Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - September 2021
Kanaiyazhi - September 2021
Kanaiyazhi - September 2021
Ebook172 pages57 minutes

Kanaiyazhi - September 2021

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109507509
Kanaiyazhi - September 2021

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - September 2021

Related ebooks

Reviews for Kanaiyazhi - September 2021

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - September 2021 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி செப்டம்பர் 2021

    மலர்: 56 இதழ்: 06 செப்டம்பர் 2021

    Kanaiyazhi ‎September 2021

    Malar: 56 Idhazh: 06 ‎September 2021

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    எல்லா உயிரும் தொழும்!

    இந்த செப்டம்பர் மாதம்

    பாரதி நினைவுக்கு நூற்றாண்டு!

    பாரதி, கனவா? நினைவா?

    கனவு எனில் பாரதியைப் போல

    தர்க்கத்திற்குள் அடைபடாதது;

    நினைவு எனில்

    பாரதியின் கவிதையைப் போல

    காலத்திற்குக் கட்டுப்படாதது.

    கனவும் நினைவும்

    கடந்த கால நிகழ்வு மட்டுமில்லை;

    வரும் காலத்திற்கான வித்தும் கூட.

    பாரதி,

    தமிழின் கனவாகவும் இருக்கிறார்;

    நினைவாகவும் இருக்கிறார்.

    பாரதி என்றால்

    கனவும் உண்டு. நினைவும் உண்டு.

    சிங்களத் தீவினுக்கோர்

    பாலம் அமைப்போம் என்றவர்

    வீதி சமைப்போம் என்றார்.

    இதோ ஈழத்தமிழர் வாழ்வுக்குத்

    தமிழக முதல்வர் கைநீட்டி இருக்கிறார்.

    முதல்வரின் அறிவிப்பு

    கனவா? நினைவா?

    இதற்குமுன் இருந்தவர்களுக்குத்

    தட்டுப்படாமல் இருந்தது

    இவருக்கு மட்டும் தென்படுவது எப்படி?

    அதிகாரம் கிடைத்தால்

    இப்படியெல்லாம் பயன்படும் என்றும்

    பயன்படுத்த வேண்டும் என்றும்

    இவருக்கு மட்டும் எப்படித் தெரிகிறது?

    தர்க்கத்தில் அடைக்க முடியாத

    கனவாகவும்

    வரும் காலத்திற்கான வித்தாகவும்

    இவரால் மட்டும் எப்படிச்

    செயற்பட முடிகிறது?

    முள்வேலி முகாம்

    நினைவுச் சிறைகளின்

    இரும்புக் கூட்டின் கதவை உடைத்து

    ஈழத் தமிழர்களுக்கு

    உளவியல் முறையிலும்

    விடுதலை தந்திருக்கிறார்!

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று

    உலகையே உறவாக்கிடச்

    சிந்தித்த தமிழர்களின்

    அகதிகள் அடையாளத்தைப்

    போக்கி இருக்கிறார்!

    ஒவ்வொரு போரின் முடிவும்

    வெற்றி தோல்வியைவிட

    அகதிகள் எண்ணிக்கையையே

    அதிகமாக்கி இருக்கிறது!

    இப்போதுவரை

    உலகில் எட்டு கோடி பேர்

    அகதிகளாக இருக்கிறார்களாம்!

    ஆப்கானிஸ்தான் அகதிகள்

    இன்னும் சேர்க்கப்படவில்லையாம்.

    அகதிகளுக்கும்

    நாடு இருந்திருக்கும்!

    நாடு சீரழிக்கப்பட்டிருக்கிறது!

    வீடும் இருந்திருக்கும்!

    வீடு சிதைக்கப்பட்டிருக்கிறது!

    அவர்களுக்கும்

    குழந்தைகள் இருந்திருப்பார்கள்

    உற்றார் பெற்றோர்

    உறவினர்கள் இருந்திருப்பார்கள்!

    ஆனாலும் அவர்கள்

    அநாதை ஆகி இருக்கிறார்கள்!

    அநாதை ஆக்கப்பட்டிருக்கிறார்கள்!

    பள்ளிக்குச் செல்லும் குழந்தையைக்

    கட்டிப்பிடித்து அனுப்பிவைத்தவர்கள்

    மறுபடியும் பார்க்க முடியாமல்

    மனநலம் இழந்திருக்கிறார்கள்!

    உயிரைப் பிடித்துக் கொண்டு

    எல்லை கடப்பதில்

    உடல் நலம் இழந்தவர்களின்

    மனவெளியில் இப்போதும்

    தூக்கத்தை விரட்டும்

    விமான வெடிச்சத்தங்கள்!

