Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthukavithaigalin Payanam
Puthukavithaigalin Payanam
Puthukavithaigalin Payanam
Ebook166 pages51 minutes

Puthukavithaigalin Payanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதை, கவிதை, கட்டுரை, நாவல் என எதுவாயினும் அத்தொகுப்புக்கு அணிந்துரை என்பது ஓர் அறிமுகம். அல்லது ஒரு வாசல். பொன். குமார் தன் படைப்புகளுடன் இலக்கியப்பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அணிந்துரைகளை எழுதியுள்ளார். அணிந்துரைக்கப்பட்டவர்களில் மூத்தவர்களும் உண்டு. பூத்தவர்களும் உண்டு. ஒர் இரவில் எழுதிய அணிந்துரைகளும் உண்டு. ஒரு பகலில் எழுதியவையுமுண்டு. அணிந்துரை என்று அணுகியவர்களுக்கு தாமதிக்காமல் தொகுப்பு வெளிவர வேண்டும் என்னும் நோக்கத்துடன் பொன். குமார் அணிந்துரைத்து வருகிறார். முதல் கட்டமாக புதுக்கவிதைத் தொகுப்புகளுக்கு எழுதிய பதினெட்டு அணிந்துரைகள் 'புதுக்கவிதைகளின் பயணம்' என்னும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateOct 3, 2023
ISBN6580159410132
Puthukavithaigalin Payanam

Read more from Pon. Kumar

Related to Puthukavithaigalin Payanam

Related ebooks

Reviews for Puthukavithaigalin Payanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthukavithaigalin Payanam - Pon. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புதுக்கவிதைகளின் பயணம்

    (அணிந்துரைகள்)

    Puthukavithaigalin Payanam

    Author:

    பொன். குமார்

    Pon. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pon-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கவிதைகளில் காலக்கூத்து காட்டும் ரவி வெங்கடேசன்

    2. மாயக்கம்பளத்தில் செல்பவனின் இரவு உணவுக்கு வழி செய்யும் பூ. அ. இரவீந்திரன்

    3. இதயத்தை வருடும் இனிமையான கவிதைகள் தந்த க. ஆனந்த்

    4. அகவி கவிதைகளால் நிறைந்திருக்கிறது காலிப் போத்தல்

    5. விற்காத புல்வெளி பிரதியிலிருந்து பேசும் காமராசன்

    6. கவிஞர் வாலிதாசனின் கருத்தான கவிதைகள்

    7. வெளிச்சம் தேடும் ஒரு புதுக் கவிஞர் கோ. இராமக்கிருடினன்

    8. வார்த்தைகளில் வானத்தை வழியச் செய்த வசந்த கவிஞர் தா. ராமமூர்த்தி

    9. மூங்கில் இசையில் முளைத்த சுமதியின் கவிதைகள்

    10. பாசக்கண்ணாடியில் கவிமுகம் காட்டும் பாரியன்பன்

    11. சுயம்புவான வெ. முனிஷின் திருநங்கையர் கவிதைகள்

    12. கடவுளைக் கொன்றுவிடக் கூறும் அருணா சுந்தர ராசன்

    13. கடைசித் துளியில் காணும் கவிஞர் சந்திரா மனோகரன் முகம்

    14. கவிதைகளில் காட்டைப் படைத்த கவிஞர் வைரமணி

    15. மௌனத்தைக் கலைக்க முயலும் ராஜேந்திரனின் கவிதைகள்

    16. காட்டுமல்லியாக கவிதை வாசம் வீசும் கவிஞர் இரத்தின மூர்த்தி

    17. நெஞ்சுக்குள் நெருப்பைச் சுமந்திருக்கும் தங்க ராஜ்

    18. உள்ளம் உரசும் உரை கல்லாய் பஷீரா ரசூலின் கவிதைகள்

    இந்நூல்

    அணிந்துரைகள் வழங்கி

    தொகுப்பையும் வெளியிட்ட

    சிலம்பொலி செல்லப்பன் அவர்களுக்கு

    அன்புள்ளங்களுக்கு வணக்கம்.

