Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Usha Subramanian Kadhaigal Part - 2
Usha Subramanian Kadhaigal Part - 2
Usha Subramanian Kadhaigal Part - 2
Ebook231 pages2 hours

Usha Subramanian Kadhaigal Part - 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

She has written many Tamil novels and short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109401557
Usha Subramanian Kadhaigal Part - 2

Read more from Usha Subramanian

Related to Usha Subramanian Kadhaigal Part - 2

Related ebooks

Reviews for Usha Subramanian Kadhaigal Part - 2

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Usha Subramanian Kadhaigal Part - 2 - Usha Subramanian

    http://www.pustaka.co.in

    உஷா சுப்பிரமணியன் கதைகள்

    பாகம் - 2

    Usha Subramanian Kadhaigal

    Part - 2

    Author:

    உஷா சுப்பிரமணியன்

    Usha Subramanian

    For other books

    http://www.pustaka.co.in/home/author/usha-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.ஸ்டேட்டஸ்

    2.அம்மா... நீ எதையோ மறைக்கிறே!

    3.பரமசிவம் சாப்பிட்ட பாயசம்!

    4.த்ரில்

    5.அவருக்கென்றும் ஒன்று!

    6.ஏற்கமுடியுமா?

    7.யார் குற்றம்?

    8.நீயுமா புரூட்டஸ்?

    9.மாறுபடும் கோணங்கள்

    10.பரிசு

    11.ஒரு லேபல் தேவை

    12.இவர்களும் அம்மாக்கள்தான்

    13.வேஷங்கள்

    14.பொன் குழந்தைகள்

    1.ஸ்டேட்டஸ்

    காய்கறிப் பையுடன் காரில் ஏறும் சமயம்தான் எதிர்த்திசையில் புடைவைக் கடையிலிருந்து வெளிவரும் பெண்ணை அவள் கவனித்தாள்.

    இவள் உமாதானே.. என்னதான் பத்து வருட இடைவெளி என்றாலும், அந்த உயரமும், வாகான உடலமைப்பும், பளிச்சிடும் இளமையும் - எதுவுமே மாறவில்லையே! இன்னும் சொல்லப்போனால், பத்து ஆண்டு முதிர்ச்சி இவளிடம் இன்னும் சோபையைத்தான் கூட்டியுள்ளது. உமாவைச் சந்தித்துப் பேசியாக வேண்டும்...

    உமா..! போக்குவரத்தையும் மறந்து நடுத்தெருவில் பாய்ந்து - பல்லவனை ஸ்தம்பிக்கச் செய்து அவளிடம் நெருங்கினாள் லீலா.

    உமாவின் கண்களில் சொல்ல முடியாத வியப்பு. லீலா.. மைகாட்... நீயும் இப்போ மெட்ராஸிலேதான் இருக்கிறாயா? நாம சந்தித்து எத்தனை வருவடிம் இருக்கும்... ஐயாம் ஸோ ஹேப்பி! - தோழியின் கையைப் பற்றியவள் நெகிழ்ந்தாள். இருவர் கண்ணிலுமே கரைகட்டியது. லீலா நீ எங்கே இருக்கே... வொய் டோண்ட் யூ கம் ஹோம்? உன் ஹஸ்பெண்ட் எப்படியிருக்கார்...குழந்தைகள்?

    மூச்சுவிடாமல் அவள் கேட்கும் கேள்விகளுக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்த லீலா, வாயேன், காரில் உட்கார்ந்து பேசலாம் என்றாள்.

    இல்லை லீலா... கிட்டி காத்துண்டு இருக்கும். வொய் டோண்ட் யூ கம் ஹோம்? இங்கேதான் போக் ரோட்டில். நம்பர் ட்வென்டி.. ப்ளிஸ், நாளைக்கு வந்துவிடேன்.. என்னுடன் இரண்டு மணி நேரமாவது தங்கணும். இன்னிக்கு நிற்கக்கூட நேரமில்லை. ப்ளிஸ், வர்றியா..?

    ஓ.கே. நாளைக்குக் கட்டாயம் வர்றேன். மத்தியான வேளையில் நீ ஃப்ரீதானே?

    ஆமாம்

    அவளிடம் விடைபெற்றுக் காரில் ஏறிக் கிளம்பிய பிறகும் கூட, லீலாவால் பிரமிப்பிலிருந்து விடுபட முடியவில்லை... உமாவை எதுவுமே கேட்கவில்லையே... கேட்க நேர மில்லையே...

    பத்து வருஷத்துக்கு முந்திய அந்த விஷயம்...

