Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maranavalaiyil Sikkiya Maangal
Maranavalaiyil Sikkiya Maangal
Maranavalaiyil Sikkiya Maangal
Ebook294 pages3 hours

Maranavalaiyil Sikkiya Maangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466565
Maranavalaiyil Sikkiya Maangal

Read more from V.Thamilzhagan

Related to Maranavalaiyil Sikkiya Maangal

Related ebooks

Related categories

Reviews for Maranavalaiyil Sikkiya Maangal

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maranavalaiyil Sikkiya Maangal - V.Thamilzhagan

    26

    1

    அமைதியான இரவு.

    மஞ்சள் பூசி முகம் கழுவிய நிலா, மேகப் பஞ்சுகளால் முகத்தை ஒற்றிக்கொண்டிருக்க, பரு நட்சத்திரங்களுக்கு பேர் அண்ட் லவ்லி போட்டுக் கொள்ளலாமா என யோசித்தாள்.

    நிலாவையும், நிஜனையும், இனிதாவையும் தவிர அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க இருள் போர்வையை குளிர்க் காற்று விலக்கிப்பார்த்து முடியாமல் விலகி ஓடியது.

    கூர்மையான அமைதி.

    வீட்டின் பின்புறமிருந்த மரங்களிலிருந்து பறவைகள் உறக்கம் கலைந்து சலனங்களை உண்டுபண்ண..

    நிஜன் எழுந்தான்.

    அவன் நிற்பதற்குள் அவனைப்பற்றிச் சொல்லி விடலாமா? ஆசைப்பட்டு வளரத்துடிக்கும் அரும்பு மீசை அங்கங்கே முறுக்கேறத் துவங்கியிருக்கும் தசைப் பிடிப்பு. (உபயம்: தேவாரம் உடற்பயிற்சி நிலையம்) ப்ளஸ் டூ படிப்பு. தற்போது மைனர். மேஜராக இன்னும் பத்துமாதம் பத்து நாள் பன்னிரண்டு மணி நேரம் உள்ளது. அதற்குள் அந்தரங்க ஜோக் அடிக்க கற்றுக் கொண்டிருக்கிறான். இனிதாவைக் காதலித்து பைத்தியமாகியிருக்கிறான்

    தற்போதையை உத்தேசம் அவளோடு ஓடிவிடுவது! இனி தொடர்வோமா?

    விளக்கைப் போடாமால் மனதைப் போலவே ‘டிக் டிக்’கிட்ட கடிகாரத்தைப் பார்த்தான். ரேடியம் முள், ஒன்று மட்டுமே தெரிந்தது.

    கவ்விய இருட்டுக்குக் கண்களைப் பழக்கப் படுத்திக் கொண்டு பார்த்தபோது இரண்டு முள்களுமே பதினொன்றில் இருந்தது. நேரம் 10.55.

    கடிகார முட்களுக்குள் சுதந்திரமும் அதிர்ஷ்டமும் கூட காதலர்களுக்குக் கிடைக்கவில்லையே? என நினைத்த அவன், பேனா டார்ச்சை அடித்தபடி பக்கத்து அறையில் படுத்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்தான்.

    நல்ல தூக்கம் அப்பாவைப் பற்றிக் கவலையில்லை. தன்னறைக்கு வந்து தயாராக வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு பென் டார்ச்சின் உதவியோடு முன் அறையின் முதற்கதவைத் திறக்க முயற்சிக்க... அதே நேரம் - குபுக்கென்று வெளிச்ச வாந்தி அறை முழுக்க பரவ, கதவோடு கதவாக, சுவரோடு சுவராக நிஜனின் அப்பா அங்கே; கையில் சிகரெட்டும், வாயில் புகையும் கண்களில் கேள்விக் குறியோடும் அமைதியாக நின்றிருக்க, டாட்...டாட்... டாடி, நீங்களா? என்றான் அதிர்ச்சி கலந்த வியப்போடு.

