Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nammilirunthu Naam
Nammilirunthu Naam
Nammilirunthu Naam
Ebook118 pages44 minutes

Nammilirunthu Naam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பவர் ஒரு வகை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பவர் இன்னொரு வகை. வாழ்க்கையை வாழ்வதற்கு ஆன்மீகம் தேவை என்பதைக் கவிஞர் கூறினாலும், ஆன்மீகம் மூலம் வாழ்விற்கான வழியை காட்டுகிறார். சிக்கல்களிலிருந்து விடுபட வழி சொல்கிறார். சோர்விலிருந்து மீள நம்பிக்கை ஊட்டுகிறார். கட்டுரையின் இடையிடையே ஒரு சிறு கதைச் சொல்லி சிந்தனையைக் கவரும் வகையில் அமைந்துள்ளதை வாசித்து அறிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580168910747
Nammilirunthu Naam

Read more from Salem D. Sumathi Rani

Related to Nammilirunthu Naam

Related ebooks

Reviews for Nammilirunthu Naam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nammilirunthu Naam - Salem D. Sumathi Rani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நம்மிலிருந்து நாம்

    (வாழ்வியல் கட்டுரைகள்)

    Nammilirunthu Naam

    Author:

    சேலம் தெ. சுமதி ராணி

    Salem D. Sumathi Rani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/salem-d-sumathi-rani

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரை

    என்னுரை

    அவனருளாலே அவன் தாள் பணிந்து

    அன்னையின் தவம்

    ஈசன் அடி போற்றி

    நம்மிலிருந்து... நாம்

    தோல்வியுறச் செய்வோம் தோல்வியை

    நமக்கு நெருக்கமானவர் நாமே

    நமக்குள் உள்ள வளமே நமக்கு வரம்

    பக்தி யோகம்

    பித்தா பிறை சூடிப் பெருமானே

    பெண் ஏன் அடிமைப் பதுமையானாள்

    பெண்ணறம் என்பது யாதெனில்...

    மரணத்தையும் வெல்வோம்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

    அணிந்துரை

    இரையாக இறை அருள் ஊட்டும் எழுத்து

    (சேலம் சுமதி ராணியின் நம்மிலிருந்து நாம் தொகுப்பை முன்வைத்து)

    பொன். குமார்

    சேலம் எழுத்தாளர்கள் பலரை தந்த மண். சேலம் இலக்கிய தளத்தில் புதியதாக பிரவேசித்திருப்பவர் சேலம் சுமதி ராணி. நானும் நானும் என்னும் கவிதைத் தொகுப்பையும் போதிமரக்கதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பையும் தந்து நல்ல வரவேற்பைப் பெற்றவரின் மூன்றாம் தொகுப்பு நம்மிலிருந்து நாம். இது கட்டுரைத் தொகுப்பு.

    வாழ்க்கை என்பது நெறிமுறைகளைக் கொண்டது. வாழ்க்கை சிறப்பாக அமைய வழிமுறைகள் சில தவறாது கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. ஒரு நதியைப்போல் வாழ்க்கை தெளிவாக பயணிக்க வேண்டும் என்றால் இருபக்க கரைகள் அவசியம். கரை என்பது கட்டுப்பாடு ஆகாது, ஒழுக்கம்.

    வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பவர் ஒரு வகை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பவர் இன்னொரு வகை. வாழ்க்கையை வாழ்வதற்கு இறைவழி, பக்தி முறை சிறப்பு என்கிறார் சேலம் சுமதி ராணி. பக்தி வழியில் வாழலாம் என்றாலும் பகுத்தறிவு அடிப்படையில் வாழலாம் என்றாலும் நேர்மையும் ஒழுக்கமும் நம்பிக்கையும் முக்கியம்.

    எழுத்தாளர் சேலம் சுமதி ராணியின் கட்டுரைகளில் இப்போக்கே முன்னிற்கிறது. ஆன்மீகம் தேவை என்பதைக் கவிஞர் கூறினாலும் ஆன்மீகம் மூலம் வாழ்விற்கான வழியையே காட்டுகிறார். சிக்கல்களிலிருந்து விடுபட வழிச் சொல்கிறார். சோர்விலிருந்து மீள நம்பிக்கை ஊட்டுகிறார். கட்டுரையின் இடையிடையை ஒரு சிறுகதைச் சொல்லி சிந்தனையைக் கவர்கிறார். நம்பிக்கைக் குறித்த கதை மிகச் சிறப்பு. மழை வரும் என்றால் நம்பிக்கையுடன் குடையை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது...

    கட்டுரைகளை வாசிக்கும்போதே மனத்திற்கு இதமாகவும் மனத்தை வருடுவதாகவும் வாழ்வில் வாழ வேண்டும் என்று நம்பிக்கையூட்டுவதாகவும் உணர்வை ஏற்படுத்தியது. கட்டுரைகளில் இருந்து பல கூற்றுகளை மேற்கோள் காட்டும் வண்ணம் உள்ளன. சோர்ந்து விழும்போதே விழித்து நிமிர்ந்து எழுவோம் என்ற நம்பிக்கையுடன் பார்த்தால் நம்மிடம் உள்ள அபாரமான மாபெரும் சக்தியை உணர்வோம் என்பது ஒரு சான்று.

    வாழ்விற்கு அடிப்படைத் தேவை, மனிதர்க்கும் ஒருவர்க்கு ஒருவர் தேவை அன்பு. உலகம் இயங்க அச்சாக இருக்கிறது அன்பு. கட்டுரையாளர் சேலம் சுமதி ராணியும் அன்பிலிருந்தே தொடங்கியுள்ளார். அதற்காக அன்பே சிவம், சிவமே அன்பு என்று போதிக்கும் திருமந்திரத்தையே துணைக்கழைத்துள்ளார். திருமந்திரத்திலிருந்து பாடல்களை வாசிக்கத் தந்துள்ளார். பாடல் வரிகளுடனே கட்டுரைகளை முடித்துள்ளார்.

