Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal
Thanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal
Thanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal
Ebook205 pages1 hour

Thanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தஞ்சை ப்ரகாஷ் (1943-2000) என்று தமிழ் இலக்கிய வெளியில் அறியப்பட்ட ஜி.எம்.எல். ப்ரகாஷ் (கார்டன் மார்க்ஸ் லயன்ஸ் ப்ரகாஷ்) கவிஞர். புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர். இதழாசிரியர், பதிப்பாளர், ஓவியர், இசைக்கலைஞர், பன்மொழி பல கல்வி கற்றவர், பல தொழில் பார்த்தவர், மொத்தத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வதுபோல ஓர் இலக்கிய யோகி என்கிற அளவிற்கு வாய்த்த வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்தவர். சொந்த வாழ்விலும் இலக்கியப் படைப்பிலும் சோதனை முறையைப் பின்பற்றுவதையே தன் நெறிமுறையாகக் கொண்டவர். பாலம், குயுக்தம், வெசாஎ - என்று தொடர்ந்து பல்வேறு இதழ் நடத்தும் முயற்சிகளிலும், கதை சொல்லிகள், சும்மா இலக்கியக் கும்பல் ஒளிவட்டம் முதலிய இலக்கிய அமைப்புக்களை நடத்தும் செயல்பாடுகளிலும் எழுத்தாளர்களை ஊர் ஊராகத் தேடி அடைந்து உரையாடுவதிலும் தன் பொன்னான காலத்தையும் முன்னோர் தேடித் தந்த பொருளையும் செலவழித்து ஓய்ந்த ப்ரகாஷ் . 2000-ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் தன் 57-வது வயதில் பயணத்தை முடித்துக்கொண்டார். அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்பொழுது அவர் எழுத்துக்கள் புதிய இளைஞர்களால் பெரிய அளவில் விரும்பி வாசிக்கப்படுகின்றன என்ற உண்மை அவர் எழுத்தின் தீவிரத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றது.

Languageதமிழ்
Release dateAug 19, 2023
ISBN6580166310047
Thanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal

Read more from Mangaiyarkarasi Prakaash

Related to Thanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal

Related ebooks

Reviews for Thanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal - Mangaiyarkarasi Prakaash

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தஞ்சை ப்ரகாஷுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்

    (இலக்கிய நண்பர்களால் எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பு)

    Thanjai Prakaashukku Ezhuthappatta Kadithangal

    Author:

    மங்கையர்கரசி ப்ரகாஷ்

    Mangaiyarkarasi Prakaash

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mangaiyarkarasi-prakaash

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ராஜாத்தியின் ராஜனுக்கு – திருமதி. மங்கையர்க்கரசி ப்ரகாஷ்

    1 - கே. டானியல்

    2 - சி. பழனிச்சாமி

    3 - வைத்திலிங்கம் (பிரபஞ்சன்)

