Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kilambitangaya… Kilambitanga…
Kilambitangaya… Kilambitanga…
Kilambitangaya… Kilambitanga…
Ebook211 pages1 hour

Kilambitangaya… Kilambitanga…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வி.சி.வில்வம், பிறந்தது தேவகோட்டை. வசிப்பது திருச்சி. 1972 இல் பிறந்த இவர், வணிகவியல் பட்டப் படிப்பு முடித்தவர்.

இவரின் எழுத்துகள் சிறு வெளியீடாக நிறைய வந்துள்ளன. பல்வேறு இடங்களுக்கும் நேரடியாகச் சென்று, களத்தில் நின்று எழுதுபவர். அவ்வாறு எழுதியவற்றில் 30 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, இந்நூலை வெளியிட்டுள்ளார்.

இவரது மகள் பெயர் கியூபா. கியூபா எனப் பெயரிட்டதை பிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரிவிக்க, அவர் தன் கையொப்பமிட்டு இவருக்கு ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118102052
Kilambitangaya… Kilambitanga…

Related to Kilambitangaya… Kilambitanga…

Related ebooks

Related categories

Reviews for Kilambitangaya… Kilambitanga…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kilambitangaya… Kilambitanga… - V. C. Vilvam

    http://www.pustaka.co.in

    கிளம்பிட்டாங்கய்யா...

    கிளம்பிட்டாங்க…

    Kilambitangaya…

    Kilambitanga…

    Author:

    வி.சி.வில்வம்

    V.C.Vilvam

    For more books
    http://www.pustaka.co.in/home/author/v-c-vilvam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க…

    வி.சி.வில்வம்

    இரா.செந்தில்குமார்

    ஜப்பான்

    அணிந்துரை

    சக மனிதர்களை நேசிப்பது முக்கியம்!

    இந்த உலகில் வாழ்வதற்கு என எந்தச் சிறப்புத் தகுதியுமில்லை, தேர்வுமில்லை. பிறப்பவர்கள் அனைவரும் அவரவருக்குத் தெரிந்தபடி வாழ்கிறார்கள், வாழ முயற்சிக்கிறார்கள், காலம் முடிந்தால் மடிகிறார்கள். வாழ்க்கையைச் சரியாக வாழ்ந்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை இவர்களிடத்தில் இறுதியாகக் கேட்போமேயானால், பதில் எப்படியிருக்கும்? வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, ஏமாற்றங்களுடனும், ஏக்கங்களுடனும், பாறை மீது மோதும் சிறு நீர்க்குமிழ் போல சட்டென்று முடிந்து விடுகிறது வாழ்க்கை. ஆனால், வெகு சிலர் அந்த வெள்ளத்தை எதிர்த்து நீந்தக் கூடியவர்களாக, தனக்கான பாதையைத் தானே தீர்மானிப்பவர்களாக, எந்த நிலையிலும் மனவுறுதி குன்றாதவர்களாக திகழத்தானே செய்கிறார்கள்? அப்படிப்பட்ட மனிதர்தான் இந்தக் கட்டுரை தொகுதியின் ஆசிரியர் வி.சி.வில்வம்.

    என்னைக் கேட்டால், இந்த உலகில் மனிதர்களாக வாழ்வதற்கு இருக்கவேண்டிய ஒரே தகுதி, சக மனிதனை நேசிப்பவனாக இருத்தல் மட்டும்தான். வில்வம் ஒரு சிறந்த மனிதாபிமானி, கொள்கையாளர், சக உயிரை எந்த எதிர்பார்ப்புமில்லாது நேசிக்கக்கூடியவர். அவருக்கு ஆன்மிக ஊன்றுகோல்கள் (அவரது மொழியில் சொன்னால், தடைக்கற்கள்) எந்தக் காலத்திலும் தேவைப்படாது. தோழர் வில்வத்தை நான் 2002 இல் ஜப்பான், தோக்கியோ மாநகரில் சந்தித்தேன். ஆயிரம் பேர் கூடியிருந்த ஒரு சபையில், தனக்குச் சரி என்று பட்டதை மேடையில் ஏறி உரக்கக் கூறிய அந்த நொடியில், சக பயணியாக, தோழனாக என்னுள்ளே நுழைந்தார். அன்று முதல் இன்று வரை அவரிடம் எந்த மாற்றமுமில்லை. என்னுடன் பேசிச் சிரித்த பொழுதுகளில், எந்தக் கொள்கையை வெளிப்படுத்தினாரோ, அதே கொள்கையை தனது குடும்ப வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு என எல்லா நிலைகளிலும் கடைப்பிடிப்பவராக இருப்பதை எண்ணி

