Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kathasiriyarin Kathai
Oru Kathasiriyarin Kathai
Oru Kathasiriyarin Kathai
Ebook99 pages37 minutes

Oru Kathasiriyarin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவை முழுமையாகக் கண்டு, உணர்ந்து கொள்வதற்குப் பல்வேறு மொழிகளில் படைக்கப்பட்டுள்ள இந்திய இலக்கியச் செல்வங்களையும் அவற்றைச் சிருஷ்டித்த இலக்கிய பிரம்மாக்களையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது, இலக்கியத்தோடு பரிச்சயம் உள்ள - அதாவது குறைந்தபட்சம் “வாசகர்” என்ற அளவிலாவது பரிச்சயம் கொண்டுள்ளவர்களுக்கு ஏற்புடையதும், இன்றியமையாததும் ஆகும். அந்த வகையில் தமது ஐம்பத்தாறு ஆண்டு கால ஜீவியத்தில் முப்பத்தைந்து ஆண்டுகளை இலக்கியம் படைப்பதில் கழித்த, இந்தியாவுக்கும் உலகுக்கும் இறவாப்புகழ் பெற்ற இலக்கியங்களை ஆக்கித் தந்த உருது ஹிந்தி இலக்கிய உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் முன்ஷி பிரேம் சந்த் (1880-1936) அவர்களைப் பற்றி இக்கட்டுரை கூறுகிறது.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580103906909
Oru Kathasiriyarin Kathai

Read more from Jayakanthan

Related to Oru Kathasiriyarin Kathai

Related ebooks

Reviews for Oru Kathasiriyarin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kathasiriyarin Kathai - Jayakanthan

    https://www.pustaka.co.in

    ஒரு கதாசிரியரின் கதை

    Oru Kathasiriyarin Kathai

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளும் பன்னெடுங்காலமாக உருவாக்கி வருவது ‘இந்திய இலக்கியம்’ என்னும் ஒரு பொது களஞ்சியத்தைத்தான் எனினும் கடந்த நூற்றாண்டுகளில் இந்திய மொழிகளில் உருவான கவிஞர்களும் எழுத்தாளர்களும் கதாசிரியர்களும் இப்பணியை இந்த நோக்கத்தோடே நிறைவேற்றியிருக்கிறார்கள். இக்காலமே நவீன இந்திய இலக்கியத்தின் தோற்றுவாய் எனலாம்.

    சுதந்திர இந்தியாவையும் நவீன இந்தியாவையும் நிர்மாணிப்பதற்குக் கனவுகண்டு, கடமையாற்றிக் கொண்டிருந்த இந்தியாவின் எல்லாப் பகுதி சிந்தனையாளர்களும் ஓர் இயக்கமாக இணைந்து செயல்பட வேண்டிய ஒரு புதிய சம்பிரதாயம் அப்போது தோன்றியது. அக்கால அரசியல்வாதிகள் என்போர் மிகச்சிறந்த இலக்கிய வாதிகளாகவும் இயல்பாகவே திகழ்ந்தனர்.

    இந்தியாவின் எதிர்காலத்தை அவர்களே கருதி கொண்டிருந்தனர். மேலும் உலகளாவிய முற்போக்குச் சிந்தனையாளர்களோடும் அவர்களது படைகளோடும் அவர்கள் முழுமையான பரிச்சயமும் முரணில்லாத உறவும் கொண்டிருந்தனர். எனவே, அவர்கள் உலக இலக்கியம் காணும் உத்வேகம் கொண்டிருந்தனர். இந்திய தேசிய இயக்க மென்பது அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபட மட்டும் முயன்ற வெறும் அரசியல் இயக்கம் மட்டுமன்று. மானுடம் தழுவிய உலகப் பொதுநோக்கம் கொண்ட ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த உலக முற்போக்காளர்களின் வரிசையின் முன்னணியில் அவர்கள் நின்றனர். அவர்கள் பல மொழிகள் பேசுகிறவர்களாக இருந்த போதிலும் அவர்களின் லட்சியம் பொதுவானதாக இருந்ததால் இந்திய மொழிகளுக்கு உரியவர்களுக்கு மட்டுமல்லாமல் உலகின் எண்ணற்ற மொழிகளுக்கும் உரியவர்களாய்க் கொண்டாடப்பட்டனர். மொழிகடந்த இலக்கியங்களுக்கு ஆதாரமான முற்போக்குக் கருத்துக்களின் மூலாதாரமாக அவர்கள் திகழ்ந்தனர். அவர்களால் அவர்கள் பணியால் அந்தந்த மொழிகளும் புதிய வீறும் பொலிவும் பெற்ற தென்பது அவர்களது வெறும் மொழிப்பற்றால் அல்ல. தத்தமது தாய் மொழிப் பற்றுக்கு இணையாக மானுடப் பற்றும் தேசப் பற்றும் தந்த வெளிச்சத்தின் காரணமாகத்தான் மொழியும் கலாசாரமும் விடுதலைப் போராட்ட காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தன. இந்த விதி இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுவானது ஆகும்.

