த்து வாங்கம்மா, வாங்க சார்! என வரவேற்றாள். அவர்களுடன் முகிலாவும் வந்து அமர்ந்து கொண்டாள்.

    மோகனாவின் பார்வை சுகமதியின் மீது நிலைத்தது.

    விளக்குகள் தயாரா அம்மா? என்றாள் மோகனா.

    குத்து விளக்குகள் தயார் செய்யும் நிறுவனம், அது! எல்லா வகையான விளக்குகளும் தயாரிக்கப்பட்டு, எல்லா நகரங்களுக்கும் செல்கிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. அங்கு பணிபுரிபவள் சுகமதி. மோகனா-ஜெகன்... நூற்றி எட்டு குத்து விளக்குகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தனர். அதைவாங்கிச்செல்ல வந்திருந்தனர்.

    குத்து விளக்குகள் எல்லாம் தயார். ஷோரூமில் வந்து ஒரு முறை பார்த்து விட்டீர்களானால் டெலிவரி அனுப்பி விடுகிறோம். என்றாள் சுகமதி.

    மோகனா தன்னையே பார்ப்பதாக உணர்ந்தாள் சுகமதி. உள்ளூர ஏற்பட்ட அந்தக் குறுகுறுப்பு பார்வையை நன்றாக உணர முடிந்தது.

    முகிலா! எழுந்து வாம்மா! குத்துவிளக்கு குல விளக்கு என்பார்கள்! எங்கள் வீட்டில் விளக்கேற்றி வைக்க வருபவள் நீ! உனக்காகவும், உன் வாழ்வு சிறக்க வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த நூற்றி எட்டு திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடு. நீ வந்து முதலில் பார்.

    என்றாள் மோகனா ‘ஆம்’ என்றார் ஜெகன்.

    மென்மையாய் அடியெடுத்து தன் வருங்கால மாமனார். மாமியாரைப் பின் தொடர்ந்தாள், முகிலா! அர்ச்சனைச் சிலையாய் அப்படியொரு அழகு!

    பெரிய ஹாலின் கம்பள விரிப்பின் மீது நூற்றியெட்டு குத்து விளக்குகளும் புத்தம்புது பொலிவோடு அணிவகுத்திருந்தன. மின் விளக்கின் ஒளிக்குவியலில் பளபளத்து மின்னின.

    அதைக் கண்ட கண்களில் ஆனந்தக் கொப்பளிப்பு ஆவல் குமிழிகளாய் வெளிப்பட்டன.

    மோகனா ஜெகன் இருவரும் தன் மருமகளாகப் போகும் முகிலாவை பெருமிதமும் பூரிப்புமாய் பார்த்தனர்.

    தன் சுட்டு விரல் பட்டதும் அனைத்து விளக்குகளும் சுடர் பற்றி எரிவது போன்ற கற்பனையில் ஆழ்ந்தாள் முகிலா. அப்போது கால் பட்டு குத்து விளக்கொன்று சாய்ந்தது.

    அதை அப்படியே விட்டு நகர்ந்த முகிலாவை நிறுத்தி. விளக்கை எடுத்து நிறுத்தி, கும்பிட்டுச் செல்லுங்கள். விளக்கை தீபத்திருமகள்’ என்று சொல்லுவார்கள் என்றாள் சுகமதி.

    ‘தன் பணக்கார மருமகளுக்கு இவள் அறிவுரை சொல்வதா?’ மோகனாவிற்கு கோபம் வந்து விட்டது.

    உன் பேர் என்னம்மா?

    சுகமதி!

    விளக்கை தீபத் திருமகள் என்கிறாயே..., இதைப் பற்றி உனக்கென்ன தெரியும்?

    மோகனாவை ஒரு கணம் அமைதியாகப் பார்த்த சுகமதி,

    குத்து விளக்கில் ஐம்பத்தொரு வகை உள்ளது. அதன் உச்சியில் அன்னம், மயில், கிளி, கருடன், புருஷா மிருகம், கோழி, சர்ப்பம் போன்ற உருவங்கள் வைத்து செய்யப்பட்டிருக்கும். இவை அன்னம் வைத்துச் செய்யப்பட்ட குத்து விளக்குகள். லட்சுமிக்கு உகந்தது. எனவேதான் ‘தீபத்திருமகள்’ என்றேன்!

    சுகமதி பேசப் பேச அவளையே இமைக்காமல் பார்த்தாள் முகிலா.

    தீபம் ஏற்றிய பிறகுதானே அம்மா குத்து விளக்கு சிறப்பு பெறுகிறது. இது கடையில் உள்ளது தானே? என்றார் ஜெகன்.

    "சூரியனையும், நெருப்பையும் வணங்கிய மனிதன் அதன் சிறப்பை உணர்ந்து ஒளியை வணங்கினான். வாழ்வு பிரகாசிக்க, சுடர்விட ஒளி தான் பிரதானம் என்பதை உணர்ந்து... நவகண தீபம் ஒன்பதையும்; திக் பாலகர் தீபம் நான்கையும் வகைப்படுத்தி வைத்தான்...

    சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர (அலி) தீபம், கிம்புருஷ தீபம், கணநாயக தீபம், வித்யாதா தீபம், கணநாயக தீபம், கந்தர்வதீபம், பிதரஹ் தீபம்... மொத்தம் ஒன்பது..."

    "ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யமதீபம் மொத்தம் நான்கு.

    இந்த தீபங்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன இயல்பு என்பது குறித்தும் கூட ஐதீகம் உண்டு. இது கடையில் உள்ள விளக்கு தானே?’ என்று சாதாரணமாக சொல்லி விட்டீர்களே!" என்றவள் சற்று உணர்ச்சிவயப்பட்டுக் கண்களை மூடிக் கொண்டாள். குத்து விளக்கேற்றி அதன் தீபச் சுடரை உற்று நோக்கி, ஒளிப்பிழம்பை ரசிப்பது வழக்கம்.

    பூஜை அறையில் சுவாமியின் முன் விளக்கேற்றிவைத்து, மண்டியிட்டு அமர்ந்து...

    ‘இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே

    நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே

    கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட

    உருவெளி நடுவே ஒளி தரு விளக்கே!’

    என்ற பாடலை பாடுவாள். இப்போது அந்தப் பாடலைப் பாடினாள்.

    ‘என்ன இனிமையான குரல்! எவ்வளவு வசீகரம்!’ என மூவரும் வியந்தனர்.

    ஏதோ ஒரு வகையில் பரிட்சயமானவள் போலவே தோன்றினாள் சுகமதி. அந்த மாயப் பிணைப்பின் மயக்கத்தோடு சொன்னாள் மோகனா,

    உன் அறிவுக் கூர்மைகண்டு வியப்பாய் இருக்கிறது. மிகவும் புத்திசாலியாய் இருக்கிறாய். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை விரைவில் அமையட்டும்! என்றாள் ஆசீர்வதிப்பதைப் போல. அந்த வார்த்தைகளைக் கேட்டு சட்டென கலங்கினாள்

    Enjoying the preview?
    Page 1 of 1