    நவீன விஞ்ஞானம் கொண்டு

    நாகரீகத்தைச் சிதைத்திருக்கிறார்கள்!

    கொல்லப்பட்டவர்களை

    மனதில் சுமந்து

    கொன்றவர்களை

    மன்னிக்க முடியாமல்

    திகைத்துக் கிடப்பவர்களுக்கு

    நீங்கள் அநாதைகள் இல்லை என்று

    ஆதரவுக் கை நீட்டியிருக்கிறார்!

    கடந்த காலத்தை

    மறக்க முடியாமலும்

    எதிர்கால நம்பிக்கை இழந்தும்

    நிகழ் கால நெருக்கடியில்

    தள்ளாடும் அகதிகள் பிரச்சினைக்குப்

    பொருளாதார வசதிகளை

    உலக நாடுகள் உருவாக்கி வருகின்றன!

    கரொனா காலக் கொடுமை குறைத்துப்

    பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

    அவர்களின் குழந்தைகளும்

    கல்வி பெற அறிவித்திருக்கிறார்!

    ஆனாலும் மனதளவில்

    அவர்கள் அகதி இல்லை என்பதையும்

    அநாதை இல்லை என்பதையும்

    அவர்களே உணரவும்

    அறிவித்திருக்கிறார் முதல்வர்!

    பாரதி

    "வேண்டுமடி எப்போதும்

    விடுதலை" என்று

    தமிழில் விடுதலையையும்

    விடுதலையில் தமிழையும்

    இரண்டிலும் தன்னையும்

    வைத்துவிட்டுப் போயிருக்கிறார்!

    விடுதலை வேள்விக்கு

    இருந்ததை எல்லாம் இழந்து நிற்கும்

    ஈழத் தமிழர்களுக்குப்

    பாரதி நினைவு நூற்றாண்டில்

    அவர்கள் அநாதை இல்லை என்று

    உணரவைத்த முதல்வரைக்

    கை கூப்பி

    மானுட நேயம் போற்றும்

    எல்லா உயிரும் தொழும்.!

    அன்புடன்

    ம. ரா.

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை – கவிஜி

    கவிதை - கி.சரஸ்வதி

    சிறுகதை - அகிலா

    கவிதை - அப்துல்லா பஷேவ்

    அஞ்சலி  - மு. இராமசுவாமி

    சிறுகதை - இலக்கியா நடராஜன்

    கவிதை - இனியவன் காளிதாஸ்

    கட்டுரை - வாசுதேவன் அருணாசலம்

    குறுநாடகம் - தங்கராசா செல்வகுமார்

    சிறுகதை - இந்திரநீலன் சுரேஷ்

    கவிதை - 'அன்புத்தோழி' ஜெயஸ்ரீ

    குறுநாவல் ஸிந்துஜா

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை – கவிஜி

    கவிஜி.jpg

    சிலந்தி வலை மனிதர்கள்

    அதே சாலை அதே பயணம்.. தினம் தினம் அதே வழி. சலிப்பு ஏற்படுவது இயல்பு தான். ஆனாலும்... வேடிக்கை மனநிலை தினம் தினம் சாகசம் நிகழ்த்திப் பார்க்கும். எத்தனையோ மனிதர்களை........ சாலையில் எதிர்படும் இயல்புமாகப் பார்க்கிறோம். எத்தனை முகங்கள் நினைவில் இருக்கிறது.....?

    நகர வாழ்வில் எல்லாருக்கும் ஒரே தலை..... ஹெல்மெட் தலை. அதுவும் இப்போது எல்லாருக்கும் ஒரே முகம்.....முகக் கவச முகம்.

    இது எல்லாவற்றையும் தாண்டி சில முகங்கள் சில உடல்மொழிகள் கண்களில் பட்டுப் பட்டு அவர்களோடு இதுவரை பேசியே இராத.... இன்னமும் சொல்லப் போனால் அவர்கள் உலகில் இல்லவே இல்லாத நாம் அவர்களோடு ஏதோ ஒரு புள்ளியில் இணைந்திருக்கிறோம் என்பது சுவாரஸ்யம் தானே.