    உமா, லீலாவின் கையைப் பற்றியபடி அருகில் அமர்ந்திருந்தாள். அவள் பதட்டத்திலும், வருத்தத்திலும், குழப்பத்திலும்கூட அழகாகத்தான் இருந்தாள். லீலா மெல்ல அவள் முதுகை வருடிக் கொடுத்தாள். உமா, அவசரப்பட்டு முடிவு எடுத்துவிடாதே! எது செய்வதாக இருந்தாலும் யோசித்துப் பார்த்துச் செய்... நீ வெங்கட்டுடன் சந்தோஷமாக இருப்பாய் என்பது என்ன நிச்சயம்? அதைவிட, உன் அப்பா - அம்மா, குடும்பத்தினருக்கு எவ்வளவு தலைகுனிவாகிவிடும் என்று யோசித்துப் பார்...

    அப்பா - அம்மா அவங்களைப் பத்திப் பேசாதே லீலா...அவங்கதானே என்னை இப்படிப் படுகுழியிலே தள்ளினாங்க?

    உமா... பீ ரீஸனபிள். உன்னைப் பெத்தவங்க வேணுமின்னா உன்னை படுகுழியில் தள்ளினாங்க..நல்ல குடும்பம், நல்ல படிப்பு, முன்னுக்கு வரக்கூடிய வேலை என்று பார்த்துத்தானே கல்யாணம் செஞ்சு வச்சாங்க...

    உமா இப்போது நெஞ்சே பிரிட்டு விடும்படி விம்மி விம்மி அழுதாள். யார் தவறுமில்லை லீலா....அத்தனையும் என் தலைவிதி. இந்த ஒன்றரை வருஷத்திலேயே நான் மத்தியாகி மூளை மழுங்கி விட்டேன்...இன்னும் பத்து வருடம் இவருடன் சேர்ந்து குடித்தனம் செய்தால் நான் மரம், மட்டையாகி விடுவேன் லீலா...நான் ஏற்கெனவே வெஜிடபிள் நிலைக்குத் தான் வந்துவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா உணர்ச்சியெல்லாம் இழந்து செத்துக் கொண்டிருக்கேன். வெங்கட் மட்டுமில்லை என்றால், எனக்குப் பயித்தியமே பிடித்திருக்கும்.

    அவள் பேசுவதிலுள்ள உண்மை லீலாவைத் தாக்கியது. கடந்த இருபத்துஇரண்டு ஆண்டுகளில் ஒருவரைப்பற்றி மற்றவர் அறியாத விஷயமில்லையே.பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் எதிலுமே முதல் உமா...பதினாலு வயதிலே தமிழ்நாட்டின் நீச்சல் சாம்பியன்...துரிகை பிடித்தால் அவள் கை சீக்கிரம் வரையும், சலங்கை கட்டினால் நடனம்...எங்கு பேச்சுப் போட்டியோ, இசைப் போட்டியோ - எல்லாப் பரிசும் இவளுக்கே...அத்தனைக்கும்மேல் அதீதத் துறுதுறுப்பு. சுட்டித்தனம், மாறாத புன்னகை...இதமான பேச்சு.. அவள் வராது என்று செய்யாமல் விட்ட விஷயமே இல்லை.

    நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கு இப்படி ஒரு தோற்றமும், பர்ஸனாலிடியும் அமைவது மிகக் குறைவே.

    இவளை ஒரு மன்மதன் கொத்திச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அப்பா - அம்மா தேடிவந்த இன்ஜினியர் வரன் பெண் பார்க்க வந்தபோது குறை எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. லீலா மட்டும், உனக்குத் தோற்றத்தில் பொருத்தம் போராதுடீ என்றாள். அது அவ்வளவு பெரிய விஷயமா? என்றாள் உமா சாதாரணமாக.

    ஆனால், கிருஷ்ணமூர்த்தியோ பெரிய விஷயங்கள் எல்லாவற்றிலுமே மிக மிகச் சாதாரணமாக இருந்தான். எனக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் எல்லாம் அவருக்கு ஆர்வம் இருக்கணும்னு நான் சொல்லலடீ..ஆனா, ஆபீஸிலிருந்து வந்தபிறகு ஒரு வார்த்தை, பேச்சு , சிரிப்பு ஒண்ணுமே கிடையாதா? பாட்டுப் பிடிக்காது - அதனால வீட்டில் ரேடியோ கூட வாங்கவோ, கேட்கவோ கூடாது...அவர் ஆபிஸ் பைல் பார்க்கிறார். அதனால் பேசக்கூடாது.நம்ம நாட்டிலே நடுத்தரவர்க்கப் பெண்களோட வாழ்க்கை நாலுசுவருக்குள்ள தான்னு நானும் புரிஞ்சுண்டவதான். ஆனாலும், நாலு சுவருக்குள்ள ரெண்டு பேர் வாழறபோது எத்தனை சந்தோஷமாக இருக்க முடியும்...பாண்டி விளையாட நாலுகட்டம் போதுமே... பேசிச் சிரிக்க அந்த எடம்கூட வேணாமே...நான் படற நரகவேதனை புரிகிறதா உனக்கு லீலா?