    அணிந்துரை என்பது, ஒரு நூலை அல்லது வேறு இலக்கிய ஆக்கங்களை அறிமுகப்படுத்தி ஆக்குனர் அல்லாத இன்னொருவர் கொடுக்கும் அறிமுகம் ஆகும். அணிந்துரை கொடுப்பவர் குறித்த ஆக்கம் தொடர்பான துறையில் அறிவும் அனுபவமும் பெற்றவராயும் அத்துறை சார்ந்தோரிடையே மதிப்புப் பெற்றவராகவும் இருப்பது வழக்கம். பொதுவாக அணிந்துரை சுருக்கமாகவே இருக்கும். எனினும் சில வேளைகளில் அணிந்துரைகள் கட்டுரை நீளத்துக்கு நீண்டு விடுவதும் உண்டு. அணிந்துரைகள் பெரும்பாலும் அணிந்துரை எழுதுபவருக்கும் ஆக்குனருக்கும் இடையேயான தொடர்புகள். இத்தகைய நூலொன்றை எழுத்துவதற்கு அவருக்கு உள்ள தகைமைகள், நூல் தொடர்பில் ஆக்குனரின் முயற்சி, நூலின் முக்கியத்துவம், குறித்த துறைக்கு அதன் பங்களிப்பு போன்ற விடயங்களைத் தருவதுடன், அணிந்துரை கொடுப்பவர் சில சமயங்களில் நூலில் காணும் சிலவற்றைத் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் பார்த்து எழுதுவதும் உண்டு. அணிந்துரை இல்லாமலும் தொகுப்புகள் வருவது உண்டு. அதற்கு காரணங்கள் பல. என்னுடைய பல தொகுப்புகளுக்கு அணிந்துரை இல்லை. அதற்கும் காரணமும் உண்டு.

    எனக்குத் தெரிந்த

    பிரபலமானவர்களிடம்

    என்னையும்

    என் எழுத்தையும்

    புகழ்ந்து

    எழுதி வாங்கி

    என்

    புத்தகத்திலேயே

    பிரசுரித்துக் கொள்வதற்கு

    வெட்கமாக

    இருந்ததால்

    அணிந்துரை இல்லை

    என கவிஞர் வே. மதிமாறன் அணிந்துரை இல்லாமலே தன் ‘காதலாகி கடுப்பாகி’ தொகுப்பை வெளியிட்டுள்ளார். இதுவொரு வகை.

    அணிந்துரை பெறுவதற்கு கவிஞர், விருது பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், தலைவர், சாதித்தலைவர் என யார் யாரிடமோ முயற்சித்து பெற முடியாமல் இறுதியில்... கடைசி வரை யாரிடமும் அது வாங்கப்படாமலேயே கவிதை நூல் வெளியாகிவிட்டது. என்கிறார். அணிந்துரை என்னும் இறுதிக் கவிதையில் கவிஞர் பொ. செந்திலரசு தொகுப்பு ‘உணர்வு நதி’இது இரண்டாம் வகை. இரண்டாம் வகையால் ஏகப்பட்ட தொகுப்புகள் வராமலே போயின. அல்லது தாமதமாக வருகின்றன. இதனாலேயே அணிந்துரை எவரேனும் கேட்கும் பட்சத்தில் தாமதமின்றி எழுதித்தர வேண்டும் என தீர்மானித்தேன். ஆயினும் முதன் முதலில் கவிஞர் தென்றல் நிலவன் தன் தொகுப்பிற்கு அணிந்துரை கேட்டபோது இன்னும் நான் வளர வேண்டும் என தவிர்த்து விட்டேன். இருப்பினும் பனி படர்ந்த சூரியன் என்னும் கூட்டுத் தொகுப்பிற்கு அணிந்துரை கேட்டபோது தவிர்க்கவில்லை. முதன் முதலாக அணிந்துரை எழுதினேன். தொடர்ந்து பலர் கோரினர். தற்பொது நூற்றுக்கும் மேற்பட்ட அணிந்துரை எழுதியுள்ளேன்.

    அணிந்துரை கேட்பவர்களுக்கு நான் தாமதம் செய்வதில்லை. உடனே எழுதித் தந்துவிடுவது என் இயல்பு. காரணம் அணிந்துரையால் ஒரு தொகுப்பு வராமல் இருக்கக் கூடாது. ஒரு சிலரிடம் அணிந்துரை கேட்டு அவர்கள் தராமல் போனதும் உண்டு. தருவதற்கு தாமதப்படுத்தியதும் உண்டு. இதனால் படைப்பாளியின் மனம் சுருங்கிவிடும், சுணங்கிவிடும். ஒரு நல்ல படைப்பாளி இலக்கிய உலகிற்கு வெளிவராமலே போகக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுவிடும்.

