Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - June 2021
Kanaiyazhi - June 2021
Kanaiyazhi - June 2021
Ebook175 pages53 minutes

Kanaiyazhi - June 2021

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109507285
Kanaiyazhi - June 2021

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - June 2021

Related ebooks

Reviews for Kanaiyazhi - June 2021

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - June 2021 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி ஜூன் 2021

    மலர்: 56 இதழ்: 03 ஜூன் 2021

    Kanaiyazhi June 2021

    Malar: 56 Idhazh: 03 June 2021

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காப்பாற்றுவோம் கருத்துச் சுதந்திரத்தையும்!

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று

    பதவியேற்ற குரலில்

    வெளிப்பட்டது முதலமைச்சரின்

    தன்னம்பிக்கை!

    பதவியேற்ற சில நாட்களிலே

    விதைக்கப்பட்டிருக்கிறது

    மக்களின் மனதில் நம்பிக்கை.

    இவருக்குள் இப்படி ஒருவரா?

    கற்பனை இல்லை இது

    காலத்தின் கொடை என்று

    வாக்கு அளிக்காதவர்களையும்

    வாய் பேச வைத்திருக்கிறார்.

    மருத்துவமனையில் படுக்கை இல்லை

    ஆம்புலன்சு அணிவகுப்பு

    படுக்கையில் மூச்சுக் காற்று இல்லை

    மருந்து வேண்டி நாள் கணக்கில்

    மக்கள் காத்திருப்பு என்று

    எப்போது வரும் கொரோனாவுக்கு

    இறந்த காலம் என்று

    எல்லோருக்கும் மூச்சுமுட்டக்

    குரல்வளை நெரிக்கும்

    கொரோனா சவால்கள்!

    அவகாசம் கொடுத்து ஊரடங்கு!

    தேசக் கட்டுமானத்தில்

    இளைஞர்கள்!

    வெளியில் போய் வருவது

    ஆண்களின் உரிமை

    வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதே

    பெண்களின் வாழ்க்கை என்பதை

    மூடநம்பிக்கையாக்கப்

    பேருந்தைப் பெண்களுக்கு

    இலவசமாக்கியதால்

    தேவைகளுக்குக் கூடச்

    செலவைக் குறைக்க

    ஆண்கள் வீட்டில் இருக்கவும்

    பெண்கள் வெளியில் சென்றுவரவும்

    இப்போதுதான் இருவருக்கும்

    பொதுவாகி இருக்கிறது

    பொதுவெளி!

    சமூக ஊடகங்களில்

    வெளிப்படும் புகார்களுக்கும்

    உடனடி நடவடிக்கை!

    இப்படியான ஒரு நல்லாட்சிக்குத்தான்

    ஏங்கிக் கிடந்தது தமிழகம்!

    ஆண்டுதோறும் திசம்பர் 25

    கிறிஸ்துமஸ் நாளை -

    அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளை

    நல்லாட்சி நாள் என்று

    கொண்டாடி வருகிறோம்!

    தமிழகத்திற்கு மே 7 ஆம் நாளும்

    நல்லாட்சி மலர்ந்த நாளாகி இருக்கிறது!

    கொண்டாடுகின்றன சமூக ஊடகங்கள்!

    தகவல் பெறும் வாய்ப்பு

    மக்களுக்கு இருந்தாலும்

    அச்சு, வானொலி, தொலைக்காட்சி என்று

    வழங்கும் அதிகாரம்

    ஆளும் கட்சிகளுக்கு மட்டுமே

    என்ற நிலைமை இருந்தது.

    தகவல் தொழில் நுட்பத்தால்

    தனிப்பட்ட முதலாளிகளுக்கும்

    தகவல் தரும் அதிகாரம் பரவலானது.

    தகவல் பெறும் வசதி என்பது

    தருவதைப் பெறும் வசதிதான்

    தரும் அதிகாரம் என்பது

    தருபவர்களின் நோக்கத்திற்கானது.

    அச்சு ஊடகமும் தொலைக்காட்சி உட்பட

    காட்சி ஊடகமும்

    மக்களை அப்படித்தான்

    கட்டுக்குள் வைத்திருந்தன.

    எதை மக்கள் நம்ப வேண்டும்

    எதை மக்கள் எதிர்க்க வேண்டும்

    எதற்கு மக்கள் கூட வேண்டும்

    என்பதெல்லாம் கூடச்

    சொல்பவர் நோக்கத்திற்கு

    மக்களைத் திருப்பத்

    திரும்பத் திரும்பத் திரிக்கப்பட்டன.

