Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavithaigal Koorum Kathaigal
Kavithaigal Koorum Kathaigal
Kavithaigal Koorum Kathaigal
Ebook251 pages1 hour

Kavithaigal Koorum Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன். குமார் எழுதிய விமர்சனங்கள் கணையாழி, புத்தகம் பேசுது போன்ற பெரும் சிற்றிதழ்களிலும் விமர்சனங்கள் வெளிவந்தன. புதிய கோடாங்கி, புதிய உறவு, சங்கு, சிகரம் என ஏராளமான சிற்றிதழ்களில் வெளிவந்தன. கீற்று.காம் என்னும் இணையதளமும் பதிவேற்றம் செய்தது. ஒரு படைப்பாளியின் பார்வையில், ஹைக்கூ அனுபவங்கள், நானும் நாமும், பெண் கவியுலகம், தமிழ்க் கதைகளின் போக்கு, கவிப்பயணம், இலக்கியப் பிரவேசம், நான் வாசித்த நாவல்கள், தமிழ்ச்சிறுகதைகள் ஒரு பார்வை என இதுவரை ஒன்பது விமர்சனத் தொகுப்புகள் வெளிவந்திருந்தாலும் இன்னும் பல தொகுப்புகள் கொண்டு வருமளவிற்கு ஏராளமான விமர்சனங்கள் இருப்பில் உள்ளன. இவ்விமர்சனங்களை பிரித்து வகைப்படுத்தி கொண்டுவர வேண்டும். இம்முயற்சியாக இருபத்தைந்து கவிதைத் தொகுப்புகள் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பாக 'கவிதைகள் கூறும் கதைகள்' என்னும் விமர்சனத் தொகுப்பு வெளிவருகிறது.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580159409497
Kavithaigal Koorum Kathaigal

Read more from Pon. Kumar

Related to Kavithaigal Koorum Kathaigal

Related ebooks

Reviews for Kavithaigal Koorum Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavithaigal Koorum Kathaigal - Pon. Kumar

    http://www.pustaka.co.in

    கவிதைகள் கூறும் கதைகள்

    Kavithaigal Koorum Kathaigal

    Author:

    பொன். குமார்

    Pon. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pon-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    01. வசப்படாத வார்த்தைகளுடன் கவிதைகளை வசப்படுத்திய கா. அமீர்ஜான்

    02. வா மீத முலை எறி என அழைப்பு விடுக்கும் நெல்லை கண்ணன்

    03. தூரிகையின் நிறங்களையும் கடவுளையும் காட்டிய பூ.அ. இரவீந்திரன்

    04. ஆகியதையும் ஆகாததையும் அடையாளப்படுத்தும் நிமோஷினி

    05. கண்ணாடி நகரத்தை பிரதிபலிக்கும் ஜெயதேவன்

    06. சதுரங்கக் காய்களை வைத்து விளையாட்டு காட்டும் வையவன்

    07. தலை நிமிர்வுடன் வாழும் தமிழன் பாரதி வசந்தன்

    08. உவர் மண் வாசம் வீசும் கவிதைகளை எழுதிய நட. சிவகுமார்

    09. தொலைந்து போன நடை வண்டிகளைத் தேடித் தந்த மு. செல்லா

    10. சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மையைக் காட்டிய திலீபன் கண்ணதாசன்

    11. பட்டிணப் பாலையில் கவிதை பாடிய இளையபாரதி

    12. நதியில் சில தீவுகளைக் காட்டும் எழிலவன்

    13. சொல் பருக்கைகளைச் சுவையறியச் செய்த வெற்றிப் பேரொளி

    14. நினைவுகளின் ஊர்வலத்தை நடத்திக்காட்டிய ஆசீர்வாதம்

    15. ஓசைகளின் நிறமாலையில் ஒளிரும் கோ. கண்ணன்

    16. பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேட்டைத் தந்த அமிர்தம் சூர்யா