    அணிந்துரைகளை ஓர் இரவில் எழுதியதுமுண்டு. ஒரு பகலில் எழுதியதுமுண்டு. ஒரே படைப்பாளிக்கு ஒரே நேரத்தில் இரண்டு தொகுப்புகளுக்கு எழுதியதுமுண்டு. இளைய படைப்பாளிக்கு எழுதியதுமுண்டு. மூத்த படைப்பாளிக்கு எழுதியதுமுண்டு. ஹைக்கூ, கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என அனைத்து வகைகளுக்கும் எழுதியதுமுண்டு.

    பொன். குமார் அவர்களின் முன்னுரை மிகச் சரியாக எழுதப்பட்டிருக்கிறது. சரியான மனிதர்களால் எழுதப்பட்ட சரியான முன்னுரைகள் ஒரு முதல் தொகுப்பிற்கு அமைவது அபூர்வம். உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது என கவிஞர் கல்யாண்ஜி கவிஞர் பா. ராஜாவின் அம்மா தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையை வைத்து கவிஞர் பா. ராஜாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    முதலில் தங்களது கவிதைகளை படித்துவிட்டு பின்னர்தான் நமது நண்பர் பொன். குமார் அவர்களின் அணிந்துரையை படித்தேன். நல்ல வேளை முதலிலேயே அதைப் படித்திருந்தால் உள்ளே செல்லத் தேவையில்லையோ என்ற எண்ணம் என் மனதில் ஓடியிருக்கலாம். அவ்வளவு அற்பதமாக எழுதியிருந்தார் பொன். குமார். புத்தகம் வாசிக்கக்கூட தயங்கும் இவ்வுலகில் அவர் படித்துவிட்டுத்தான் அணிந்துரையை எழுதியிருக்கிறார். வாழ்த்துகள் என எழுத்தாளர் ராஜ்ஜா இருள்வலி தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையைக் குறிப்பிட்டு கவிஞர் சந்திரா மனோகரன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல கடிதங்கள், பல கருத்துக்கள்.

    நூற்றுக்கும் மேற்பட்ட அணிந்துரைகளில் முதல் பாகமாக, முதல் பகுதியாக பதினெட்டு அணிந்துரைகள் அடங்கிய தொகுப்பாக ‘புதுக்கவிதைகளின் பயணம்’என்னும் பெயரில் வெளிவருகிறது. இத்தொகுப்பில் இடம் பெற்ற அணிந்துரைக்கப்பட்ட தொகுப்புகள்.

    1. காலக்கூத்து - ரவி வெங்கடேசன்.

    2. மாயக்கம்பளத்தில் செல்பவனின் இரவு உணவு - பூ. அ. இரவீந்திரன்

    3. ஒவ்வொரு மழையிலும் - க. ஆனந்த்

    4. காலிப் போத்தலில் நிறைந்திருக்கும் காற்று - அகவி

    5. விற்காத பிரதியிலிருந்து பேசுபவன் - காமராசன்

    6. பச்சையப்பன் கல்லூரி பைத்தியக்காரனின் ஒப்புதல் வாக்குமூலம் - வாலிதாசன்

    7. வெளிச்சத்தைத் தேடி - கோ. இராமக்கிருட்டினன்

    8. வார்த்தைகளில் வழிகிறது வானம் - தா. ராமமூர்த்தி

    9. மூங்கில் இசை - சுமதி

    10. பாசக்கண்ணாடி - பாரியன்பன்

    11. சுயம்பு - வெ. முனிஷ்

    12. கடவுளைக் கொன்று விடு - அருணா சுந்தர ராசன்

    13. கடைசித் துளி - சந்திரா மனோகரன்

    14. காட்டைப் படைத்தவன் - வைரமணி

    15. மௌனத்தின் காத்திருப்பு - ராஜேந்திரன்

    16. காட்டுமல்லி - இரத்தின மூர்த்தி

    17. நெஞ்சுக்குள் நெருப்பு - தங்க ராஜ்

    18. உரை கல் - பஷீரா ரசூல்

    எனவே அணிந்துரைக்க வாய்ப்பு அளித்தவர்களுக்கும் புதுக்கவிதைகளின் பயணம் என்னும் அணிந்துரைகளின் முதல் பாகமான இத்தொகுப்பு வெளிவர உதவிய நண்பர்களுக்கும் வெளியிட்டு உதவிய புஸ்தகா நிறுவனத்திற்கும் வாசித்து எழுதும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

    எழுதுங்கள்!

    எழுதுகிறேன்!!

    எழுதுவோம்!!!

    என்றும் அன்புடன்

    - பொன். குமார்

    21 /15 புது திருச்சிக்

    Enjoying the preview?
    Page 1 of 1