    ஆமா பேயில்ல ஆவியில்லே. நானேதான் இப்போ என்ன செய்யப்போறே? சொல்லு நிஜன். இப்போ நீ என்ன செய்யப்போறே? இனிதாவோட ஓடிப்போகப் போறியா? ஓடிப்போகப் போறியா? ஓ.கே. இந்தா சாவி உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ சூட்கேஸ்லே அடைச்சிட்டுப் போ.

    இடதுபக்க பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து நிஜனிடம் தந்துவிட்டு அவன் சாவியையும், அவரையும் மாறிமாறிப் பார்க்கவே.

    போடா பஸ்ஸுக்கு லேட்டாச்சு! என்று அழுத்தமாக அதேசமயம் சப்தம் வெளிவராமல் கோபத்தோடு கண்டித்துக் கத்த... அவன் ஒரு நான்கு நிமிட இழப்பிற்குப்பின் புதிய சூட்கேஸோடு வந்தான். அப்பாவைப் புரியாவிட்டாலும் நன்றியோடு பார்த்தான்.

    தாண்டிப்போக முடியுமாங்கற தவிப்புகளோடுதான் அலைகள் ஓயா ஆவலோட ஓடிவருது. தாண்ட முடியலையேங்கற தவிப்பு அலைக்கு. தாண்ட முடியாதேங்கற தற்பெருமை கரைக்கு. அலை, கரை இதுக்கெல்லாம் இருக்கிற ஆசையும் ஓசையும்... புயல் வரும்போது... பொடிப்பொடியாக்குது இல்லையா?

    ...ஸோ, குடும்ப வாழ்க்கையும் அதுபோலத்தான். கடல், அலை, கரை, புயல் வரும்போது கூட்டுப்புறாவை காப்பாத்தக் கூடிய திறமை இருக்காடா உனக்கு?

    மௌனித்து தலை குனிந்து தரையைப் பார்த்து மெல்லச் சொன்னான்.

    நெஞ்சு நினைவை இழக்கலாம். பட் நிதானமிழக்கக் கூடாது. மனசு மகிழ்வை இழக்கலாம். பட் மனிதாபிமானத்தை இழக்கக் கூடாது. நெஞ்சுக்கும் நினைவுக்கும் இருக்கிற நெருக்கமும், மனசுக்கும் மனிதாபிமானத்துக்கும் உள்ள மகத்துவமும், பதிஞ்சிருக்கும்போது ஆபத்தும் புயலும் அனாவசியமானது. எளிமையா வாழ்ந்தாலும் வலிமையா வாழணும்! வாழ்ந்து காட்டுகிறேன்.

    ஓ.கே. மை சன்! மேஜர் ஆகாத ஒரு பையனை, மேனர்ஸ் இல்லாம ஒரு அப்பாவே அனுப்பி வைக்கலாமான்னு நினைப்பாங்க. கவலையில்லை. ஏன்னா... உன் வயசிலே நான்... என்னை விரும்பின பெண்ணை தைரியமா கல்யாணம் பண்ணிக்க முடியலை. ஏன்னா, அவ ஏழை! நான் கோழை! பிரிவுத் துயரத்தை உணராத பெற்றவங்களாலே பரிவையும் அறியாம... சாபத்தையும் அறியாம, உறவையும் தெரிஞ்சுக்காம, உள்ளத்தையும் புரிஞ்சுக்காம உன் அம்மாவோடு உன் அம்மாவோட நான் இயந்திரத்தனமா வாழ்க்கையை போக்கிக்கிட்ருக்கேன்.

    அந்த துன்பமும் துயரமும் உனக்கு வேண்டாம். பிரிவும் முறிவும் உனக்கு வேண்டாம். ஒன்றிப் பழகிய உங்களைப் பிரிக்க, நான் நன்றி கெட்ட ஜென்மமில்லை. நீயும் மைனர், அந்தப் பெண்ணும் மைனர். மேஜராகாம கல்யாணம் செய்துவைத்தாலும் உங்க திருமணம் செல்லாது அதனாலேதான் சொல்றேன். இந்தா!

