Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marakka Mudiyatha Kadithangal
Marakka Mudiyatha Kadithangal
Marakka Mudiyatha Kadithangal
Ebook116 pages35 minutes

Marakka Mudiyatha Kadithangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைக்கு கடிதம் எழுதும் முறை குறைந்து ஏதோ ஏழைகளும் சில தொழில் சார்ந்த யந்திரதனமான கடிதங்கள் மட்டும் போக்குவரத்தில் உள்ளன. கடிதத்தில் பேச வேண்டியதை உடனுக்குடன் தெரிவித்துவிட போன், எஸ்.எம்.எஸ்., இ.மெயில், இண்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்திக் கொள்வதால் கடிதம் எழுதுவது குறைந்துவிட்டது. கடிதம் எழுதுவதன் மூலம் நமது கையெழுத்து அழகாகிறது. எழுத்தாற்றல் வளர்கிறது. சிந்தனை தெளிவு பெறுகிறது. பிரச்சினைகள் சுமூகமாக முடிந்து வந்தது. இப்படி கடிதத்தின் பயன் நிறைய.

கடிதம் எழுத மறந்து விடக்கூடாது என்பதற்காகவே சில பிரபலங்களின் கடிதங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580122808818
Marakka Mudiyatha Kadithangal

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Marakka Mudiyatha Kadithangal

Related ebooks

Reviews for Marakka Mudiyatha Kadithangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marakka Mudiyatha Kadithangal - Kalaimamani Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    மறக்க முடியாத கடிதங்கள்

    Marakka Mudiyatha Kadithangal

    Author :

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கடிதம் எழுத மறந்து விடக்கூடாது

    சுபாஷ் சந்திரபோஸ் சித்தரஞ்சன் தாசுக்கு எழுதிய கடிதம்

    தேசபிதா காந்தியடிகள் சங்கு கணேசனுக்கு எழுதிய கடிதம்

    பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதம்

    அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் ஆப்ரகாம் லிங்கன் எழுதிய கடிதம்

    சுதந்திரப் போராளி அஷ்ஃபாக் உல்லாகான் தேச மக்களுக்கு எழுதிய கடிதம்

    பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் கவர்னருக்கு எழுதிய கடிதம்

    அமெரிக்க அதிபருக்கு மலேசிய முன்னாள் பிரதமர் எழுதிய பகிரங்கக் கடிதம்

    தமது நண்பருக்கு புரூஸ்லீ எழுதிய கடிதம்

    மகாத்மா காந்திக்கு சரோஜினி நாயுடு எழுதிய கடிதம்

    அறிஞர் அண்ணா தம் மகனுக்கு எழுதிய கடிதம்

    பெர்னாட்ஷா சிற்பி எப்ஸ்டினுக்கு எழுதிய கடிதம்

    செஸ்டர் பீல்டு பிரபுதுவுக்கு ஜான்சன் எழுதிய கடிதம்

    ரோமானிய இயேசு சபைக்கு செயிண்ட் சேவியர் எழுதிய கடிதம்

    கவிப்பேரரசு வைரமுத்து தமது மகனுக்கு எழுதிய கடிதம்

    மாவீரன் திப்பு சுல்தானுக்கு மாவீரன் நெப்போலியன் எழுதிய கடிதம்

    லூதர் கிங் எழுதிய உரிமை கடிதம்

    எம்.ஜி.ஆர். எழுதிய நட்சத்திரக் கடிதம்

    தந்தை ஜவகர்லால் நேரு மகளுக்கு எழுதிய கடிதம்

    கலைஞர் கருணாநிதி தமது மகன் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்

    வாஞ்சி எழுதிய கடிதம்

    பாரதியார் தம் தமையனுக்கு எழுதிய கடிதம்

    கடிதம் எழுத மறந்து விடக்கூடாது

    அன்புள்ள...

    வாசகப்பெருமக்களுக்கு வாழ்த்துக்களுடன் எழுதும் கடிதம்...

    இப்படி கடிதம் எழுதும் செயல் தொண்ணூற்று ஐந்துகளோடு முடிவுக்கு வந்துவிட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இன்றைக்குக் கடிதம் எழுதுவது என்பது குதிரை கொம்பாகிவிட்டது.

