Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Punitha Bhoomiyil En Anubavangal
Oru Punitha Bhoomiyil En Anubavangal
Oru Punitha Bhoomiyil En Anubavangal
Ebook182 pages1 hour

Oru Punitha Bhoomiyil En Anubavangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புனித பூமியின் பயணத்தின் தொடக்கம் முதல் பயணத்தின் நிறைவு வரை தன் மனதில் இருந்த செயல்கள், திருமறையிலே பழைய ஏற்பாடு தொடங்கி, நற்செய்தி பகுதிகள், தொடக்கக்கால திருச்சபை உருவான இடம், இவற்றை குறித்து மிகச் சிறப்பாக பார்த்த பதிவுகளை அம்மா அவர்கள் இதிலே பதிந்துள்ளது, நாமே அங்கு சென்று பார்த்தது போல இந்த புத்தகத்தின் வடிவமைப்பு உள்ளது. திருமறை வாசிக்கின்றபோது ஒரு இடத்தின் பெயரோ அல்லது ஊரின் பெயரோ நிகழ்வு நடந்த இடமோ இவற்றை நோக்குகின்றபோது அன்பு தாயார் காண்பித்த இந்த புத்தகத்தின் வரிகள் மனதில் ஆழமாக பதிகின்றன. இந்த புத்தகத்தை வாசிப்பவருக்கு எருசலேம் புனித பயணம் செய்த அனுபவம் கிடைக்கின்றது.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580166310013
Oru Punitha Bhoomiyil En Anubavangal

Read more from Mangaiyarkarasi Prakaash

Related to Oru Punitha Bhoomiyil En Anubavangal

Related ebooks

Related categories

Reviews for Oru Punitha Bhoomiyil En Anubavangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Punitha Bhoomiyil En Anubavangal - Mangaiyarkarasi Prakaash

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு புனித பூமியில் என் அனுபவங்கள்

    Oru Punitha Bhoomiyil En Anubavangal

    Author:

    மங்கையர்கரசி ப்ரகாஷ்

    Mangaiyarkarasi Prakaash

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mangaiyarkarasi-prakaash

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒரு புனித பூமியில் என் அனுபவங்கள்

    1. தொங்கும் ஆலயம் (Elmo All AOA Church)

    2. யாக்கோபின் குடும்பத்தார் 70 பேர் எகிப்திற்கு செல்லுதல்

    3. மோசேயை பார்வோன் மகள் வளர்த்தல்

    4. சோதோம் கோமோராபட்டினம்

    5. யாத்திராகமம் 24:16; சீனாய்மலை

    6. அமலேக்கியரோடு யுத்தம்

    7. யாத்திராகமம் 32 (பரிசுத்த வேதாகமம்) - மோசே பத்து கட்டளை பெற்று வருதலும் இஸ்ரயேலர் ஜனம் தங்களுக்கு ஒரு தெய்வம் உண்டாக்குதலும்

    8. உயிர்த்தெழுந்தபின் சீசர்களுக்கு காட்சி தருதல்

    9. கபாலஸ்தலம்

    10. லூக்கா 19-49, 42-44 கண்ணீரின் ஆலயம்

    11. லூக்கா 19-30 – மத்தேயு – 21: (2-11) இயேசுவின் பவனி

    12. தாவீது ராஜா கல்லறை

    13. House of CA IA PHAS (காய்பாவின் வீடு)

    14. All Nation Church

    15. யூதேயா மிகச் செழிப்பான ஊர் (பெத்லகேம்)

    16. மம்ரே (ஆபிரகாமின் சந்ததியார் கல்லறைகள்)

    17. எருசலேம் கோட்டை

    18. மோரியா பட்டனம்

    19. சாலமோனின் ஜெபம்/ஆலய வரலாறு

    20. யாக்கோபின் கிணறு

    21. சோதனை மலை (Temptation Mount)

    22. சவக்கடல் (Dead Sea)