    ஒரு கடித உறையையும், சிறிய பித்தளைச்சாவிகள் மூன்றையும் நிஜனிடம் கொடுக்க, அவன் புரியாத நிலையிலேயே அதை வாங்கிக்கொண்டான்.

    இந்தக் கடிதத்துக்குரியவன் என் உயிர் நண்பன். பாண்டிச்சேரியில் ஒரு கிராமத்தில் அவன் இருந்தா இந்த லெட்டரைக் கொடு. இல்லைன்னா, இந்தச் சாவியைப் பயன்படுத்து. அந்த பங்களாவில் சகல வசதியும் உண்டு. வெளியே எதற்கும் வரவே தேவையில்லை. நீங்க அங்கே போகும் விஷயம் என்னைத் தவிர யாருக்கும் தெரியாது! அந்த பெண்ணோட ஃபேமிலி எதற்கும் துணிஞ்சது.

    வசதி நமக்கிருந்தாலும், சரிபண்ணி உங்களைப் பிரிச்சிடக் கூடாதேன்னுதான் நான் பயப்படுகிறேன்.

    மேஜரானதும் உங்களுக்கு நானே பதிவுத் திருமணம் செய்து அழைத்து வருகிறேன். குட்லக் புறப்படு.

    இருட்டில் பயந்து திருட்டுத்தனமாக ஓட நினைத்தவனின் குருட்டுக் கண்களுக்கு வெளிச்சம் கிடைத்ததைப் போல நிஜன் தன் அப்பாவை நேசத்தோடு பார்த்தான்.

    என்ன நிஜன் அப்படிப் பார்க்கிறே?

    இல்லே டாடி, ஆறு வயசா இருந்திருந்தா அறியாமையை நீக்கியிருப்பீங்க. அறுபது வயசா இருந்திருந்தா அனுபவத்தை பகிர்ந்திருப்பீங்க ஆனா, இது ஆறுக்கும் அறுபதுக்கும் இடைப்பட்ட இருபது வயது. இதுக்குத் தகுந்த முடிவை இன்முகத்தோட - காசு கொடுத்து ஈ மொய்க்கிற இனிப்பை வாங்கித் திங்கிறபோது காலரா வருமோன்னு கவலைப்படுகிற மனசு... அந்த வயசையெல்லாம் தாண்டி அவனே சுகாதாரத் துறையிலே சிறந்த அதியாரியா வரும்போது... பெற்ற மனசு பெருமைப்படுவதில்லையா? காலம் ஒரு கவிதை. அதை வாசிக்கும்போதுதானே இதமும் இனிமையும் மனசுக்குப்படுகிறது? அந்தப்பொண்ணு வந்து மரத்திலே கல் எறிஞ்சதையும், அதனாலே பறவைகள் சலசலத்ததையும் தெரிஞ்சிட்டுதான் நீ வீட்டை விட்டுப் புறப்படுவதை யூகிச்சேன். அந்தப்பொண்ணு பாவம் பனிக்காத்துலே பயத்தோட நிக்குது புறப்படு!

    இவர்கள் பேசியதை இருளான பகுதியில் மறைந்தபடி கேட்டுக் கொண்டிருந்த இனிதா அவரை நோக்கி வந்தாள். இதயபூர்வமாக நன்றி சொன்னாள்.

    அங்கிள் சந்ததிகளுடைய சங்கமம் குங்குமப் பூமாதிரி குளுமையாவும் வளமையாவும் இருக்கணும்னுதான் ஆசைப்படுவாங்க. அந்த ஆசையும், அக்கறையும் தாங்களா பார்த்து தாரைவார்க்கிற கணவன், மனைவிகிட்டேதான் இருக்குங்கற தப்பான அபிப்ராயத்திலே ஊறியிருக்கிற எத்தனையோ பேர் மத்தியிலே... நீங்க வித்தியாசமானவர் மட்டுமில்லை அங்கிள், விவரம் தெரிஞ்சவரும்கூட.