    எதிர்த்துக் கேட்கவும் எதிராகப் பேசவும்

    உண்மையைக் காட்டவும்

    அம்பலப்படுத்தவும்

    தனிநபர் குரலுக்கு

    இடம் கண்டது சமூக ஊடகம்!

    பயம் கொண்டது அரச பயங்கரம்!

    தகவல் பெறும் உரிமையோடு

    சமுதாயத்திற்குத்

    தகவல் தரும் வசதியையும்

    கையில் எடுத்துக் கொண்டது

    சமூக ஊடகம்!

    கேட்டுக்கொள்ள மட்டுமே

    சபிக்கப்பட்டிருந்த மக்கள்

    கேள்வி கேட்கவும் மடை திறந்தது.

    இந்தியாவில் மட்டும்

    கோடிக் கணக்கானோர்

    சமூக ஊடகத்தில் குடியிருக்கிறார்கள்!

    அடுத்தவர் கவனத்தை ஈர்க்கவும்

    அடுத்தவர் மனதில்

    தாக்கம் ஏற்படுத்தவும் மட்டுமின்றி

    சமூகப் பொறுப்போடு

    நடப்பவற்றை அம்பலப்படுத்தவும்

    சமூக ஊடகம் இடமாகி இருக்கிறது.

    பொறுப்பற்ற முறையில்

    வதந்திகளைப் பரப்புவதாக

    சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தச்

    சட்டம் கொண்டு வந்திருக்கிறது

    ஒன்றிய அரசு!

    அரசாங்கத்திற்குப்

    போட்டியாகவும் எதிராகவும்

    செய்திகளைப் பரப்புகிறது என்று

    கோபப்படுகிறது ஆளும் கட்சி!

    ஆதரவாக மட்டுமே

    வதந்திகள் வேண்டும் என்று

    ஆசைப்படுகிறது அரசாங்கம்!

    பள்ளிகளில்

    பாலியல் சீண்டல்கள்

    வீதிகளில் அத்துமீறல்கள்

    நிதிகளில் முறைகேடுகள்

    நீதிமுறை நிறைவேற்றங்கள் என்று

    எல்லாவற்றையும்

    பொதுவெளியில் அம்பலப்படுத்த

    மக்களுக்குக் கிடைத்த

    சமூக ஊடகத்திற்கு

    எல்லாவற்றையும் பார்

    ஆனால் மூச்சு விடாதே

    பேசாதே என்று

    கடிவாளம் போடுகிறது புதிய சட்டம்.

    கரோனா காலத்தில் மூச்சு முட்டுகிறது

    காப்பாற்றுவோம்

    கருத்துச் சுதந்திரத்தையும்!

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    குறுநாடகப் போட்டி முடிவுகள்

    கவிதை - ஆர். வத்ஸலா

    கவிதை - கி.சரஸ்வதி

    சிறுகதை -அருண் பிரகாஷ் ராஜ்

    கவிதை - வதிலை பிரபா

    கட்டுரை - உரு.அரசவேந்தன்

    சிறுகதை - கண்ணம்மாள் பகவதி

    கவிதை - ச. மோகனப்ரியா

    கவிதை - ந. சிவநேசன்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    சிறுகதை - கிருஷ்ணமூர்த்தி

    கவிதை -கவிஜி

    கவிதை - விபீஷணன்

    கட்டுரை - குமரி எஸ். நீலகண்டன்

    கவிதை - நவீன்.ஜெ

    சிறுகதை - நலங்கிள்ளி

    நினைவேந்தல் - பா.செயப்பிரகாசம்

    கவிதை - சுசித்ரா மாரன்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கணையாழி இலக்கிய இதழ் நடத்திய பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு

    குறுநாடகப் போட்டி முடிவுகள்

    கணையாழி வாசகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. ஏப்பிரல் 2021 கணையாழி இதழில் ‘பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாடகப் போட்டி’ பற்றி - 5 நாடகங்கள் தேர்வு செய்யப்படுமென்றும், ஒவ்வொன்றும் ரூ. 5000/- சன்மானம் பெறுமென்றும் அறிவிப்பு வெளியிடப்பெற்றது. நாடகங்கள் வந்து சேரவேண்டிய இறுதிநாளாக ஏப்பிரல் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்பிரல் இதழ் கையில் கிடைத்து, அதைப் புரட்டிமுடித்து, அதில் வெளிவந்த ‘பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாடகப் போட்டி’ பற்றிய அறிவிப்பைக் கவனமாய் மனதில் இருத்தி, நாடகம் எழுதுகிற உத்வேகத்தில் தங்களை ஈடுபடுத்தி, மிகக் குறுகிய காலத்தில் 40 பேர் நாடகங்களைக் கணினித் தட்டச்சு செய்து அனுப்பியிருந்தமை, உள்ளபடியே மகிழ்ச்சியை அள்ளித் தந்திருந்தது. தமிழகச் சூழலில் இது வரவேற்புக்குரியது.

    கணையாழிக்கு வந்திருந்த நாடகங்களை வரிசைப்படுத்தி, அவற்றிலிருந்து 5 நாடகங்களைத் தெரிவு செய்யும் இம்முயற்சிக்கு, திரு பிரவின் - மேஜிக் லேண்டர்ன் நாடகக் குழு - சென்னை, திரு சண்முகராஜன், நிழல் நாடகக் குழு - சென்னை, பேரா. இரா. பிரபாகர், அமெரிக்கன் கல்லூரி-மதுரை ஆகிய மூவரும் முன்கை கொடுத்து, இம்முயற்சியைப் பெருமைப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு, ‘கணையாழி’ சார்பில் நன்றி! காய்தல் உவத்தல் ஒரு சிறிதுமின்றி, நாடக முகம் மட்டுமே மனதில் தெரியவேண்டி, நாடகம் எழுதிய ஆசிரியர்களின் பெயரின்றியே 40 நாடகங்களும் அவர்களுக்கு அனுப்பப்பட்டன. மே 25-ஆம் தேதிக்குள் நாடகங்களை மதிப்பிட்டு, 40 நாடகங்களையும் தர வரிசைப்படுத்தி, தமிழ் நாடக வளர்ச்சியின் மேலான தங்கள் அக்கறையின்பாற்பட்டுப் பொறுப்புடன் தேர்வுசெய்து அவர்கள் அனுப்பியிருந்தது, தமிழ் நாடகச் சூழலின்மேல் பெரும் நம்பிக்கையை உருவாக்கக் கூடியதாயிருக்கிறது. அவர்கள் அனுப்பியிருந்த மதிப்பெண்களின் கூட்டுச் சராசரியின் அடிப்படையில் தரவரிசை கணக்கிடப்பட்டுள்ளது.

    பெரும்பாலும் சிறுகதை, திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் இவற்றிலிருந்து விடுபடாமல் பல பிரதிகள் கருத்துகளைச் சொல்வதாய் மட்டுமே இருந்தன என்பதாய் அவர்கள் வருத்தப்பட்டாலும், நாடக முரணை மையப்படுத்தி, நவீனத் தமிழ்ச் சமூகத்திற்குக் கருத்தாயுதமாய் பயன்படத்தகும் நம்பிக்கைக்குரிய நாடகங்களும் அவற்றில் இருந்தமை அவர்களைப் பூரிப்படையச் செய்திருந்தன என்பதையும் குறிப்பிடவே வேண்டும். இதுபோன்ற தொடர் சூழல்கள் உருவாகிற நிலையில் மேலும் மெருகு கொண்ட புதிய நாடகங்கள் பல உருவாகும், பலர் உருவாகலாம் என்று நம்பலாம். பங்குபெற்ற அனைவருக்கும், தெரிவு செய்யப்பெற்ற 5 குறு நாடகங்களின் நாடக ஆசிரியர்களுக்கும் கணையாழி சார்பில் வாழ்த்துகள்! தெரிவு செய்யப்பெற்ற 5 குறு நாடகங்களும் நாடக ஆசிரியர்களும்:-

    ‘அணங்கு’ – முனைவர் மரிய செபஸ்தியான்

    ‘நில நகங்கள்’ - கனகராஜ் பாலசுப்பிரமணியம்

    ‘பரிசுக் கோப்பை’ - பசு. தனபாலன்

    ‘பச்சை நிறத் தேவதை’ - தங்கராசா செல்வகுமார்

    ‘புத்ரன்’ - ப. மதியழகன்

    இந்த 5 குறு நாடகங்களும் வேறுபட்ட சுவையுணர்வைத் தற்செயலாகத் தருவதாக அமைந்திருப்பது

    Enjoying the preview?
    Page 1 of 1