Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pesum Kadithangal
Pesum Kadithangal
Pesum Kadithangal
Ebook354 pages1 hour

Pesum Kadithangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பின் ஊற்று, அருமை நண்பர், சாகித்திய அகாதமி விருதாளர், பண்பாளர் திருமிகு. கமலவேலனின் “பேசும் கடிதங்கள்” இரு நெஞ்சங்களின் கருவூலம்; புதுமைப் படைப்பு; இரு பெரும் எழுத்தாளர்களின் இதயத் திறப்பு.

அன்பின் மலர்ச்சி நட்பு. மனத்தை அள்ளும் அதன் மணம் அகலமானது; ஆழமானது. உறவுகளின் தனிவகையான நட்பின் வெளிப்பாடுகளில் ஒன்று நண்பர்கள் எழுதும் கடிதம். நட்பும் ஒரு வகைக் காதல்தான். அதன் பிணைப்பை, இறுக்கத்தைச் சொற்களால் வெளியிட இயலாது. உணர்வும் அறிவும் ஒளிரும் நட்பு உயர்வானது. அந்த வானுயர்வில் பிறக்கும் கடிதங்கள் எப்படி இருக்கும்?

இதிலுள்ள 87 கடிதங்களைப் படித்தால் உணரலாம்; புரிந்துகொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580141907039
Pesum Kadithangal

Read more from M. Kamalavelan

Related to Pesum Kadithangal

Related ebooks

Reviews for Pesum Kadithangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pesum Kadithangal - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    பேசும் கடிதங்கள்

    Pesum Kadithangal

    Author:

    மா. கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நெஞ்சையள்ளும் அஞ்சல்கள்

    டாக்டர் மா.பா. குருசாமி, எம்.ஏ, எம்.லிட், பிஎச்.டி,

    இயக்குநர், குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம், திண்டுக்கல்

    தலைவர், காந்திய இலக்கியச் சங்கம், மதுரை

    தலைவர், இன்பசேவா சங்கம், சேவாப்பூர்

    செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஹரிஜன சேவா சங்கம்.

    அன்பின் ஊற்று, அருமை நண்பர், சாகித்திய அகாதமி விருதாளர், பண்பாளர் திருமிகு. கமலவேலனின் பேசும் கடிதங்கள் இரு நெஞ்சங்களின் கருவூலம்; புதுமைப் படைப்பு; இரு பெரும் எழுத்தாளர்களின் இதயத் திறப்பு.

    அன்பின் மலர்ச்சி நட்பு. மனத்தை அள்ளும் அதன் மணம் அகலமானது; ஆழமானது. உறவுகளின் தனிவகையான நட்பின் வெளிப்பாடுகளில் ஒன்று நண்பர்கள் எழுதும் கடிதம். நட்பும் ஒரு வகைக் காதல்தான். அதன் பிணைப்பை, இறுக்கத்தைச் சொற்களால் வெளியிட இயலாது. உணர்வும் அறிவும் ஒளிரும் நட்பு உயர்வானது. அந்த வானுயர்வில் பிறக்கும் கடிதங்கள் எப்படி இருக்கும்?

    இதிலுள்ள 87 கடிதங்களைப் (வல்லிக்கண்ணன் 53; கமலவேலன் 34) படித்தால் உணரலாம்; புரிந்துகொள்ளலாம்.

    இருவரும் சாகித்திய அகாதமி விருதாளர்கள்; இலக்கியப் படைப்பாளிகள்; எழுத்தாளர்கள். இருவரையும் நானறிவேன்.

    திரு. வல்லிக்கண்ணனை அவரது படைப்புகளின் மூலம் நன்கறிவேன். அவரை ஒருமுறை நேரில் தேடிச்சென்று பார்த்துப் பேசி மகிழ்ந்திருக்கின்றேன். எனது இரண்டு கடிதங்களுக்குப் பதில் எழுதியுள்ளார். மற்றபடி, நெருங்கிப் பழகியதில்லை. அவரைப் பற்றி எழுத்தாளர் என்ற முறையில் நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எளிமைக்கு இலக்கியமானவர்; இலக்கணமானவர்.