    என்னுடைய தவறான நடவடிக்கைக்கு மன்னிக்கணும். எங்களை ஆசீர்வதிங்க.

    காலில் கண்ணீரோடு விழுந்தவர்களை எழ வைத்தார். இருவரையும் மாறிமாறிப் பார்த்து அழுத்தமாகச் சொன்னார்; ஓ.கே. புறப்படுங்க.

    தங்களின் பிறந்த வீட்டை கடைசியாக ஒரு முறை கண்குளிர, கண்ணீர் துளிக்க பார்த்துக்கொண்டே அந்தத் தெருவைக் கடந்தார்கள்.

    அவர்களுக்குத் தெரியாது? இதுதான் இந்த இடத்தைப் பார்க்கும் கடைசி தடவை என்று.

    இரண்டே இரண்டு சீட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டிருந்த வள்ளுவர் போக்குவரத்துக் கழகம், கோழி இறகுகளை வரித்து, குஞ்சுகள் அடைக்கலமானதும், அபயம் வைத்துக்கொள்வது போலக் கதவை மூடிக்கொண்டு...

    சேலத்தை வே...கமாக இழந்துகொண்டு பாண்டிச்சேரியை நோக்கி விரைந்தது.

    பேருந்து நிலையம்.

    கடைசி நிமிட உருமலோடு வண்டி நிற்க, பிரேம் கிளாஸை மெல்ல நகர்த்தியதும் குளிர்க்காற்று சிலீரென தாக்கியது. பூப்பந்து மாதிரி இன்னமும் விழித்திருந்த இனிதாவை மெல்லத் தொட்டான்.

    வந்தாச்சா நிஜன்? என்றாள் அப்பாவித்தனமாக.

    ம் சீக்கிரம் இறங்கு,

    தலைக்கு மேலே அடைத்து வைத்திருந்த சூட்கேஸ்களை சிரமப்பட்டு எடுத்துக்கொண்டான். தூக்கக் கலக்கத்தோடு மெது மெதுவாக முன்னே இறங்கியவர்களுக்காகக் காத்திருந்து, இறங்கியதும் இறங்கினார்கள்.

    இனிதா, பாத்து இறங்கு! இறங்குவதற்காக கை கொடுத்து உதவினான். அங்கங்கே அப்பிக்கொண்டிருந்த இருட்டு இன்னமும் அப்படியே இருக்க,

    சார். வாங்க சார்!

    இதே குரலையே தேய்ந்த ரிக்கார்டு மாதிரி ஒப்பித்தவர்களை வேண்டாம்பா! என்று மறுத்துவிட்டு, தெற்குப்பக்கமாக நடந்தான். டாக்ஸி அபூர்வமாக நின்றது! ஏறிக்கொண்டார்கள்.

    பாகூர் போப்பா! என்றான் நிஜன்.

    எனக்குப் பயமா இருக்கு நிஜன்! என்ற இனிதாவைத் தேற்றி...

    கண்ணை மூடிட்டு என் தோள்லே சாய்ஞ்சுக்க இனிதா. ஊர் வந்ததும் உன்னை எழுப்பறேன். பொண்ணுங்களுக்கு ரெண்டு சம்பவங்களாலே பயம் வருவது சகஜம்தான். ஒண்ணு இந்த மாதிரி ஓடிவரும் பொழுது, ரெண்டு தனிமையைத் தேடிவரும்போது. இப்போ உனக்கு ஓடி வந்த பயம்தான். ப்ளீஸ் கண்ணை மூடிக்கோ.

    இனிதாவின் பின்னந்தலைப் பக்கமாக வலது கையைச் செலுத்தி முடியை வருடி நெற்றிப்பொட்டில் விரல் வைத்து இடது பக்கக் கன்னம் தன் மார்பில் பதியும்படி சாய்த்துக் கொண்டான், நிஜன்.

    அவன் மார்பில் அவள் சாயும் முன், ‘புஷ்’ மீசை வைத்த டாக்ஸி டிரைவரையும் அவன் தீப்பார்வையையும் மனதில் ஓடவிட்டுப் பயந்து கொண்டாள். கண்ணை மூடினாள்.