    17. சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் என்னும் சேதுபதி

    18. நெடுஞ்சாலையைக் கடக்கும் தந்தையைக் கவிதையாக்கிய மயூரா ரத்தினசாமி

    19. கூடாகும் சுள்ளிகளில் கவிதையைக் காட்டிய ஆ. மணவழகன்

    20. இரவின் நரையை எடுத்துக் கூறும் பிச்சினிக்காடு இளங்கோ

    21. விண்மீன் விழுந்த இடத்தை ஒளிரச் செய்யும் கடற்கரை

    22. மேன்ஷன் கவிதைகளை வாசிக்கத் தந்த பவுத்த அய்யனார்

    23. தியாகப் பொன்கீற்றை திக்கெட்டும் வீசிய பட்டி சு. செங்குட்டுவன்

    24. கனவின் தூரத்தைக் கவிதையில் காட்டிய ப. வில்லியம் அந்தோனி

    25. சொல்ல மறந்த கவிதையை மறக்காமல் எழுதிய எஸ். மைக்கேல் ஜீவநேசன்

    அன்புள்ளங்களுக்கு வணக்கம்.

    ஒரு வாசகனாக எழுத்து உலகில் பிரவேசித்து ஒரு கவிஞனாக அடையாளம் பெற்று மெல்ல மெல்ல விமர்சனமும் எழுதத் தொடங்கினேன்.

    உளி என்னும் சிற்றிதழில் அறிமுகம் செய்தேன். சேலத்தில் கவிஞர் பாலா தலைமையில் நடந்த ஒரு விமர்சனக்கூட்டத்தில் ‘இன்று தென்றல் வீசுகிறது’ என்னும் கவிஞர் க. சக்கரபாணியின் தொகுப்பை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்தது. இது நடந்தது 1998. அவ்வவ்போது சிறு சிறு முயற்சிகள் நடந்து வந்தாலும் 2003ஆம் ஆண்டு எழுத்தாளர் இதய வேந்தனின்’ தலித் அழகியல்’ தொகுப்புக்கு விமர்சனங்கள் எழுதிய பிறகே ஓர் அங்கீகாரம் கிடைத்தது. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் தன் ‘தேநீர் இடைவேளை’ நாவலை அனுப்பி விமர்சனம் வேண்டும் என்று கேட்ட போதே ஒரு நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு விமர்சனங்கள் எழுதும் பணி தொடர்ந்தது. நானே விரும்பி எழுதியதுமுண்டு. படைப்பாளர்கள் அனுப்பி விமர்சனம் எழுதக் கோரியதுமுண்டு. அவ்வாறு எழுதியவை ஆயிரக்கணக்கில் இருக்கும். இன்றும் வாய்ப்பு வரும்போது எழுதி வருகிறேன்.

    நான் எழுதிய விமர்சனங்கள் சிற்றிதழ்கள் வெளியிட்டு ஆதரித்ததும் ஒரு காரணம். கணையாழி, புத்தகம் பேசுது போன்ற பெரும் சிற்றிதழ்களிலும் விமர்சனங்கள் வெளிவந்தன. புதிய கோடாங்கி, புதிய உறவு, சங்கு, சிகரம் என ஏராளமான சிற்றிதழ்களில் வெளிவந்தன. கீற்று. காம் என்னும் இணையதளமும் பதிவேற்றம் செய்தது.

    ‘ஒரு படைப்பாளியின் பார்வையில்’ என்னும் என் முதல் விமர்சனத் தொகுப்பு வெளியானது. காவ்யா வெளியீடு. தொடக்கத்தில் முழுக்க கவிதைத் தொகுப்புகள் குறித்த விமர்சனங்கள். ஆண்டு 2003. இத்தொகுப்பிற்கும் இத்தலைப்பிற்கும் காரணம் விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘என் பார்வையில் கவிதைகள்’.

    இரண்டாவதாக 2004இல் வெளியான விமர்சனத் தொகுப்பு ‘ஹைக்கூ அனுபவங்கள்’. இது முதல் ஹைக்கூ தொகுப்புகள் குறித்த விமர்சனத் தொகுப்பு. ஹைக்கூவாளர்களிடையே ஒரு வரவேற்பைப் பெற்று தந்தது.

