Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Potta Thaavani
Poo Potta Thaavani
Poo Potta Thaavani
Ebook101 pages40 minutes

Poo Potta Thaavani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803213
Poo Potta Thaavani

Read more from Maharishi

Related to Poo Potta Thaavani

Related ebooks

Reviews for Poo Potta Thaavani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Potta Thaavani - Maharishi

    http://www.pustaka.co.in

    பூப்போட்ட தாவணி

    Poo Potta Thaavani

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கல்லூரி ஆண்டு விழா. மேடை நிறைய மெல்லிசைக் குழுவைச் சேர்ந்தவர்கள் இடம் கொள்ளாமல் நின்று கொண்டும், உட்கார்ந்துக் கொண்டுமிருந்தார்கள். மேடைத்தளத்தில் கறுப்பு நிற ஒயர்கள் குறுக்கு நெடுக்காக காலில் மிதிபட்டன.

    கல்லூரியின் பிரத்யேகமான கூடமும் நிரம்பி வழிந்தது...

    பெண்கள் கல்லூரியாதலால் கலையரங்கமெங்கும் கன்னியரின் அணிவகுப்பு.

    சிரிப்பும், கும்மாளமும், மேஜைத்தட்டலும், திடீரென்று ஏதோ ஒரு மூலையிலிருந்து விசில் சத்தம் கூட கேட்டது.

    சல்வார் கம்மீஸ்...

    ஜீன்ஸ் சுடிதார்.

    மிடி மாக்ஸி...

    பேடல் புஷ் பூப்போட்ட பாவாடை தாவணி... வனப்பை மூடும் இந்த ஆடைகள் ஒரு மேகம் போல அவர்கள் உடம்பை மறைத்திருந்த போது அழகின் வெளிப்பாடுகள் ரொம்ப லாவண்யமாகவே இருந்தது...

    மேடையில் பிரபலமான மெல்லிசைக் குழு ஏராளமான வாத்தியங்களை வைத்து சுருதி சேர்ப்பதில் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தபோது....

    மாணவிகள் மத்தியில் பொறுமை கரையை உடைத்துக்கொண்டு விட்டது...

    எங்கும் ஆரவாரம்...

    விழா நிர்வாகியும் அமைப்பாளருமான தைலாம்பாள் பி.எஸ்சி. இறுதியாண்டு மேடைக்கு ஏறினாள்.

    மாணவியரிடையே ஏக கூச்சல். அமைதி...அமைதி... அடுத்த நிகழ்ச்சியாக இன்னும் சில நிமிஷங்களில் உமாரமணன் அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும் மாணவிகள்...

    மதிப்பிற்குரிய மாணவிகள் என்று சொல்லு...

    பின் வரிசையிலிருந்து ஒரு வாண்டு குரல் எழுப்பினாள்...

    ஆமாம்... ஆமாம் என்று எல்லோரும் குரல் எழுப்பினர் அதை ஆமோதித்தனர்.

    மன்னிக்க வேண்டும், மதிப்பிற்குரிய எனது அன்பு மாணவிகள்...

    ஐஸ்... ஐஸ்... ஐஸ்...

    அமைதி காத்து நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற உதவவேண்டும்... - போர்... போ... ர் போ...ர்... உள்ளே... போ பேசாதே... பேசாதே... இதற்குமேல் பேசாதே..."

    நிகழ்ச்சி அமைப்பாளர் தைலா பெரிய கும்பிடொன்று போட்டுவிட்டு அப்பால் அகன்றாள்...

    மெல்லிசை நிகழ்ச்சி ஆரம்பமானது. கேலியும், கிண்டலும், தாளமும்... எல்லா நிலைகளிலும் சுதந்திரத் தன்மை அதிகப்பிரசங்கித்தனம், குறும்புத்தனம்... என்று இப்படி என்னன்ன தனங்கள் உண்டோ அத்தனையுடன் உமாரமணனின் மெல்லிசை நிகழ்ச்சி முடிவடைந்தது.

    பூங்கோதையும், உஷாவும் கல்லூரிக்கு வெளியே மரத்தடியில் வந்து உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

    மெல்லிசை முடிந்து மீண்டும் நிகழ்ச்சி பிற்பகல் மூன்று மணிக்கு மேல்தான் ஆரம்பம்...

    பிற்பகல் நாவலாசிரியர் சோமன் என்று அழைக்கப்படுகிற சோம். சேகரின் சின்ன இடைச்செருகள் நிகழ்ச்சியொன்றும் திடீரென்று ஏற்பாடாகியிருந்தது...

    இன்றைய நாவல் இலக்கியம் பற்றி அவர் பேசப் போகிறார்.