    மகிழ்கிறேன். ஒரு பத்திரிகையாளனாக உண்மையை வெளிக் கொண்டு வருவதில் அவருக்கிருக்கும் ஆர்வம், செயல்திறன், ஆளுமை இந்த தொகுதியிலுள்ள கட்டுரைகளில் தெரிகிறது. நாமம் போடவில்லை என்ற காரணத்திற்காக, ஒரு நல்ல யானைப் பாகனை வேலையிலிருந்து துரத்துகிறார்கள். இது ஏதோ, 1960 களில் நடந்தது அல்ல. 2012இல் சிறீரங்கத்தில் நடந்த கூத்து இது. வில்வம் உடனடியாக யானைப் பாகன் சிவசீறிதரனைச் சந்தித்து. உண்மையைக் கொண்டு வருகிறார். அதேபோல பிராமணாள் கபே என்று ஆரம்பிக்கிறார் ஒருவர். வில்வம் அங்கும் சென்று பொது மக்களிடம் கருத்துக் கேட்டு வெளியிடுகிறார். அப்படிக் கருத்து தெரிவித்தவர்களில் ஒரு பிராமணரும் உண்டு என்பதில்தான் தான் ஒரு சிறந்த பத்திரிகையாளன் என்பதை நிறுவுகிறார். அமெரிக்காவைப் பற்றி அதன் வரலாற்றிலிருந்து தற்போதைய பெரியண்ணன் நிலைப்பாடு வரை மிக நுட்பமாக அலசி அவரால் கட்டுரை எழுத முடிகிறது. கோக- கோலாவைப் பற்றியும், அமெரிக்காவைப் பற்றியும் அவர் எழுதுவதில் கோபம் தெரிகிறது. குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி என்று எழுதுவதில் அவரது மனிதநேயம் தெரிகிறது. அன்புள்ள அப்பாக்களுக்குக் கட்டுரையில் ஒரு சிந்தனையாளனாக பெண்களின் வலியை, ஆணாதிக்க அப்பாக்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் அப்பாவிக் குழந்தைகளின் இயலாமையைப் பதிவு செய்கிறார்.

    வேளாங்கண்ணிக்கு மாலை போட்டு பாதயாத்திரை செல்பவர்களைப் பற்றி எழுதுகையில்,அதற்கு ஒரு பாவி சொன்னார். (குறிப்பு: பாவி என்பதை சாமி என்று மாற்றி வாசிக்கவும். தவறுக்கு வருந்தவில்லை) என்று கிண்டலடிக்கிறார். உண்மையில் இந்த நகைச்சுவை உணர்வுதான் வில்வத்தின் சிறப்பு என்று சொல்வேன். சமூகத்திற்கான எழுத்து என்பது சமயங்களில் படிக்க சுவாரஸ்யமற்று, வெறும் அரசு அறிக்கை போல் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் இந்தக் கட்டுரை தொகுதியின் எந்த ஒரு வரியும் நமக்கு சலிப்பூட்டவில்லை. சமூக இழிவுக்கு எதிராக என்னுயிர்த் தோழன் வில்வத்தின் எழுத்துகள் எப்போதும் நிமிரட்டும் என வாழ்த்துகிறேன்!

    ***

    பி.இர.அரசெழிலன்

    திருச்சி

    அணிந்துரை

    நூல் முழுக்க நல்ல கட்டுரைகள்!