    உலக முற்போக்கு இலக்கியம் என்றவொரு கோட்பாடும் உலக முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கம் என்னுமோர் அமைப்பும் மாக்ஸிம் கார்க்கி தலைமையில் உருவான அதே காலத்தில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிரேம் சந்த் தலைமையில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பெருமைக்குரிய தேசியத் தலைவர்களும் இலக்கிய வாதிகளுமான ஜவஹர்லால் நேரு கவிக்குயில் ஸரோஜினி தேவி ஆகியோரின் முன்முயற்சியில் இதற்கான திட்டம்

    உருவானதும் இந்தச் சங்கம் தோற்றம் கொண்டதும் ஜவஹர்லால் நேருவை இந்தியாவுக்குத் தந்த ஆனந்த பவனமே ஆகும். மகாத்மாகாந்தியும் கவியரசர் தாகூரும் இந்தச் சங்கத்தின் ஆதரவாளர்களாய் நின்று ஆசி கூறினர்

    இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் பொன் விழா ஆண்டின் போது அதில் கலந்துகொள்ளும் பேறு பெற்றேன். இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் கிளையின் முதல் மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகள் பதினைந்து பேர் என்னோடு லக்னோவில் நடைபெற்ற பொன்விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களோடு இந்தச் சம்மேளனத்தின் வரலாற்றையும், தாம் ஆற்றிய புகழ்மிகு பணிகளுக்கெல்லாம் கிரீடம் வைத்தது போல் பிரேம் சந்த் இந்தச் சங்கத்தைத் தொடங்கிவைத்து, அதே ஆண்டில் அமரரான செய்தியையும், பிரேம் சந்தின் படைப்புகள் பற்றியும், சோவியத் யூனியனோடு அவர் கொண்டிருந்த நட்பு பற்றியும் வழியெல்லாம் நாட்கணக்கில் பேச நேர்ந்தது. அந்த அனுபவத்தையும் அப்போது நேர்ந்த உரையாடல்களையும் எழுதி, இன்றைய தமிழ் மக்களுக்குத் தருவது எவ்வளவு பயனுடைய பணியாக இருக்கும் என்று எண்ணிய நண்பர்கள் அது குறித்து ஒரு நூல் எழுதுமாறு என்னை வேண்டினர்.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கிய அபிமானிகள் இன்றைய வாசகர்களைவிடவும் பிரேம் சந்தைப் பரிச்சயம் கொண்டிருந்தனர். அக்காலத்தைவிடவும் பல துறைகளில் ஒருங்கிணைந்து, ஒன்றுபட்டு நவீன இந்தியாவில் புது வாழ்வு வாழ்ந்து வரும் தமிழர்கள் அந்த அளவுக்குப் பிரேம்சந்தை, அவரது படைப்புகளை அதன் தொடர்ச்சியாக இன்று வரை வளர்ந்துள்ள இந்திய பிறமொழி இலக்கியங்களை அறியாதிருப்பது ஒரு விபரீத வீழ்ச்சியேயாகும்.

    இந்தக் குறையை நாம் போக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான கடமைகளில் நாம் ஈடுபடுவதற்கு முன்னால் பிரேம்சந்தின் மனிதாபிமானமும் நவீன இலக்கிய நோக்கும் கொண்ட அவரது கதைகளோடும் பாத்திரங்களோடும் பரிச்சயம் கொண்டு நாம் பயனடைவதற்கு முன்னால் அந்தக் கதாசிரியரின் கதையையே அதற்கான ஆரம்ப முயற்சியாக நாம் படிக்கத் தொடங்குவோமாக.

    இந்நன்னோக்கத்தில் உருவானதே இச்சிறு நூல். இது நவசக்தி தினப்பத்திரிக்கையின் வார இதழ்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டது.

    த. ஜெயகாந்தன்

    29.3.89

    சென்னை - 78

    முன்னுரை

    உலக சரித்திரமும் உலக இலக்கிய வரலாறும் இருவேறுபட்டன அல்ல. அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி முகிழ்ப்பதுவுமாக இரண்டறப் பின்னிக்கிடப்பன. மானுட குலத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பாரபட்சமின்றிச் சரித்திரமாகப் பதித்துப் பதித்து முன்னேறிச் செல்கிற காலத்தின் சத்தியசாஸனமாகப் பரிணமிப்பது தான் இலக்கியம். சரித்திரத்தைப் படைப்பவனும் அதைச்

    Enjoying the preview?
    Page 1 of 1