    "இப்படி நிகழ்ச்சிகளை அமச்சுக்கிட்டு ஊர் ஊரா போயிட்டேயிருக்காங்களே இவங்க வாழ்க்கை எத்தனை சுவாரஸ்யமா இருக்கும். பாட்டும், கூத்தும், மெல்லிசை வாத்தியங்கள் எழுப்பும் இதமான ஒலிகளும் தான், இவங்க வாழ்க்கை. இவங்க வாழ்க்கையே ஒரு சங்கீதம்...' கேட்டாள் பூங்கோதை.

    நீ நினைக்கற மாதிரி அவங்க வாழ்க்கை அத்தனை குதூகலமா இருக்கறதா எனக்குப் படல பூங்கோதை புதிய ரசனை புதிய இசை அமைப்பு... புதுமையை விரும்பும் ரசிகர்கள்... இதற்கு நடுவே சொந்த விருப்பு வெறுப்பு... இப்படி அவங்களுக்கும் நிறைய பிரச்சினைகள். இக்கறைக்கு அக்கறை பச்சை... என்றாள் உஷா..

    போடி - நான் அப்படி நினைக்கல இவங்க வாழ்க்கையே ஒரு இனிய மெல்லிசை இழைபோல நமக்குக் இருக்கும்.. அத மாதிரி ஒரு வாழ்க்கை கிடைக்காதா? கிடைச்சா எப்படி இருக்கும்...

    நமக்குன்னு ஏன்டி என்னையும் சேர்த்துக்கறே... உனக்குக் கிடைச்சா எப்படி இருக்கும்னு சொல்லு...

    ஆமாம் உஷா... இப்படிப்பட்ட ஒரு பிரபலமான மெல்லிசைப் பாடகரைக் கல்யாணம் பண்ணிக்கணும்... ஊர் ஊரா அவர் கூட சுத்தணும். அவர் பாடலைக் கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்யும்போது அதை நான் நேரிடையாக பார்த்து பரவசப்படணும்... எத்தனை விதமான ரசனை. எத்தனை விதமான மக்கள்.... ஹா வாழ்க்கையே ஒரு வாத்திய விருந்தாக அல்லவா இருக்கும்...

    பூங்கோதையின் தோள்பட்டையில் கையை வைத்து உலுக்கினாள்....

    கோதை நான் ஒண்ணு சொல்லட்டுமா...!

    சொல்லேன்...

    மனசை இப்படி காட்டாறு மாதிரி தாறுமாறா ஓடவிடாதே.......... சின்னச்சின்ன ஆசைகளாக இருந் தாலும் அதிலே சாத்திய அசாத்தியங்களைப் பற்றி தீர்மானம் இருக்கணும். போனமாதம் சங்கர மடத்திலே நடந்த சிட்டிபாபு வீணைக் கச்சேரிக்குப் போய்விட்டுத் திரும்பும்போது நீ என்ன பேசிக்கிட்டு வந்தேங்கறதை கொஞ்சம் ஞாபகப்படுத்தட்டுமா!"

    ஏன்ன பேசினேன்...

    அடடா எத்தனை இதமான மீட்டல். அந்த வீணை யின் தந்திகளை அந்த விரல் எத்தனை நாசூக்காக மீட்டுகின்றன. நாதலயத்தில் அவர் தன்னை மறக்கும் போது சங்கீத ரசிகர்களும்.... தன்னை மறந்து போகிறார்கள். ஒவ்வொரு சங்கதம் முடியும்போது எழுந்த ஆரவாரம்... கச்சேரி முடிந்து அவர் வெளியே வரும்போது எத்தனை பேர் அவருடைய காலைத் தொட்டு வணங்கினார்கள்... ஹா.... நமது கர்னாடக இசையே நாதவடிவான ஆண்டவன் என்பதில் தான் எத்தனை உண்மை... பிறப்பிருந்தால் அவரைப்போல பிறக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அவரைப் போன்ற வைணிகரையாவது வரித்து கல்யாணம் பண்ணிக்கணும். அப்பத்தான் அந்த வாழ்க்கையின் மகோன்னதம் புரியும்… என்று நீ புலம்பித் தீர்த்தாய்.... இல்லையா...!

    பத்மாவின் நாட்டியத்தைப் பார்த்துவிட்டு அடுத்த ஜென்மத்திலாவது ஒரு நாட்டியக்காரியாக பிறக்க பிராத்தித்துக் கொள்வேன் என்றாய்...

    ஆமாம்... சொன்னேன்... இல்லேங்கலயே... அதெல்லாம் ரசனையின் உச்ச நிலையடி அசட்டு முண்டம்...

    "உன் ரசனையை நான் குறை

    Enjoying the preview?
    Page 1 of 1