    தன்னையும் அறியாமல் அப்படியே தூங்கியும் போனாள்.

    நிமிடத்திற்கு நிமிடம் வேகம் அதிகரித்துக் கொண்டேபோக... 43 வது நிமிடம் பாகூரைத் தொட்டு நின்றது.

    ஏம்பா இங்கேயே நிறுத்திட்டே? காமேஸ்வரன் பங்களாகிட்டே நிறுத்து. இரண்டு வளைவுகளுக்குப் பின் நிறுத்தினான்.

    பணம் தந்து, பாக்கி வாங்காமல் டாக்ஸியை அனுப்பிவிட்டு பங்களாவை நெருங்கினார்கள்.

    நேரம் 3.30

    கனத்த இரும்புக் கேட்டை க்ரீச்சிட தள்ளித் திறந்து கொண்டு உள்ளே போக ஒரே அமாவாசை இருட்டு. பென் டார்ச்சை எடுத்து வெச்சிக்க, அழகான ஒரு பித்தளைப் பூட்டு. சூட்கேஸைத் திறந்து அவன் டாடி தந்த சாவியை எடுத்து திறந்து... டார்ச்சின் உதவியால் சுவரிலிருந்த சுவிட்சை தட்ட...

    புதிய மழையில் ஏற்பட்ட செவ்வெள்ளம் போல் அறை முழுக்க ஃபோகஸாக வெளிச்சம் பரவ... அவர்களுக்கு நேர் எதிர்ச் சுவரில் அபிஷேகம் செய்யப்படும் விக்கிரகம் போல் சுவர்திட்டின் உச்சியிலிருந்து ரத்தம் பரவலாக பயங்கர சிவப்பில் பரவி வழிய, வழிய... நிஜன் ஸ்தம்பித்து நிற்க... இனிதா வீல் என கொட்டை எழுத்துக் கூச்சலில் - டாக்ஸியில் போலவே மயக்கமுடன் அவன் மேல் சாய்ந்து கொள்ள...

    இன்னும் அந்த விபரீத பயங்கரமான சிவப்புக் காட்சி அவனுக்குள் ஒரு புதிய பீதியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

    விடியற்காலை இருட்டில் பங்களாவின் கதவைத் திறந்ததும் பார்த்த பயங்கரமான காட்சிக்கு, அதிர்ந்து போனவனாய் நின்றிருக்க, மயக்கமுற்று சாய்ந்திருக்கும் இனிதாவை சுவர் மேல் சாய்த்து உட்கார வைத்துவிட்டு, தண்ணீர் தேடினான்.

    நல்லவேளை மீன்கள் வளர்க்கும்- அழகுக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடித் தொட்டி கண்ணில் படவே, கைகளைக் குவித்துத் தரையில் சிந்தியவை போக மீதித் தண்ணீரை முகத்தில் அடித்தான்.

    விழிக்கவே

    பயமும் படபடப்புமாகச் சொன்னான்: ரத்தம்... ரத்தம்... தைரியத்தை முழுவதுமாய் வரவழைத்துக்கொண்டு நிஜன் சுவரை நிமிர்ந்து பார்க்க... கொஞ்சம் கொஞ்சமாக உண்மை புரிய ஆரம்பித்தது. நெருங்கிப் போய் அருகில் பார்த்தான். பெயின்டின் புதிய வாடை!

    மூடியில்லாமல் வைத்திருந்த, நீள் உருண்டை டின் சாய்ந்து ரத்தம் முழுக்க பரவியதைப் போலச் சிவப்பாய் வழிந்திருக்க... ஒரு நிம்மதிப் பெருமூச்சோடு இனிதாவை உள்ளே அழைத்தான்.

    நிறைய தயக்கத்திற்குப்பின் உள்ளே போனாள். நிஜன்! திரும்பி நம்ப ஊருக்கே போய்டலாமா?