    2004இல் வெளிவந்த இன்னொரு விமர்சனத் தொகுப்பு ‘நானும் நாமும்’. அப்போது அதிகமாக எழுதிக்கொண்டிருந்த கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு குறித்த விமர்சனங்கள் அடங்கியது.

    பெண்கள் கவிதைத் தொகுப்பு மீதான விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பு ‘பெண் கவியுலகம்’. 2005இல் வெளியாகி திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது. இலக்கிய உலகிலும் ஓர் அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது.

    சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் அடங்கிய தொகுப்பாக ‘தமிழ்க் கதைகளின் போக்கு’ 2006இல் வெளியானது. இத்தொகுப்பு கதையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

    2006ஆம் ஆண்டிலேயே ‘கவிப்பயணம்’ என்னும் கவிதைத் தொகுப்புகள் குறித்த விமர்சனத் தொகுப்பு வெளியானது. இத்தொகுப்பிலுள்ள விமர்சனங்கள் தமிழின் மூத்த கவிஞர்கள் பலர் எழுதியதாகும்.

    விமர்சனத் தொகுப்புகளில் வித்தியாசமானது ‘இலக்கியப் பிரவேசம்’. பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு. கவிதை உலகில் முதல் தொகுப்பை வெளியிட்ட சில கவிஞர்களின் தொகுப்பு மீதான விமர்சனங்கள் அடங்கியது. இத்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்கள் என குறிப்பிட்டு இதற்கு ‘நிராகரிப்பின் வலி’ என தலைப்பிட்டுள்ளார். இது வெளியான ஆண்டு 2010.

    இலக்கியப் பிரவேசத்திற்குப் பின் பத்தாண்டுகள் கழித்து ‘நான் வாசித்த நாவல்கள்’ என்னும் விமர்சனத் தொகுப்பு 2020இல் வெளியானது. இத்தொகுப்பிலுள்ளவை முழுக்க நாவல் குறித்த விமர்சனங்கள். ஜெயகாந்தன், கரிச்சான் குஞ்சு, பொன்னீலன் உள்பட பலரின் நாவல்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன.

    நாவல் விமர்சனத்தைத் தொடர்ந்து அறுபது சிறுகதைகள் குறித்த விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பு’ தமிழில் சிறுகதைகள் ஒரு பார்வை’ 2022இல் வெளியானது. விமர்சனத் தொகுப்புகளிலேயே பெரியது இது.

    இதற்கிடையில் பெண் கவிஞர்கள் எழுதிய தொகுப்புகளின் மீதான விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பாக ‘பெண் கவிக்குரல்கள்’ என்னும் தொகுப்பு தயார் செய்து திருத்தங்களும் பார்த்து வெளிவராமலே உள்ளது.

    இதுவரை ஒன்பது விமர்சனத் தொகுப்புகள் வெளி வந்திருந்தாலும் இன்னும் பல தொகுப்புகள் கொண்டு வருமளவிற்கு ஏராளமான விமர்சனங்கள் இருப்பில் உள்ளன. இவ்விமர்சனங்களை பிரித்து வகைப்படுத்தி கொண்டுவர வேண்டும்.

    இம்முயற்சியாக இருபத்தைந்து கவிதைத் தொகுப்புகள் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பாக ‘கவிதைகள் கூறும் கதைகள்’ என்னும் விமர்சனத் தொகுப்பு வெளிவருகிறது. இத்தொகுப்பை வெளியிட உதவிய நண்பர்களுக்கும் வழக்கம்போல் ஆதரித்து வரும் இலக்கியவாதிகளுக்கும் என் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இத்தொகுப்பையும் வெளியிட்டு உதவும் Pustaka நிறுவனத்திற்கும் நன்றிகள். பெண் கவிஞர்களுடைய தொகுப்பின் மீதான விமர்சனங்கள் தனியாக கொண்டுவர முயற்சி நடைபெறுகிறது.

