Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

O! Pakkangal - Part 1
O! Pakkangal - Part 1
O! Pakkangal - Part 1
Ebook346 pages1 hour

O! Pakkangal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘ஓ!’ பக்கங்களுக்கு ஆனந்த விகடன் வாசகர்களிடம் கிடைத்து வரும் ஆதரவு எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் ஆச்சரியமாக இல்லை.

ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு பகுதிக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்தத் தேவை பூர்த்தி செய்யப்படும் போது வாசகர்கள் ஆதரவைக் காட்டுவது இயல்பானதுதான்.

‘ஓ!’ பக்கங்களின் வெற்றியின் ஆதாரம், சாதாரண மனிதர்களின் மனசாட்சியாக அது செயல்பட முயற்சிப்பதேயாகும். அன்றாடம் தங்கள் குடும்பத்துக்குள்ளும், வெளி உலகத்திலும் நடக்கும் சின்ன விஷயங்கள் முதல் பெரிய விவகாரங்கள் வரை ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு கருத்து எல்லாருக்கும் இருக்கிறது. அந்தக் கருத்துதான் திரண்டு கலாசாரமாகவும், அரசியலாகவும் சமூகத்தில் பிரதிபலிக்கிறது.

சமூகத்தின் அரசியலிலும் கலாசாரத்திலும் நம் கருத்து எந்த அளவு கலந்திருக்கிறது என்றும், எந்த அளவு சரியானது என்றும் தெரிந்துகொள்ளும் ஆவல் நம் எல்லாருக்கும் இருக்கிறது. அதே சமயம் நம் கருத்தை ஏற்கனவே சமூகத்தில் இருக்கும் கலாசாரமும் அரசியலும் பாதித்துக்கொண்டே இருக்கின்றன என்பதையும் நாம் உணரவேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு தனி நபரும் சமூகத்தை பாதிக்கிறார். ஒவ்வொரு தனி நபரையும் சமூகம் பாதிக்கிறது. இந்த உறவு ஆரோக்கியமானதாக இருக்கும்போதுதான் தனி நபரும் மகிழ்ச்சியாக இருப்பார். சமூகமும் நலமாக இருக்கும். அப்படி இருக்க விடாமல் தடுக்கும் சக்திகள் அரசியலிலும் கலாசாரத்திலும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. அதை அடையாளம் காட்டுவதும், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் முழுமையான பார்வையிலிருந்துதான் நாம் கருத்துக்கு வரவேண்டும் என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பதும், நம் கருத்துக்களைக் கால மாற்றத்துக்கேற்ப நாமே சுயவிமர்சனமும் மறுபரிசீலனையும் செய்யத் தூண்டுவதும்தான் ஒரு விமர்சகனான என் வேலை.

இதைச் செய்ய நமது பத்திரிகைகளில், மீடியாவில் பொதுவாகக் கணிசமான இடம் இருப்பதில்லை. கிடைக்கும் இடத்தில் எல்லாம் இதைச் செய்து வருவதை என் தொழில் தர்மமாக நான் கருதுகிறேன்.

அரசியல், கலாசாரம் பற்றிய என் விமர்சனக் கருத்துக்களை கடந்த முப்பதாண்டுகளில் வெவ்வேறு பத்திரிகைகளில் நான் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன் என்றாலும், ‘ஓ!’ பக்கங்கள் வாசகர்களை சென்றடைந்ததைப் போல இதுவரை வேறு எதுவும் சென்றடையவில்லை. இதற்குக் காரணம் ஆனந்த விகடன்தான். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களிலும் இருக்கும் தமிழ் வாசகர்களிடமும் என் கருத்துக்களை சென்று சேர்ப்பித்திருக்கிறது விகடன்.

இந்த நல்வாய்ப்புக்கு முழு காரணமானவர்கள் மூவர். என் கருத்துக்களால் கலவரமடைந்த ஒரு சில அரசியல் பிரமுகர்களும் கலாசாரக் காவலர்களும் தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்தியபோதும், அவற்றால் சலனமடையாமல் ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையில் தனக்குள்ள உறுதியுடன் எனக்குத் தொடர்ந்து விகடனில் இடம் அளித்துவரும் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தாலும் வெளிப்படுத்தும் முறை பொது நாகரீகத்துக்கு உட்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே கவனிக்கும் ஆசிரியர் அசோகன், பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டுமன்றி சமூக விமர்சனப் பணியை எப்படிச் செய்கிறது என்பதில்தான் இதழியலின் மரியாதையே அடங்கியிருக்கிறது என்று ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் நிர்வாக ஆசிரியர் இரா.கண்ணன் ஆகிய அந்த மூவருக்கும் என் நன்றி என்றும் உரியது.

