Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaiyathul Vaazhvangu Vazha
Vaiyathul Vaazhvangu Vazha
Vaiyathul Vaazhvangu Vazha
Ebook192 pages44 minutes

Vaiyathul Vaazhvangu Vazha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூலினை முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒப்பிடலாம். முகம் பார்க்கும் கண்ணாடி என்ன செய்கிறது? நம்முடைய உண்மைத் தன்மையைக் காட்டுகிறது. இனி நம்மை நாமே எவ்வாறு சீர்ப்படுத்திக்கொள்வது? என்று அமைதியாகக் கற்றுத் தருகிறது. நாமும் அவ்வாறே சீர்ப்படுத்திக்கொள்கிறோம். ஆம். இந்த நூலும் முகம் பார்க்கும் கண்ணாடியைப் போன்றே செயல்படுகின்றது. நம்மை நமக்குக் காட்டுகின்றது. நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் காட்டுகின்றது. நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நமக்குச் சொல்லித் தருகின்றது.

காலத்திற்கேற்ற வகையில் இந்நூலில் அமைந்த இனிமையான அனைத்து அறவுரைகளும் நூலினைக் கற்போருக்குப் பல்வேறு சூழ்நிலைகளில் உறுதியாகப் பயன்தரக் கூடியவை ஆகும்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580144507085
Vaiyathul Vaazhvangu Vazha

Related to Vaiyathul Vaazhvangu Vazha

Related ebooks

Reviews for Vaiyathul Vaazhvangu Vazha

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaiyathul Vaazhvangu Vazha - S.P. Balu

    https://www.pustaka.co.in

    வையத்துள் வாழ்வாங்கு வாழ

    Vaiyathul Vaazhvangu Vazha

    Author:

    S.P. பாலு

    S.P. Balu
    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-p-balu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மக்கள் நலப் பணி புரியும் மாமணி

    மக்கள் குறைதீர்க்கும் சமுதாயத்தொண்டினை தமது எழுத்துக்கள் மூலமாகவும் செயல்கள் மூலமாகவும் நன்கே செய்து வருபவர் புதுக்கோட்டை திரு. எஸ்.பி. பாலு அவர்கள்.

    அச்சுக்கலை வித்தகர் கண்ணபிரான் எஸ். பரசுராம் அவர்களின் புதல்வர். சிறுவர் இலக்கியச் செல்வர் திரு. பி. வெங்கட்ராமன் அவர்களின் இளைய சகோதரர்.

    புகழ்பெற்ற மாபெரும் டிவிஎஸ் நிறுவனத்தில் பல்லாண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    மக்கள் பிரச்னைகளைப் பற்றி பத்திரிக்கைகளில் சின்னஞ்சிறு கட்டுரைகள், துணுக்குகள், வாசகர் கடிதங்கள் மூலமாகவும், வானொலி நகர்வலம் பகுதி மூலமாகவும் இவரது துணிச்சலான எழுத்துக்கள் மூலமாகவும் எத்தனையோ பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நாளும் பொதுப் பணி செய்து வரும் திரு எஸ்.பி பாலு அவர்களைப் பாராட்டுகிறேன்.

    தொடர்ந்து சாதனையாளர்களை ஆண்டுதோறும் பாராட்டிச் சிறப்பித்து அவர்களது புத்தகங்களை ஆவணப்படுத்தி வரும் அற்புத மனிதர், சாதனைச் செம்மல் புதுக்கோட்டை இலக்கியப் பேரவை தலைவர், சொல்லருவி திரு. மு. முத்து சீனிவாசன் அவர்கள் திரு. எஸ்.பி. பாலு அவர்களுக்கு சமூகச் சிற்பி என்னும் பட்டத்தை அளித்து சிறப்புச் செய்ததை மகிழ்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.

    வாழ்க சமூக நலத் தொண்டு. வளர்க.

    அன்புடன் வாழ்த்தும்

    பாரதி இலக்கியச் செல்வர்

    கவிமாமணி எதிரொலிவிசுவநாதன்

    நிறுவனர், பாரதி நெல்லையப்பர் மன்றம்.

    சாதனையாளர்களின் சரித்திரப் பக்கங்கள் நூலிலிருந்து

    சமூக நலன் கருதிச் சேவையாற்றுவதில் பல வழிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்று மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்குவது. இன்னொன்று பிரச்னைகளை உரியவர்களிடம் எடுத்துச்சொல்லி நிவாரணம் காண்பது.

    பிரச்னைகளைப் பத்திரிகைகளில் எழுதி நிவாரணம் காண வழிகோலும் ஒரு மாபெரும் பணியை செய்து வருபவர் தான் திரு. எஸ்.பி. பாலு. சளைக்காமல் எழுதிக்கொண்டேயிருக்கும் பொது நலச் சேவகர் அவர்.

    மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். பலன் கருதாது மக்கள் பணியாற்றும் திரு. பாலுவின் சேவை மகத்தானது. எழுத்துப் பணியில் அவர் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுகிறார். அவரது செயல்பாடுகளின் மூலம் குறைகள் களையப்பெற்று, மக்கள் பயன் பெறுகின்றனர். நல்ல பணிகளை நயமாய்ச் செய்து வரும் திரு. எஸ்.பி பாலு தொடர்ந்து சேவை ஆற்றட்டும்! மக்கள் பல நன்மைகள் பெறட்டும் என வாழ்த்துவோம்.

