Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - March 2022
Kanaiyazhi - March 2022
Kanaiyazhi - March 2022
Ebook177 pages51 minutes

Kanaiyazhi - March 2022

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580109508360
Kanaiyazhi - March 2022

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - March 2022

Related ebooks

Reviews for Kanaiyazhi - March 2022

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - March 2022 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி மார்ச் 2022

    மலர்: 56 இதழ்: 12 மார்ச் 2022

    Kanaiyazhi March 2022

    Malar: 56 Idhazh: 12 March 2022

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காலத்தை நேசிக்கக் கை கொடுக்கிறார்!

    முதல்வர் ஆனபின்

    வந்திருக்கிற முதல் பிறந்தநாள்

    வாழ்த்துவோம்!

    வாழ்த்து என்பது

    வாழ்த்துகிறவர்களையும் வாழவைக்கும்.

    அதனால்தான்

    தமிழ் வாழ்த்து

    கடவுள் வாழ்த்து!

    கள்ள வாக்குப் போட வந்தார் என்று

    பண்பாட்டை நிர்வாணமாக்கி

    அரசியல் உத்தமர்கள்

    அடித்து இழுத்துப் போகிறார்கள்!

    அடுத்தவர் இம்சையில்

    இல்லை நம் வாழ்க்கை.

    நம்மை நாமே

    இம்சித்துக் கொள்வதிலும்

    இல்லை நம் வாழ்க்கை.

    மரண பயத்தில்

    தேடிக்கொண்டிருப்பதா வாழ்க்கை!

    ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள

    உயிர் வேண்டும்.

    சோதிப்பதற்குப் பிணம் போதுமே!

    ஓடிக்கொண்டிருக்கிறது

    உயிர்பிழைக்க மனித குலம்!

    செத்துக் கொண்டிருக்கிறது

    தேசங்களின் ஆக்கிரமிப்பில் நாகரிகம்!

    பிறந்தது குற்றமா? வாழ்வது குற்றமா?

    என் உயிரை எடுப்பதற்கு

    யார் கொடுத்தது உரிமை?

    தேசத்தின் கௌரவத்திற்கு

    மனித பலி கேட்கிறதா?

    ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும்

    மரண ஓலம் மனதைப் பிழிகிறதே!

    வாழ்க்கை என்பது

    பிறரை வதைப்பில் இருப்பதாகச்

    சொல்லிக் கொடுத்தது யார்?

    தேசத்தின் பெருமை

    ஆயுதங்களில் உள்ளது என்று

    கற்றுக் கொடுக்கும் வியாபாரிகள் யார்?

    ஓரே உலகம்

    உலக மயம் எல்லாம்

    பணம் பறிக்கத்தானா?

    உயிர் காக்க அரசு என்று

    ஊருக்குச் சொல்லிக் கொண்டே

    உயிர் எடுக்கிறார்களே!

    மக்கள் நல அரசுக்கு

    உலகில் இராணுவம் எதற்கு?

    இராணுவத் தளவாட

    விற்பனைக்கும் ஊழலுக்கும்

    மக்கள் உயிரைக்

    காவு கொடுக்க வேண்டுமா?

    கூடி வாழச் சொல்லித் தராமல்

    கொலை செய்யக் கருவி செய்கிறார்களே!

    உயிரின் அடையாளம் மகிழ்ச்சி!

    தனி நபர் ஆனாலும்

    அரசே ஆனாலும் உயிரை எடுப்பதில்

    மகிழ்ச்சி அடைந்தால்

    மன நிலையில் சந்தேகம் வேண்டாமா?

    தூக்கம் வருவது போல

    மரணம் வரவேண்டும்

    உறங்குவது போலும் சாக்காடு

    என்றார் வள்ளுவர்!

    ஆயுத மிரட்டலில் அடுத்த நாட்டைத்

    தூங்க வைக்க நினைக்கிறார்கள்!

    வரலாற்றில் அடிமையாகப் போகிறவர்கள்

    வாழும் காலத்தை

    அடிமையாக்கப் பார்க்கிறார்கள்!