    23. லாசருவின் கல்லறை

    24. Casareo

    25. கர்மேல் பர்வதம்

    26. மெகிதோ பள்ளத்தாக்கு

    27. 02.10.12 மறுரூப மலை Mount of Tabbor

    28. கொர்னேலியுவின் தரிசனம்

    29. தேசாதிபதியின் அரண்மனையும், ஏசுவின் பாடுகளும்

    30. மலைப் பிரசங்கம்

    31. இயேசு உயிர்தெழுந்தபின் சீசர்களுக்கு தம்மை மூன்றாம் முறையாக வெளிப்படுத்துதல்

    32. கப்பர் நகூம்

    33. யோர்தான் நதி

    34. மோசேயின் மரணம்

    35. தேவனின் அன்பின் நடத்துதல்

    சமர்ப்பணம்

    எனது தாத்தா, திரு. வேதமாணிக்கம் அவர்களுக்கு.

    முன்னுரை

    கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருபெயரில் வாழ்த்துக்கள். திருமதி. மங்கையர்கரசி பிரகாஷ் அவர்கள் எழுதியுள்ள இந்த புத்தகத்தை நான் வாசித்தபோது மிகுந்த வியப்புற்றேன். காரணம், இயேசு கிறிஸ்து தனது பயணத்தை எருசலேம் அருகில் உள்ள பெத்தலகேமில் குழந்தையாய் பிறந்து இறைவாக்கினர்கள் சொன்ன யாவற்றையும் நிறைவேற்ற மனுசகுமாரனாக, அந்த எருசலேமை சுற்றியுள்ள எல்லை பகுதிகள், குறிப்பாக யூதர்கள் போக அருவருப்பான, யூதர் இன மக்களுடைய பகுதிகள், சமாரியர் பகுதிகள் எல்லாவற்றிலும் சென்று, ஏழை, எளிய மக்களுக்கு கடவுளின் நற்செய்தியை, சொல், செயல், தியானம், சிந்தனை, விழிப்புணர்வு, அன்பு, நேர்மை, பாசம், உறவு ஆற்றுப்படுத்துதல் இன்னும், நிறைய செயல்களின் மூலமாக பகிர்ந்து கொண்டார். நிறைய அற்புதங்களையும், வல்ல செயல்களையும் செய்தார். செய்ததன் விளைவு தனிமனித விடுதலை, குடும்ப விடுதலை, சமூக விடுதலை, சமய விடுதலை, அரசியல் விடுதலை என்று பல்வேறு விதமான விடுதலை கூறுபாடுகளை வாழ்வின் மூலமாக வெளிப்படுத்தினார். அந்தப் பகுதிகளை எல்லாம் பார்வையிட்டு, பயணத்தின் தொடக்கம் முதல் பயணத்தின் நிறைவு வரை தன் மனதில் இருந்த செயல்கள், திருமறையிலே பழைய ஏற்பாடு தொடங்கி, நற்செய்தி பகுதிகள், தொடக்கக்கால திருச்சபை உருவான இடம், இவற்றை குறித்து மிகச் சிறப்பாக பார்த்த பதிவுகளை அம்மா அவர்கள் இதிலே பதிந்துள்ளது, நாமே அங்கு சென்று பார்த்தது போல இந்த புத்தகத்தின் வடிவமைப்பு உள்ளது. திருமறை வாசிக்கின்ற போது ஒரு இடத்தின் பெயரோ அல்லது ஊரின் பெயரோ நிகழ்வு நடந்த இடமோ இவற்றை நோக்குகின்ற போது அன்பு தாயார் காண்பித்த இந்த புத்தகத்தின் வரிகள் மனதில் ஆழமாக பதிகின்றன. இந்த புத்தகத்தை வாசிப்பவருக்கு எருசலேம் புனித பயணம் செய்த அனுபவம் கிடைக்கின்றது. இந்த புத்தகத்தை சிறந்த முறையில் நினைவில் வைத்து பதிவு செய்த தாயாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் இந்த புத்தகத்தை வாசிப்பவருக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கும் என்ற உறுதியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குரிய முன்னுரை மற்றும் திருத்தம் செய்ய வாய்ப்பு தந்தமைக்கும் நன்றிகள். இதை எழுதியவருக்கும், இதை வாசிப்பவருக்கும் கடவுளின் அருள் நிறைவாக கிடைப்பதாக. ஆமென்.