    4 - வீ. வேலுசாமி

    5 - பா. செயப்பிரகாசம்

    6 - மு. புஷ்பராஜன்

    7 - பரம்ஜோதி

    8 - செந்தமிழன்

    9 - தி.க. சிவசங்கரன்

    10 - சுப்ரபாரதி மணியன்

    11 - பாவை சந்திரன்

    12 - துர்காலெஷ்மி

    13 - கொ.மா. கோதண்டம்

    14 - கழணியூரான்

    15 - தினகரி சொக்கலிங்கம்

    16 - கே.சீ.எஸ். அருணாச்சலம்

    17 - A.L. ராஜராஜன்

    18 - நசன்

    19 - மனுஷ்ய புத்திரன்

    20 - வேர்கள் இலக்கிய இயக்கம்

    21 - எஸ். வைத்தீஸ்வரன்

    22 - யூமா வாசுகி

    23 - B. சாந்தா தத்

    24 - சே. இராசேந்திரன்

    25 - ம.ந. ராமசாமி

    26 - தம்பி மாரிமுத்து

    27 - கோமல்

    28 - கலைவாணிதாசன்

    29 - ந. கிருஷ்ணமூர்த்தி

    30 - கிருஷ்ணசுவாமி

    31 - அ. கார்த்திகேயன்

    32 - கி. ராஜநாராயணன்

    33 - கல்யாண்ஜி

    34 - சுந்தர்ஜி

    35 - சௌரி

    36 - தோப்பில் முகம்மது மீரான்

    37 - பெண்ணேஸ்வரன்

    38 - எஸ். முகுந்தன்

    39 - குமாரசாமி

    40 - சி.எம். முத்து

    41 - பொதிய வெற்பன்

    தஞ்சை ப்ரகாஷின் படைப்புகள்

    முன்னுரை

    ப்ரகாஷின் கடித இலக்கியம்

    அர்ப்பணிப்பு அறுவடையைக் கொண்டு வருகிறது.

    நம்பிக்கை உடையவர்கள் கடைசி வரை செல்வார்கள்.

    மிக இருண்ட நாட்களிலும் வழிகாட்டியாய் இருக்கக் கூடியது நம்பிக்கை - அன்னை.

    பொதுவாக இலக்கியம் பேசுபவர்கள் கனவு காண்பதில் பெரும் நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனால் கொஞ்சம், அதிகமாகவே சோம்பேறிகளாகவும் இருக்கின்றனர். இது இலக்கியத்திற்கு நேர்ந்த விபத்து எனக் கருதுகிறேன். நான் இலக்கியவாதி அல்ல. அச்சூழலின் நிர்பந்தத்தால் எழுதுகிறேன்.

    இப்புத்தகத்திற்கு முன்னுரை திரு. செல்லதுரை அவர்கள் எழுத இருந்தும் அவர் தாயார் இறப்பின் காரணமான விளைவால், தருணம் இல்லாது போய்விட்டது.

    ஏன் கடித இலக்கியம், என்று ஒன்று ஆரம்பித்து நடத்த வேண்டும்? என்று தஞ்சை ப்ரகாஷுக்குத் தோன்றியது.

    பழம் புடவையில் தூளிகட்டிக் குழந்தையைக் கிடத்துவர். அத்தூளியில் தாயின் வாசம் இருக்கும். குழந்தை தாயின் அண்மையில் இருப்பதாகக் கருதி நல்ல சுகமான நித்திரை செய்யும். அதுபோல் ப்ரகாஷுக்கு எழுத்தாளர்களின் இலக்கியத்தை நுகர்ந்து அனுபவிக்க, திளைக்க என்று கடிதத் தொடர்பு மிகவும் பயன்பட்டது. அவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் கொள்ளவும், பாசம் நேசம் கொள்ள, உதவிட, உதவியது எனலாம்.

    தினம் காலை எழுந்ததும் வந்த கடிதங்களுக்குப் பதில் எழுதிவிட்டுக் கடிதங்களில் பதில் எழுதிய தேதியையும் குறிப்பிடுவார்.

    சிலர் முகவரி தெரியாதவர்கள், ஜி.எம்.எல். ப்ரகாஷ் அல்லது தஞ்சை ப்ரகாஷ் என்று எழுதி தஞ்சாவூர் என்று போட்டு விடுவார்கள். எங்கள் பகுதி தபால்காரர் கவனித்து கவனமாக அக்கடிதங்களைப் ப்ரகாஷிடம் கொண்டு சேர்ப்பார். ஒரு முப்பது நிமிடமாவது பேசி தனது அன்பை வெளிப்படுத்தியும், தன் ஈடுபாட்டையும் காட்டிச் செல்வார். நான் தபால் இலாகாவுக்குத்தான் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்று கடிந்து கொண்டது உண்டு.