    இனிதா! உனக்கு என்னாச்சு? இப்போ நம்மை உங்க வீட்லே பாத்தா என்ன செய்வாங்க. நினைச்சுப் பாத்துக்க அப்புறம் ஒரு முடிவுக்கு வா! போகலாமா வேணாமான்னு!

    அதில்லே நிஜன், நீங்க எனக்கு வேணும் உங்களுக்காகவேதான் நான் பலகால பந்தத்தையும் உதறிட்டு ஓடிவந்திட்டேன். ஆனா, ஓடி வந்த நமக்குப் பயம் உடலை விட்டுப் போகாத நிலையில்... இந்த ஊர் பூமியிலே கால்வச்சதிலேர்ந்து ஏதோ ஒரு விளக்க முடியாத கலக்கம் உள்ளுக்குள்ளே இருந்திட்டேயிருக்கு!

    நீ நிறைய பயந்திருக்கே. பக்கத்திலே நானிருக்கும் போது பயப்பட என்ன இருக்கு. பொழுது புலர இன்னும் மூணு மணி நேரமிருக்கு அதுவரைக்கும் ஒரு மினி தூக்கம் போடலாம். தூங்கி எழுந்தா துக்கமெல்லாம் தூரந் தூரமா ஓடிடும். வா!

    கரங்களைப் பற்றி, கவலையை ஒற்றி நீளமான முன்னறையின் வளைவுகளைச் சுற்றி உத்தேசமாக அந்த அறைக்கு அழைத்துப் போக, காலியாக இருந்ததின் அடையாளமாக ஒரு படிவம் மாதிரி தூசுக்கள் ஒட்டியிருக்க அறையின் அழகை அறைகுறையாக ரசித்து, சுவரோடு பதித்திருந்த அலமாரியில் மடித்து வைக்கப்பட்டிருந்த பெட்ஷீட்டை விரித்து இருவரும் நெருக்கமாக சாய்ந்து சுகமான தூக்கத்தால் சுலபமாக ஆட்கொள்ளப்பட்டார்கள்.

    2

    கதறிக்கொண்டிருந்த குழந்தையின் குரல் கேட்டுப் பதறிக் கொண்டு எழும் பாசமுள்ள தாயைப் போல் வெகுநேரமாக அழுது கொண்டிருக்கும் பஸ்ஸரின் குரல் கேட்டு, ஒரு அவசரத்தனத்தோடு எழுந்தான் நிஜன்.

    ஜன்னலைத் திறக்கவே, மஞ்சள் வெளிச்சம் மனசின் ஆழம்வரை ஊடுருவிப் போய்... கண்களைக் கூசவைத்தது. கதவைத் திறந்தான். முன்னறைக்கு வந்து வெறுமனே மூடியிருந்த முதல் கதவைத் திறக்க...

    உடல் முழுக்க ஒரு நிமிடம் ரத்த ஓட்டம் உறைந்து பிறகு ஓடத்தொடங்கியது.

    நீ... நீ... அந்த டாக்ஸி டிரைவர்தானே?

    மொத்...தமான மீசையும், சிவப்பான பார்வையும் எப்படிப்பட்டவர்களையும் ஒரு கணம் கலங்கவைக்குமே! மௌனமுடன் நிமிர்ந்து,

    ஆமா என்றான். டாக்ஸி ரெண்ட்தான் ராத்திரியே வாங்கிட்டே இல்லே?

    அப்புறம் எங்கே வந்தே?

    உங்களைக் கவனிக்க!

    வாட் யு மீன்? அதிர்வு கலந்த கோபத்தோடு கேட்க... முதலாளி அனுப்பி வைத்தார் என்றான்.

    யாரு?

    காமேஸ்வரன் ஐயாதான்! நைட்லே நான் டாக்ஸி ஓட்டுறேன். பகல்லே இந்த பங்களாவுக்கு வாட்ச்மேன், வேலைக்காரன் எல்லாமே. உங்களுக்கு என்ன தேவையோ அதை அதோ அந்த ரூம்லே இருந்துட்டே சொன்னா போதும். மிஞ்சிப் போனா அஞ்சி நிமிஷத்துலே கிடைச்சிடும்.