    கிறிஸ்துவின் பணியில்,

    அருட்திரு. S. சார்லிபன் சாந்தகுமார்.

    ஒரு புனித பூமியில் என் அனுபவங்கள்

    இக்கட்டுரை நாங்கள் பயணம் சென்ற தேதி இடம் பொருத்து எழுதப்பட்டது ஆகும். வரிசைப்படி அல்ல. நான் பரிசுத்தஸ்தலம், செல்வேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லைதான். அந்த ஆசையும் என்னிடம் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை இல்லை. போக முடிந்தால் போகலாம் என்று நினைத்தேன். இஸ்ரயேலர்கள் பற்றி அவர்கள் தேவஜனம் என்பதால் எனது அத்தை (மாமியார்) உளபூர்வ நம்பிக்கையுடனும், நேசத்துடனும் அங்கு நடக்கும் நிகழ்வுகளை செய்தித்தாளில், ரீடர்ஸ் டைஜெஸ்டில் (Readers Digest) படித்து அதை எங்களிடம் சொல்லி சிலாகிப்பார்கள். போர் நடக்கும் போது இஸ்ரயேலர் வெற்றி பெற வேண்டும் என்று ஜெபிப்பார்கள். தேவனுடைய ஜனம் தோல்வியடைய கூடாது என்று நினைத்து பேசிக் கொண்டு இருப்பார்கள்.

    செங்கடல் இரண்டாக பிளந்ததை ரீடர்ஸ் டைஜெஸ்டில் (Readers Digest) ஒரு கட்டுரை வந்ததை படித்துவிட்டு வியந்தார்கள். ஒரு பெரிய மலை பெயர்ந்து விழுந்ததில் கடலின் அலை பிரிந்து சென்ற நேரம் இஸ்ரயேலர் கடந்தபின் கூடிய நேரம் கணக்கிட்டு இது நடந்தது உண்மையான சம்பவம் என்று வெளியிட்டு இருந்தனர் (அதை படித்துவிட்டு) எனது மாமியார் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் ஆர்வம், நேசத்தை, பக்தியை சிறுபிள்ளை போல் மகிழ்ந்ததை உணர்ந்தேன். (வெளிக்காட்டிக் கொள்ளவில்லை).

    எனது கணவர் இயேசு கிருஸ்துவை ஒரு சமூக நலவாதி, பொதுவுடைமைவாதி (Socialist, Communist) என்பார். மலைப் பிரசங்கங்களின் உன்னதங்களை அகமகிழ்ந்து எடுத்து கூறுவர்.

    இவை அனைத்தும் இஸ்ரயேல் ஜனங்கள் பக்கம் என் கவனம் செல்லவும், அந்த நாடுகளை பார்க்கவும் தூண்டியது எனலாம். இவை மட்டுமல்ல.

    நான் சிறு குழந்தையாக இருக்கும் போது எனது தாத்தா திரு. வேதமாணிக்கம் அவர்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் என்னை மடியில் படுக்க வைத்துக் கொண்டு (ஒரத்தநாடு) திறந்த வெளியில், நிலவின் ஒளியில், நட்சத்திரங்களின் அழகில் திருமறை கதைகளை சொல்லுவார்கள். யோசேப்பு கதை, ஆபிரகாம், ஈசாக்கை பலி இட (Bite Story) சென்ற கதை, மனம் திருந்திய மகன் கதை, நல்ல சமாரியன் கதை, எலியாவின் கதை, மோசேயின் கதை, நீதிக் கதைகள், யோபுவின் கதை எல்லாம் சொல்லுவார். நானும் கேட்டு உணர்ந்ததும் என்னை வழிநடத்தியதும் அக்கதைகள்தான் என்று சொல்வது மிகையில்லை.

