Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muthal Parisu
Muthal Parisu
Muthal Parisu
Ebook173 pages1 hour

Muthal Parisu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இயற்பெயர் தீ.திருப்பதி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது இவரது அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள்.

இவர் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய காலம் அது. அப்போதுதான் இவர் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களிடம் தஞ்சம் அடைந்தார். , .மறுக்காமல் இவர்கள் வறுமை நிலையை போக்கியதோடு மாலை நேரம் அவர் வீட்டில் வந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

அவர் ஆசிரியர் வீட்டுக்கு சென்ற போது அவரைப்போல் ஏராளமான ஏழை மாணவர்கள் படித்துக் கொண்டு இருந்தனர். ஆங்கிலம், கணக்கு, அறிவியல் சொல்லிக் கொடுத்தார்கள். இவரும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.

அன்று அவர்கள் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் அரிசி,காய்கறிகள், மளிகைசாமான், சமைக்கப் பாத்திரம், அவர்கள் உடுத்திக்கொள்ள துணிமணிகள், கைச்செலவுக்கு பணம் இன்னபிறவும் கொடுத்து உதவவில்லை என்றால் அவர் படிப்பும் பாதியில் நின்றிருக்கும். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் எழமுடியாமல் இருந்த அவர் தாயைக் காப்பாற்றவும், அவர் தந்தை மற்றும் தங்கையைக் காப்பாற்ற அவர் அண்ணனோடு (கவிஞர் புதுகை.தீ.இர) பிழைப்பு தேடி அப்போது அலைந்திருப்பார்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். அவர்கள் நீட்டிய அந்த உதவிக்கரம் , அவர் மேல்படிப்பு (ஆசிரியர் பயிற்சி) படிக்கும் வரை அவர்களைப் போலவே பேராசிரியர் பெருமக்களும் உதவிக்கரம் தந்தார்கள்.

ஆசிரியர் பயிற்சி புதுக்கோட்டையில் (2000-2002) பயின்ற காலத்தில் போற்றுதலுக்குரிய செல்வி.நா.விஜயலெட்சுமி அம்மா அவர்கள், திருமதி.டி.அகிலா அம்மா அவர்கள், திரு.சொ.சுப்பையா அவர்கள் (தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்) , திரு.மு.மாரியப்பன் அவர்கள், திரு. நா.செல்லத்துரை அவர்கள் (தற்போது DIET முதல்வர்) , திரு.ம ராஜ்குமார் அவர்கள், திரு.ஜமால்நாசர் அவர்கள், திரு. கோ.முருகன் அவர்கள், திரு.டி.மாரியப்பன் அவர்கள், மற்றும் மேலான அவர் பாசத்திற்குரிய நண்பர்களும் உதவிக்கரம் நீட்டி அவரை ஆதரித்தார்கள்.

இவர் வாழ்க்கையில் முதல் ஒளியை ஏற்றிவைத்த இவரது ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எண்ணியபோதுதான் அவரது பெயரையே புனைப்பெயராக "சோலச்சி " என்று வைத்துக்கொண்டார்.

அவர் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள் கொடுத்த சேலையை படுத்த படுக்கையில் நோய்வாய்ப்பட்டு செயலிழந்து கிடந்ததால் அவரது தாயால் கடைசிவரை அந்த சேலையை கட்டாமலேயே 2004 இல் நவம்பர் 25 ஆம் தேதி (நான் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்த இருபத்தெட்டாம் நாள்) இறந்து போனார்கள்.

இவரது முதல் நூலான "முதல் பரிசு " சிறுகதை நூல் வெளியீட்டு விழா 19.08.2015 அவர் அண்ணன் பிறந்தநாள் அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இளைய எழுத்தாளர்களின் வழிகாட்டி எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்கள் தலைமையில் அவரது ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் வெளியிட்டு சிறப்பு செய்தார்கள்.

இவரது ஆசிரியர் பெயரையே புனைப்பெயராக வைத்துக்கொண்ட சோலச்சியின் வரலாறு இதுதான்.

இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் அரசுப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580117702030
Muthal Parisu

Related to Muthal Parisu

Related ebooks

Reviews for Muthal Parisu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muthal Parisu - Kavimathi. Solachy

    http://www.pustaka.co.in

    முதல் பரிசு

    Mudhal Parisu

    Author:

    கவிமதி. சோலச்சி

    Kavimathi. Solachy

    For more books
    http://www.pustaka.co.in/home/author/kavimathi-solachi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முதல் பரிசு

    வாழ்த்துரை

    இலக்கியக் காவலர். ஆன்மீக ரத்னா

    டாக்டர். அ. இரவிச் சந்திரன் B.A.,D.Lit, அவர்கள்

    மேலாண்மை அறங்காவலர் மற்றும் முதன்மை செயலாக்க இயக்குநர்

    சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை, குடுமியான்மலை

    முதல் பரிசு சிறுகதை நூலின் ஆசிரியர் சோலச்சி அவர்கள் முதன்முதலில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகவே அறிமுகமானார். அவர் பணியாற்றும் பள்ளியானது இலக்கியக் கூடமாகவே மாறியுள்ளது என்பதை நான நேரில் பார்த்து மகிழ்ந்துள்ளேன்.

    இலக்கிய விழா காணாத வயலோகம் கிராமத்தில் 08.01.2012 அன்று இரவு மிகப்பெரிய கலை இலக்கிய விழாவை நடத்தி பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தார். அவரது படைப்புகள் வார, மாத இதழ்களில் வெளிவந்துள்ளது என்பதை நான் அறிவேன்.

    கவிஞராக வலம் வந்த எனதருமை தம்பி சோலச்சி சிறுகதை எழுத்தாளராகவும் தன்னை நிரூபித்து உள்ளார். அவரது கவிதைகளைப் போலவே சிறுகதைகளையும் சமூக நோக்கத் தோடு யாரும் முகம் சுளிக்காத வண்ணம் படைத்துள்ளார். சமூக மாற்றத்தை நோக்கி பயணிக்கும் இவர் இலக்கிய உலகில் தனக்கென முத்திரை பதித்து வாகை சூட வாழ்த்துகிறேன்.

    பாசத்துடன்

    அ. இரவிச்சந்திரன்

    வாழ்த்துரை

    செல்வி. நா. விஜயலெட்சுமி அவர்கள்

    தமிழ்த்துறை, முதுநிலை விரிவுரையாளர், DIET(பணி நிறைவு)

    புதுக்கோட்டை

    முதல் பரிசு சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் கவிமதி. சோலச்சி அவர்களின் முதல் படையல். கவிமதி சோலச்சியை கவிஞராகவே முதலில் நான் அறிந்திருந்தேன். எழுத்தாளராக அவரின் புது அவதாரம் சிறப்பாகவே இருப்பதை இச்சிறுகதை தொகுப்பு வெளிப்படுத்தியுள்ளது. படிப்பறிவை விட பட்டறிவே மனிதனை பட்டை தீட்டி பிரகாசிக்க வைக்கும் என்பதற்கு இந்நூலாசிரியரே சிறந்த எடுத்துக் காட்டாகிறார்.

    மாதா, பிதா, குரு, நண்பன் என்ற நான்கு நிலைகளில் என்னை வைத்து பெருமைப்படுத்திய எனது மாணவ மணி இன்று நல்ல ஆசிரியராக, கவிஞராக எழுத்தாளராக பலரின் பாராட்டுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

    ஆம் ! ஈன்ற பொழுதினும் பெரிது வக்கும் அன்னையாகிய நான் சோலச்சி என்ற புனைபெயரில் உலாவரும் அகவை தீ. திருப்பதியான என் மகன் இலக்கிய உலகில் இன்னும் பல அரிய சாதனைகளைச் செய்து என்றென்றும் பார் போற்ற வாழ்த்தும் அன்பு அம்மா

    நா. விஜயலெட்சுமி

    அணிந்துரை

    விஜயா சிவகாசிநாதன்

    தலைவர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்,

    புதுக்கோட்டை மாவட்டக் கிளை

    இலக்கிய உலகின் இளைய தலை முறை எழுத்தாளர்களின் புதிய அடையாளம் கவிமதி. சோலச்சி. வித்தயாசமான கோணங்களின் விதவிதமான படைப்புகள்இந்த சிறுகதைகளின் தொகுப்பு.

