Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1
Paarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1
Paarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1
Ebook225 pages1 hour

Paarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எண்ணற்ற நூல்களில் சிறந்தவையாக உள்ளவற்றைப் படிக்க அனைவருக்கும் நேரமும் வாய்ப்பும் இல்லாத நிலையில் அவற்றில் சிலவற்றைப் பற்றிய அறிமுகத்தையும் அதில் உள்ள சுவையான விஷயங்களையும் எளிய இனிய நடையில் தருகிறது இந்த நூல். அத்தோடு ஹாலிவுட் படங்களில் உள்ளத்தைத் தொடும் அரிய படங்களைப் பற்றிய விவரங்கள் பார்த்ததில் ரசித்தது பகுதியில் தரப்படுகிறது. உ.வே. சுவாமிநாதையரின் என் சரித்திரம். காஞ்சி பரமாசாரியர் அபூர்வமாகத் தன்னைப் பற்றிக் கூறிய விஷயங்கள், கன்ஹன்காட் மஹான் சுவாமி ராமதாஸ் அவர்களின் கடவுளைத் தேடி, வேத கணிதம், ஸ்ரீ சத்யசாயிபாபாவைப் பற்றிய அன்புக் கடவுள், பாரத ரத்னா திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்வில் ஒரு கஷ்டமான கால கட்டத்தில் காஞ்சி பரமாசார்யரும் ஶ்ரீ சத்ய சாயிபாபாவும் அடித்த தந்திகள் ஆகியவை பற்றிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் சாரமான பகுதிகளைச் சுருக்கமாக இதில் படிக்கலாம். ஹாலிவுட் படங்களில் ஈட், ப்ரே லவ், ஃபாரஸ்ட் கம்ப், ஜீரோ டார்க் தர்ட்டி உள்ளிட்ட சிறந்த படங்களைப் பற்றிய விவரங்களும் நூலில் இடம் பெறுகின்றன. மனதிற்கு உற்சாகமூட்டி உத்வேகமூட்டும் நூல் இது.

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580151010224
Paarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1

Read more from S. Nagarajan

Related to Paarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1

Related ebooks

Reviews for Paarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது - பாகம் 1

    Paarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. ஈட், ப்ரே, லவ்

    2. புன்முறுவல் ரிஷி!

    3. ஃபாரஸ்ட் கம்ப்

    4. ஏ.கே. செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! – பகுதி - 1

    ஏ.கே. செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! – பகுதி – 2

    5. ஹோம் அலோன்

    6. சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் பகுதி – 1

    சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் பகுதி - 2

    7. ஸிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ்

    8. காஞ்சி பரமாசார்யாள் அருளிய கட்டுரை: வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?

    9. ‘தி டேகிங் ஆஃப் பெல்ஹாம் 123’

    10. வேத கணிதம் கண்ட ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்ய ஸ்வாமிகள் - 1

    வேத கணிதம் கண்ட ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்ய ஸ்வாமிகள் - 2

    11. ‘ப்ளட் ஸ்போர்ட்’

    12. வீட்டுக்கு வந்த அன்னியன்!

    13. ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்’