    எப்போதும் ஏதாவது ஒன்றுக்கு

    அடிமையாக இருக்கவே

    மனது ஆசைப்படும் போல

    விரும்புவதும் விரும்பப்படுவதும்

    வாழ்க்கையின் ஆயுள் ரேகை!

    நமக்கு ஒன்றும்

    அவ்வளவு தெரியாது என்று

    நம்மை நாம் தெரிந்து கொள்வதே

    அறிவின் உச்சம் என்பது போய்

    எனக்கு எல்லாம் தெரியும் என்று

    அடுத்தவரிடம் அம்பலமாகிறார்கள்!

    எது சரி? எது தவறு?

    யாரைப் பற்றி யார் தீர்மானிப்பது?

    உலகில் எல்லோரும்

    வழிப்போக்கர்கள் தாமே!

    இடையில் வழிப்பறியாய்

    உயிர் பறிப்பானேன்?

    காரணம் சொல்கிறார்கள்

    எல்லாவற்றிற்கும்

    காரணம் இருக்கும்

    ஒவ்வொருவருக்கும்

    காரணம் வேறு வேறாக இருக்கும்.

    அக்கிரமக் காரர்களுக்குக்

    காரணம்

    கூடுதலாகவே இருக்கும்!

    ஆனால்

    இவர்களுக்கு வாழ்க்கைக்குத் தான்

    காரணம் தெரியவில்லை!

    காரணம் தேடினால்

    இவர்கள் வாழ்க்கை காணாமல் போய்விடும்.

    சொந்த நாட்டில் கல்வி வியாபாரத்திற்குக்

    காசு கட்ட முடியாமல

    உக்ரைன் போனவரின்

    உயிரைப் பறித்திருக்கிறார்கள்.

    பட்டத்தோடு வர வழியனுப்பிய பெற்றோர்

    உயிரோடு வந்துவிடு ஊருக்கு என்று

    கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்!

    படிக்கச் சென்ற மாணவர்கள்

    உணவும் இல்லாமல்

    ஊர் திரும்பக் கையில் காசும் இல்லாமல்

    நம்பிக்கை இழந்து

    வாழும் காலத்தை வெறுக்கும் தருணத்தில்

    உலகமே வியக்க

    அவர்கள் திரும்பி வரும் செலவை

    அரசே ஏற்கும் என்ற

    முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    வாழும் காலத்தை நேசிக்க வைத்திருக்கிறது.

    காலம் சரியில்லை என்றும்

    நேரம் சரியில்லை என்றும்

    காலத்தை வெறுக்கக் கற்றுக் கொடுக்காமல்

    வாழும் காலத்தை

    நேசிக்கக் கற்றுக் கொடுப்பவர்களை

    வரலாறு வாழ்த்துகிறது!

    அதிகாரத்தால் சிலர்

    காலத்தை வெறுக்கக்

    கற்றுக் கொடுக்கிறார்கள்!

    முதல்வரோ

    அதிகாரத்தால்

    காலத்தை நேசிக்கக்

    கை கொடுக்கிறார்!

    வாழ்த்துவோம்!!

    தமிழில் பேசுங்கள்.

    தமிழ் வளர்க்க என்ன செய்யலாம்?

    என்ன செய்ய வேண்டும்?

    ***

    உள்ளடக்கம்

    தமிழில் பேசுங்கள். தமிழ் வளர்க்க என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?