    தன்னை அறிய தனக்கோர் கேடில்லை

    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

    தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

    தன்னை அர்ச்சிக்கத்தான் இருந்தானே

    என்கிறது ஒரு திருமந்திர பாடல். தன்னையறிவதே அவசியம் என்கிறார். உன்னையே நீ அறிவாய் (know yourself) என்னும் கூற்றை நினைவுக்கூரச் செய்தது.

    அவனருளாலே அவன் தாள் பணிந்து, அன்னையின் தவம், ஈசன் அடி போற்றி, உன்னிலிருந்து நீ என்னும் தொகுப்பின் முற்பகுதி கட்டுரைகளில் ஆன்மீகம் மூலமும் பக்தி மூலமும் வாழ்வியல் சிந்தனைகளை பரப்பியுள்ளார். தெய்வம் வேண்டும் என்றில்லை, தெய்வீகம்தான் வேண்டும் என்கிறது பக்தி யோகம்.

    தோல்வியுறச் செய்வோம் தோல்வியை என்னும் கட்டுரை விடாமுயற்சி, அறிவாற்றல், தன்னம்பிக்கைக்கொண்டு தடைகளை வெற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது. நமக்கு நெருக்கமானவர் நாமே என்று அறிவுரைக்கிறது ஒரு கட்டுரை. மனம் அது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பதைக் கவனப்படுத்தியுள்ளார். நமக்குள் உள்ள வளமே நமக்கு வரம் என்பது ஒரு நல்ல கட்டுரை. வெறுப்பையும் கோபத்தையும் நாம் விலக்க விலக்க நமக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் என்கிறார்.

    பெண் ஏன் அடிமையானாள் என்று பெரியார் கேள்வி எழுப்பி ஒரு தொகுப்பையே வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பெண் ஏன் அடிமைப் பதுமையானாள் என சேலம் சுமதி ராணி கேள்வி எழுப்பி ஒரு கட்டுரை எழுதி விழிப்புணர்வை ஊட்டியுள்ளார். கற்பு பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டதைக் கண்டித்துள்ளார். ஆணைவிட பெண் வலிமை மிக்கவள் என்கிறார்.

    உயிரைக் காக்கும், உயிரினை சேர்த்திடும்

    உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்

    உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!

    ஊது கொம்புகள்! ஆடு களி கொண்டே!

    என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுப்போல் கொண்டாட வேண்டியவர்கள் பெண்கள் என்கிறார். பெண்ணறம் என்பது யாதெனில் என விரிவாகவும் விவரங்களுடனும் எழுதியுள்ளார். பெண்ணியத்திற்கான சிறந்த பங்களிப்பாக உள்ளது.

    மனிதருக்கு பிறப்பு எப்படியோ இறப்பும் அப்படியே. இறப்பை எதிர்கொள்ளும் மனம் வேண்டும். மரணபயத்துடன் வாழ்தல் மனிதர்க்கு அழகல்ல. மரணம் மனிதரை வெல்வதற்கு முன் மரணத்தையும் வெல்வோம் என்கிறார். இறப்பை வெல்ல இறைநம்பிக்கைக் கொள்வோம் என்று வேண்டியுள்ளார்.

    சேலம் சுமதி ராணி கட்டுரைகளில் வாழ்வியல் தத்துவங்கள் வெளிப்பட்டிருந்தாலும் ஓர் அனுபவ வெளிப்பாடு தெரிகிறது. கட்டுரைகளில் ஒரு முதிர்ச்சியும் முன்னிற்கிறது. வாழ்வை எங்ஙனம் வாழ வேண்டும் என்று அறிவுரைக்கவில்லை. அன்பாக வேண்டியுள்ளார். கவிதைகள் எழுதியுள்ளார். கதைகள் எழுதியுள்ளார். தற்போது கட்டுரைகள் எழுதியுள்ளார். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மொழியைக் கையாண்டுள்ளார். கட்டுரைகள் இதழ்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்தவையாகும். குழந்தைகளுக்கு இரை ஊட்டுவதுடன் இறையருளையும் ஊட்ட வேண்டும் என்கிறார். இறையருளுடன் எல்லா வளமும் எல்லாரும் பெற்று வாழ வாழ்த்துகள்.

    நம்மிலிருந்து நாமாவோம்

    நன்மையெல்லாம் பெறுவோம்.

    எழுதுங்கள்!

    எழுதுகிறேன்!

    எழுதுவோம்!

    என்றும் அன்புடன்

    பொன். குமார்

    21/15 புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு,

    லைன்மேடு சேலம் - 636006,

    90033 44742

    அணிந்துரை

    விட்டு விடுதலையாக விழையும் குரல்

    கவிஞர் சுமதி ராணி சேலம் சுமதி என்ற பெயரில் அறிமுகமானார். அறிமுகம் செய்தவர்கள் புதிய படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் இனிய உதயம் ஆசிரியர் ஆரூரார் அவர்களும், தங்கை அமுதா தமிழ்நாடனும், சுமதி வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். வங்கிப்பணிக்குத்தான் ஓய்வு. இலக்கியப்பணிக்கோ இளையவர் போன்ற உற்சாகம். ஒரே நேரத்தில் கவிதை, சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டவர் அந்த வேகம்

    Enjoying the preview?
    Page 1 of 1