    14. பூதான இயக்கம் கண்ட புனிதர்! - 1

    பூதான இயக்கம் கண்ட புனிதர்! - 2

    பூதான இயக்கம் கண்ட புனிதர்! - 3

    15. எ ப்யூட்டிஃபுல் மைண்ட்

    16. உ.வே. சாமிநாதையரின் என் சரித்திரம் - 1

    உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் - 2

    உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் - 3

    17. தி கவுண்டர்ஃபெய்டர்ஸ்

    18. இசைப் பேரரசியின் வாழ்வில் ஒரு சம்பவம்! - 1

    இசைப் பேரரசியின் வாழ்வில் ஒரு சம்பவம்! - 2

    இசைப் பேரரசியின் வாழ்வில் ஒரு சம்பவம்! - 3

    19. வெர்டிகல் லிமிட்

    20. கடவுளைத் தேடி ஒரு பயணம்! – 1

    கடவுளைத் தேடி ஒரு பயணம்! – 2

    கடவுளைத் தேடி ஒரு பயணம்! - 3

    21. செக்ரடேரியேட்

    22. அன்புக் கடவுள்! - 1

    அன்புக் கடவுள்! - 2

    அன்புக் கடவுள்! - 3

    23. போனஸ் அயர்ஸ் 1977

    24. அனுதினமும் ரமணருடன்! - 1

    அனுதினமும் ரமணருடன்! – 2

    அனுதினமும் ரமணருடன்! – 3

    25. ஜீரோ டார்க் தர்ட்டி

    26. அன்னையின் அருளுரைகள்

    27. ஆபரேஷன் தண்டர்போல்ட்

    முடிவுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேகம் நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தினால் வாழ்க்கைப் போக்கே மாறுகிறது.

    பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவரை காணொலிக் காட்சியாகப் பார்த்து உரையாற்ற முடிகிறது. சந்திரனுக்குத் தென் துருவப் பகுதியில் நமது கலத்தை தரையிறக்க முடிகிறது.

    எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உடனுக்குடன் இணையதளத்தில் தேடி அதைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

    எத்தனை சாதனங்கள்! எத்தனை புதுக் கலைகள்!!

    இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இருந்தோமானால் நமது வாழ்க்கை ரசிக்காது; சில சமயம் தோல்வியைத் தரும்; துன்பத்தையும் தரும்.

    ஆகவே இந்த தொழில்நுட்பத்தின் விளைவாக மிக வேகமாக வளர்ந்திருக்கும் திரைத்துறையிலும் நமது அறிவுத்திறனைக் கூட்டவும், நாட்டு நடப்பை அறியவும், பொழுதுபோக்காக ஓய்வாக இருக்கவும், பல கலைகளைப் பற்றி அறியவும் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன; வெளி வருகின்றன.

    இவற்றில் சிலவற்றைச் சுட்டிக் காட்டும் முயற்சியாக சில நல்ல திரைப்படங்களை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது.

    இணையதளத்தில் இல்லாத விஷயமே இல்லை; ஆனால் நல்ல பயனுள்ள விஷயங்களை, உள்ளது உள்ளபடி விளக்குகின்ற நூல்கள் எவை என்று தெரிய வேண்டுமே. அதற்கு ஒரு உதவியாக சில நல்ல நூல்களை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. நல்லவர்கள் பலரை இதன் மூலம் அறிந்து கொள்கிறோம். அவர்கள் காட்டிய நல்ல வழியில் செல்ல உத்வேகம் பெறுகிறோம்.

    இந்த 27 அத்தியாயங்களை லண்டனிலிருந்து திருமதி நிர்மலா ராஜு அவர்களை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் நிலாச்சாரல் மின்னிதழில் 2012, 2013 ஆண்டுகளில் எழுதி வந்தேன். வாசகர்கள் உற்சாகமாகப் படித்துப் பாராட்டினர். இதைத் தொடர்ந்து இது நூல் வடிவம் பெற்றது.

    திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    முதல் பதிப்பு வெளியாகி ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் இப்போது பலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் புத்தகம் மின்னணு நூலாகவும் அச்சுப் பதிப்பாகவும் வெளி வருகிறது.

    டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் இதை மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆண்டாண்டு காலமாக எனது எழுத்துப் பணிகளுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    ̀ச. நாகராஜன்

    பங்களூர்

    27-8-2023

    1. ஈட், ப்ரே, லவ்

    ஒரு பெண்ணானவள் அவளது தந்தை, சகோதரர்கள், கணவன் மைத்துனர்கள் ஆகியோரால் மதிக்கப்பட வேண்டும். எங்கே பெண்கள் கௌரவப்படுத்தப்படுகிறார்களோ அங்கே கடவுளர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

    - மனுஸ்மிருதி III – 55, 56

    எலிஸபத் ஜில்பெர்ட்டின் சுயசரிதை

    ஆஸ்கார் அவார்ட் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த ‘ஈட் ப்ரே லவ்’ அனைவரும் பார்க்க வேண்டிய அழகான ஒரு படம். 2010 ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். எலிஸபெத் எம். ஜில்பெர்ட் என்ற அமெரிக்க நாவலாசிரியை தனது அனுபவங்களின் நினைவுத் தொகுப்பை எழுதி 2006ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். ‘ஈட், ப்ரே, லவ்’ படம் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு தான் எடுக்கப்பட்டுள்ளது.

    எல்லாமே பெற்று விட்டதாக நினைக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து அதைப் பிடிக்க ஏங்கும் இன்றைய அவல நிலையைப் பற்றிச் சிந்திக்க இந்தப் படம் நம்மைத் தூண்டுகிறது.

    ஒரு பெண்ணின் உண்மைத் தேடல்

    படத்தில் வரும் கதாநாயகி எலிஸபத் ஜில்பர்ட் (ஜூலியா ராபர்ட்ஸ்) வளமான வாழ்க்கைக்கான அனைத்தையும் பெற்றவள். கணவன், நல்ல உத்தியோகம், வீடு என எல்லாம் இருந்தாலும் ‘தன்னை’ இழந்தது போல உணர்ந்து தன்னை அறியத் துடிக்கிறாள். உலகெங்கும் சுற்றும் அவள் இத்தாலியில் நன்கு சுவையாகச் சாப்பிடுகிறாள். இந்தியாவில் பிரார்த்தனை புரிகிறாள். இந்தோனேஷியாவில் பாலித் தீவில் அன்பை உணர்கிறாள்.

    ஆக ‘ஈட் ப்ரே லவ்’ ஒரு பெண்ணின் உண்மையான தேடலைச் சுட்டிக் காட்டுகிறது. படத்தில் பாலியில் வாழும் ஒரு வயதான மெடிசின் மேன் - பாரம்பரிய மருத்துவர் நம்மை வெகுவாகக் கவர்கிறார். கெடுட் லீயர் என்பது அவர் பெயர். முகத்தையும் கையையும் பார்த்துக் குறி சொல்பவர் அவர். எலிஸபத்தைப் பார்த்தவுடன் உனக்கு ஒரு சிறிய காதல் வாழ்க்கையும் இன்னொரு நீண்ட மண வாழ்க்கையும் உண்டு என்று கூறுவதோடு இன்னும் ஆறு மாதத்தில் மீண்டும் நீ பாலிக்கு வருவாய் என்று குறி சொல்கிறார்.

    அப்படியே நடக்கிறது. முதல் மண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்து விடுகிறது. பின்னர் இந்தியா வந்து தியானத்தைக் கற்கிறாள் எலிஸபத். வாழ்க்கைத் தத்துவம் இலேசாக அவளுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. தன்னைச் சமச்சீர் செய்யும் முயற்சியில் இறங்கி தன்னை உணர ஆரம்பிக்கிறாள். பாலித் தீவுக்குச் சென்று அங்கு விவாகரத்தான ஒரு வணிகரின் அறிமுகம் ஏற்பட நிஜமான காதல் மலர்கிறது.

    தி பிஸிக்ஸ் ஆஃப் தி க்வெஸ்ட்

    தி பிஸிக்ஸ் ஆஃப் தி க்வெஸ்ட் அவளுக்குப் புரிகிறது. மெய்யான அன்பில் தன்னை இழப்பதும் கூட சமநிலைக்கான ஒரு வழி தான் என்பதைக் கடைசியில் அவள் புரிந்து கொள்கிறாள்.

