Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalathai Vendra Kavignan Kannadhasan
Kaalathai Vendra Kavignan Kannadhasan
Kaalathai Vendra Kavignan Kannadhasan
Ebook125 pages42 minutes

Kaalathai Vendra Kavignan Kannadhasan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு நல்ல கவிஞனுக்கு அடையாளங்கள் யாவை? மனதைக் கவர்ந்திழுக்கும் அழகிய நடை, ஆழமான சொற்களை மிகக் குறைவாகக் கையாண்டு உயர்ந்த உணர்வுகளைக் காலம்தோறும் எழுப்பிக் கொண்டே இருப்பதற்கான உத்தரவாதம், கேட்கும் போதெல்லாம் காதில் தேனெனப் பாய்ந்து கொண்டே இருப்பது, மொழியின் ஆழ, அகல, நீளத்தை முற்றிலுமாக அறிந்து அதைக் கையாள்வது -இவை ஒரு நல்ல கவிஞனுக்கான அடையாளங்கள்.

இந்த நூலின் உள்ளே கவியரசனின் கவிதை ஜாலத்தைக் காண உங்களை அழைக்கிறேன். ஒரு பெரும் கடலில் சில துளிகளை இனம் காட்டியுள்ளேன், அவ்வளவு தான்!

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580151007918
Kaalathai Vendra Kavignan Kannadhasan

Read more from S. Nagarajan

Related to Kaalathai Vendra Kavignan Kannadhasan

Related ebooks

Reviews for Kaalathai Vendra Kavignan Kannadhasan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalathai Vendra Kavignan Kannadhasan - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்

    Kaalathai Vendra Kavignan Kannadhasan

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முன்னுரை

    1. இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 1

    2. இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 2

    3. இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 3

    4. கண்ணதாசனின், இரு சொல் விந்தைகள்!

    5. மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்!

    6. கண்ணதாசனும் தி.ஜ.ர.வும்

    7. கண்ணதாசனைப் புரிந்து கொள்வது எப்படி?

    8. க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்! – 1

    9. கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்!

    10. கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்! – 2

    11. கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும்!

    12. கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

    13. கண்ணதாசனின் நல் – எண்ணதாசன் நான்!

    14. தமிழன்னையிடமிருந்து கண்ணதாசன் பெற்றது!

    15. தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் கண்ணதாசன்!

    16. கண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’!

    17. அபிராமி அந்தாதியும் கண்ணதாசனின் விளக்கவுரையும்!

    அணிந்துரை

    E:\Priya\sample\1-min.jpg

    இந்நூலாசிரியர் திரு நாகராஜன் அவர்கள் எனது இனிய நண்பர். பலரையும் பாராட்டும் பண்பு கொண்டவர். மெத்தப் படித்தவர். அனுபவசாலி. ஆனாலும், மிக எளிமையானவர். இவரின் தந்தை தேசபக்தர் மற்றும் இலக்கியவாதி. அவரின் மகனான இவர், 5000க்கும் மேற்பட்ட கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என அளித்தவர். இன்னும், வலைத்தளம், youtube என பவனி வரும் இவரின் இலக்கிய பயணத்தில், இந்தப் புத்தகம் இன்னொரு மைல்கல் என்றால் மிகை ஆகாது.

    புத்தகத்தின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. திரு ராஜம் அய்யர், மஹாகவி பாரதி, பட்டுக்கோட்டை என்ற பட்டியலை விவரித்து, அதே போல, 54 வயதிற்குள்ளேயே, யாருமே எட்டாத சாதனைகளை தொட்டவர் கவியரசர் என்று கூறியது சிறப்பு.

    கண்ணதாசன் – இந்த வார்த்தை, தமிழோடு மட்டுமல்ல, தமிழர்களோடு மட்டுமல்ல, மனிதர்கள் அனைவரின் உணர்வுகளோடு ஒன்றிப்பிணைந்த வார்த்தை என்றால் மிகை ஆகாது. காரணம், பிறப்பு முதல், இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விற்கும் பாடல் தந்த பெருமை கொண்டவர் கண்ணதாசன்.