தொலைபேசி, கடிதங்கள் வாயிலாக என்னுடன் ‘ஓ!’ பக்கங்களைத் தொடர்ந்து விவாதிக்கும், எனக்கு முகம் தெரியாத வாசகர்களுக்கும், தெருவிலும் டீக்கடைகளிலும் ஓட்டல்களிலும் என்னைப் பார்த்த உடன் உரிமையுடன் நிறுத்தி அந்த வாரக் கட்டுரையை அலசும் வாசகர்களுக்கும் நன்றி. உங்கள் அக்கறைதான் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கிறது.

இந்நூல் மனித நேயத்தையும் விமர்சனப் பார்வையையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளையும் கற்பித்த எட்டயபுரம் சுப்ரமண்யனுக்கும், ஈரோடு ராமசாமிக்கும் நன்றியுடன்…

- ஞாநி

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580121205842
O! Pakkangal - Part 1

Read more from Gnani

Related to O! Pakkangal - Part 1

Related ebooks

Reviews for O! Pakkangal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    O! Pakkangal - Part 1 - Gnani

    http://www.pustaka.co.in

    ஓ! பக்கங்கள்- பாகம் 1

    O! Pakkangal- Part 1

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. தமிழை வளர்ப்பது எப்படி?

    2. அரசியல் கிழவர்களுக்கு மட்டுமா?

    3. ஆள் பாதி! ஆடை பாதி?

    4. கிராமம் - சாதி - மீடியா

    5. அரசியல் அராஜகத்துக்கு நீதிமன்றம் தான் தீர்வா?

    6. யுத்தம் - லஞ்சம் - விருது

    7. மாற்றத்துக்குள்ளே மாறாதது

    8. திருமணம் - ஸ்டாரும், சாமான்யரும்

    9. சட்டம் போட்டால் மட்டும் போதுமா?

    10. ஒரு தேர்வு - ஒரு மரணம்

    11. லேட்டாக மலரும் நினைவுகள்

    12. சில பிரபலங்கள் சில சர்ச்சைகள்

    13. குறும்படம் யாருக்காக?

    14. காணவில்லை: நகைச்சுவை

    15. ஒரு பாலியல் தொழிலாளியின் கனவு

    16. எது கல்ச்சர்?

    17. யார் இடியட்? டிவியா, நாமா?

    18. காவேரி பிரச்னைக்கு தீர்வு?

    19. மக்கள் நாயகனா மங்கள் பாண்டே?!

    20. இலங்கையில் மறுபடி யுத்தம் வெடிக்குமா?

    21. பெண்களுக்கு இடம் தர ஏன் மறுக்கிறார்கள்?

    22. இளைப்பாற இடம் கொடுங்கள்

    23. சந்தோசம் பிரியாணியிலா?

    24. தாண்டியா ஆட்டமும் ஆட, தசரா கூட்டமும் கூட...

    25. ஆஸ்கர் மயக்கம்!

    26. சீறும் ரானே... சிதறும் சிவசேனா… தாக்குப் பிடிப்பாரா பால் தாக்கரே…

    27. நோபல் சர்ச்சைகள்!

    28. மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமை உண்டோ

    29. ‘அவர்தாம் பெரியார்...’

    30. டார்கெட் விஜயகாந்த்?

    31. ‘அம்மா வயித்துல பாப்பா எப்படி வந்துது?’

    32. அத்தனையையும் ஆட்டுவிக்கும் சக்தி?!

    33. என்னிடம் துப்பாக்கி இருந்தால்… விஜய் டெண்டுல்கர் ஆவேசம்!

    34. நிவாரண சோகம்... மரணமல்ல... படுகொலைகள்!

    35. கேள்வியின் நாயகர்கள்!

    36. பூங்காக்களுக்கு யார் போவார்கள்?

    37. செலவையும் ஊழலையும் ஒழிக்க…

    38. ஓட்டுக் கேட்பதும் எட்டிப் பார்ப்பதும் சரியா… தவறா?

    39. ஆ!

    40. அசையாத ஆட்டுத் தாடி!

