Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Angey Sila Suvadugal
Angey Sila Suvadugal
Angey Sila Suvadugal
Ebook182 pages1 hour

Angey Sila Suvadugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுப்பம்மாள் என்ற ரோசன் தாரா, மியா ஜான் மற்றும் சந்தியா இவர்கள் மூலம் வளர்க்கப் படுகிறாள் நடனம், பாடல் இரண்டும் கற்று தரப்படுகிறது. ஆனால் நடனத்தில் மற்றும் உலகப் புகழ்பெற்று மிகப்பிரபலம் ஆகிறாள். சில நாட்களுக்கு பிறகு தன்னை பெற்ற தகப்பனைச் சந்திக்கிறாள். ஆனால் அவன், தாரா நினைத்து கூட பார்த்திராத நிலையில் இருக்கிறான். அப்படி என்ன நிலையில் அவன் இருந்தான்? அந்த நிலையால் தாராவிற்கு ஏற்பட்ட மாற்றம் என்ன? இறுதியில் தாரா எடுக்கும் முடிவு என்ன? தன்னை வளர்த்த சந்தியாவிற்கு தாரா என்ன கைமாறு செய்தாள்? பல்வேறு திருப்பங்கள் நிறைந்த பகுதிகளை வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580109407049
Angey Sila Suvadugal

Read more from Usha Subramanian

Related to Angey Sila Suvadugal

Related ebooks

Reviews for Angey Sila Suvadugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Angey Sila Suvadugal - Usha Subramanian

    https://www.pustaka.co.in

    அங்கே சில சுவடுகள்

    Angey Sila Suvadugal

    Author:

    உஷா சுப்பிரமணியன்

    Usha Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/usha-subramanian-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    தாராவி-பூவுலகின் ப்ரத்யட்ச நரகம் இது தான். உலகின் மாபெரும் ஸ்லம் எனப் பெருமை தேடித் தருவதும் இந்த இடம்தான்.

    ஆர்ட் சினிமாக்களில் ஹீரோயின் குளிக்கும்போதும் ஹீரோ ‘போட்டு விட்டு’ மனைவியை அடிக்கும்போதும், ஒவல்டின் மட்டுமே அருந்தும் குழந்தை நடிகன் கந்தல் அணிந்து பெரிய கண்களால் பரிதாபமாகப் பார்க்கும்போதும், பின்னணியில் இந்திய வறுமையிலும் வாழும் மாபெரும் கலையைச் சித்தரிப்பது இந்த உலக மகா ஸ்லம்தான்.

    குற்றங்கள் ஜனிப்பதும் இங்கே. எங்கோ தோன்றியவை அரசியல் கட்சிகளின் நிழலிலே புகலிடம் பெறுவதும் இங்கேதான். குடிசைக்கு ஒரு வண்ணக்கொடி. மன்னிக்கவும். கூட்டுக் குடும்பமானால் ஒன்றுக்கும்மேல் பல கட்சிகள் ஆளுக்கு ஒன்றாக இந்திய ஒற்றுமையின் பிரதிபலிப்பாக இங்கே பறக்கும்.

    இங்கே காவல்காரர்கள் லஞ்சம் வாங்குவதில்லை. அவர்களே பயபக்தியுடன் ரவுடிகளைத் தேடி வந்து கப்பம் செலுத்துவதுதான் தாராவியில் பழக்கம். இங்கே ஒலிப்பவை பெரும்பாலும் தமிழ்க் குரல்களே.

    மபியா அமெரிக்காவுக்கே சொந்தம் என்னும் அறியாமை தாராவியைப் பற்றி அறியாதவனுக்கு மட்டுமே இருக்க முடியும். கண்ணெதிரே ஆளை அறுத்துத் துண்டமிட்டால் கூட உரத்துக்குரல் எழாது இங்கே. இங்கு கொலை சகஜம். கொலை செய்பவன் குற்றவாளி அல்ல. உளவு தருபவன் தான் குற்றவாளி.

    தாராவியில் சிவப்பு விளக்குகள் தெருவெல்லாம் கண் சிமிட்டலாம். அது அத்யாவசியத் தேவை. ஆனால், தலைவன் பார்வைபட்ட இடத்தில் வேறு ஒருவர் நோக்கு சென்றால் அது மாபாதகம்.

    இந்த உலகின் விதி முறைகளே தனி. கணிப்புகளோ புதுமாதிரி. காந்தியிஸம் என்றால் என்ன என விளக்கம் கேட்பவர்களுக்கு நன்றாகப் புரிந்தது குண்டாயிஸம்.