    தமிழ் இதழ்களிலும், நாளேடுகளிலும் பல்வேறு உள்ளடக்கங்களோடு பலநூறு கட்டுரைகள் பலராலும் எழுதப் பெற்று வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட அவை தொகுப்பாக ஒரே நூலாக வெளியிடப்படுகிற வாய்ப்பு என்பது மிகச்சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்தவகையில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த வி.சி.வில்வம் அவர்களின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்துள்ளது. நூலில் 25 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை மிக நீண்ட கட்டுரைகளாக இல்லாமல் சிறு சிறு கட்டுரைகளாக இருப்பது என்பது சிறப்புக்குரியது. ஏனெனில், நூல் வாசிப்பு ஆர்வம் கொண்டோரில் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மேலோட்டமான வாசிப்பார்வம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். ‘அறிந்துகொள்வோம் அமெரிக்காவை…' என்ற கட்டுரை மட்டும் சற்று நீண்ட கட்டுரை. செல்வம் கொழிக்கும் அந்த செவ்விந்திய மண்ணில் குடியேறிய வந்தேறிகளான அய்ரோப்பியர்கள், செவ்விந்திய மண்ணின் (அமெரிக்காவின்) பூர்வகுடி மக்களான பழங்குடியினரான செவ்விந்தியர்களைஅழித்து, அந்த மண்ணின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக ஸ்பெயின் நாட்டு மன்னனால் அனுப்பப்பட்ட கொள்ளைக்காரன்தான் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்கிற உண்மையை உரத்துச் சொல்கிறது இக்கட்டுரை. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ - அமெரிக்காவிற்கு அடங்கமறுப்போரை என்னவெல்லம் செய்யும் என்பதையும் இந்தக்கட்டுரை சொல்லிச்செல்கிறது. இராக்கின் சதாம் உசேன், சிலியின் அலண்டே வியத்நாமின் ஹோசிமின், லிபியாவின் முகமது கடாபி, ஈரானின் மொசாடே, ஈக்வடாரின் வெலாகுகோ இபரா, நிகரகுவாவின் டேனியல் ஓர்டேகா, ஹெய்ட்டியின் அரிகுடைட் போன்ற எண்ணற்றோர் இப்பட்டியலில் அடங்குவர். பன்னாட்டுச் சுரண்டல் நிறுவனங்களான பெப்சியும், கோகோ கோலாவும் இந்தத் தமிழ்மண்ணின் நிலத்தடிநீரை உறிஞ்சி எப்படி பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சுரண்டிக் கொழுக்கின்றன என்பதை 'குடி குடியைக்கெடுக்கும்; அமெரிக்கக் குடி

    உலகைக் கெடுக்கும்' என்ற கட்டுரையில் வெளிப்படுத்துகிறார் வி.சி.வில்வம்.

    சிற்றிதழ் சேகரிப்பாளரும் சிற்றிதழ் ஆய்வாளருமான தோழர் தி.மா.சரவணன் அவர்களைப் பற்றிய கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஜோதிடம் என்கிற பெயரில், அறியாமைச் சேற்றில் அமிழ்ந்து கிடக்கும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை ‘எதிர்காலம் குறித்துத் தெரியவேண்டுமா? - இங்கு ஜோதிடம் பார்க்கப்படும்’ என்ற கட்டுரை விளக்குகிறது.

    ஜோதிட மோசடிகளில் மற்றொருவகையான நாடிஜோதிடம் குறித்து வெட்ட வெளிச்சமாகும் நாடிஜோதிடப் புரட்டு என்ற கட்டுரை அம்பலப்படுத்துகிறது. குழந்தைகளைத் தத்தெடுத்தல் பற்றிய விவரங்களும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

    தாலியின் புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் ‘தாலி என்னும் மோசடி’ என்ற கட்டுரையும் இதிலுண்டு. வேளாங்கண்ணிக்கு கால்நடையாகச் செல்லும் பக்தர்களை எள்ளல் நடையில் நையாண்டி செய்யும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க’ என்ற கட்டுரையும் நூலில் இடம்பெற்றுள்ளது. உணவில் கலப்படம் குறித்து ‘நீங்கள் சாபிடும் உணவில் சுண்ணாம்பு செங்கற்பொடி, குதிரைச்சாணம்’ என்ற கட்டுரை விவரிக்கிறது.