    இனிய நண்பர் திரு. கமலவேலனை 2000 இல் திண்டுக்கல் வந்த பிறகு அறிவேன். விரைவிலேயே அவரது அன்பின் பெருக்கு எங்களை இணைத்தது. அவர் ஓர் இலக்கியத் தேனீ, நிறையப் படிப்பவர். குறிப்பாக எல்லா இதழ்களையும் படிக்கும் படிப்பாளி, படைப்பாளி. பல ஆண்டுகளாக ஓயாது எழுதிக்கொண்டிருப்பவர். நட்பைப் போற்றி வளர்ப்பவர்.

    எழுத்தாளர் வித்தகர் திரு. வல்லிக்கண்ணனுக்கும் எழுத்தை மூச்சாக்கிக் கொண்ட திரு. கமலவேலனுக்கும் நட்புத் தோன்றியதில் வியப்பில்லை. அது ஓர் எழுத்து நட்பாக இல்லாமல் ஆத்மார்த்த நட்பாக வளர்ந்து கிளைபரப்பி, விழுது விட்டு, பெரிய ஆலமரமாக விரிந்து, பரந்து வளர்ந்ததுதான் வியப்பு. அந்த நட்பு மரத்தில் பூத்த வண்ண மலர்களில் சிலவற்றைத் தொகுத்து, தொடுத்த மாலை இந்நூல்.

    இவை வெளியிடப்படுவதற்காக எழுதிய கடிதங்கள் அல்ல. அன்பில் பிணைந்த இரு உள்ளங்கள் பேசிக்கொள்ள, தங்களது இன்ப, துன்பங்களை, இதய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள எழுதியவை. நாளும் படும் பாட்டினை நம்மை உணர்ந்தவர்களோடு பகிர்ந்து கொள்வதில் ஓர் ஆறுதல். இது உயர்ந்த எழுத்தாளர்களின் நட்பு என்பதால், இதில் தனி மனித உணர்வுகள் மட்டும் வெளிப்படாமல், சமுதாயக் கவலைகளும் அக்கறைகளும் வெளிப்படுகின்றன. எல்லாவற்றிலும் இரண்டு உள்ளங்களை இரு எழுத்தாளர்களின் ஆளுமைத் தன்மைகளை, சிறப்புக்களை நம்மால் அறிய முடிகின்றது; அதனால் உள்ளம் நெகிழ்கின்றது.

    நூலாசிரியர் திரு. கமலவேலன், கடித இலக்கியத்தின் மேன்மையினை ‘(முகத்தில் முகம் பார்க்கலாம்)' முன்னுரையிலும் ('கனவுகளில் கரையாதவர்' கட்டுரை) பின்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார்; இந்நூலிலுள்ள கடிதங்களின் தனித்துவம் குறிப்பிடத்தக்கது.

    திரு. வல்லிக்கண்ணன் வாழ்ந்த முறையாலும் எழுதிய எழுத்துக்களாலும் வியப்பிற்குரிய வாழ்க்கை வாழ்ந்த பெருந்தகை. எழுத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, எழுத்தாகவே வாழ்ந்தவர். அன்பால் அண்ணன் குடும்பத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவர். எழுத்தைப் போன்றே நண்பர்களுக்கும் கடிதம் எழுதியதை நேசித்த பண்பாளர் என்பதற்கு அவர் கடிதங்கள் சான்று. திரு. கமலவேலன் போன்று சிலருடன் கடிதங்கள் மூலம் பேசிக்கொண்டவர். நண்பர்களிடமிருந்து கடிதங்கள் வரவில்லை என்றால் ஏங்கிப் போனவர்.

    திரு.வ.க.வின் கடிதங்களின் சிறப்புக்களில் ஒன்று அவை வரலாற்று ஆவணமாக செய்திக்களஞ்சியமாக அமைந்திருப்பதுதான். பல எழுத்தாளர்களைப் பற்றிய செய்திகளை, குறிப்பாக அவர்களது படைப்புகள், மறைவு பற்றியவற்றைப் பதிவு செய்துள்ளார். அதில் அவரது மதிப்பீடுகளின் முத்திரைகள் உள்ளன.

    அவர் திறனாய்வாளரும், மனித நேய மிக்கவருமான திரு.தி.க.சிவசங்கரனிடம் கொண்டிருந்த அன்பு, மதிப்பு, அக்கறை மகத்தானவை. பெரும்பாலான கடிதங்களில் தி.க.சி. பற்றி எழுதியுள்ளார். திரு. தி.க.சி. அவர்களோடு ஓரளவு பழகியிருக்கின்றேன். அவரின் பெருமையை அறிவேன். இதில் வ.க, தி.க.சி.யிடம் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதைக் கண்டு நெஞ்சுருகிப்போனேன்.

