Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jayabaskaran Katturaigal
Jayabaskaran Katturaigal
Jayabaskaran Katturaigal
Ebook193 pages1 hour

Jayabaskaran Katturaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெயபாஸ்கரன் அவர்கள் பன்முகம் கொண்டவர். அவர் புத்தக வெளியீட்டாளர், சுதந்திரப் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் என்று பல பணிகளை புரிந்து வருகிறார். தேவி, தராசு போன்ற பல பத்திரிக்கைகளில் நிருபராக பணிபுரிந்துள்ளார். சென்னைத் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில், இனை இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் 250க்கும் மேல் பல்வேறு இலக்கிய அமைப்புகளுக்காக கவியரங்கங்களில் பங்கேற்றுள்ளார். 10க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580119802274
Jayabaskaran Katturaigal

Read more from Jayabaskaran

Related to Jayabaskaran Katturaigal

Related ebooks

Reviews for Jayabaskaran Katturaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jayabaskaran Katturaigal - Jayabaskaran

    http://www.pustaka.co.in

    ஜெயபாஸ்கரன் கட்டுரைகள்

    Jayabaskaran Katturaigal

    Author:

    ஜெயபாஸ்கரன்

    Jayabaskaran

    For more books
    http://www.pustaka.co.in/home/author/jayabaskaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பொருளடக்கம்

    சுற்றுச்சூழல்

    என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?

    நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்

    வேளாண்மையின் பகைவன்

    கொடைக்கானல்!?

    சமூகம்

    மணநாள் மனநிலை

    ஒப்பீட்டாளர்கள்

    அனுபவம்

    ஜல்லிக்கட்டு - வீரம் படுத்தும்பாடு!

    கல்வி - சில கேள்விகள்

    எது அழகு? யார் அழகி

    சாதனையா? வேதனையா

    எது காதல்?

    என்றோ நெய்த முடிவுகள்!

    ஊடகம்

    விரைந்து முடிக்க வேண்டுகிறேன்!

    வேதனைக்குரிய விடை

    பட்டிமன்றமா? வெட்டிமன்றமா?

    பல்லவி எழுதும் பாவலர்களுக்கு

    தமிழ் இலக்கிய வட்டம்

    வாழ்வில் காணாத வசனங்கள்…

    சின்னத் திரையா? சினிமாத் திரையா?

    இலக்கியக் கூட்டங்களின் எதிர்காலம்

    தமிழ்த் திரைப்படங்களில் காதலும் காதலர்களும்

    உளவியல்

    பேசுகிறார்கள்

    சிரிப்பு - மனம் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி

    நோகவைப்பதுதான் நோக்கமா?

    விஞ்ஞானத்தை வீணடிப்பவர்கள்

    வனவிலங்குகளின் வாழ்வுரிமை

    குமரிமுனைக் காதலர்கள்

    ஜெயபாஸ்கரன் கட்டுரைகள்

    தன் பெயர் ஒன்றைத் தவிர

    தானறிந்த அனைத்துப் பெயர்களையும்

    உச்சரித்து உச்சரித்து

    உயர்த்திக் கொண்டிருக்கும்

    என் மனம் கவர்ந்த ‘மானுடன்’

    தேனி மு. முகமது சபி க்கு

    இந்நூல்...

    அணிந்துரை
    சுகதேவ் (ப. இளையபெருமாள்)
    கட்டுரையாளனின்
    கடமை

    படைப்பாளிகளை உற்பத்தியாளர்களாகவும் வாசகர்களை நுகர்வோர்களாகவும் மாற்றிவிடும் அபாயம் நிறைந்த உலகமயமாக்கல் நெருக்கடியிலிருந்து மீளாவிட்டால் தமிழ்ச் சிந்தனை உலகம் வேகமாகச் சந்தைமயமாக்கப்பட்டுவிடும்,

    உலக விஷயங்களை, நாட்டு நடப்புகளை உண்மையில் தமிழில் படிக்க எத்தனை பேர் இன்று தயாராக இருக்கிறார்கள் அல்லது விரும்புகிறார்கள்...?

    விரும்புகிறவர்களிலும் எத்தனை பேர் தமிழில் படித்துப் புரிந்து கொள்ளும் தகுதியில் இருக் கிறார்கள்...?

    விருப்பமும் தகுதியும் இருந்தும் எத்தனை பேருக்குத் தமிழில் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் கிடைக்கின்றன?

    கிடைக்கின்ற விஷயங்களும் எந்த அளவுக்குப் பொருட் செறிவும் சுவைச் செறிவும் நிறைந்ததாக இருக்கின்றன?