    இத் தொகுப்பில் நாற்பத்து மூன்று சிறுகதைகள் உள்ளன. போர்டுமேடாக்ஸ் என்ற மேனாட்டு அறிஞர் இது நடந்திருக்கத்தான் வேண்டும். அதில் நடக்கும் நிகழ்ச்சிகள் இப்படித்தான் நடக்க முடியும். வேறு வகையில் நடக்க முடியாது என்ற உறுதியை நல்ல சிறுகதை தோற்றுவிக்க வேண்டும் என்று கதையின் வடிவம் பற்றி சித்தரிக்கிறார். இத்தகைய இலக்கணம் மீறாமல் ஒவ்வொரு கதையிலும் முத்திரை பதித்திருக்கிறார் கவிமதி சோலச்சி.

    கதைகள் அனைத்துமே மண் வாசனை வீசும் கிராமப்புறச் சாயல்களாகவே உள்ளன. குழப்பம் இல்லாத தெளிந்த கதைப் போக்கும், கதாபாத்திரங்களை பேச வைக்கும் தேர்ந்த நடை, அனைத்துமே கவித்துவம் நிறைந்ததாகவே உள்ளன.

    புத்தகத்தின் தலைப்பிற்குரிய முதல் பரிசு சிறுகதை மனதைத் தொடுகிறது. எழியன் படிப்பறிவில்லாத ஆடு மேய்க்கும் பெரிய குடும்பஸ்தன் அவன் மகன் சின்னையாவோ குடும்பத்தில் எவ்வளவு வேலையிருந்தாலும் படிப்பிலும், மற்ற போட்டிகளிலும் முதல் மாணவனாக வருகிறான். வறுமையிலும் கல்வியின் பெருமை காட்டும் சிறப்பு. இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ற அறிவுரை சொல்லும் கதை.

    ஒரு அப்பாவி இளம் தளிரை கசக்கி முகர்ந்த காமாந்தகனின் தவறான செயலால் பால்வினை நோயின் பயங்கரத்தை விளக்கும் கதை நஞ்சு போன பிஞ்சு இதயத்தை வருடும் இயல்பான நடை. ஆனால், இரும்பு மனதையும் இளகச் செய்து விடுகிறது வினோதினி என்ற பாத்திரப்படைப்பு.

    ஒரு அன் புத் தாயின் தி யாக உணர்வை வெளிக்காட்டுகிறது வெளிச்சம் சிறுகதை.

    மாற்றம், சாமக்கோழி, ரெண்டாவது ரகம், அவனும் ஆசையும், இவை அத்தனையும் யதார்த்தங்களை வெளிக்காட்டும் அற்புதப் படைப்புகள்.

    ஆட்டுக்கறி, விசிறி, உச்சிப் பொழுதில் அவள், இவைகள் பாக்கியாவில் இடம் பெற்றுவிட்டதே இதன் சிறப்புக்குச் சான்று.

    பழனித் தாத்தா எனும் முதியவரின் மேல் சேகர் எனும் வாலிபன் கொண்டுள்ள பாசப் பிணைப்பையும் கடைசியில் வயதான தாத்தாவுக்கு கையிலிருந்த பத்து ரூபாயைக் கூட கொடுக்காமல் வந்ததை நினைத்து சேகர் கண்ணீர் விடும்போது நம் கண்களையும் கலங்கச் செய்து விடுகிறது. நெஞ்சுக்குள் இருள் எனும் கதை.

    ரத்தத்தை உறையச் செய்யும் பனிமலை முகட்டில் நாட்டுக்காக உழைக்கும் தன்னலமற்ற வீரர்களில் ஒருவன் விவேக். தனக்கு வந்த கடிதத்தைப் படிக்கும் போது பின்னோக்கிச் சென்ற கிராமத்து வாழ்க்கை நினைவுகள் பசுமைபடர்ந்த தாடாகமாய் நிழலாடுகிறது எதிர்பாராத யுத்தம்.

    தாய்க்காகவும், தாய் நாட்டுக்காகவும் பாடுபட்டு தமிழக முதல்வரிடம் பாராட்டிதழ் பெற்ற போது நம்மிடமும் பாராட்டு பெற்று விடுகிறார் சின்னத்தம்பி. பட்ட மரம் சிறுகதை ஒரு பச்சை மரம்.