    இலக்கிய கர்த்தாக்களைத் தொடர்புகொள்ள நட்பை விரிவுபடுத்துதல். அறிமுகம் செய்தல் ஆகிய அனைத்தும் கடிதங்கள் மூலமாகத்தான் செய்ய முடிந்தது.

    இலக்கியப் படைப்பாளர்களை அவர்களின் கடிதங்களில் இருந்து அவர்களைக் கண்டறிய முடியும்.

    தஞ்சை ப்ரகாஷ் உயிரோடு இருக்கும்போது சாளரம் என்ற பெயரில் ஓர் இதழ் வெளியிட்டார்.

    அவரது நெருங்கிய நண்பர்கள் ப்ரகாஷுக்கு எழுதிய கடிதங்களை வெளியிட்டு மகிழ்ந்தார்.

    ப்ரகாஷுக்கு வந்த கடிதங்கள் ஏராளம். அதைத் தொகுத்து தற்சமயம் முதல் பகுதியாக வெளியிடுகிறோம்.

    அவை அக்கால கட்டத்தில் வெளிவந்த புத்தகங்கள் குறித்தும், ஒருவருக்கு ஒருவர் செய்திகளைத் தெரிவித்துக் கொள்ளவும், இலக்கியத் தேடல்கள் பரஸ்பர உதவியை பரிமாறிக் கொள்ளவும் உதவுவதாக உள்ளது.

    அவை புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்குப் பாலமாக அமையும் எனவும் நம்புகிறோம்.

    ப்ரகாஷ் பள்ளிப் பருவத்திலேயே பேனா நண்பர்கள் பலர் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தனர். திபேத்தின் தலாய்லாமா அவர்களுக்கும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார். இளம் பிராயத்தில் இருந்து அவரின் பழக்கமாக இருந்த கடிதம் எழுதுதல்தான் பின்பு கடித இலக்கியம் வளரவும் உதவியாக இருந்திருக்கக் கூடும்.

    இக்கடிதங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று அவரைச் சார்ந்த இலக்கிய நண்பர்கள் விரும்பினர். அந்த விருப்பத்தால் விளைந்ததுதான் இப்புத்தகம். துணை நின்றோர், முயற்சித்தோர் திரு. செல்லதுரை, திரு. சுந்தர்ஜி, திரு. கோபாலி, திரு. வியாகுலன், திரு. கவிஜீவன், திருமதி. கிருஷாங்கினி ஆகியோர் விருப்பங்கொண்டு செயல்பட்டதன் விளைவு பாகம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் தாக்கத்தை வாசகர்களைப் பொறுத்து காண்போம், தொடருவோம் என்று நம்புகிறேன்.

    இவண்,

    மங்கையர்க்கரசி ப்ரகாஷ்.

    நெருப்பில் இறங்கி பின் வெயிலுக்கு பயப்படுவானேன் – பழமொழி.