    எனவே இத்தொகுப்பிலுள்ள விமர்சனங்களை வாசித்து தவறாமல் வாய்ப்பிருக்கும் போது விமர்சியுங்கள்.

    எழுதுங்கள்!

    எழுதுகிறேன்!!

    எழுதுவோம்!!!

    என்றும் அன்புடன்

    பொன். குமார்

    21/15 புதிய திருச்சிக் கிளை,

    வடக்குத் தெரு

    லைன்மேடு

    சேலம் – 636006

    9003344742

    இந்நூல்

    விமர்சகர்

    வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு...

    01. வசப்படாத வார்த்தைகளுடன் கவிதைகளை வசப்படுத்திய கா. அமீர்ஜான்

    கவிதையின் பயணம் என்பது மரபில் தொடங்கி தற்போது நவீனம், பின் நவீனம் என்று தொடர்கிறது. கவிஞர்கள் சிலரும் மரபில் தொடங்கி புதுக்கவிதையைத் தாண்டி நவீனம், பின்நவீனம் என்று கவிதை உலகில் பயணித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் கா. அமீர்ஜான். தமிழகச் சூழலில் வெளிவந்து கொண்டிருக்கும்.

    பெரும்பாலான சிற்றிதழ்களின் வாயிலாக கவிதையைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். சிற்றிதழ்களும் அமீரின் கவிதைகளைப் பெருமையுடன் பிரசுரித்து வருகிறது. சிற்றிதழ் தளத்தில் கவிஞர் கா. அமீர்ஜானுக்கு என்று ஒரு வாசகர் வட்டமே உள்ளது. அந்த வட்டத்தில் நானும் ஒருவன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரை நூற்றாண்டுக் காலமாக கவிதை எழுதி வருபவரின் முதல் தொகுப்பாக வந்துள்ளது கவிஞரின் ‘வசப்படாத வார்த்தைகளுடன்’.

    அன்பு என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது. உயிர்களிடத்து அன்பு செலுக்த வேண்டும் என்பர். அன்பென்று எதனைச் சொல்ல என்று தொடங்கிய கவிதை அன்பென்று எதனையும் சொல் என்று முடிகிறது. அன்பு அனைத்து உயிர்களிடத்தும் இருக்கிறது என்கிறார். அன்பின் அடிப்படையிலேயே உலகம் இயங்குகிறது என்பதை உணரச் செய்துள்ளார்.

    மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழ்வுகள் யாவுமே முதலில் நிகழ்ந்ததாக இருக்கும்.

    நிகழ்ந்தும் இருக்கும். மனிதர் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க முடியாது. ‘முதலில் நிகழ்ந்த எதுவும்’ அகப்படவில்லை என்கிறார். கவிதை வாசிப்பவரை அவரவருக்குள் நிகழ்ந்த முதல் நிகழ்வை நினைவுக் கூரச் செய்துள்ளார்.

    பள்ளத்தில்

    அலைவதைக் காட்டிலும்

    ஆழத்தில்

    அமிழ்ந்து விடுவது நல்லது

    என்பது ஒரு கருத்தாக, ஓர் அறிவுரையாக வெளிப்பட்டுள்ளது. ஆழம் என்றால் அறிவின் கூர்மை என்றும் பள்ளம் என்றால் அதற்கு எதிரானது என்று விளக்கமும் தந்துள்ளார். ஆழ்ந்து பார்க்கச் செய்கிறது.

    மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். ஒரு சிலரின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் நோக்கத்தை அடைவதற்கு அனைவரும் ஒரே பாதையில் செல்வதில்லை. ‘சாலைகளின் நோக்கம்’ கவிதையில் நோக்கம் ஒன்று எனினும் பாதைகள் வேறு வேறு என்கிறார். தமிழ், தமிழர், தமிழ்நாடு முன்னேற்றம் என்பது நோக்கம் எனினும், தமிழர்கள் தனித் தனி பாதையில் பயணிப்பது குறிப்பிடக்தக்கது.