    41. படிக்கச் சொல்கிறார் பின்லேடன்!

    42. போலீஸ் ‘தாதா!? தேடப்படும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்…

    43. டி.வி.யா... சினிமாவா... பத்திரிகையா…?

    44. கடிதத்தால் காதல் செய்வீர்!

    45. பறவைக் காய்ச்சல்... பன்னாட்டு சதியா?!

    46. ‘மதமான பேய் பிடியாதிருக்கட்டும்!’

    47. இரு வழக்குகள்!

    48. இதெல்லாம் நியாயம்தானா?

    49. சிதறு தேங்காயான சிவசேனா! - புறப்பட்டது புதிய கட்சி!

    50. பெண்களுக்கு அரசியல் பிடிக்காதா… யார் சொன்னது?

    51.சாதிகள் உள்ளதடி பாப்பா!

    52. ‘49-ஓ’ போடு!

    முன்னுரை

    சாதாரண மனிதர்களின் மனசாட்சி

    ‘ஓ!’ பக்கங்களுக்கு ஆனந்த விகடன் வாசகர்களிடம் கிடைத்து வரும் ஆதரவு எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் ஆச்சரியமாக இல்லை.

    ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு பகுதிக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்தத் தேவை பூர்த்தி செய்யப்படும் போது வாசகர்கள் ஆதரவைக் காட்டுவது இயல்பானதுதான்.

    ‘ஓ!’ பக்கங்களின் வெற்றியின் ஆதாரம், சாதாரண மனிதர்களின் மனசாட்சியாக அது செயல்பட முயற்சிப்பதேயாகும். அன்றாடம் தங்கள் குடும்பத்துக்குள்ளும், வெளி உலகத்திலும் நடக்கும் சின்ன விஷயங்கள் முதல் பெரிய விவகாரங்கள் வரை ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு கருத்து எல்லாருக்கும் இருக்கிறது. அந்தக் கருத்துதான் திரண்டு கலாசாரமாகவும், அரசியலாகவும் சமூகத்தில் பிரதிபலிக்கிறது.

    சமூகத்தின் அரசியலிலும் கலாசாரத்திலும் நம் கருத்து எந்த அளவு கலந்திருக்கிறது என்றும், எந்த அளவு சரியானது என்றும் தெரிந்துகொள்ளும் ஆவல் நம் எல்லாருக்கும் இருக்கிறது. அதே சமயம் நம் கருத்தை ஏற்கனவே சமூகத்தில் இருக்கும் கலாசாரமும் அரசியலும் பாதித்துக்கொண்டே இருக்கின்றன என்பதையும் நாம் உணரவேண்டும்.

    சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு தனி நபரும் சமூகத்தை பாதிக்கிறார். ஒவ்வொரு தனி நபரையும் சமூகம் பாதிக்கிறது. இந்த உறவு ஆரோக்கியமானதாக இருக்கும்போதுதான் தனி நபரும் மகிழ்ச்சியாக இருப்பார். சமூகமும் நலமாக இருக்கும். அப்படி இருக்க விடாமல் தடுக்கும் சக்திகள் அரசியலிலும் கலாசாரத்திலும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. அதை அடையாளம் காட்டுவதும், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் முழுமையான பார்வையிலிருந்துதான் நாம் கருத்துக்கு வரவேண்டும் என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பதும், நம் கருத்துக்களைக் கால மாற்றத்துக்கேற்ப நாமே சுயவிமர்சனமும் மறுபரிசீலனையும் செய்யத் தூண்டுவதும்தான் ஒரு விமர்சகனான என் வேலை.

    இதைச் செய்ய நமது பத்திரிகைகளில், மீடியாவில் பொதுவாகக் கணிசமான இடம் இருப்பதில்லை. கிடைக்கும் இடத்தில் எல்லாம் இதைச் செய்து வருவதை என் தொழில் தர்மமாக நான் கருதுகிறேன்.

    அரசியல், கலாசாரம் பற்றிய என் விமர்சனக் கருத்துக்களை கடந்த முப்பதாண்டுகளில் வெவ்வேறு பத்திரிகைகளில் நான் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன் என்றாலும், ‘ஓ!’ பக்கங்கள் வாசகர்களை சென்றடைந்ததைப் போல இதுவரை வேறு எதுவும் சென்றடையவில்லை. இதற்குக் காரணம் ஆனந்த விகடன்தான். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களிலும் இருக்கும் தமிழ் வாசகர்களிடமும் என் கருத்துக்களை சென்று சேர்ப்பித்திருக்கிறது விகடன்.

