Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ivalum Oru Seethaidhan
Ivalum Oru Seethaidhan
Ivalum Oru Seethaidhan
Ebook62 pages35 minutes

Ivalum Oru Seethaidhan

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

She has written many Tamil novels and short stories.
Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580109404884
Ivalum Oru Seethaidhan

Read more from Usha Subramanian

Related to Ivalum Oru Seethaidhan

Related ebooks

Reviews for Ivalum Oru Seethaidhan

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ivalum Oru Seethaidhan - Usha Subramanian

    http://www.pustaka.co.in

    இவளும் ஒரு சீதைதான்

    Ivalum Oru Seethaidhan

    Author:

    உஷா சுப்பிரமணியன்

    Usha Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/usha-subramanian-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சின்னச் சின்னக் கூட்டுக்குள், சுற்றிச்சுற்றிச் சிறகடித்து, மூலையில் ஒடுங்கி உட்கார்ந்து பயத்துடன் நிமிர்ந்து பார்த்து, மறுபடியும், மறுபடியும் சிறகடித்து…

    அந்தச் சின்னப் பறவைக்கு இன்று கதவு திறக்கப்பட்டுவிட்டது - ஆனால் பாய்ந்து வெளியேறிச் சுதந்திரமாகப் பறக்க தெரியாமல், மருண்டு, தயங்கித் தயங்கி நின்றது.

    'போயிட்டு வரேம்மா...' காத்திருந்த விடுதலை கிடைக்கும் போது குரல் ஏன் இப்படி அவைசியமாய்த் தழுதழுக்கிறது?

    அக்கா, போயிட்டு வாங்க. எங்களையெல்லாம் ஞாபகம் வச்சுக்குங்க...

    அக்கா, எப்பனாச்சும் ஒரு தபா எங்களையெல்லாம் பார்க்க வருவீங்க இல்லையா?

    அட இது என்ன இப்படி எல்லோரும் கண் கலங்கறீங்க? அக்கா என்ன காட்டுக்கா போறாங்க... உள்ளூரிலே வேலைக்குத்தானே. மாசம் ரெண்டுதரம் வருவாங்க... இதோ பாரு சீதா, சம்பளப் பணத்தைப் பாங்கியலே கட்டச் சொல்லியிருக்கேன். கைச்செலவுக்கு மாசம் அஞ்சோ பத்தோ தருவாங்க... உனக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம்ம பள்ளிக்கூடத்துக்குக் கெட்ட பேர் வராத மாதிரி நடந்துக்க... அட... என்னை ஏம்மா கும்பிடறே... சாமி கும்பிட்டாப் போதுமே அந்தம்மா காரிலே காத்திருக்காங்க.... போம்மா...

    அக்கா, அடுத்த தரம் வர்றப்போ எனக்கு ரோஸ் கலரில் ரிப்பனும், கண் மையும் வாங்கிட்டு வர்ரீங்களா? இப்போது தான் மார்பு மேடிடத்துவங்கியிருந்த ஒரு சின்னப்பெண் சீதாவின் அருகில் நெருங்கி வந்து ரகசியமாகக் கேட்டாள்.

    வாங்கிட்டு வர்ரேம்மா லட்சுமி... சமத்தாக இரு...

    சீதாக்கா எனக்கு மிட்டாய்...

    சீதா, நெத்திக்கு வச்சுக்கற சாந்து... கிகப்புக் கலரிலே...

    கிளம்பு... கிளம்பு சீதா... மிஸஸ் மயூரநாதன் காரில் எத்தனை நேரமா வெயிட் பண்றாங்க... உம்... நீங்கள்ளாம் உள்ளே போங்க...

    சீதா, பத்தாண்டு உடன் இருப்புகளுக்குக் கையசைத்தவாறே தயக்கத்துடன் நடந்தாள்... அன்று... இந்த விடுதிக்குள் நுழையும்போது கூடப் பயம் தோன்றவில்லை. இப்போது வெளி உலகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. தனிமை, பாதுகாப்பின்மை, பீதி, நம்பிக்கையின்மை எல்லாமாக நெஞ்சை அடைத்தது.

    கெட் இன் சீதா... ட்ரைவர், அந்தப் பெட்டியை வாங்கி டிக்கியில் வை... பெரிய காரின் ஒருபுறத்தில் நகர்ந்து சீதா உட்காரவாகாக இடம் விட்டாள் மிஸஸ். மயூரநாதன்.

    காரில் ஏறி எத்தனை வருஷமாச்சு... மெத்து, மெத்தென்ற இருக்கை... கருத்த நீலக் கூலிங் க்ளாஸ்... ஓட்டுகிற ட்ரைவருக்குக் கூட வெள்ளை யூனிபார்ம்... தொப்பி...

    பயப்படாதேம்மா... சரியாய் உட்கார்ந்துக்கோ... பழகினவங்களை விட்டு விட்டுப் போறமேன்னு இருக்கா?

    அம்மாடி, குரலில் தான் எத்தனை கனிவு... இந்த வெள்ளை நிறம், உயரம், கம்பீரம் நாகரீக உடை எல்லாம் அந்நியமாகத் தோன்றினாலும் அந்தக் குரலின் நெருக்கம்...

    இங்கே வந்து எத்தனை வருஷமாச்சு?

    பத்து...

    அப்படீன்ன... உனகுப் பன்னிரண்டு பதிமூணு வயசிலேயா?

    ...பதிமூணு முடிஞ்சிருந்தது...

    மிஸஸ் மயூர நாதன் சீதாவை வியப்புடன் பார்த்தாள். அந்தப் பார்வையின் ஆழம் தாங்காமல் படபடக்கும் இமைகளை வேதனையுடன் தாழ்த்திக் கொண்டாள் சீதா.

    இங்கே வந்தப்பறம் தான் படிச்சியா?

    "எட்டாவது படிச்சிருந்தேன். அப்புறம் படிப்பு நின்னு போயிட்டுத்து . இங்கே வந்தப்புறம் எதிர்த்தாபல இருக்கற ஸ்கூல்ல சேத்தாங்க... தெனம்

    Enjoying the preview?
    Page 1 of 1