    கீழே - குனிந்து சுவர் ஓரமாக வைத்திருந்த பிளாஸ்கை எடுத்து நிஜனின் முன் நீட்டினான்.

    இந்தாங்க காஃபி!

    நாங்க வந்தது அவருக்கு எப்படித் தெரியும்? நீ சொன்னியா?

    அசட்டையாகச் சிரித்துக் கொண்டான்.

    இந்த பாகூர் கிராமத்திலே புதுசா ஒரு புள்ளி வண்டு வந்தாக் கூட அவருக்குத் தெரிஞ்சுடும். கட்டபொம்மன் படம் பாத்தீங்களா? சூரியன் கூட அவரைக் கேட்டுத்தான் எழும். அவரைக் கேட்டுத்தான் விழும் என்று சாம்சன்துரை என்ற நினைப்பில் டயலாக் பேசி முடிக்க..

    வாக்கிங் எந்தப் பக்கம் போகணும்?

    வாக்கிங் கிளம்பிட்டா இடம் எக்கச் சக்கமா இருக்கு. பார்க்கக் கண்ணும் நடக்க காலும்தான் போதாது. முழுசா வெளியில வந்து தெற்குப் பக்கமா போய்ப் பாருங்க, அசந்துடுவீங்க.

    ப்ளாஸ்கோடு நிஜன் உள்ளே போக... டிரைவர் அறையை துப்புரப்படுத்துவதில் முனைந்தான்.

    மார்பைவிட்டு விலகிக் கிடந்த சின்னத் தாவணியை சரியாக இழுத்துவிட்ட நிஜன், செவ்வரளிப் பூக்களை அடுக்கி வைத்த மாதிரி படுத்துக் கிடந்தவளின் கன்னத்தைத் திருப்பி... குனிந்து... நெற்றியில் ஒரு முத்தம் வைத்து... செவிமடல் ஓரமாகக் குனிந்து மென்மையாக அழைத்தான்.

    இனிதா குட்டி...

    ம்... என்று முனகியபடி புரண்டு படுத்தாள். விடிஞ்சாச்சா நிஜன்?

    முழுமையா அரை மணி ஆச்சு. காஃபி ரெடி. எழுந்திரு.

    நிரப்பி வைத்திருந்த கப்பை எடுத்து அவள் முன் நீட்ட...

    குட்மார்னிங் நிஜன். பதில் முத்தம் வைத்து... கலைந்த ஆடைகளை திருத்தி எழுந்து போய் முகம் அலம்பி வந்து... வாக் போலாமா? என்று கேட்டபடியே காஃபியை வாங்கிக் கொண்டாள். கேட்டாள்.

    நீங்க?

    இன்னும் இல்லை.

    அப்போ ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.

    இருவரும் ஒரே கப்பில் காஃபி குடித்து, எழுந்து, டிரைவரிடம் சொல்லிக்கொண்டு ‘வாக்’ கிளம்பினார்கள்.

    பங்களாவை விட்டு வெளியேறிய மூன்றாவது நிமிடம் பாகூர் டூ பாண்டிச்சேரி தார் சாலை தூசோ, மாசோ படியாமல் தூய்மையாய் துடைத்துவிட்டாற் போலிருக்க... வயலெட் க்ரீன் நிறத்தில் பஸ் ஒன்று ஆங்காங்கே ஆட்களை நிரப்பிக் கொண்டு பாகூரை நோக்கி வந்துகொண்டிருந்தது.

    சாலையின் இரு பக்கங்களிலும் பச்சைப் பசேல் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செழிப்பாகத் தெரிய...

    அம்மாடி! என்று அதிர்ச்சி காட்டி மார்பு மேல் கை வைத்து இமைகள் படபடத்தாள் இனிதா.

    இங்கே... இங்கே! என்று

    Enjoying the preview?
    Page 1 of 1