    இவ்விடத்தின் மாபெரும் குடிசைத் தொழில் ஹிச். பச்சைத் தமிழனுக்குப் புரியாத பெயரிது. கதர்ச்சட்டை தமிழ்நாட்டைக் காந்திய வழியில் நடத்திக் கொண்டிருந்தபோது ‘ஹிச்’ மணத்தை மோப்பம் பிடித்து இங்கே குடி புகுந்த தமிழர்கள் பல ஆயிரம்.

    வாழ வழி தேடி பம்பாய் வந்த பலருக்கும் கூடச் சேர்த்து இடம் தரும் தயாள குணம் இன்றும் தாராவியில் உள்ளது.

    எங்கோ ஒரு குடிசையில் விவித்பாரதி ‘தஸ்-பஜே’ என்று ஒலி பரப்பியது. சுப்பம்மாளின் வயிற்றைப் பசி வேதனை ஆக்ரமித்தது. தினம் ஏழு மணிக்கு வரும் அப்பா ஏன் இன்னும் வரவில்லை? அவள் பத்து வயது உடம்பும், மனமும் படபடத்தது.

    குடித்திருந்த ஆண்களின் சிரிப்பும், விவித்பாரதியின் ஒலியும் தவிரக் கொஞ்சம் கொஞ்சமாக அரவம் அடங்க ஆரம்பித்தது. சுப்பம்மாளுக்குப் பயமாக இருந்தது.

    பாவாடையைச் சுருட்டிக் கால் நடுவில் இட்டுக்கொண்டு குடிசை வாசலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். அவள் பெரிய கண்களில் நீர் ததும்பியது.

    செம்பூர். முலுண்ட, மலபார் ஹில் என்று எந்தத் திசையில் சென்றாலும், இருட்டுவதற்குள் வீடு திரும்பித் தானே அடுப்பு மூட்டி, அவளுக்கும் தனக்குமாகச் சோறு சமைத்து விடுவானே. இன்று என்ன ஆயிற்று?

    அம்மா இருந்திருந்தால் இவ்வளவு பயமாக இருந்திருக்காதோ? அம்மாவுக்குத்தான் மகள் நினைவே மறந்து விட்டதே.

    அம்மா அவர்களை விட்டுப்போன ஒரே நாள் தான் தன் அப்பா ஒருவனுடன் அடித்து, உதைத்து, மோதுவதை அவள் பார்த்திருக்கிறாள்.

    ஆவே அப்பன் சலே என்று இடுப்பில் ஆறுமாதக் குழந்தையுடன் புதியவன் கையைப் பிடித்தவாறு மிதப்பாகக் கிளம்பினாள் சுப்பம்மாளை பத்து மாதம் சுமந்து பெற்றவள்.

    அடி தேவடியாக் கழுதை, நீயே பொட்டைப் பெண்ணைப் பெற்று வச்சிருக்கே, அது கண்ணெதிரிலேயே மராட்டிக்காரனுடன் ஓடறியே என்று தடுத்த கணவனை, ஹடோ ஸாலா என்று பிடித்துத் தள்ளினாள் அந்தப் பத்தினி. தூ போடா பேமானி, உனக்கு எதுக்குப் பெண்டாட்டி என்று காறி உமிழ்ந்து, திகைத்து நின்ற மகளைத் திரும்பிக்கூடப் பாராமல் வெளியேறிய அந்தக் கற்புக்கரசி இந்தப் பெரிய பம்பாய் நகரின் எந்த மூலையில் வசிக்கிறாளோ, இரண்டு வருஷத்தில் ஒரு முறை பெற்ற மகளைப் பார்க்கக் கூடத் திரும்பி வரவில்லை.

    சுப்பம்மாளுக்கு அம்மா போனது ஒன்றும் பெரிய துக்கமில்லை. அவள் இருந்தவரை தினம் வீண் சண்டைகள் தான். எதிர்வீட்டு ராம் துலாரி அளிக்கும் ‘ஹிச்’சை மாந்தி அவள் பிதற்றி வாந்தி எடுப்பதும், தலையைப் பிரித்துப் போட்டுக்கொண்டு, புகையிலையை அரைத்தபடி அனைவரையும் ஓட விரட்டும் கத்தலும் இல்லாமல் வீடு நிம்மதியாகத் தான் இருந்தது.