    திரு.வ.க.வின் கடிதங்கள் குடும்ப உறவின் நுட்பத்தைக் காட்டுகின்றன. அவர் தனது அண்ணன், அண்ணி, அண்ணன் பிள்ளைகள் மீது கொண்டிருந்த அன்பை நம்மால் உணர முடிகின்றது. ஒவ்வொரு கடிதத்திலும் அண்ணன் குடும்பம் பற்றிய குறிப்பு இருக்கின்றது. அவரை வாழ்நாளெல்லாம் கட்டிக் காத்த சடையப்ப வள்ளல் அவரது அண்ணன். நன்றி மறக்காத கம்பர் வல்லிக்கண்ணன். அன்னையாக மாறிய அவரது அண்ணியார் வணங்கத்தக்கவர். மனித வாழ்க்கையின் மேன்மையை இதனைவிட எப்படி விளக்குவது?

    திரு.வ.க. கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக, பட்டெனக் கூறுபவர். அவரது எழுத்துக்களில் போன்றே அவரது கடிதங்களிலும் அவரது விமர்சனப் பார்வை, எழுத்தாக இருந்தாலும், எழுத்தாளராக இருந்தாலும், இதழ்களாக இருந்தாலும் மின்னலடிக்கின்றது. எடுத்துகாட்டு ஒன்று, இரண்டு.

    பத்திரிகைகள் போட்டி பற்றி, மதிப்புமிக்கவர்கள் நடத்துகிற சிறுகதை, நாவல் போட்டிகளுக்கு நான் அனுப்பினால்கூட என் எழுத்துக்கள் பரிசு பெறாது என்பது மட்டுமல்ல, பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்ற பட்டியலில் கூட இடம் பெறாது.

    இதுதான் எழுத்து - பத்திரிகை - பிரசுர உலகம், என்று குறிப்பிடுகின்றார்.

    தமிழ் இதழ்கள் பற்றி, இதயம் பேசுகிறது சரவணா ஸ்டோர்ஸ் எனப் பெயர் மாற்றம் பெற்று, வாரம்தோறும் 160 பக்கங்கள் தருகிறது. வெறும் குப்பை. விகடன் பரவாயில்லை. நல்ல கதைகள் வருகின்றன குமுதம் பிரயோசனமில்லை. இப்படி வளர்கின்றன. தமிழ்ப் பத்திரிகைகள். தமிழ்ப் பத்திரிகைகளும். தமிழ் சினிமாவும் உருப்படவே உருப்படாது! என்று கூறுகின்றார்.

    வாழ்வியல் பற்றிய அவரது தத்துவம் நமக்கு வழிகாட்டக் கூடியது நடந்தே தீரணும் வழி... வாழ்ந்தே தீரணும் வாழ்க்கை. இந்த மனப்பக்குவம்தான் திரு. வல்லிக்கண்ணன்.

    சுமார் 25 ஆண்டுகள் தொடர்ந்த வல்லிக்கண்ணன் - கமலவேலன், இலக்கிய, இலட்சிய நட்பு ஒவ்வொரு கடிதத்திலும் பளிச்சிடுகின்றது. இருவரின் கடிதங்களும் நட்பு இலக்கியமாக மிளிர்கின்றன.

    கடிதங்களில் வல்லிக்கண்ணனைத் தரிசிக்கின்றோம். அவர் தன்னைப் பற்றி என்னுடைய தேவைகள் மிகக் குறைவு; நானே தேர்ந்தெடுத்து அமைத்துக் கொண்ட வாழ்க்கை என்பதனால் மன நிறைவுடன் வாழ்கிறேன். நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதனால் ஏமாற்றங்கள் இல்லை (ப.158) என்று கூறுகின்றார். கமலவேலன் அவரை,

    "அறிவை அள்ளி விழுங்கும் கண்கள்

    எழுத்தைப் போலவே கூர்மையான நாசி

    ஒடிசலான உடல்வாகு

    எளிமையான உணவு

    இத்தனை அம்சங்களின் மொத்த உருவம்தான் வல்லிக்கண்ணன்"

    என்று சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார்.