    ஒரு காலத்தில் எப்படி கடிதம் எழுதுவது என்கிற பாடமே பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. கடிதம் எழுதும் செயலையே ஒரு பாடலாக ஒரு கவிஞர் எழுதியிருந்தார். ‘அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்’ என்ற பாடல் பரவலாக பாடப்பட்டு வந்தது.

    பேரறிஞர் அண்ணா ‘அன்புள்ள தம்பிக்கு’ என்று தனது கடிதத்தில் அன்றைய நாட்டு நடப்பையும், அரசியல் கட்சியின் கொள்கைகளையும் புரியவைத்தார். அவரைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி ‘உடன்பிறப்பே’ என்று கடிதம் எழுதி தனது கட்சியின் தொண்டர்களுடன் நேரடியாகப் பேசினார்.

    ஜவகர்லால் நேரு தமது மகளுக்கு கடிதங்கள் மூலம் அரசியல் பாடம் நடத்தினார். அவரது கடிதங்கள் சரித்திரப்புகழ் பெற்றன.

    சில பிரச்சினைகளைப் பற்றி நேரில் பேசினால் வார்த்தைகள் தடித்துவிடும். சில வார்த்தைகள் வாய்தவறி வந்து விழுந்து விடும். அதற்கு கடிதம் மூலம் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எழுதி பல விஷயங்களை பரிமாறப்பட்டு வந்தது.

    கவர், இண்லென்ட் லெட்டர், போஸ்ட்கார்ட் என்று பல வடிவங்களில் கடிதம் எழுதும் பழக்கம் இருந்து வந்தது.

    அரசர்களின் தூதுக்கடிதம் தொடங்கி வேலை வாய்ப்பு வழங்க கோரும் சிபாரிசு கடிதம், பெற்றோரின் நலம் விசாரிக்கும் கடிதம், பிள்ளைகளின் பாசக்கடிதம், காதலர்களின் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் காதல் கடிதம், நடந்த தவறுக்கு மன்னிப்புக்கோரும் கடிதம், இப்படிக் கடிதத்தின் பயன் பல வகைகளில் பங்களிப்பு செய்தது.

    இன்றைக்கு கடிதம் எழுதும் முறை குறைந்து ஏதோ ஏழைகளும் சில தொழில் சார்ந்த யந்திரதனமான கடிதங்கள் மட்டும் போக்குவரத்தில் உள்ளன.

    கடிதத்தில் பேச வேண்டியதை உடனுக்குடன் தெரிவித்துவிட போன், எஸ்.எம்.எஸ்., இ.மெயில், இண்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்திக் கொள்வதால் கடிதம் எழுதுவது குறைந்துவிட்டது.

    கடிதம் எழுதுவதன் மூலம் நமது கையெழுத்து அழகாகிறது. எழுத்தாற்றல் வளர்கிறது. சிந்தனை தெளிவு பெறுகிறது. பிரச்சினைகள் சுமூகமாக முடிந்து வந்தது. இப்படி கடிதத்தின் பயன் நிறைய.

    கடிதம் எழுத மறந்து விடக்கூடாது என்பதற்காகவே சில பிரபலங்களின் கடிதங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த நூல் வெளியிட உதவிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கும் வாசக நண்பர்களுக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

    நட்புடன்,

    சபீதாஜோசப்

    சுபாஷ் சந்திரபோஸ் சித்தரஞ்சன் தாசுக்கு எழுதிய கடிதம்

    தி யூனியன் சொசைட்டி

    கேம்ப்ரிட்ஜ்

    16, பிப்ரவரி, 1921

    அய்யா,

    நான் ஒருவேளை உங்களுக்கு முன்பின் தெரியாதவனாக இருக்கலாம். ஆனால் நான் யார் என்பதை, உங்களுக்குத் தெரிவித்தால், என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஒரு முக்கியமான விஷயம் குறித்து உங்களுக்கு எழுத விரும்புகிறேன்.

    எனது தந்தையார், திரு. ஜானகிநாத் போஸ் கட்டக்கில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். சில ஆண்டுகளுக்கு முன், அவர் அரசு வழக்கறிஞராக இருந்தார். எனது மூத்த

    Enjoying the preview?
    Page 1 of 1