    தமிழ் வாசகர்கள் கட்டுரையை எந்த அளவுக்குப் பொருட்படுத்து கிறார்கள்?

    நீண்ட தேடலுக்கும் விவாதத் திற்கும் உரிய கேள்விகள் இவை.

    கவனமாக யோசிக்க வேண்டிய விஷயம்.

    தமிழில் கட்டுரையாளனுக்கு அவன் கட்டுரையாளன் என்பதாலேயே பெரிய இடமோ அல்லது மதிப்போ இருந்ததாகத் தெரியவில்லை. பிற ஆளுமைகளுடன் கட்டுரையும் இணையும் போது வேண்டுமானால் அதற்கு ஓர் அங்கீகாரம் கிடைத்ததாக நினைத்துக் கொள்ளலாம்.

    இங்கே கவிதை அல்லது கதை எழுதினால்தான் ஒரு மனிதனை எழுத்தாளன் என்றோ படைப்பாளி என்றோ பொதுவாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

    அவரு கவிதை, கதை பொஸ்தகமெல்லாம் போட்டிருக்காரு!, என்பது போன்ற வெளிப்பாடுகளெல்லாம் இத்தகைய எண்ண ஓட்டத்தின் எதிரொலியே. கவிதை, கதை, நாவல் ஆகியவைதான் கிரியேட்டிவ் லிட்ரேச்சர் வரிசையில் இருப்பதாகப் பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுகிறது. அப்படியெனில் ஒரு கட்டுரை யாளனுக்குப் படைப்பாக்க ஆளுமை தேவையில்லையா... என்ற நியாயமான கேள்வி எழும். சிறந்த கட்டுரையாளனுக்கு, கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்களுக்கு நிகரான, சமயங்களில் அவர்களுக்கும் மீறிய படைப்பாக ஆளுமை தேவை என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் சராசரி தமிழ் வாசகர்களின் மத்தியில், கட்டுரை என்றால் ஏதோ தோன்றியதை எழுதி விடலாம் என்ற எண்ணம் நிறுவப்பட்டிருக்கிறது. கவிதை, சிறுகதை, நாவல்களுக்குத்தான் மூளையை கசக்கி அல்லது நசுக்கி எழுத வேண்டும் என்று நினைக்கிறார்கள். தீவிர இலக்கிய வட்டத்தில்கூட இத்தகைய தவறான புரிதல்கள் இருக்கின்றன. இதனால்தான் எளிதில் படைப்புலக அங்கீகாரம் பெறும் ஆசையில், தமிழர்களில் பாதிக்கு மேலானவர்கள் கவிஞர்களாக வலம் வருகிறார்கள். குடும்ப அட்டையில் அல்லது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நீங்கள் கவிஞரா? என்றொரு கேள்வியையும் சேர்ப்பது நலம்.

    பலர் சிறுகதை எழுதுகிறார்கள். பலர் கவிதை எழுதுகிறார்கள். வெகு சிலர் கட்டுரை எழுதுகிறார்கள். சிறுகதையோ அல்லது கட்டுரையோ எழுத முடியாதவர்கள் இப்போதெல்லாம் நாவல் எழுதுகிறார்கள். இலக்கிய ஒளிவட்டத்துக்கு உடனடி உத்தரவாதம், நாவல். அதே நேரத்தில் பாதிக்குப் பாதி கட்டுரை ஆசையையும் வெறிதீர தீர்த்துக்கொள்ளலாம். யாராவது கேட்டால், இருக்கவே இருக்கிறது ஏகப்பட்ட இஸங்கள். மாஸிக்கள் ரீலிஸம் அல்லது மாயுக்கல் ரியலிஸம் என்பது போன்று ஏதாவது சொல்லிக் கொள்ளலாம்.

    இன்றைய தமிழ் இலக்கிய உலகில் என்ன எழுதுகிறீர்கள், எப்படி எழுதுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எழுதியதை எவ்வாறு சந்தைப்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியம். ஆம். மார்க்கெட்டிங் ஸ்டிராட்டயு தெரிந்தவர்கள் எளிதில் கவனத்திற்குரிய, பரபரப்பான படைப்பாளியாகி விடலாம் என்பது தமிழ்ப் படைப்புலகின் இப்போதைய பெரும் சோகம்.