    எதிர்காலச்சந்ததி தண்ணீர் இன்றிச் சாகும், தமிழர்களாக மாறிய பார்ப்பனர்கள், அமெரிக்காவின் அய்ந்தாறு பக்கங்கள், சாதிமறுப்பே சமூகக் காப்பு, பிராமணாள் ஹோட்டலும் சிறீரங்கக் கூட்டமும், அன்புள்ள அப்பாக்களுக்கு கடவுளின் கதை, யானைப் பாகன் வேலை இழந்த கதை, ஜப்பானில் ஒலிக்கும் தமிழர் குரல் போன்ற நல்ல கட்டுரைகளும் நூல்முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன.

    மேலோட்டமான வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களையும், ஆழ்ந்து படிக்க எண்ணுபவர்களையும் ஒருசேர இந்நூல் கவரும் என்று கருதுகிறேன்.

    ***

    இரா.ஆ.பாண்முக்குமார்

    சிங்கப்பூர்

    அணிந்துரை

    விரல் வழி வார்த்தைகள்!

    நண்பன் வி.சி.வில்வம் தொகுத்துள்ள கட்டுரைகளை வாசித்தேன். அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை, மனிதர்களை, மனித மனங்களை, நாம் பார்த்தும், கேட்டும் இருக்கும் விசயத்தை அவரின் கழுகுப் பார்வையில், புதிய கோணத்தில், நிதானமாகவும், எளிமையாகவும் சொல்லி இருக்கிறார். வில்வத்திற்கு மொழிநடை கைவரப் பெற்றுள்ளது. மற்ற நூல்களைப் போல இதை எளிதில் வாசித்துக் கடந்து விட முடியாது. இத்தொகுப்பை வாசிப்போர் மனதையும், மனிதத்தையும் சற்றே சிந்திக்க வைக்கும். ஒரு கட்டுரையில், ஒரு சாதாரண செய்தியில் பரபரப்புக் கூட்டும் நீங்கள், சமூகத்திற்குப் பயன்படும் செய்திகளை மறைப்பது ஏன்? என்கிற வரியில் கட்டுரையாளரின் சமூக அக்கறை மேலோங்கி இருக்கிறது.

    இக்கட்டுரைத் தொகுப்பில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி, தென்றல் வீசிய மன்றல், அன்புள்ள அப்பாக்களுக்கு, ஜப்பானில் ஒலிக்கும் தமிழர் குரல் போன்ற கட்டுரைத் தலைப்புகளே, ஏனைய கட்டுரைகள் மிக நேர்த்தியாக இருக்கும் எனக் கட்டியம் கூறுகின்றன. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பாக இந்நூல் இருக்கிறது. வில்வம் அவர்களின் விரல் வழி வழிகின்ற வார்த்தைகளில் அடர்த்தி இருக்கிறது. பல்வேறு கட்டுரைகள் இருந்தாலும், கட்டுரையின் மையப் பொருளாக மனிதம் மட்டுமே நீக்கமற நிறைந்து இருக்கிறது. காலம் கடந்து வந்தாலும் இக்கட்டுரைத் தொகுப்பு சம காலத்திற்குப் பொருந்துவதாய் உள்ளது.

    நண்பன் வில்வத்தின் எழுத்துப் பயணம் தொய்வின்றி தொடர வாழ்த்துகிறேன். வாழ்த்துகள்

    ***

    வைகறை ம.கு.,

    காரைக்குடி

    அணிந்துரை

    மனிதம் தழைக்கப் பணி செய்வோம்!