    கட்டுரை – தமிழவன்

    கவிதை - கி.சரஸ்வதி

    சிறுகதை - இந்திரா பார்த்தசாரதி

    சிறுகதை - வாசுதேவன் அருணாசலம்

    கவிதை - இரா.கவியரசு

    கட்டுரை - சா.கா.பாரதி ராஜா

    கவிதை - ந.சிவநேசன்

    சிறுகதை - பா.ஆசைத்தம்பி

    நினைக்கப்படும் - மரன்

    கவிதை - நூர் யாசீன் அல்ஷைபானி, தமிழில்: வ. ஜெயதேவன்

    கவிதை - ப்ரியா பாஸ்கரன்

    கவிதை - காசாவயல் கண்ணன்

    குறுநாவல் - ஜனநேசன்

    கவிதை - ரகுநாத் வ

    கட்டுரை – அகராதி

    கவிதை – சன்மது

    கவிதை - சுசித்ரா மாரன்

    சிறுகதை - ப. தனஞ்ஜெயன்

    கவிதை - சாமி கிரிஷ்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    தமிழில் பேசுங்கள். தமிழ் வளர்க்க என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?

    திரு ப.சிதம்பரம் அவர்கள், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர்.

    சென்னைப் புத்தகத் திருவிழாவில் (26/2/22) ஆற்றிய உரையிலிருந்து...

    தமிழில் பேசுங்கள். அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை.அதற்குப் பெரிய முயற்சி எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இன்று காலையில் பிரெக் பாஸ்ட் சாப்பிட்டேன். அப்புறம் நான் காபி சாப்பிடலாமா அல்லது ஜூஸ் சாப்பிடலாமா என்று திங்க் பண்ணினேன். என்றெல்லாம் பேச வேண்டாமே. நான் பலகாரம் சாப்பிடும் போது என்று சொல்லலாம். பழச்சாறு சாப்பிடும்போது... என்று சொல்லலாம்.

    எனக்குத் தெரிந்த வரைக்கும் மிக அதிகமாக பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், ராஜாஜியின் வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன் நூல்கள் தாம் அதிகம் விற்பனை ஆகின்றன என்று சொல்கிறார்கள். நாங்கள் எழுத்தின் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம். அது ஒரு பெரிய தொகை இல்லை. இரண்டு இலட்சம் கூடக் கொடுக்கலாம். ஆனால் அதற்கு ஏற்ப நாவல்கள் வருகின்றனவா? என்று கேட்டால் நான் மிகுந்த வருத்தத்தோடு சொல்கிறேன். இல்லை என்பதுதான்.

    தொற்றுநோய் காலத்தைக் கடந்து வந்திருக்கிறோம். எல்லாருடைய முகத்திலும் மகிழ்ச்சி இருக்கிறது. இந்தச் சுதந்திரம் வேண்டும்.

    இன்றுதான் பார்த்தேன். இத்தனை தமிழ்ப் பதிப்பாளர்கள் இருக்கிறார்களா? இவ்வளவு புத்தகங்கள் வெளிவருகின்றனவா? இத்தனை பொருளையும் எழுத்தாளர்கள் கவனிக்கிறார்களா?

    இந்தப் புத்தகக் கண்காட்சியைச் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் மலைப்பு ஒவ்வொரு முறையும் எனக்கும் ஏற்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஆற்றங்கரை நாகரிகம் தோன்றியது; வளர்ந்தது என்ற செய்தி நமக்கு மலைப்பைத் தருகிறது. அதைப் போன்ற மலைப்பு இத்தனை பதிப்பாளர்கள் இத்தனை நூல்களை வெளியிடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. மலைப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

    மொழியும் கலாச்சாரமும் தொன்மையானது என்பதோடு அவை பற்றிய கர்வமும் இருக்க வேண்டும். அந்தக் கர்வம் இல்லாவிட்டாலும் மெல்ல மெல்ல நலிவடையும்.

    இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு செய்தியைப் பார்த்தேன். பிரெஞ்சு மொழியில் கூட சில ஆங்கிலச் சொற்களும் நுழைந்துவிட்டன என்பதற்காகப் பிரஞ்சு அரசினுடைய அதிகாரபூர்வமான அமைப்பு அந்த மொழிக் கலப்பைத் தடுத்து நிறுத்திட முயற்சி எடுத்து இருக்கிறது.

    அந்த அளவுக்கு நாம் மற்ற மொழிச் சொற்களை எல்லாம் சேர்க்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1