    (புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது அளித்து சிறப்பித்த சாதனையாளர்களின் சரித்திர பக்கங்கள் நூலிலிருந்து சமூக நற்பணியாளர் திரு. எஸ்.பி. பாலு அவர்களைப் பற்றி புதுக்கோட்டை இலக்கியப் பேரவை தலைவர், சொல்லருவி திரு. மு. முத்து சீனிவாசன் அவர்களின் பாராட்டுரை)

    அணிந்துரை

    கலைமாமணி திருச்சி பாரதன் அவர்களின் அன்பு நண்பரும் குழந்தை இலக்கியப் பணிச்செல்வருமான திரு. பி. வெங்கட்ராமன் அவர்கள் எமக்கு வழங்கிய அன்புக்குரிய இலக்கியவட்ட எழுத்தாளர் நண்பர்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காதன. அத்தகைய வட்டத்தில் ஒருவரான அன்பு அண்ணன் திரு. எஸ்.பி. பாலு அவர்கள் ஆவார். என்னோடு எப்பொழுதும் இதயம் திறந்து அன்போடும் அணுசரணையாகவும் கலந்துரையாடுவார். இந்த உலகில் அன்பைத் தவிர வேறொன்றுமில்லை. அன்புள்ளவர்களே உறவினர்கள். அன்புள்ளவர்களே நண்பர்கள். எல்லா இடங்களிலும் அன்பு நிறைய வேண்டும். அன்பே கடவுள் என்னும் கொள்கையில் வாழ்பவர் திரு எஸ்.பி. பாலு அவர்கள். இதனை இந்த நூலை நீங்கள் முழுமையாகப் படித்து முடிக்கும் போது உணர்ந்து கொள்வீர்கள்.

    இந்த நூலினை முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒப்பிடலாம்.

    முகம் பார்க்கும் கண்ணாடி என்ன செய்கிறது? நம்முடைய உண்மைத் தன்மையைக் காட்டுகிறது. இனி நம்மை நாமே எவ்வாறு சீர்ப்படுத்திக்கொள்வது? என்று அமைதியாகக் கற்றுத் தருகிறது. நாமும் அவ்வாறே சீர்ப்படுத்திக்கொள்கிறோம். ஆம். இந்த நூலும் முகம் பார்க்கும் கண்ணாடியைப் போன்றே செயல்படுகின்றது. நம்மை நமக்குக் காட்டுகின்றது. நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் காட்டுகின்றது. நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நமக்குச் சொல்லித் தருகின்றது.

    காலத்திற்கேற்ற வகையில் இந்நூலில் அமைந்த இனிமையான அனைத்து அறவுரைகளும் நூலினைக் கற்போருக்குப் பல்வேறு சூழ்நிலைகளில் உறுதியாகப் பயன்தரக் கூடியவை ஆகும்.

    இந்நூலுக்கு இன்னொரு பெருமையும் சேர்த்துள்ளேன். இனி அச்சிடப் போகும் பொது அறிவுப் புத்தகத்தில் பின்வரும் வினாவையும் விடையையும் அப்படியே சேருங்கள். 1. முதன் முதலாகக் குரல் வழியாகவே (TAMIL VOICE TO TEXT) பேசிப் பேசியே தட்டச்சுச் செய்து நூலாக்கம் செய்யப்பட்ட மொழி எது? விடை: தமிழ். நூல் பெயர் என்ன? வையத்துள் வாழ்வாங்கு வாழ... நூலாசிரியர் பெயர் என்ன? எஸ்.பி. பாலு 2. முதன் முதலாகக் குரல் வழியாகவே (TAMIL VOICE TO TEXT) பேசிப் பேசியே நூலினைத் தட்டச்சுச் செய்தவர் யார்? முனைவர் மா. தாமோதரகண்ணன்.

    இந்நூல் அனைவரின் இல்லங்களிலும் அனைவரின் உள்ளங்களிலும் இருக்கவேண்டியதாகும். இந்நூலினை எல்லா வயதினருக்கும் பரிசாக வழங்கலாம் என்னும் சிறப்புத் தகுதியைப் பெறுகின்றது.

    அன்புடன்

    முனைவர் மா.தாமோதரகண்ணன்,

    முதுகலைத்தமிழாசிரியர்,

    அரசுமேல்நிலைப்பள்ளி,

    அரசங்குடி - 620013, திருச்சி மாவட்டம்.

    அலைபேசி எண்: 94426 63637

    என்னுரை

    1946 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஐந்தாம் நாள் அன்றைய சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையில் குழந்தை இலக்கிய மலர்கள் சங்கு, டமாரம், பாலர் மலர், டிங்டாங் போன்ற இதழ்களை அச்சிட்டு பெருமை பெற்ற கண்ணபிரான் அச்சக உரிமையாளர் திரு. பரசுராம அய்யர் - அலமேலு அம்மாள் தம்பதிகளுக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தேன்.

    1965 இல் இருந்து 2002 வரை சேலம், புதுக்கோட்டை, மதுரை நகரங்களில் இந்தியாவின் புகழ்பெற்ற மோட்டார் நிறுவனமான டி.வி. சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ் லிமிடெட்டில் பணிபுரிந்தேன். பிறகு விருப்ப ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தேன்.

    2003 ஆம் ஆண்டு, ஒரு நாள் சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று இருந்தேன். அப்போதைய முதல்வர் ஆணைப்படி பக்தர்களுக்கான அன்னதானத் திட்டம் நடைபெற்றது. இது குறிப்பிடத்தக்க நல்ல திட்டம் ஆகும். அரசாங்கம் பல திட்டங்களை அறிவித்தாலும், அதன் பலன்கள் மக்களைச் சென்றடைய உதவுபவர்கள் அரசு ஊழியர்களே. ஆனால் திட்டத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1