    லீலாவுக்கு நன்றாகவே புரிந்தது. லீலாவும் தன் கணவனுடன் 'விஸிட்' செய்து பார்த்தாள். என்ன லீலா, உன் தோழியோட ஹஸ்பண்ட் இப்படி பேக்கு மாதிரி இருக்கிறான்... வீட்டுக்கு வந்தவங்ககிட்ட நாலுவார்த்தை பேசக் கூடத் தெரியாதா என்ன...மோட்டுவளையைப் பார்த்துட்டுப் பேந்தப் பேந்த உட்கார்ந்திருக்கான்...இது என்ன திமிறா, இல்லை அசட்டுத்தனமா? காலேஜூக்குப் போய்ப் படிச்சு நல்ல வேலையிலே இருக்கிறவன்கூட இப்படிப் பரப்பிரம்மமாய் இருப்பானா என்ன? இனிமேல் உன் பிரெண்ட் வீட்டுக் கெல்லாம் நீயே போய்க்கோ! என்னைக் கூப்பிடாதே என்றான் லீலாவின் கணவன்.

    தன் கணவனின் முன்னிலையில் உமா எவ்வளவு 'நர்வஸாக' உணர்கிறாள் என்று லீலாவுக்குப் புரிந்தது. அவன் மெளனம் இவளை மெல்ல மெல்லத் துளாக்கிக் கொண்டிருந்தது. என்னதான் வழி...உமா, நீ வேலைக்குப் போ; இல்லாவிட்டால், மதியவேளையில் ஏதாவது 'கோர்ஸ்' சேர்ந்து படியேன்... வெளிமனிதர்களைப் பார்க்கும் வாய்ப்பாவது இருக்கும் என்றாள் லீலா.

    உமா சோகமாகச் சிரித்தாள். நான் இதெல்லாம் முயன்று பார்க்கவில்லை என்று நினைத்தாயா...ஒவ்வொரு பைசாவுக்கும் நான் அவர் கையை எதிர்பார்க்கும் நிலையில் - அவர் 'வேண்டாம். அவசியமில்லை' என்று இரண்டு வார்த்தையில் முடிக்கும்போது எனக்கு வழிதான் என்ன சொல்லு?

    உமா, கணவன் - மனைவி உறவு என்பது ஒரு வரம்புக்குள் முடிந்து விடுவதில்லையே... உங்களுடைய தனியான நேரங்களிலாவது அவர் ஆர்வத்துடன் ஈடுபடுவாரில்லையா... அந்த நேரங்களில் அவரைக் கவர முயற்சியேன்...

    லீலா... உமாவின் கண்களில் நீர் வழிந்தது. செக்ஸில் கூட அவருக்கு, நானும் - அவர் வழக்கமாக உட்கார்ந்து மோட்டுவளையைப் பார்க்கும் நாற்காலியும் ஒன்றுதான்! அவருடைய தேவையை மட்டும் அவ்வப்போது தீர்த்து வைக்கும் ஒரு சாதனம்....கல்யாணமான புதிதில் கணவன் - மனைவி உறவில் தோன்றும் அதீத தீவிரம் அவரிடம் இல்லவே இல்லையே...

    உமா முதல் வருஷத்தில் இரண்டு முறை அழுதபடி பிறந்தகம் சென்றுவிட்டு, நான்காம் நாள் புத்திமதிகளைச் சுமந்து, அப்பா துணையுடன் திரும்பி வந்தாள். நடைபிணமாக மாறிக் கொண்டிருந்த அவளுக்கு வழியென்ன என்று யோசித்துக் கொண்டிருந்தது லீலா ஒருத்திதான்.

    இந்த நிலையில்தான் வெங்கட் உமாவின் வாழ்வில் புகுந்தான். எதிர்வீட்டு மாடி அறைக்குக் குடிவந்த அழகான, சாதுர்யமாகப் பேசப் பழகத் தெரிந்த ஸேல்ஸ்மேன். புத்திசாலியும் கூட...முதலில் உமாவின் கணவன் படிக்கத் தடைவிதித்திருந்த பத்திரிகைகள் அவன் மூலம் வந்தன...மதிய நேரங்களில் உமா அவன் ரேடியோவில் விவித் பாரதியும், பாலமுரளிகிருஷ்ணாவும் கேட்டாள். இரண்டு புத்திசாலித்தன மானவர்களுக்கிடையே தோன்றக்கூடிய இயல்பான நட்பு இருவருக்கும் இடையே தோன்றியது...