    இந்த நூலுக்காக திரு. கமலவேலனைப் பாராட்டி மகிழலாம்.

    திரு. வல்லிக்கண்ணன் தனக்கு எழுதிய தங்கக் கடிதங்களை பாதுகாத்தது மட்டுமின்றி, முயன்று, தமிழகம் பயன்பெற நூலாக்கித் தருவதில் வெற்றி கண்டிருக்கின்றார். அவர் பெற்ற பேறு இன்று நமக்குக் கிடைத்திருக்கின்றது.

    இதில் வெளிவந்திருக்கின்ற கமலவேலன் கடிதங்கள் அவரது உள்ளத்தின் மென்மையை, மேன்மையை வெளிப்படுத்துகின்றன. அவர் திரு. வல்லிக்கண்ணனிடம் வளர்த்துக்கொண்ட உறவு, நட்பை விடப்பெரிது. அவருக்கு எழுத்தும் நட்பும் ஆன்மீகம். இதனை உணர முடிகின்றது.

    எல்லா எழுத்தாளர்களும் மற்றைய எழுத்தாளர்களை நாடித் தேடிப் பாராட்டமாட்டார்கள். தமக்குள் முடங்கிவிடுவார்கள். இதில் கமலவேலன் மனம் விரிந்து பரந்தது. எழுத்தாளர்களோடு அன்பு கொண்டு பழகும் கனிந்த உள்ளம் கடிதங்களில் வெளிப்படுகின்றது. இதனை நடைமுறையில் நான் அனுபவித்திருக்கின்றேன்.

    அவர் தனது உணர்வுகளையும், எண்ணங்களையும் வள்ளிக்கண்ணனோடு பகிர்ந்துகொள்ளும் முறை சிறப்பு. அவரது படைப்புகளையும் படிப்புகளையும் கூறுகின்றார். கங்கை சென்றும் தண்ணீரில் கால் நனைக்காமல் வந்தது போன்ற சுவையான நிகழ்வுகள்.

    மனத்தில்பட்டதை நச்சென்று பல இடங்களில் பதிவு செய்துள்ளார். கண்மூடிப் பழக்கங்களைவிட்டொதுக்கும் சீர்திருத்தம் புலப்படுகின்றது. அவரது கருத்துக்கள் கூறும் சிறப்புக்கு இரண்டு சான்றுகள். ஒன்று அவர் நடிகர் திலகம் சிவாஜி பற்றி மதிப்பீடு செய்வது பலவற்றையும் கூறி சொல்லிக்கொண்டே போகலாம். நுணுக்கம், நுட்பம், அதுதான் சிவாஜி, என்று முத்திரை குத்துகின்றார்.

    மற்றொன்று, படித்துறை பற்றிய அவரது கருத்துக்கள். யுகபாரதியின் பத்திரிகை பெயர் படித்துறை என்று கேட்டவுடன் கிளர்ந்தெழும் சிந்தனைகளை உயிரோட்டமாக நண்பருக்கு எழுதுகின்றார். மணியான கருத்துக்கள். படித்துறை முன்பிருந்த நிலையைக் கூறி, பாழ்பட்ட இன்றுள்ள நிலையைச் சுட்டிக்காட்டி, முத்தாய்ப்பாய், படித்துறை போன்றுதான் இன்று படிக்கும் துறையும் பாழ்பட்டுக்கிடக்கிறது, என்று கூறுவது, நம்மைச் சிந்திக்கவைக்கின்றது.

    அவர் ஒவ்வொரு கடிதத்திற்கும், கலசத்திற்கு குங்குமப் பொட்டிடுவது போன்று, பொலிவான தலைப்புகளைப் பொருத்தமாக வைத்திருக்கின்றார். காலத்துக்கு வணக்கம், அற்றது பற்றெனில், கல்லோசை, சமுத்திரம் வற்றிவிடாது, நடந்தே தீரணும் வழி, நதிக்கரையில் தொலைந்த மணல் அணிசேர் தலைப்புகளை அடுக்கலாம்.

    நூலின் பயன்பாட்டைப் பெருக்கும் வகையில் ஏழு புகழ்பெற்ற கடிதங்களை நூலின் இறுதியில் சேர்த்திருக்கின்றார். ஆசிரியரின் இரண்டு அருமையான கட்டுரைகள் இடையிலும் இறுதியிலும் இடம்பெற்றுச் சிறப்பிக்கின்றன.