    படத்தில் வரும் முக்கியமான வசனம் இது:-

    I’ve come to believe that there exists in the universe something I call The Physics of The Quest - a force of nature governed by laws as real as the laws gravity or momentum. And the rule of Quest Physics maybe goes like this: If you are brave enough to leave behind everything familiar and comforting (which can be anything from your house to your bitter old resentments) and set out on a truth-seeking journey (either externally or internally), and if you are truly willing to regard everything that happens to you on that journey as a clue, and if you accept everyone you meet along the way as a teacher, and if you are prepared - most of all - to face (and forgive) some very difficult realities about yourself... then truth will not be withheld from you. Or so I’ve come to believe.

    இதன் சுருக்கமான பொருள்: ஈர்ப்பு விசை போன்ற ஒரு சக்தி உலகில் உள்ளது என நான் நம்புகிறேன். உனது சௌகரியங்களை எல்லாம் தைரியமாகத் துறந்து உண்மையைக் காணும் பயணத்தில் நீ இறங்கினால், அந்த பயணத்தில் வரும் அனைத்தையும் ஒரு சங்கேதமாக எடுத்துக் கொண்டு, சந்திக்கும் அனைவரையும் குருவாக எடுத்துக் கொண்டு உன்னைப் பற்றிய மெய்யான சங்கடமான தருணங்களை எதிர்கொள்ள நீ தயாரானால் உண்மை உன்னிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது.

    வாழ்க்கையை பாரமாக ஆக்காமல் மயிலிறகு போல வைத்துக் கொண்டு உண்மைத் தேடுதலில் இறங்கினால் சாந்தி கிடைக்கும் என்று நமக்குப் புரிகிறது

    இந்தியாவில் ஹரியானாவிலும் டெல்லியிலும் படத்தின் ஷூட்டிங் நடந்தது. பாலியில் ஏராளமான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. அனைத்தும் அருமை! வசனங்கள் நேர்த்தியாக அமைந்துள்ளன.

    ஹிந்து மதம் தழுவிய ஜூலியா

    படத்தில் நடிக்கும் ஜூலியா உண்மையிலேயே ஹிந்து மதத்திற்கு மாறி விட்டார். மனச் சாந்தியைத் தரும் மதம் இது என்று கூறும் அவர் ஹிந்து வாழ்க்கை முறையையே இன்று வாழ்ந்து வருகிறார். ஹனுமான் படத்தைப் பார்த்தவுடன் அவருக்கு மனமாற்றம் வந்ததாம். அவரது படக் கம்பெனியின் பெயர் ரெட் ஓம் பிலிம்ஸ்! தீப ஒளியைத் தரும் தீபாவளியை உலக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற அவரது கருத்து பரபரப்பாகப் பேசப்பட்டது! டைம்ஸ் ஆப் இந்தியா தந்த ஒரு செய்தியின் படி ஸ்வாமி தரம் தேவ் என்னும் குருக்கள் ஜூலியா ராபர்ட்ஸின் குழந்தைகளுக்கு ஹிந்துப் பெயர்கள் சூட்டிய விவரம் தெரிய வருகிறது. ஹேஸல் மற்றுல் பின்னயஸ் ஆகியோருக்கு லக்ஷ்மி மற்றும் கணேஷ் என்றும் ஹென்றிக்கு கிருஷ்ண பலராம் என்று பெயர்கள் சூட்டப்பட்டதாம்!

    ஜூலியா ராபர்ட்ஸ் ஏராளமான படங்களில் நடித்துப் பெயர் வாங்கிய அற்புத நடிகை. வாழ்க்கை பற்றிய அவரது தீர்க்கமான சிந்தனையைக் கண்டு வியந்தவாறே ‘ஈட் ப்ரே லவ்’ படத்தை கருத்துக்காக ஒரு முறையும் அவரது நடிப்புக்காக இன்னொரு முறையும் பார்க்கலாம்!

    2. புன்முறுவல் ரிஷி!

    ஒத்ததறிவான்

    Enjoying the preview?
    Page 1 of 1