    நீ என்பதற்கு எதிரானது நான் என்றாலும் நான் என்பதற்கு அகந்தை, அகங்காரம் என்னும் பொருளும் அடக்கம். மனிதர்கள் எவ்வளவுதான் அடக்கமாக, அமைதியாக இருந்தாலும் எப்போதாவது நான் வெளிப்பட்டு விடும். மனிதர்களிடமிருந்து நான் வெளிப்படும் போது பிரச்சனைகளும் வெளிப்பட்டு விடும். நான் இன்றி எவரும் இருக்க முடியாது. ‘நானை’ விடவும் முடியாது. கொள்ளவும் முடியாது. எனினும் நான் உடன் தொடரவே வேண்டியுள்ளது வாழ்க்கை என்கிறது கவிஞரின் ‘நான்’.

    ஆதாம் ஏவாள் உலகின் முதல் மனிதர்கள் என்று பைபிள் கூறுகிறது. இவர்களுக்கும் பின்னதாக கடவுள் இருந்ததாக கவிஞர் குறிப்பிடுகிறார். பின்னர் சாத்தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கடவுள் மனிதனாகவும் மனிதன் கடவுளாகவும் மாறியதுடன் நில்லாமல் புதிய கடவுள்களையும் மக்கள் கூட்டத்தையும் பெருக்கி வருவதாக குற்றம்

    சாட்டியுள்ளார் ‘பெருக்கிக் கொள்ளல்’ ஆரோக்கியமானதாக இல்லை என்றாலும் ஆபத்தாக மாறிவிடக் கூடாது. இன்றுள்ள நிலையில் கடவுளின் பெருக்கமும் ஆபத்தை நோக்கி பயணிப்பதாகவே உள்ளது. கடவுள் தொடர்பான மற்றொரு கவிதை ‘தெளிவாய் இருக்கும் குழப்பம்’. கடவுள் உண்டா இல்லையா என்பது ஒரு தொடரும் குழப்பம். உண்டு என்பாரும் உண்டு. இல்லை என்பாரும் உண்டு.

    தெளிவாய் இருக்கும்

    குழப்பமானதாக இருக்குமோ

    கடவுள்...?

    என்று வாசகர்களைத் தெளிவாக குழப்பியுள்ளார். ‘தெளிவாய் இருக்கும் குழப்பம்’ என்று தலைப்பிலேயே உணர்த்தியுள்ளார்.

    'மாற்றமொன்றே மாறாதது’ என்பது மார்க்ஸின் தத்துவம். மாறாமலே உள்ளது இன்று வரை மாறாது என்னும் தத்துவம். அன்று பாட்டன் இருந்த நிலையிலேயே பேரன் நிலையும் உள்ளது என்று தலித்துகள் நிலை தற்போதும் மாறாமலே உள்ளது என்கிறார். மார்க்ஸியத்தை வைத்து தலித்தியம் பேசியுள்ளார். பெண்ணியம் பேசிய ஒரு கவிதை ‘இன்னும் இருக்கிறதே’. பெண்ணியத்திற்கு எதிராக குரல் கொடுத்தாலும் பெண் மீதான வன்கொடுமைத் தொடரவேச் செய்கிறது என்றும் வருந்தியுள்ளார். ‘புகுந்த வீடு’ம் பெண் பிரச்சனையையே பேசுகிறது. கவிஞர் சமூகத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கும் குரல் கொடுத்தவர் இலங்கையில் வாழும் தமிழர்க்கும் குரல் கொடுத்துள்ளார்.

    காலம்தான்

    கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்கிறது

    வெகுதூரமில்லை

    விடுதலை

    ஈழத்திற்கும் ஈழத்தமிழர்க்கும்

    ஈழத்தமிழர்க்கு விடுதலை நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கை

    ஏற்படுத்தியுள்ளார்.

    இந்தியர்களே இல்லாத ஒரு நாடு உள்ளது எனில் அது இந்தியாதான் என்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1