    மொத்தத்தில் எழுத்தாளர் திரு. கமலவேலன் நமக்கு நல்லதோர் விருந்தினைப் படைத்தளித்திருக்கின்றார். தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்கும் படைப்பு இது. அவரது எழுத்துப் பணி சிறக்க, பெயரும் புகழும் ஓங்க, வாழ்த்துவோம்.

    திண்டுக்கல்

    9.10.2011

    என்றும் வளர் அன்புடன்,

    மா.பா. குருசாமி

    மடல்கள் நடத்தும் மாநாடு

    ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம்

    ஒரு நூற்றாண்டாகத் தமிழில் உரைநடை வளர்ந்து வருகிறது. வளர்ந்தோங்கும் உரை நடையில் பல்வகைகள் அண்மைக் காலத்தில் தோன்றியுள்ளன. சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, ஆய்வுக் கட்டுரைகள் எனப் பலதுறைகளில் தமிழ் உரைநடை இலக்கியம் தடம்பதித்து வருகிறது.

    அந்த வகையில் சமீப காலமாக ‘கடித இலக்கியம்' தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்று வருகிறது. கடிதங்கள் கருத்துப் பரிமாற்றங்களுக்கான கருவி மட்டுமல்ல. உணர்வுகளையும், அரிய செய்திகளையும் தெரிவிக்கும் அடையாளமாகவும் திகழ்கின்றன.

    "பனையோலையில் எழுதியதால் ஓலை

    சுருளாக சுருட்டியதால் முடங்கல்

    தாழைமடலில் எழுதியதால் மடல்..."

    என இப்படிப் பல பெயர்கள் உண்டு. திருமுகம் என்பாரும் உண்டு.

    கடிதம் என்பது தற்கால வழக்காகும். தபால் எனக் கூறும் தமிழர்களும் உண்டு.

    வடலூரில் வாழ்ந்த வள்ளல் பெருமான் எழுதிய கடிதங்களை பாலகிருஷ்ண முதலியார் முயன்று தொகுத்து அளித்துள்ளார்.

    பாவாணர் கடிதத் தொகுப்புகளை மறைமலை அடிகளார் நூலகத்தில் பாதுகாத்துவைத்துள்ளனர்.

    காந்தியடிகள், விவேகானந்தர் போன்ற மாமேதைகளின் கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

    நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலகப் புகழ்பெற்றவை.

    மாநாடுகள் மூலம் தெரிவிக்கவேண்டிய அரசியல் கருத்துக்களை மடல்கள் மூலம் நேரு அவர்கள் எழுத்தில் பதிவு செய்து, அதன் வாயிலாக அருமை மகள் இந்திராவை உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பெறச் செய்துவிட்டார்.

    கடிதங்கள் எழுதுவது ஒருகலை; ஆற்றல். கடிதங்கள் எழுதுவதில் முத்திரை பதித்தவர், மூத்த எழுத்தாளர், நம் நினைவில் வாழும் பெருந்தகை வல்லிக்கண்ணன் அவர்களே என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும்.

    வல்லிக்கண்ணன் தமிழ் இலக்கியப் பரப்பை நன்கு அறிந்தவர். நாளும் தோன்றும் உரைநடை நூல்களை ஊன்றிக் கற்பவர். புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி காலம், சிற்றிதழ்கள் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை - முதலிய சிறந்த நூல்களை உருவாக்கியவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

    இக்கால எழுத்தாளர்களுக்கு வல்லிக்கண்ணன் ஒரு ஒளி விளக்கு; வழிகாட்டி. இவரால் அறிமுகப்படுத்தப்பட்டோர் பலர்; வாழ்த்துப் பெற்றோர் பலர். எழுத்தாளர்களில் எளிமையாக வாழ்பவருள் ஒருவரைச் சுட்டு என்றால் என் விரல் இவரையே சுட்டும். என் நெஞ்சம் கவர்ந்த நேர்மையாளர் என்று என் தந்தையார் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனார் அவர்கள் இவ்வாறு வல்லிக்கண்ணனைப் பாராட்டி வாழ்த்தி மகிழ்வார்.

    வல்லிக் கண்ணன், கமலவேலன் கடிதப் பரிமாற்றங்களின் தொகுப்பு இங்கே பேசும் கடிதங்கள் என நூல் வடிவம் பெற்றுள்ளது.