    அன்று இருந்த நிலா / நிலவு இருக்கின்றது இன்று. தாத்தா இல்லை. இது வருத்தமே. கதைகள் இருக்கின்றது. வரலாறும் இருக்கின்றது. ஆழமான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதுமட்டுமல்ல செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்பினேன். இது என் அன்னையின் வழிகாட்டுதல் எனலாம். கீழ்க்கண்டவை வழிகாட்டுதல்கள். நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்துவது, கடவுளுக்கு கணக்கு கொடுப்பது, இப்படியான விஷயங்களில் சற்று கவனமாக இருப்பதற்கு மேற்கண்ட அனைத்தும் உதவின எனலாம்.

    ‘நான் தொழிற்பயிற்சி மையம் நடத்தியது, தோல்வியுற்ற போது ஆலயம் சென்று உமது சித்தத்தினால்தான் செய்கிறேன் என்று நினைத்தேனே! ஏன் இப்படி’ என்று கேட்கும் போது ‘சும்மா அமர்ந்திரு’ ஏசாயா 30:15 என்ற வசனம் பதிலாக கிடைத்தது. சும்மா அமர்ந்திருக்க பின்னால் விழைந்ததுதான் இந்தப் பயணம்.

    ‘இவ்வளவு செலவு தேவையா?’ என்றுகூட யோசித்து இருக்கிறேன்.

    நான் கிளம்பும் செய்தி கேட்டு திரு. குப்பு வீரமணி அவர்கள் வந்து மகிழ்ச்சியாக சென்று வாருங்கள் என்று கூறி ஊக்குவித்தார். நான் ஆயத்தப்பட முனைந்தேன். அதற்கான (Passport) கடவுச்சீட்டு எடுத்து ஓர் ஆண்டுக்கு மேல் இருக்கும். பின் பணம் அதற்காக சேர்த்தேன். இருப்பினும் உறுதியாக நான் செல்வேன் என்று நினைக்கவில்லை. காலத்தின் கையில் விட்டுவிட்டு என் வேலைகளை பார்த்தேன். காலமும் கணிந்து, தஞ்சையில் எனது சொந்தபந்தங்கள் கொஞ்சம்பேர் சேர்ந்து புனிதப் பயணம் புறப்பட்டனர். நானும் அவர்களுடன் ஆயத்தம் ஆனேன்.

    உடைகள், உடைமை என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு (Doctor’s) மருத்துவர்களையும் அணுகி ஆலோசனை மருந்துகளை வாங்கினேன்.

    நானும் எல்லோருடனும் ஈடுகொடுத்து நல்லபடியாக சுற்றுப்பயணம் செல்ல ஆயத்தமானேன். உமக்கு சித்தமானால் என்னை வழிநடத்தும். மற்றவர்களுக்கு நான் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமே தவிர பாரமாக இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு முற்றிலும் உமது கரத்தில் ஒப்படைக்கிறேன் என்று சொல்லி கிளம்பியதுடன், வரும்வரை எந்த சந்தேகமும் கவலையும் என்னை அண்டவில்லை. கடவுள்மேல் நான் வைத்த நம்பிக்கை என கருதுகிறேன். கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது (கொரிந்தியர் 15-58)

    பணம் கட்டும் போதும் எனக்கு சில இடர்பாடுகள் இருந்தது. அதையும் சின்ன சின்ன மாற்றங்களில் சரிசெய்தேன். வழிச்செலவு பணம் அதுவுமே சில நஷ்டங்களுடன் கிடைத்தது. இருசக்கரம் வண்டி வாங்க நினைத்த பணத்தையும் செலவுக்கு எடுத்து சென்றுவிட்டேன். ஆக நாளைய குறித்த பயம், கவலை இல்லை. கவலைப்படகும் இல்லை (ஏசா 41:10).

    முதலில் பயணத் தேதி செப்டம்பர் 9 என்றனர். பின்னர் 26 என்று மாறியது.

    செப்டம்பர் 25 காலை 6.30 மணிக்கு தஞ்சையில் அனைவரும் திரு. சாம்சன் செல்லத்துரை அவர்கள் வீட்டில் கூடி ஜெபித்து வாடகை பேரூந்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1