    கவுண்டம்பாளையத்தில் கடந்த நான்கைந்து வருடங்களாக ஒரு பெண்ணைப் பார்க்கிறேன். நல்ல உயரம். செதுக்கிய முகம். கண்ணாடி போட்டு வயதான தோற்றத்தில் இருப்பது போல ஒரு பாவனை. திரிஷாவின் நடையில் சில சென்டிமீட்டர் கூட்டிக் கொள்ளலாம். ஒட்டினாற் போல நைஸ் புடவை. மருந்துக்குக் கூட சதை இல்லாத தேகம். பா வடிவ நெற்றி. கூர் நாசி. சிறுவயதில் அழகியாக இருந்திருக்கும். பெரும் பெரும் கனவுகளைச் சுமந்து ஒரு புள்ளியில் தன்னை விட வயதான ஒரு டிவிஎஸ்-காரருக்கு வம்படியாக திருமணம் செய்துவைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படித் தான் அந்தப் பெண்ணின் சோடாபுட்டி கண்களில் மிதக்கும் சோகம் காட்டிக் கொடுக்கும். எப்போதும் பேருந்துக்குக் காத்திருக்கும் அவர் எப்போதாவது முதுமை தட்டிய தன் கணவரோடு டிவிஎஸ்-ல் போவதைப் பார்த்திருக்கிறேன். மழைக்கு ஒதுங்கி நிற்கையில்.. கொக்கு போல தலையை குனிந்து கொண்டு தேநீர் கடை வாசலில் நிற்கும் அவர் அருகே ஒரு ஸ்னேக மனநிலையோடு நின்றிருக்கிறேன். அவருக்கு மழைக்கு ஒதுங்கிய யாரோ தான் நான். இல்லை என்றால் நான் என்ற ஒன்றே அவரின் சிந்தனையில் வராமல் கூட இருக்கலாம். ஆனாலும்..அவரைக் காணுகையிலெல்லாம் ஏதோ ஒரு சொந்தம் மனதில் நிழலாடும். இன்றைக்கு கண்டிப்பாகப் பார்ப்போம் என்று நானும் கவிதாவும் என்றெல்லாம் பேசிக் கொள்வோமோ... அன்று கண்டிப்பாகப் பார்ப்போம். ஒரு மாஜிக் துயரம் போல பொடி நடையில் வந்து கொண்டிருப்பார்.

    அதே போல ஒரு குண்டுப் பையன்.... தினமும் மேம்பாலத் திருப்பலில் எங்களை முந்திக் கொண்டு பல்ஸரில் பறப்பான். அந்த இடத்தில் அவன் வந்து கடக்கிறான் என்றால் மணி காலை 8.45 என்று அர்த்தம். என்ன இன்னும் குண்டுப் பையனை காணோம் என்று பேசுவோம்... சரியாகச் சரேலெனக் கடந்து செல்வான். ஹெல்மெட் மண்டையன். ஒருநாள் கூட முகம் பார்த்ததே இல்லை. ஒருநாள் இவன் மூஞ்சியைப் பார்த்தே ஆகணும் என்று நாங்களும் பின்னாலயே சென்றோம். அவன் சித்திரத்தில் அகப்படாத பறவையைப் போல வருவதும் தெரியாது... போவதும் தெரியாது. அப்படி இருந்தும் இன்னொரு மழை நாளில்.... கிராஸ் கட்டில் ஒரு கடை வாசலில் ஒதுங்க வேண்டியதாகிப் போனது. ஒரு பஞ்சுமூட்டையில் பிரிந்த கைகளோடு ஒதுங்கி நின்றான். ஹெல்மெட்டை கழற்ற ஆச்சரியத்தில் பார்த்தோம். உடம்புக்கும் முகத்துக்கும் சம்பந்தமே இல்லை. சின்ன முகம்..... சின்னக் கண்கள்..... சின்ன மூக்கு. நெற்றியே இல்லை..... போல.

    நாங்கள் ஜாடையில் பார்த்துக் கொண்டே கிசுகிசுத்துக் கொண்டோம். அதே நேரம் அவனுக்கு அலைபேசி அழைக்க..... எடுத்து ஹலோ என்றானே. நாங்கள் சிரித்தே விட்டோம். அந்த உடலுக்கு அந்தக் குரல் செட்டே ஆகவில்லை. அது ஒரு 12 வயதுச் சிறுவனின் குரல். இப்போதும் குண்டு பையன் எங்களைக் கடந்து கொண்டு தான் இருக்கிறான். ஒரு சிறுவன் சீக்கிரம் வளர்ந்து போவது போலவே இருக்கும்.

    அடுத்து நவ இந்தியாவில் ஒரு இளைஞியைப் பார்ப்பேன். அவள் முதல்

    Enjoying the preview?
    Page 1 of 1