    ஒரு கவிஞனுக்குத் தேவை மூன்று விஷயங்கள். நம்பிக்கை, திறமை, துணிவு. பாரதியைப் போலவே, கண்ணதாசனுக்கும், இது நன்றாகவே அமைந்திருந்தது. அதனால்தான், மரணம் அவனை முத்தமிடுவதற்கு 20 வருடங்கள் வருடங்களுக்கு முன்னரேயே, நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று பாடினான். அவனுக்குப் பிடித்த தலைவர்களை எந்த அளவுக்கு உயரே தூக்கி வைத்தானோ, அவர்கள் கொள்கை மாறியபோது, அப்படியே அவர்களைத் தூக்கிப் போட்டான்.தான் கொண்ட தத்துவம் என்றும் மாறவில்லை – தலைவர்கள் மாறினார்கள், என்றே கூறினான். இப்படி அவன் செய்த போது குறிப்பிட்ட ஒரு கட்சியினர் செருப்பைத் தூக்கி எறிந்தபோது, கைகளில் பிடித்துக் கொண்டு பேசினான் – தலையில் உள்ளதை உபயோகிக்க தெரியாததால், காலில் உள்ளதை உபயோகிறார்கள் என்றான். அந்த அளவிற்கு, துணிச்சல் மற்றும் நம்பிக்கை, அவனிடம் நிறைந்திருந்தது. மதுபோதை மற்றும் மாது போதையில் தடுமாறியவன், என்றுமே புகழ் போதையில் நின்றதே இல்லை. எல்லாம், அந்த அன்னையின் அருள் என்றே கூறி வந்தான்.

    கவிஅரசின் ஆற்றலை, அடுக்கடுக்கான நிகழ்வுகளை, அற்புதமாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். பாரதியைப் போலத்தான் கவிஅரசும் என்று கூறி, அவனின் வார்த்தைகளுக்கு உள்ள சக்தியை –

    கே ஆர் ராமசாமியின் பாட மாட்டேன் என்ற பாடலையும், இளையராஜா இசையமைக்க வந்த புதிதில் தான் எழுதிய பாடலையும் ஒப்பு நோக்கி இருப்பது சிறப்பு. வார்த்தைகளுக்கு VIBRATION உண்டு என்பது நிஜம்தானே. அதேபோல, கவியரசு ஒற்றை வார்த்தையை வைத்தே தமிழில் விளையாடினார் – தேன், பூ, காய், தான், நிலா எனப் பல. நூலாசிரியர், கவிஅரசின் இரு சொல் முத்திரை மூன்று சொல் முத்திரை எனப் பாடல்களை அடுக்கி இருக்கிறார். கண்ணதாசனின் முதற்பாடலான, கலங்காதிரு மனமே – கனவெல்லாம் நனவாகுமே என்ற பாடலே இரு சொல் முத்திரை என்பது புதிய செய்தி. அதேபோல, முத்தையாவின் (கவியரசு தான்) முத்தான மூன்று சொற்களை முத்துக் குளிக்க வாரீகளா என்று ஆரம்பித்து, வள்ளுவன் பாரதி பாடல்களை ஒப்பிட்டு இருப்பது குற்றால அருவியில் குளித்த சுகம். எழுத்தாளர் தி ஜ ர அவர்களைப் பாராட்டியது, அவரைத் தன் எழுத்து நடைக்கு முன்னோடியாகக் கொண்டது என்பதெல்லாம் சுவையான, புதிய செய்தி.

    கவிஅரசின் காதல்,தத்துவப் பாடல்களை விதவிதமாய் விளக்கி வரும்போது, அவரின் அங்கதச் சுவையையும், சுவைப்படக் கூறியிருக்கிறார் ஆசிரியர். காற்றடிக்கும் போது, தென்னை மரம் ஏன் ஆடுகிறது தெரியுமா – தென்னையில் இருந்துதானே கள் வருகிறது என்பது ஒரு உதாரணம்.ஆம். தான் பல நேரங்களில் மது, மாது இவற்றுடன் இருப்பதைக்கூட, கவிஞர் தனக்கே உரிய பாணியில் கூறுவார் –

    ஓர் கையில் மதுவும்

    ஓர் கையில் மாதுவும்

    சேர்ந்திருக்கும் வேளையில்

    என் ஜீவன் பிரிந்தால்தான்

    நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்

    இல்லையேல்

    ஏன் வாழ்க்கை என்றே

    இறைவன் எனைக் கேட்பான்

    என்பதில் என்ன ஒரு அங்கதம்? இப்படி வாழவில்லையா என்று இறைவன் இவரைக் கேட்பானாம்!!

    அதேபோல, காலங்கள் இருக்கும் வரை நிலைத்திருக்கும் கவிஞரின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தின் தலைப்பு தோன்றிய விதம், கதிரில் அதை படித்த மூதறிஞர் ராஜாஜி, கல்கி பத்திரிகைக்கு, கவிஞரை

    Enjoying the preview?
    Page 1 of 1