    கட்டுரை இலக்கியம் என்ற கருத்தாக்கம் தமிழ் வாசகர்களுக்கு இன்னும் உரிய முறையில் ஊட்டப்படவில்லை என்றே தோன்றுகிறது. பல சமயங்களில் கட்டுரை இலக்கியம் என்பது இங்கே இலக்கியக் கட்டுரை என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால்தான் கவிதை, சிறுகதை, நாவல் சார்ந்த படைப்பிலக்கிய வரிசையில், படைப்பாளனின் ஆளுமையை ஒட்டியே கட்டுரையையும் (கடைசியாக) இனம் காண்கிறார்கள் வாசகர்கள்.

    பாரதியை ஒரு மைல் கல்லாகக் கொண்டால், அவருக்கு முன்பும் பின்பும் தமிழ்ச் சிந்தனை மரபைத் தங்கள் கட்டுரையால் வளப்படுத்திய அறிஞர்கள், படைப்பாளிகள் பலருண்டு. விரிவு கருதி அவர்களை இங்கே பட்டியலிடவில்லை. தரமான வாசகன் அவர்களை நன்கறிவான்.

    ஒரே சமயத்தில் வெகுஜனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் சிறுகதை, நாவல் மற்றும் கட்டுரை வாயிலாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளிகள் தமிழில் வெகு சிலரே. அந்த வரிசையில், நிகழ்கால வாசகனுக்கும் பரிச்சயமான ஒரு படைப்பாளியை இனம் காட்ட வேண்டுமென்றால் ஜெயகாந்தனை மட்டுமே சொல்ல முடியும்.

    சிறுகதை, நாவல், கட்டுரை, மேடைப்பேச்சு, சினிமா போன்ற பல துறைகளிலும் கம்பீரமான வெற்றி கண்ட பன்முகப் படைப்பாளி ஜெயகாந்தன். இயல்பாகவே அவருக்கு இவையெல்லாம் கைகூடியிருக்கிறது. சர்வ சுதந்திரச் சிந்தனையாளர், சொந்தக் கூட்டல், கழித்தல்களைக்கூட உள்ளது உள்ளபடி பகிரங்கப்படுத்தும் நேர்மை அவருக்கிருந்தது. சிறுகதை, நாவல்களை போலக் கட்டுரையிலும் நடப்பு சமூகப் புரிதல்களை மறுவாசிப்புக்கு உள்ளாக்கியவர். கட்டுப்பெட்டியாக இருந்த தமிழ்ச் சிந்தனை உலகை உலுக்கி, தனது பேச்சாலும், கட்டுரையாலும் சமூக ஜனநாயகத்தை முன்மொழிந்தவர்.

    வெகுஜன எழுத்தாளர்கள் பலர் இன்று தீவிர இலக்கிய வட்டத்தில் இடம் பிடிக்கக் கடுமையாகப் பாடுபடுகிறார்கள், எழுத்தால் அன்றி இதர வழிகள் அனைத்தாலும். அதே போலத் தீவிர இலக்கியப் படைப்பாளிகள் பலர், வெகுஜன உலகப் பளபளப்புக்கு ஏங்கித் தவிக்கிறார்கள். அந்தரங்கமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஏதோ, வேண்டா-வெறுப்பாக வெகுஜன வட்டத்தில் தலைகாட்டுவது போல பாவ்லா காட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் பரஸ்பர சகாயம் கருதி நிரந்தர ஏற்பாடுகளுக்கும்கூட தயாராகிறார்கள்.

    இந்த மாதிரியான எந்த முயற்சிகளும் அல்லது திரைமறைவு ஏற்பாடுகளும் இன்றி, வெகுஜன மற்றும் தீவிர இலக்கியத் தளங்களில் ஏக காலத்தில் கோலோச்சியவர் ஜெயகாந்தன். அன்றைய படைப்புலகை முன்னோக்கிச் செலுத்திய அவரது எழுத்தும் ஒரு படைப்பாளியாக அவரிடம் நிறைந்திருந்த நேர்மையும் இந்த இடத்தை வெகு சுலபமாக அவருக்குப் பெற்றுத் தந்தது. தனது எழுத்தை சந்தைப்படுத்த அவர் முயன்றதில்லை. சந்தையின் தேவையை ஒட்டியும் அவர் எழுதியதில்லை. எழுதுவதும் எழுதுவதை நிறுத்துவதும் முற்றிலும் அவர் மனம் சார்ந்த முடிவு. அதனால்தான் எழுதுவதை நிறுத்திப் பல்லாண்டுகளாகியும் தமிழ்ச் சிந்தனை உலகின் எதிர்பார்ப்புக்குரிய படைப்பாளியாக, கவனத்திற்குரிய பேச்சாளராக இன்றும் கம்பீரமாகப் பவனி வருகிறார். படைப்புலகில் கறுப்புப் பூனை, சிகப்புப் பூனை, காவிப் பூனை போன்ற பந்தோபஸ்துகள் அல்லது கவசங்கள் ஏதுமின்றித் தன்னந்தனியாக நடமாடுகிறார். அவரைப்போலவே வேடம் தரித்துக் கலைந்தவர்கள், களைத்தவர்கள் - இளைக்க இளைக்க ஓடிவந்தும் இலக்கை எட்ட முடியாமல் போய், ஓரங்கட்டி, பேச்சு வராமல் சைகையால் ஏதேதோ காட்டுகிறார்கள். விவரம் புரிந்த வாசகர்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒதுங்கிப் போகிறார்கள். இது ஜெயகாந்தனுக்கு காலந்தவறிய வக்காலத்து அல்ல. தமிழ்ப் படைப்புலகில் காலம் தொடர்ந்து தன்னுடன் அடையாளப் படுத்தும் ஒரு மனிதனைப் பற்றிய குறிப்பு.