    வெங்கட்டுடன் பழக ஆரம்பித்ததிலே யிருந்து உன் முகத்துலயே பழைய களை வந்துடுத்துடி! என்று லீலா மனமாரச் சொன்னாள். கணவன் தர விரும்பாத ஒன்றை உமா இவனிடமிருந்து பெற்று, மகிழ்ச்சியாக இருந்தால் அது தவறில்லை என்று கூட லீலா எண்ணினாள்.

    அரசல் புரசலாக இருந்த விஷயம் கிருஷ்ணமூர்த்தி காதுவரை எட்டி, அவன் உமாவைக் காலால் உதைத்து - கெட் அவுட் என்றபோதுதான், உமா அந்த முடிவெடுத்தாள். விவாகரத்துக்குக் கணவன் - பெற்றோர் ஒருவருமே ஒப்புக்கொள்ளாத நிலையில், தனியாக வாழவும் துணிவில்லாமல், வெங்கட்டுடன் ஒடிவிடுவது என்று முடிவெடுத்தாள்.

    லீலாவிடம் அவள் அதைக் கூறியபோது, இரண்டு நாளில் லீலா - கணவனுடன் டெல்லிக்கு டிரான்ஸ்பரில் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள். 'அவசரப்படாதே!' என்று அறிவுரை கூறுவதைத் தவிர, அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. டெல்லி சென்ற பிறகு கடிதம் எழுதி விசாரித்தாள். பதிலே வரவில்லை. இந்தப் பத்து வருஷத்தில் டெல்லி, நாக்பூர், அஸ்ஸாம் என்று ஊர் ஊராக வசித்து மூன்று குழந்தை பெற்று வளர்க்கும் பல தருணங்களில் லீலாவின் மனதை இந்தக் கேள்வி அரித்திருக்கிறது...உமா வெங்கட்டுடன் ஒடிப் போனாளா? இருவரும் கல்யாணம் செய்து கொண்டு வாழ்கிறார்களா...உமா சந்தோஷமாக இருக்கிறாளா?

    இன்று உமாவை நேரிடையாகச் சந்தித்தும் எதுவும் கேட்காமலே விடைபெற்றாகிவிட்டது. ஒன்றுமட்டும் நிச்சயம்... உமா இப்போது கட்டாயம் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறாள். அவள் தோற்றப் பூரிப்பும், தன்னம்பிக்கையும் இதை வெளிப்படையாகச் சொல்கிறதே... 'கிட்டி காத்திருக்கும்' என்றாள். எனவே, கட்டாயம் குழந்தையும் இருக்கிறது... நல்லவேளை, அவள் ஒரு கட்டத்தில் துணிவாக முடிவெடுத் தாள். இல்லாவிட்டால், அவள் இன்று எந்த ஆஸ்பத்திரியில் பாயைப் பிறாண்டிப் படுத்துக் கொண்டிருப்பாளோ?

    போக் ரோடு இருபதாம் எண் வீட்டு வாசலில் வாட்ச்மேன், அழகான புல்தரை, வாசல் வராண்டாவில் சொகுசான நாற்காலி எல்லாம் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

    உமா ஓடிவந்து லீலாவை அனைத்தாள். நேற்றுக் கொண்டையிருந்த அவள் முடி இன்று நாகரிகமாக வெட்டப்பட்டு தோளிலிருந்து பறந்து கொண்டிருந்தது. இந்த வயதிலும்கூட தோட்டத்துப் புஷ்பமாக அவள் மலர்ந்திருந்தாள். என்ன நாசூக்கான ஒப்பனை! நளினமாக, நீண்ட மேல்மட்ட நகங்கள்… சமையற்காரன் ட்ரேயில் விதவிதமாக எடுத்து வர, உமா உபசரித்தாள்... வீட்டில் எங்கும் வசதி அப்பட்டமாகத் தெரிந்தது.

    மம்மீ... ஸ்கூல் பையுடன் காரிலிருந்து இறங்கி ஓடிவந்தான் அந்தச் சின்னப்பையன்.

    லிலா.மீட் மை பர்ஸ்ட் சன் சுதிர்...ஒன்பது வயசாகிறது...

    நோ மம்மீ...நைன் இயர்ஸ் அண்ட் சிக்ஸ் மன்த்ஸ்...