    ஒரு பிடி சோறு’ சிறுகதை பாசப் பிணைப்பு. மனசுக்குள் மத்தாப்பு மன்னிப்பு’ சிறுகதை,

    பல கதைகள் காதலே இல்லாத கதைகள். ஆனால், அத்தனையும் கனிதரும் தேன் சுவை. கதைகளில் வரும்

    கதாபாத்திரங்கள் பேசும் போது வார்த்தைகளில் வல்லினம், மெல்லினம் மாறி வருகிறது. ஊன்றிப் படிக்கும் போதுதான் கதை நடக்கும் பகுதியின் சொல் நடை என்று புரிகிறது. இது கதாசிரியரின் கைவந்த கலை என்று தெளிவாகிறது.

    திருத்திய உள்ளம் சிறுகதை தமிழ் முரசில் வெளிவந்திருப்பது இவரை எழுத்துலகில் பிரகாசிக்க நற்சான்று வழங்கி உள்ளதாய் உணர்த்துகிறது.

    சாம்பல் எனும் சிறுகதையில் கவிமதி சோலச்சி அவர்கள் வார்த்தை வர்ணனையை எவ்வளவு சிறப்போடு கையாண்டிருக்கிறார் என்பதைக் காண முடிகிறது. எடுத்துக்காட்டு ஆள் அரவம் இல்லாமல் ஆதம்பட்டி கிராமம் நித்திரையில் முத்திரை பதித்துக் கொண்டிருந்தது.

    கதைகள் அனைத்தையும் உள்வாங்கிப் படித்தேன். எங்கும் எதிலும் ஆபாசம் என்பது கொஞ்சமும் இல்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் ஆடை கட்டி உலவ விட்டிருக்கிறார். கதையின் கரு அனைத்துமே பார்த்து, பழகிய மனிதர்களின் உறவில் கிடைத்ததாகவே உணர்த்துகிறது.

    இளம் எழுத்தாளராக இலக்கிய உலகில் கால் பதித்திருக்கும் கவிமதி சோலச்சியின் முதல் காணிக்கை "முதல் பரிசு’ சிறுகதை தொகுப்பு. மிக விரைவில் அவரின் அனுபவத்தாலும் சிறப்புக்குரிய இலக்கிய அறிவுத்திறத்தாலும் பல பரிசுகள் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    தங்கள்

    விஜயா சிவகாசிநாதன்

    என்னுரை

    ‘முதல் பரிசு என்னும் இந்நூலை கரங்களில் தாங்கி பிடித்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கவிதைகள் எழுதுவதில் சிறுவயதில் இருந்தே அதிக நாட்டம் உடையவன். 2002 ல் ஆனந்த விகடனில் கல்யாணத்தில் கலாட்டா என்ற தலைப்பில் துணுக்குப் போட்டி வைத்திருந்தார்கள். அதற்கு துணுக்கு எழுதி அனுப்பி இருந்தேன். ஆனந்த விகடனில் பிரசுரமானது. பரிசுத் தொகையாக ரூ.250/-ம் அனுப்பி இருந்தார்கள். இதுவே நான் பெற்ற முதல் பரிசுத்தொகை.

    அப்போது, எனது சொந்த கிராமமான அகரப்பட்டி அரசுப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதம் ரூ.300/- க்கு ஆசிரியராக பணியாற்றி வந்தேன். மாதம் ஊதியம் ரூ. 300/- பெறுபவனுக்கு ரூ. 250 பரிசுத் தொகை கிடைக்கிறதென்றால் என் மகிழ்ச்சியை என் குடும்பமும் எந்த அளவுக்கு கொண்டாடி இருக்கும் என்பதை உங்களாலும் உணரமுடியும்.

    என் அண்ணன் தீ.இரவிச்சந்திரனும் வயலோகம் கவிஞர் சி. பாரதி செல்வனும், காந்துப்பட்டி கவிஞர் பூபாளம் விஸ்வநாதனும் என்னைப் பாராட்டி சிறுகதை எழுதச் சொன்னார்கள். நானும், முதல் சிறுகதையாக திருந்திய உள்ளம் என்கிற தலைப்பில் எழுதினேன். இது 2003 தமிழ் முரசு பொங்கல் மலர் திருச்சி பதிப்பில் வெளியானது. அப்போது எனது இயற்பெயரான தீ. திருப்பதியுடன் அகரப்பட்டியின் சுருக்கம் அகவை' யை சேர்த்து ‘அகவை’ தீ. திருப்பதி என்ற

    Enjoying the preview?
    Page 1 of 1