    முகாம்கள், அதற்குள் முகாம்கள், அதற்குள்ளும் முகாம்கள் எனச் சுருங்கியிருக்கும் தமிழ்ப் படைப்புலகம் எந்த அளவுக்கு இந்தக் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ளும் என்பது தெளிந்த வாசகனுக்கு, ஒரு நல்ல மாலை நேரக் கேளிக்கை.

    எனது கதைகளுக்கெல்லாம் எது மூலப் பொருளோ அதுவேதான் இத்தொகுப்பிலிருக்கிற ஒவ்வொரு கட்டுரைக்கும் மூலமும் கருவும் ஆகும். கதை எழுதுகிற முயற்சியிலிருந்து தப்பித்துக் கொள்கிற மார்க்கம் அல்ல இது. அது பற்றி எனது பொறுப்புணர்ச்சியினாலேயே நான் ஒரு புது வழியை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன் என்ற ஜெயகாந்தனின் கூற்று கட்டுரை இலக்கியம் இதர கிரியேட்டிவ் லிட்ரேச்சர் வகைகளுக்குச் சரிநிகர் சமானமானது என்பதைப் பறைசாற்றுகிறது.

    சுதந்திரத்திற்கு முன்பும் அதற்குப் பிறகு சிறிது காலமும் தேசிய இயக்கம் கட்டுரை இலக்கியத்தை, வெகுஜன சிந்தனையைத் தங்களை நோக்கித் திருப்பும் ஆயுதமாகக் கையாண்டது. பின்னர் திராவிட இயக்கமும் கிட்டத்தட்ட அதே காலத்திலும் அதற்குப் பிறகும் முற்போக்கு இயக்கமும் கட்டுரை இலக்கியம் மூலம் தமிழ்ச் சிந்தனை உலகை ஊடுருவிக் கைக்கொள்ள முயன்றன. இதில் திராவிட இயக்கம் நேரடிப் பலன் கண்டது. முற்போக்கு இயங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை எழுப்பினாலும் இறுதிப் பலன் எதிர்பார்த்தது போல அமையவில்லை.

    90-களில் அதாவது தாராளமயமாக்கம் தீவிரப்படுத்தப்பட்ட காலத்தில் தமிழ்ச் சிந்தனை மரபில் தனிநபர் இயக்கம் தலைதூக்க ஆரம்பித்தது. இயக்கம் சாராமல் தங்களையே ஒரு இயக்கமாகப் பிரகடனம் செய்துகொண்டு இயங்கியவர்கள் படைப்புலகில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். சொல்லப்படும் கருத்து நல்லதா, கெட்டதா என்பது புறந்தள்ளப்பட்டு யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்து அதற்கு வரவேற்பு கிடைப்பது தமிழ் வெகுஜன உலகின் நாள்பட்ட நோய். அந்த நோய், தீவிர இலக்கிய வட்டத்திலும் பரவ ஆரம்பித்தது.

    வர்த்தக உலகின் பிரபலமான பிராண்டுகளுக்கு அடிமையான நுகர்வோரைப் போல, தமிழ் இலக்கிய உலகமும் ‘பிராண்டு வேல்யூ’ சார்ந்து மலிந்து போனது. வெகுஜன மீடியாவில் ‘பிராண்டு வேல்யூ’ எழுத்தாளர்கள், ரஸகுல்லா சாப்பிட்டதி லிருந்து ராத்திரி சமாச்சாரம் வரை

    Enjoying the preview?
    Page 1 of 1