    சுதிரைப் பார்த்த லீலாவுக்குப் பிரமிப்பே அடங்கவில்லை. அதே கண்கள்...வெங்கட் ஒருவனிடம் மட்டுமே அவள் பார்த்திருந்த கண்கள்...பெங்களுர்ப் பட்டாணிபோல நீண்டு, இமை மயிர்கள் அடர்ந்து, தீர்க்கமாய்ப் பார்க்கும் கண்கள்... அப்படியே அவப்பா அச்சு! என்றாள் லீலா.

    ஆமாம்... இவ உஷா. என்னை மாதிரியே இல்லை?

    ஆமாம்... குழந்தைகளை அனைத்து முத்தமிட்டாள்.

    போன் அடித்தது. உமா எழுந்து எடுத்தாள்... ஹலோ...ஒ.கே! எத்தனை மணிக்கு? பத்தா...காக்டேயிலா? ஒ.கே... ஐ வில் பி ரெடி கிட்டி... சிரித்தபடியே வந்தாள். ஒய்வு, ஒழிச்சலில்லாம தினம் டின்னர், பார்ட்டி தான்...

    ஒவ்வொரு பார்ட்டியிலும் நீதான் மகாராணி என்று சொல்லு! - லீலா கேலி செய்தாள்.

    வாசலில் ஹார்ன் அடித்தது...

    ஹாய் கிட்டி... - உமா எழுந்தாள்.

    திரும்பிய லீலா திடுக்கிட்டாள். அதே... அதே கிருஷ்ண மூர்த்தி... இவன்தான் கிட்டியா..அதே பேக்கு முகம்... நிறையவே சதை கூடி, ஸ்பாரி சூட்டிங் பட்டனில் பிதுங்கிக் கொண்டிருந்தது. டார்லிங், என் பிரெண்ட். லீலா ஞாபகமிருக்கா? கிட்டி, ஷி ஹேஸ் கம்... உமா ஆர்வத்துடன் பேச, கிருஷ்ணமூர்த்தி அவளைக் கவனிக்காமல் ஷூவைக் கழட்டிக் கொண்டிருந்தான். லீலா சொன்ன வணக்கத்தை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. சமையல்காரன் தந்த காப்பியை அருந்திவிட்டு, ஒரு சோபாவில் அமர்ந்து விட்டத்தை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். உமாவின் இன்றைய துள்ளலுக்கும், துடிப்புக்கும், இவனுக்கும் என்ன சம்பந்தம் என்று லீலாவுக்குப் புரியவில்லை.

    அரைமணி நேரம் பேசிவிட்டுக் கிளம்பும்போது லீலா கேட்டாள்: உமா, வெங்கட் எங்கே இருக்கான்?

    யாரு வெங்கட்?

    யாரா... லீலா வியப்புடன் உமாவை நிமிர்ந்து பார்த்தாள்.

    உமா திடீரென்று புரிந்து கொண்டாள். ஆர்வமில்லாமல், யாருக்குத் தெரியும்? பச்... எங்கேயோ ஸேல்ஸ் ரெப்பாக இருப்பான் என்றாள் அசட்டையாக. அந்த அசட்டையிலேயே அவள் தன் சமுதாய தரத்தை நிலைநாட்டினாள்.

    லீலாவின் கேள்விக்குப் பதில் ஒரு நாள் வெங்கட் குடியிருந்த வீட்டு மாமியைப் பார்த்தபோது கிடைத்தது. வெங்கட்டும் - உமாவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு, ரயில் ஏறும்போது அகப்பட்டுக் கொண்டு விட்டார்களாம்... உமாவின் அப்பா அவளை ஒழுங்குப்படுத்தி விடுவதாக மாப்பிள்ளையிடம் வாக்குக் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்து சிறை வைத்தாராம். கிருஷ்ணமூர்த்தி நாலுபேர் இதுபற்றி அறியுமுன் ரகசியமாக டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு ஊரைவிட்டுப் போய் விட்டானாம்... அவன் அதிர்ஷ்டம்...மாற்றலோட ப்ரமோஷனுமாகிப் பெரிய வேலையும் கிடச்சுடுத்தாம்... நல்லவேளை, இந்த அசட்டுப் பொண்ணும் - வெங்கட்டும் தப்பா ஒண்னும் பண்ணிடல்லை. ஏதோ குழந்தையும், குட்டியுமா உமா இப்ப சந்தோஷமா இருக்கா என்றாள்.

    லீலா இப்போதும் அடிக்கடி

    Enjoying the preview?
    Page 1 of 1