    அவள் வருத்தமெல்லாம் அம்மா வேலுவையும் தன்னுடன் அழைத்துப் போனது பற்றித்தான். அவள் ‘ங்கா’ என்றால் பதிலுக்குத் தானும் ங்கு, ங்கு என்று மிழற்றிச் சிரிப்பான் வேலு அவள் ஓடினால் நீஞ்சித் துரத்துவான். இப்போது வேலு நடப்பான். ஏன், ஓடுவான் கூட. நீஞ்சி அவன் கையைத் துணையாகப் பிடித்துச்சென்று அப்பாவைத் தேடலாம்.

    சங்கு ஓசை எழும்பி ஓய்ந்தது. விமானம் ஒன்று பயங்கரச் சத்தத்துடன் இறங்கியது. சுப்பம்மாளுக்குப் பசி, தூக்கம், பயம் மூன்றும் கலந்து நெஞ்சை அடைத்தது. என்ன செய்வது, யாரைக் கேட்பது?

    குஞ்சு நாயரைக் கேட்கலாம். அப்பாவும், அவரும் சேர்ந்துதானே தினமும் காலையில் டப்பா தூக்கிச் செல்கிறார்கள். திடீரென எழுந்த நம்பிக்கையில் வேகமாக எழுந்து ஓட்டமும், நடையுமாக இரண்டு சந்துகளைக் கடந்து சென்றாள்.

    குஞ்சு நாயரின் வீடு உட்புறமிருந்து தாழிடப்பட்டிருந்தது.

    அக்காவ் அம்மிணி அக்காவ் சுப்பம்மாள் ஆத்திரத்துடன் கதவைத் தட்டினாள்.

    உள்ளே யாரோ அசையும் ஓசை கேட்டது. மெதுவாகக் குரல் ஒலித்தது. குரலில் பயமிருந்தது. கதவைத் திறக்கட்டுமா. கன்னியப்பன் மவ சுப்பம்மாள்.

    நாம இங்கே வாழணும்னு ஒனக்கு ஆசையில்லையா?

    பாவம் சின்னப் பொண்ணு, தனியாக.

    சும்மாயிரு. ஈவு இரக்கம் பார்த்தால் நாமே சாக வேண்டியதுதான்.

    அம்மிணியக்கோவ் கதவு இன்னும் வேகமாகத் தட்டப்பட்டது.

    அம்மிணி நீ படு. நான் பார்த்துக்கறேன் இடுப்பில் லுங்கியைப் பிடித்தவாறு, குஞ்சு நாயர் கதவைக் கொஞ்சமாகத் திறந்து, தலையை மட்டும் வெளியே நீட்டினான் எந்தா மோளே?

    அண்ணாச்சி, அப்பா... அப்பா... அப்பா எங்கே? சுப்பம்மாள் பெரிதாக விம்ம ஆரம்பித்தாள்.

    நாயர் பயத்துடன் அக்கம் பக்கம் பார்த்தான். இந்தப் பெண் வீட்டினுள் வருகிறேன் என்று உள்ளே புகுந்து விட்டால் வம்பாகிவிடும். அவசரமாக பயமெந்தா, அச்சன் வந்துடும். இருட்டில் தனியாக வெளியே வராதே. கதவை தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு தூங்கு. ம், ஓடு போ கதவு அவசரமாக சாத்தப்பட்டது.

    குஞ்சண்ணனா இப்படிச் செய்வது? சுப்பம்மாள், அண்ணே, குஞ்சண்ணே... அம்மிணியக்கா என்ற உரக்கக் குரல் கொடுத்தும், வேகமாகக் கதவைத் தட்டியும் இப்போது பதிலில்லை. விம்மல் பீறிட்டெழப் பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறு, கையில் பீடியும். கண்களில் போதையுமாகக் கண் சொருகி அட்டகாசச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தவர்களை நெருங்கினாள். பாயி ஸாஹப்... மேரா பாபுஜி கோதேகா? வெறும் தலையசைப்புகள், பட்டுக் கொள்ளாத பதில்கள்.

    இருட்டு, இருட்டு... ஆங்காங்கிருந்த ஒன்றிரண்டு கண்சிமிட்டி விளக்குகளும் இருட்டுப் போர்வையில் மறைந்தன. பயம் விரட்ட, குழம்பிய மனநிலையில் சாக்கடை எது, பாதை எது என்று புரியாமல் தடுமாறி ஓடிக் கொண்டிருந்த சுப்பம்மாள் மூச்சிரைக்க நின்றாள்.

    மிகக் குறைந்த வெளிச்சம் தரும் லாந்தர் விளக்கின் அருகில் நிதானமாய்த் தீ எரிந்து கொண்டிருந்தது. அடுப்பின் மேலிருந்த பானையில், பூமிக்கடியிலிருந்த அண்டாவிலிருந்து நுப்பும், நுரையுமான திரவத்தை இருவர் தூக்கிச் சாய்த்தனர். அவ்விடம் முழுவதும் ‘கும்’ என்று ஒரு நெடி அடித்தது.