    ராஜாத்தியின் ராஜனுக்கு – திருமதி. மங்கையர்க்கரசி ப்ரகாஷ்

    என்னைத் தனியே விட்டு நீ எங்கு சென்றாய்? நீ எனக்கு வரலாறு சொல்லிக் கொடுத்தாயே! அதில் சதகர்ணியின் தாயார் புலம்பலைக் கல்வெட்டுகளில் வெட்டி மகனின் பெருமையை அழியாது காத்தாள் என்று அன்று புலம்பலை நேரில் கண்டு உணர்ந்து, வருந்தியதுபோல எவ்வளவு உருக்கமாக சொல்லிக் கொடுத்தாய்? நான் என் புலம்பலை எந்தக் கல்வெட்டில் உனக்காக எழுத முடியும், ராஜாத்தி ராஜனே? ஒரு ராஜனுக்குரிய அனைத்துத் தகுதிகளும் உனக்குள் இருந்தனவே! இருந்தும் தாடி வைத்துப் பரதேசிபோல் இலக்கியத்தை யாசித்ததேன்? என் கண்மணியே! ஆம்! அந்தக் கண்களில் என்ன தீட்சண்யம்! முட்டை விழிகள்! அழகிய புருவங்கள்! அன்று சாவுக்கு வந்த எத்தனை பெண்கள் அடக்கத்திற்குப் பின்பும் உன் புருவத்தை விவரித்தனர் தெரியுமா தங்கமே? 28.07.2000 அன்று மீண்டும் உன் விழியைக் காணத் துடித்து, உன் இமையைத் திறந்து பார்த்தேன். உனக்குத் தெரியாது. உன் கண் முழுவதும் பஞ்சை வைத்து மறைத்ததுபோல் இருந்தது. உன் கருவிழியைக் காணவில்லை. உன் வெள்ளை விழிகளும்தான். இந்த உலகத்தைப் பார்த்தது போதும், என்று திரை போட்டு விட்டனையோ? என் மனது எவ்வளவு பதைபதைத்தது தெரியுமா என் தங்கமே? அப்போது வேதாகம வசனம் எனக்கு ஞாபகம் வந்தது! உன் கண்கள் பஞ்சடையுமுன்னே உன் சிருஷ்டிகரை நினை என்று சாக்ரடீஸ், லியனார்டோ டாவின்சி, ஷெல்லி ஆகியோருடன் முக்காலங்களிலும் வாழ்ந்தவன்போல் பேசுவாயே! உனக்குச் சாணக்கியன் முதல் எல்லா வல்லவர்களையும் தெரியும். எல்லாக் கலைகளையும் கற்றாய். பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றாய். கலை, இலக்கியம், வரலாறு, சமையல், நாட்டியம், வாத்தியம், நாடகம், இயற்கை வைத்தியம், ப்ராணிக் ஹீலிங், ஹோமியோபதி, வணிகம், (விவசாயம் தவிர) மற்றவை எல்லாம் உன்னை அறியுமே! என்னை விட்டுச் சென்றுவிட்டாய். என் ஆத்துமா துடிப்பது தெரியவில்லையா? நான் சாவித்திரியாய் இல்லாமல் போனேனே! அது என் துரதிருஷ்டம்! ஐயோ! என் ஆண்டவனே! உன் அறிவு மாண்டு போனதே!

    எந்த ஆணும் ஒரு பெண்ணுக்குக் கொடுக்க முடியாத அளவு சம உரிமையை நல்கி என்னை ஆதரித்து வளர்த்த என் ஐயனே! எனக்குப் பேச, சிரிக்க, பழகக் கற்றுத் தந்த என் ஆசானே! உலகம் அதன் அதிசயம், தூய்மை, படைப்பு, உண்மை, ஆழம் எல்லாம் என்னை அழைத்து அழைத்து நுகர வைத்த தாயுமானவனே! எங்கு சென்றாய்? செல்லும் இடம் சொல்லிச் செல்லும் வழக்கம்தான் உனக்கு இல்லையே? உன் அன்பிற்காகக் கண்ணீர் வடிக்கிறேனே! எனக்குத் தெரியாது போனதேன்? ரசித்து ருசித்து ரசனையை அனுபவித்து அடுத்தவர் அனுபவிக்க, நுகர நீ பாடுபடுவாயே! இவ்விஷயத்தில் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி தோற்றுப் போனானே என் கண்மணியே! எங்கு சென்றாய்?

    உன்னைச் சுற்றி எப்பொழுதும் ஒரு காந்த மின் அலை உண்டு பண்ணி எல்லோரையும் ஈர்த்து நிலைக்கச் செய்துவிடுவாயே? என்னையும் உன் அலையில் சேர்த்தாய். சாவு என்னும் பேரலையில் நீ மட்டும் சென்றுவிட்டாய் என்னை விடுத்து இது நியாயமா? தர்மமா? என் ராஜாத்தி ராஜனே? சொல். என்னைச் சுற்றி

    Enjoying the preview?
    Page 1 of 1