    இந்த நல்வாய்ப்புக்கு முழு காரணமானவர்கள் மூவர். என் கருத்துக்களால் கலவரமடைந்த ஒரு சில அரசியல் பிரமுகர்களும் கலாசாரக் காவலர்களும் தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்தியபோதும், அவற்றால் சலனமடையாமல் ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையில் தனக்குள்ள உறுதியுடன் எனக்குத் தொடர்ந்து விகடனில் இடம் அளித்துவரும் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தாலும் வெளிப்படுத்தும் முறை பொது நாகரீகத்துக்கு உட்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே கவனிக்கும் ஆசிரியர் அசோகன், பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டுமன்றி சமூக விமர்சனப் பணியை எப்படிச் செய்கிறது என்பதில்தான் இதழியலின் மரியாதையே அடங்கியிருக்கிறது என்று ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் நிர்வாக ஆசிரியர் இரா.கண்ணன் ஆகிய அந்த மூவருக்கும் என் நன்றி என்றும் உரியது.

    தொலைபேசி, கடிதங்கள் வாயிலாக என்னுடன் ‘ஓ!’ பக்கங்களைத் தொடர்ந்து விவாதிக்கும், எனக்கு முகம் தெரியாத வாசகர்களுக்கும், தெருவிலும் டீக்கடைகளிலும் ஓட்டல்களிலும் என்னைப் பார்த்த உடன் உரிமையுடன் நிறுத்தி அந்த வாரக் கட்டுரையை அலசும் வாசகர்களுக்கும் நன்றி. உங்கள் அக்கறைதான் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கிறது.

    இந்நூல் மனித நேயத்தையும் விமர்சனப் பார்வையையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளையும் கற்பித்த எட்டயபுரம் சுப்ரமண்யனுக்கும், ஈரோடு ராமசாமிக்கும் நன்றியுடன்…

    - ஞாநி

    *****

    1. தமிழை வளர்ப்பது எப்படி?

    தமிழில் இருக்கும் ஒற்றை எழுத்துச் சொற்களில் என்னை நீண்ட நாட்களாக வசீகரிக்கும் சொல்-’ஓ!’

    மற்ற ஒற்றை எழுத்துச் சொற்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ எல்லாம் குறைவான அர்த்தமும், தொனியும் உடையவை. ‘ஓ’ ஒன்றுதான் இடத்துக்கேற்ப பல மாறுபட்ட தொனிகளில் பயன்படுத்தக் கூடியது. எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் ஒருவர்தான் ‘ஓ’வை இப்படி வெவ்வேறு தொனிகளில் கையாண்டிருக்கிறார். (‘ஓ’, கோகிலா என்ன செய்துவிட்டாள்)

    நம்முடைய வீட்டுக்குள்ளும் வெளியிலும் ‘ஓ’ விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. (கவனியுங்கள்... ஓ போடுவதற்கான விஷயங்கள் என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அர்த்தமே மாறிவிடும்! அதுதான் ‘ஓ’வின் சிறப்பு. அத்துடன் சேருகிற சொல்லுக்கேற்ப பரிமாணம் மாறும். பஜ்ஜியில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மாதிரி.)

    இந்தப் பக்கங்களில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் ‘ஓ’வை எந்தத் தொனியில் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

    சரி, சொல் ஆராய்ச்சியில் இருப்பதால் தமிழ் தொடர்பான இன்னொரு ஆராய்ச்சிக்குப் போவோமா?

    ‘மருத்துவர் மாலடிமையும் (ராமர்-மால்.தாஸ்-அடிமை) திருமாவளவனாரும் தொடங்கியிருக்கும் மூன்றாவது மொழிப்போரினால் தமிழ் வளருமா? தளருமா?’ என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். தளரும், தளருகிறது என்பது என் கட்சி. இதற்கு முதல் சாட்சி-பா.ம.க. ஆயிரக்கணக்கில் வைத்திருக்கும் மாற்றுச் சொல் விளம்பரப் பலகை! பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை ‘அறிஞர்கள்’ உதவியுடன் எழுதி வைத்திருக்கிறார்கள். Style என்பதற்கு பொருள் ஒப்பனையாம்! அதையும் ‘ன’கரத்துக்குப் பதில் ‘ண’கரம் போட்டு, ஒப்பணை என்று தமிழ்க் கொலை செய்திருக்கிறார்கள்.