    எதிரே ஸ்டூலில் மீசையை முறுக்கியபடி உட்கார்ந்திருந்தவன் நல்லாப் பயம் போட்டியா? அழுவினதுதான். பதினைஞ்சு நாள் ஊறலிருக்குமா? என வினவினான்.

    இடுப்பில் அழுக்குத் துண்டைக் கட்டியவாறு பெரிய மரக்கரண்டியால் அடுப்பைக் கிளறிக் கொண்டிருந்தவன் ஓணான் மாதிரி எதையோ ஒன்றை வாலால் தூக்கி எடுத்துக் காட்டினான்.

    ‘வீல்’ என்று கத்தப்போன சுப்பம்மாள் பயத்தில் அருகிலிருந்த மரத்துடன் ஒட்டிக் கொண்டாள். ஊறல் தெரிந்தவுடன் மற்றொரு பானையை அதன் மேல் கவிழ்த்தனர். குழாய் பொருத்தப்பட்ட பானையிலிருந்து திரவம் பெரிய ஜாடியில் வந்து விழுந்தது.

    சுற்றுப்புற நாற்றம் சுப்பம்மாளின் வயிற்றைக் கிளறியது. மீசைக்காரனின் சிவப்புக் கண் பயமுறுத்தியது. உள் மனம் யார் கண்ணிலும் படாமல் ஓடிவிடு என எச்சரிக்க, மறைந்து மறைந்து நகர்ந்தபோது

    ‘தொபார்’ - அருகிலிருந்த ஸ்பிரிட் பாட்டில்களை அவள் கவனிக்கவில்லை.

    ஏய் யாரங்கே முரட்டுக்கரம் ஒன்று அவள் கையைப் பற்றி முன்னே தள்ள,

    சோக்ரி நல்லாயிருக்கே.

    ஆமா. கன்னியப்பன் மவ,

    அடி சக்கைனானாம். வா, வா மாஜிக் பாக்கறியா?

    சுப்பம்மாள் திமிறினாள். வுடு என்னை.

    அட, பெரீய்ய ரோசம்வருதே. ஒங்க ‘ஆத்தாக்காரி பார்க்காத்தா?’ இங்கே தள்ளுடா அத்தை. ரெண்டு வருசத்திலே தள, தளன்னு பழுத்துடும்.

    சுப்பம்மாள் கைகள் இரண்டையும் பின் புறமாகச் சேர்த்து ஒருவன் முறுக்கினான். ஐயோ வலிக்குது. விடு, விடு என்னை.

    ஏய் குட்டி நீயா தேடி வந்திருக்கே. விடுவமா. டிப்பாவாலா தாணாக்காரன் கைக் கூலி. அவன் மகளை வெவரம் தெரியாம அடிக்க எங்களுக்குத் தெரியாதா. உங்கப்பன், கருங்காலிப்பய. வெளியே வந்தான்னா கொலை விழும். எத்தனை நாள் தாணாக்காரன் தயவில் ஒளிஞ்சுப்பான்?

    கையை முறுக்கியவன் அவளை முன்னே தள்ள, ஸ்டுலில் உட்கார்ந்திருந்தவள் தாவிப்பிடிக்க முயன்ற ஒரே வினாடிக்குள், உணர்வு உந்துதலில் அவள் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடலானாள்.

    பின்னே தொடர்ந்து வந்த ‘தப, தப சத்தங்களுக்குப் போக்குக் காட்டியபடி சின்னச்சின்னச் சந்தில் எல்லாம் திரும்பி பாவாடை முள்ளில் கிழிய, பாதத்தில் கல் தடுக்கி ரத்தம் பெருக, சேறு இடுப்புவரை நனைக்க சுப்பம்மாள் ஓடினாள்.

    இந்த இலக்கற்ற ஓட்டம் முடியாது என உடலும், மனமும் துவள நினைவு மயங்கித் துவண்டு நினைவிழந்தாள்.

    2

    புது வேலைக்காரப் பெண்ணா மேம் ஸாஹிப்? பாலைப் பாத்திரத்தில் ஊற்றியவாறு பால்காரன் கேட்டபோது தான் அவள் கவனித்தாள்.

    அந்தச் சின்ன வராண்டாவின் மூலையில் பொட்டலமாகச் சுருண்ட ஒரு கரிய உருவம். நெருக்கிப்

    Enjoying the preview?
    Page 1 of 1