    சமூகம் சார்ந்து பயணிக்கும் ஒருவர், தான் பெற்ற நுகர்வுகளைத் தான் சார்ந்த சமூகத்திற்குத் திருப்பிசெலுத்துவதே சமூகப் பணியாகும். அந்த வகையில் நண்பர் வி.சி.வில்வம் பல்வேறு இதழ்களில், பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்து பலராலும் பாராட்டப் பெற்ற முக்கியமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக்கம் செய்துள்ளார். ஒரு மனிதப் பற்றாளனின் அறம் சார்ந்த விழுமியங்கள் எத்தகைய தன்மைப் பெற்றிருக்கும் என்பதனை, ஒவ்வொரு தலைப்பிலான கட்டுரைகளும் சொல்கின்றன. பொதுவாகக் கட்டுரைத் தயாரிப்பதற்கு ஆவணத் தேடல், புள்ளி விவரங்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் காண முடிகிறது.

    இந்நூலில் குழந்தைகள், அப்பா, தமிழ்ப்பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்கள், நூலகம், பெரியார் இயக்கம், ஜாதி மறுப்பு, மன்றல் நிகழ்வு, பிராமணாள் கபே, சிறீரங்கம் யானைப் பாகன், ஜப்பானில் பொங்கல் விழா, கோக கோலா, பாத யாத்திரை, புத்தகச் சங்கமம், தாலி, தத்தெடுக்கும் முறை, மனிதநேயம், கலப்படம், தண்ணீர் எனப்பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள். எனினும் அவற்றினூடே நூல் முழுக்க இழையோடுவது மனிதமே! தமிழகம் தாண்டி மலேசியா, ஜப்பான், அமெரிக்கா என உலகப் பயணம் மேற்கொள்ள வைத்திருக்கிறார். ஒரு பொருள் குறித்து அவரவர் அறிந்த செய்தியாக இருந்தாலும், இந்நூல் படித்த பிறகு அதனூடாக புதிய கோணம், புதிய பார்வைக் கிடைப்பதை அறிய முடிகிறது. உலக நாடுகளின் வல்லாண்மையால் மனிதம் எப்படி சிதைகிறது என்பதைத் தம் கூரிய பார்வையால் வில்வம் வெளிக்காட்டுகிறார். கட்டுரைகளில் பிரச்சாரத் தன்மை இல்லாதது சிறப்பு. நோயாளியின் தன்மை அறிந்து நோய் நீக்குவது போல, பல செய்திகள் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன. மனிதம் தழைக்க மகத்தான பணி செய்யுங்கள்! மனிதம் தொலைக்கும் அனைத்தையும் விட்டுத் தள்ளுங்கள்!

    ***

    என்னுரை

    பல்வேறு காலங்களில்

    எழுதியதில்

    30 கட்டுரைகள்!

    நிறைய நண்பர்களுக்கு

    என் நன்றி!

    என்னை அழ வைத்துப் போன

    அண்ணன்

    பெரியார் சாக்ரடீஸ்

    நினைவுகளோடு...!

    - வி.சி.வில்வம்

    ***

    ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

    சென்னை

    அணித்துரை

    கட்டுரைகளில் தனித்தன்மை

    இந்நூலுக்கான என் அணிந்துரையை, ரசிப்புரை என்று வைத்துக் கொள்ளலாம். நான் தட்டுத் தடுமாறி ஆர்வக் கோளாறாய் எழுத ஆரம்பித்த காலத்தில், நல்லா இருக்கா என்று பார்த்துச் சொன்ன அண்ணன்களில் ஒருவர் வி.சி.வில்வம். எடுத்த பணியைத் திறத்துடனும், நுட்பத்துடனும், மாறுபட்ட கோணங்களிலும் செய்ய வேண்டுமென்ற ஆர்வமுடையவர். அந்த ஆர்வம் தான் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் சுவைக்குக் காரணம். பலதுறைகளில் பணியாற்றக்கூடியவர். இதழியலில் பேரார்வம் உடையவர். அத்துறை மக்களுக்குப் பயன்படும் செய்திகளைத் தரவேண்டும் என்று விரும்புபவர்.

    மிக முக்கியமான அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1