    புதுச் சொற்களை உருவாக்கும்போது, இரண்டே இரண்டு அடிப்படை விதிகள்தான்.

    விதி 1: சுற்றி வளைத்துச் சொல்வதாக இல்லாமல், நேரடியாகச் சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.

    விதி 2: அந்தச் சொல் புழங்குவதற்கு எளிமையாக இருக்க வேண்டும். பிற மொழிச் சொல்லுக்கு தமிழ்ச்சொல்லை உருவாக்கும்போது, அது வழக்கொழிந்துபோன பழைய மரபுச் சொல்லாக இருந்தாலும் சரி, புதிய சேர்க்கையானாலும் சரி... இந்த இரண்டு விதிகள் முக்கியமானவை. ஸ்டைலுக்கு... ‘ஒப்பனை’ என்பது சுற்றி வளைத்தாலும் பொருந்தாது. தமிழ் மரபிலேயே ஸ்டைலுக்குப் பொருத்தமான ஒரு சொல் இருக்கிறது - ஒயில்! ஸ்டைலாக ஆடப்படுவதுதான் ஒயிலாட்டம்.

    ஸ்டைல் பயன்படுத்தப்படும் பெருவாரியான இடங்களுக்கு ஒயில் பொருந்தி வருகிறது. ‘ரொம்ப ஒயில் காட்டாதே’, ‘அவர் நடிப்பில் ஒரு புது ஒயிலைப் பின்பற்றியவர்’ என்றால் சரி. அதேசமயம், ‘இளம் எழுத்தாளர்களின் எழுத்து புது ஒயில்’ என்கிறபோது அவ்வளவாகப் பொருந்தாமல் போகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் பழகிப் போகலாம். ஆனால், ஏற்கெனவே எழுத்துநடை என்பதே ‘ரைட்டிங் ஸ்டைலு’க்குப் பயன்படுத்தப்பட்டு, நிலைத்துவிட்டது. எனவே, ஒரு பொருட்பன்மொழியாக நடை, ஒயில் இரண்டையுமே ஸ்டைலுக்குப் பயன்படுத்தலாம். எப்படிப் - பார்த்தாலும் ‘ஒப்பணை’ அபத்தம்!

    தேர்தலில் நிற்பதற்கு முன்னால் வேட்பாளர்கள் சொத்துக் கணக்கைக் காட்டவேண்டுமென்று விதி இருக்கிறது. இதுபோல, இனி தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சி என்று முழங்குகிறவர்கள் எல்லாரும் முதலில் தங்கள் பேரக் குழந்தைகள் வரை, நெருங்கிய உறவினர்கள், குடும்பங்கள் எல்லாவற்றிலும் தமிழ்வழிக் கல்வியில் இப்போது படிப்பது யார்? யார்? என்ற பட்டியலை வெளியிட வேண்டும் என்று விதி ஏற்படுத்தலாம்.

    இப்போதைக்குத் தமிழ்வழிக் கல்வியில் அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை, கீழ், நடுத்தர தலித் குடும்பக் குழந்தைகள்தான். குளிர்பதன நாற்சக்கர விசை வண்டிகளில் ஊர்திப் பயணம் சென்று, தமிழ் வளர்ப்போரின் குடும்பங்கள் இந்தப் பள்ளிகளில் படிக்கத் தொடங்கினால்தான், இவற்றின் நிலை உயர்த்தப்படும். தலைமைச் செயலாளர் முதல் கடைநிலை அரசு ஊழியர் வரை, தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்கவேண்டும் என்று விதி போட்டால், தமிழும் வளரும். கல்வியும் தரமாகும். பொதுவாக ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் தீர்மானிப்பதும், உத்தரவிடுவதும் ஆபத்தானது. ஆனால், நாம் அன்றாட வாழ்க்கையில் அன்பின் பெயராலும், அதிகாரத்தின் மூலமாகவும் இதைத்தான் அதிகம் செய்து வருகிறோம்.