    எங்கள் பதிப்பக நூலாசிரியர்களுள் முன்வரிசையர், சிறுகதை மன்னர் கமலவேலன். என் தந்தையாருடன் மிக நெருங்கிப் பழகியவர். அவரின் அன்புக்கும் பாசத்திற்கும் உள்ளானவர். எம்பதிப்பகத்திற்காக இவர் எழுதிய நூல்கள் பல. குழந்தை இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமி விருதினை, அதனைத் தோற்றுவித்த முதலாம் ஆண்டே (2010) பெற்றவர்.

    இந்நூலில் இடம் பெற்றுள்ள கடிதங்கள் இன்றைய சமுதாயப் பிரச்சனைகளையும், இலக்கியப் போக்குகளையும் எழுத்தாளப் பெருமக்களையும் பற்றிப் பேசுகிறது. சுமார் ஐம்பது ஆண்டுக்கால இலக்கியத்தை நம் முன் காட்சிப்படுத்துகின்றன.

    அணிந்துரை வழங்கியுள்ள அருமைப் பேராசிரியர் முனைவர் மா.பா. குருசாமி அவர்கள் நூலின் மேன்மையை அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

    தேனீக்கள் துளித் துளியாய்த் தேனைச் சேகரித்துவைப்பது போல, கமலவேலன் இருபத்தைந்து ஆண்டுக்கால கடிதங்களை பொக்கிஷம் போல் சேர்த்து வைத்துக்கொடுத்துள்ளார். அக்கடிதங்களை வாசிக்கும் போது அவை தேன் போல் இனிக்கின்றன; இனிமை பயக்கின்றன.

    கடித இலக்கிய வகையில் எதிர்காலத்தில் எழவேண்டிய நுண்ணாய்வுகளுக்கும், பேராய்வுகளுக்கும் வழிவகுக்கும் வித்தும் வேரும் உடையவை இந்நூல்.

    பேசும் கடிதங்கள்
    இந்த நூலினுள் இடம் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர்களின் பெயர்கள்

    அகரநிரல்

    1. அசோகமித்திரன்

    2. அண்ணா கண்ணன்

    3. அண்ணாதுரை

    4. அப்புசாமி, பெ.நா.

    5. அமிழ்தன், பா

    6. அல்லி சபேசன்

    7. ஆதவன்

    8. ஆழி.வே. ராமசாமி

    9. ஆனந்தி

    10. இந்திரா சௌந்திரராசன்

    11. இந்திரா பார்த்தசாரதி

    12. இராசகோபால், து

    13. இளங்கோவன், அ.சு

    14. இளசை அருணா

    15. இளசை சுந்தரம்

    16. இளவேனில்

    17. இனியவன் (இலக்கிய வீதி)

    18. உதயமூர்த்தி, எம்.எஸ்

    19. கண்ணன், (நெல்லை)

    20. கண்ணப்பன், இராம

    21. கந்தசாமி, இ.லெ

    22. கந்தசாமி, சா

    23. கமலாலயன்

    24. கர்ணன்

    25. கரிச்சான் குஞ்சு

    26. கருணாநிதி

    27. கல்யாண சுந்தரம்

    28. கழனியூரான்

    29. கா. ஸ்ரீ. ஸ்ரீ

    30. கிருஷ்ணமூர்த்தி, சு. (கல்கத்தா)

    31 குப்புசாமி (கள்ளிப்பட்டி)

    32. குருசாமி, மா.பா

    33. குறிஞ்சி வேலன்

    34. கோமகள்

    35. கோமதி நாயகம், ரா.சு

    36. கோவை. கம்பராயன்

    37. கொளதம நீலாம்பரன்

    38. சகாரா

    39. சங்கரன், எம்.கே

    40. சங்கர வள்ளிநாயகம்

    41. சண்முகையா (கீழப்பாவூர்)

    42. கமரசம், தெ. வேலூர்

    43. சமுத்திரம், சு

    44. சரஸ்வதி ராம்நாத்

    45. சாமி. சிதம்பரனார்

    46. சிட்டி சுந்தரராஜன்

    47. சித்தார்த்தன்

    48. சிவசங்கரன், தி.க

    49. சிவசு

    50. சிவபாத சுந்தரம்

    Enjoying the preview?
    Page 1 of 1