    இசைக் கலைஞர் நடாஷா வழக்கில் இது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. ‘என் மீதுள்ள அன்பினால், நான் தவறு செய்துவிடுவேனோ என்ற பயத்தினால் எனக்கும் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதருக்குமுள்ள நட்பைத் தவறாகப் புரிந்துகொண்டு, என் அம்மா என்னைத் துன்புறுத்துகிறார்’ என்று நடாஷா நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட நீதிபதி, நடாஷா யாரைத் திருமணம் செய்யப் போகிறார் என்பது பற்றி நீதிமன்றமும் கவலைப்படுவதாகச் சொல்கிறார். இன்னாரைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதி அளிக்க முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்.

    சட்டத்தில் எந்த அளவுக்கு இதற்கெல்லாம் இடம் இருக்கிறது என்று புரியவில்லை. சுயசிந்தனையும் சுயநினைவும் உள்ள ஒருவர், சட்ட விரோதமான காரியம் செய்தாலன்றி, தன் விருப்பப்படி வேறு என்ன செய்தாலும், அதை எப்படிச் சட்டத்தின் பெயரால் தடுக்க முடியும்? முடியாது, கூடாது என்பதுதானே நியாயம்? அதே சமயம், சுயநினைவில்லாத ஒருவர் சார்பாக மற்றவர்கள் முடிவு செய்யலாமா? அதுவும், அவரது உயிரை முடிப்பது பற்றிய முடிவை எடுக்கலாமா? இந்தக் கேள்வியின் அடிப்படையில்தான் ஏழாண்டு காலம் நடந்த வழக்குகளின் முடிவில், 41 வயது அமெரிக்கப் பெண் டெர்ரி ஷியாவோவின் 15 வருட சிகிச்சை நிறுத்தப்பட்டு, அவர் வாழ்க்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

    26 வயதில் டெர்ரி மயங்கி விழுந்தார். அவர் இதயம் பத்து நிமிடம் நின்று, பிறகு துடிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு, 15 வருடங்களாக படுத்த படுக்கையில் கிடந்தார் டெர்ரி. விழித்திருப்பார்…. ஆனால், யாரையும் அடையாளம் தெரியாது! உதட்டிலிருந்து ஒலிகள் எழும்... ஆனால், பேச்சு வராது! தானாகவே சுவாசிக்க முடியும்... ஆனால், எழுந்து உணவு உண்ண முடியாது!

    மருத்துவர்கள் டெர்ரியின் மூளை பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், உணர்ச்சி, நினைவுகள், சிந்தனை எதற்கும் வாய்ப்பு இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள். டெர்ரியின் கணவர் மைக்கேல், தன் மனைவி இப்படி எதற்கும் இயலாத பொட்டலமாகக் கிடப்பதை அவரே விரும்பமாட்டார் என்று கூறி, 1998-ல் நீதிமன்றத்தில் மனு செய்தார். டெர்ரிக்குத் தரப்பட்டுள்ள உணவூட்டும் குழாயைத் துண்டித்துவிடக் கோரினார் மைக்கேல்.

    நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால், டெர்ரியின் பெற்றோர் இதை எதிர்த்தார்கள். அவர்களுக்கு ஆதரவாகக் கிறிஸ்துவப் பழைமைவாத அமைப்புகள் களத்தில் இறங்கின. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரரான ஃப்ளோரிடா மாநில கவர்னர் ஜெப் புஷ், இப்படிப்பட்ட நோயாளிகளின் உணவுக்குழாயைத் துண்டிப்பது போன்ற நடவடிக்கைகளைத் தடை செய்ய ஒரு சட்டமே கொண்டுவந்தார். அந்தச் சட்டம் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. அண்மையில் இறந்த போப் ஆண்டவர் சார்பிலும், டெர்ரி விவகாரத்தில் டெர்ரியின் பெற்றோருக்கு ஆதரவான கருத்தே தெரிவிக்கப்பட்டது.

    ஏழாண்டுகள் வழக்கு நடந்த பிறகு, டெர்ரிக்கு உணவு தருவதை நிறுத்தலாம் என்ற கோர்ட் உத்தரவு செல்லும் என்றாகியது. அதன்படி, உணவுக்குழாய் துண்டிக்கப்பட்டு, 13-வது நாள் டெர்ரி இறந்தார். சுய நினைவு மட்டும் இருந்து, மற்றபடி முற்றிலும் உடல் செயலிழந்த நிலையில் இருக்கும் பலர் தாமாகவே முன்வந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பும் யுதனேஸியாவை ஏற்பதா, கூடாதா என்பதே சர்ச்சைக்கு உரியதாக உலகெங்கும் இருந்துவருகிறது. பல நாடுகளில் அது சட்டப்படி ஏற்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அனுமதி இல்லை!

    டெர்ரியின் வழக்கு இன்னொரு பரிமாணம். டெர்ரி சார்பில் அவர் கணவர் எடுத்த முடிவு சரியா? பெற்றோர் எடுத்த முடிவு சரியா? இருவருக்குமே முடிவெடுக்கும் அதிகாரம் உண்டா? அல்லது, மருத்துவர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமா? தொடர்ந்து இன்னும் பல காலம், அமெரிக்காவை இந்தக் கேள்விகள் உலுக்கும், நான் டெர்ரியின் கணவர் கட்சி!

    *****

    2. அரசியல் கிழவர்களுக்கு மட்டுமா?

    ஒரே விளம்பரத்தில் இரண்டு பேரை அவமானப்படுத்துவது எப்படி? கத்திப்பாரா ஜனார்த்தனம் என்ற காங்கிரஸ்காரரிடம் இந்தக் கலையைக் கற்றுக் கொள்ளலாம். தன் தலைவி சோனியாகாந்தியின் 57-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விளம்பர பேனரில் சோனியா, உலக கவி பாரதி இருவரையும் கேலி செய்யும் விதமாக, சோனியாவுக்கு பாரதியின் தலைப்பாகை, கோட் அணிவித்து இருக்கிறார். சேதுக் கால்வாய் திட்டம் கொண்டுவந்து, பாரதியின் கனவை நிறைவேற்றும் சோனியாவைப் ‘பாராட்ட’ இந்த உத்தியாம்!

    பாவம் பாரதி! அவன் சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கச் சொன்னானே தவிர, சேதுவைத் தோண்டிக் கடலை ஆழப்படுத்தச் சொல்லவில்லை. பாவம் சோனியா! மாறுவேடப் போட்டியில் கலந்துகொள்ளும் பள்ளிக்கூடச் சிறுமி நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.

    பள்ளிக்கூடங்களில் மாறுவேடப் போட்டி என்றால், நிச்சயம் இருக்கக்கூடிய குறவன், குறத்தி, பிச்சைக்காரன், பைத்தியக்காரன் இவர்களுடன் பெரும்பாலும் இடம்பெறும் பாத்திரம் பாரதி! கொஞ்சம் கொஞ்சம் பெரியார், காந்தி, நேரு.

    முன்னோடி சிந்தனையாளர்கள், தலைவர்கள் எல்லாரையும் நமது சமூகம் மாறுவேடப் போட்டிக்கான மேட்டராகக் குறுக்கிவிடுகிறது. பாரதி வேடம் போடும் தமிழ்ச் சிறுவர்களுக்குத் தமிழ் பேசக்கூடத் தெரியாமல் இருப்பது பற்றி நமக்குக் கவலை இல்லை!

    ‘ஜெயலலிதாவை அன்னை மேரியாகச் சித்திரித்தபோது கிறிஸ்துவர்கள் வெகுண்டெழுந்தது போல, ஏன் இப்போது பாரதி அன்பர்கள் ரெளத்ரம் கொள்ளவில்லை?’ என்று ஒரு பாரதி அன்பர் கேட்டார். ‘பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே’ என்ற பாரதியின் அறிவுரைதான் காரணம். அரசியல்வாதிகளின் வேலையே விதவிதமாக வேடம் போடுவதுதான் என்று கத்திப்பாரா ஜனார்த்தனம் நமக்கு இன்னும் ஒருமுறை அறிவுறுத்தியதாக எடுத்துக்கொண்டு, அவருக்கு நன்றி தெரிவிக்கலாம்.

    வேடத்துக்கும் அரசியலுக்கும் இத்தனை உறவு இருப்பதால்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நடிகர்களும், அவர்கள் வந்தால் பெரும் போட்டியாகிவிடும் என்பதால் வரக்கூடாது என்று அரசியல்வாதிகளும் நினைக்கிறார்கள் போலிருக்கிறது!

    அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்று நடிகர்கள் கண்ணாமூச்சி ஆடுவதுபோல், அரசியலை விட்டுப் போவேனா, மாட்டேனா என்று சில அரசியல் தலைவர்களும் கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள். அவர்களில் முதன்மையானவர் வாஜ்பாய். பி.ஜே.பி. கட்சியின் வெள்ளி விழாவில் வாஜ்பாய்

    Enjoying the preview?
    Page 1 of 1