Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pen Ennum Mahasakthi
Pen Ennum Mahasakthi
Pen Ennum Mahasakthi
Ebook274 pages1 hour

Pen Ennum Mahasakthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த எனக்கு பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதும் வாய்ப்பினை கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, கோகுலம், கதிர் போன்ற பத்திரிகைகள் அளித்தன. இப்பத்திரிகை ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
மஞ்சரி மொழிபெயர்ப்பு செய்யும் வாய்ப்புகளைத் தொடர்ந்து அளித்தது. ஒரு எழுத்தாளராக, ஒரு பத்திரிகையாளராக நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மிகுந்த மனநிறைவை அளிக்கின்றது.
பிரபல எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியரான திருமதி லக்ஷ்மிரமணன் அவர்கள் மூலமாக அறிமுகம் ஆகிய ஆனந்தாயீ எண்டர்பிரைசஸ் திருமதி பிரபாவதியை சந்தித்த ஓர் மாலைப் பொழுதை மறக்க இயலாது.
பாரதி கூறிய துணிவு, ஆனால் அதே சமயம் நம் நாட்டின் பண்பு, கலாச்சாரம் ஆகியவற்றை அப்பழுக்கு இன்றி பின்பற்றும் இவரிடம் பேசுவது என்பது நம் அறிவை பட்டை தீட்டும் விஷயமாகும்.
-காந்தலக்ஷ்மி சந்திரமௌலி
Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580125905184
Pen Ennum Mahasakthi

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Pen Ennum Mahasakthi

Related ebooks

Reviews for Pen Ennum Mahasakthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pen Ennum Mahasakthi - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    பெண் எனும் மகாசக்தி

    Pen Ennum Mahasakthi

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    http://pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பெண் எனும் மகா சக்தி!

    2. முன்னேறும் உடல் நலம்!

    3. பெற்றோர்களை நலமாகப் பாதுகாப்போம்!

    4. தாகம் தீர்த்த கானல் நீர்

    5. எளிதில் குணப்படுத்தலாம் ஞாபக மறதிநோயை!

    6. பூச்சி... பூச்சி... கரப்பான் பூச்சி

    7. வலிது, வலிது, திருமணம் வலிது...

    8. ஓய்வு பெற்றவரா நீங்கள்?

    9. சமையல் மாமிகளின் நிலை என்ன?

    10. ஐந்து நதிகளும், இரண்டு இராஜ நகரங்களும்

    11. தை மாதப் பண்டிகைகள்

    12. திருவிழாவாகும் விவாகரத்துக்கள்!

    13. சவாலா? சக்ஸஸ்தான்!

    14. மன்னருக்கு ஆண் வாரிசு ஆங்கிலேயரின் பிரார்த்தனை!

    15. மூன்று ரத்தினங்கள்

    16. எகிப்துக்கு எப்போது போகலாம்?

    17. மாதமொரு ஆன்மிக நிகழ்ச்சி

    18. ப்ருகு மந்திர் நிகழ்ச்சி

    19. இலக்கிய ஆன்மீகச் செம்மல்கள்

    20.ஆப் கோ – புடவைகள்

    21. கோபமில்லா மனைவி

    22. இந்திய துணியில் வெஸ்டர்ன் கட்

    23. இஸ்திரி வேண்டாத காட்டன் புடவை!

    24. நான்கு பெண்கள் இணைந்து உருவாக்கும் புடவைகள்

    25. இளம் பெண்களுக்கான வாழ்வியல் பயிலரங்கம்

    26. விலைவாசியும் சிக்கனமும்

    27. இதயம் கனிந்த பார்வை

    28. முதுமையிலே இனிமை காண முடியுமா?

    29. என் எகிப்திய சிநேகிதி

    30. கோவாவுக்குப் போகலாமா?

    31. ஒரு நிமிடம் இளைஞனே...

    32. மியூசியம் வீடு

    33. தட்டித் தட்டி வந்த முத்தல்லோ!

    34. இவரைச் சந்தியுங்கள்!

    35. சுற்றம் சூழ வாழப் பழகுங்கள்!

    36. தோள் கொடுத்த தோழர்கள்

    37. சத்தம் இல்லாத உலகம் கேட்டேன்!

    38. சிறுவர் இலக்கியம் - ஒரு பார்வை

    39. எங்கள் ஈரான் நினைவுகள்

    40. குழந்தை வளர்ப்பு

    41. இலக்கியச் சகோதரர்கள்

    42. தாழ்வு மனப்பான்மை போயே போச்சு!

    43. சங்கீதப் பரம்பரை இரட்டையர்கள்

    என்னுரை

    சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த எனக்கு பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதும் வாய்ப்பினை கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, கோகுலம், கதிர் போன்ற பத்திரிகைகள் அளித்தன. இப்பத்திரிகை ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    மஞ்சரி மொழிபெயர்ப்பு செய்யும் வாய்ப்புகளைத் தொடர்ந்து அளித்தது. ஒரு எழுத்தாளராக, ஒரு பத்திரிகையாளராக நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மிகுந்த மனநிறைவை அளிக்கின்றது.

    பிரபல எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியரான திருமதி லக்ஷ்மிரமணன் அவர்கள் மூலமாக அறிமுகம் ஆகிய ஆனந்தாயீ எண்டர்பிரைசஸ் திருமதி பிரபாவதியை சந்தித்த ஓர் மாலைப் பொழுதை மறக்க இயலாது.

    பாரதி கூறிய துணிவு, ஆனால் அதே சமயம் நம் நாட்டின் பண்பு, கலாச்சாரம் ஆகியவற்றை அப்பழுக்கு இன்றி பின்பற்றும் இவரிடம் பேசுவது என்பது நம் அறிவை பட்டை தீட்டும் விஷயமாகும்.

    -காந்தலக்ஷ்மி சந்திரமௌலி

    1. பெண் எனும் மகா சக்தி!

    ஒரு பெண்ணின் அபார சக்திக்கு ஈடு இணை ஏது? இச்சக்தியினால்தான் உலகச் சிறப்புக்கான உந்துதல் ஏற்படுகின்றது.

    இச்சக்தியின் வலிமையை அளவிட இயலாது. ஸ்ரீ மாதா என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் அழைக்கப்படும் ஆதிசக்தியின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததுதானே இவ்வுலகம்?

    ஒரு பெண், தன் பொறுமையினாலும், அசாத்திய சக்தியினாலும் எதையும் சாதிக்க இயலும் என்று ஸ்ரீபார்வதிதேவி நிரூபித்திருக்கிறாள். ஆம்; இவ்வுலகை ஆளும் சிவனைப் பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து கைப்பிடித்தவள் அல்லவா?

    நம் மூதாதையர்கள் பெண்ணின் சக்தியைப்பற்றி நன்கறிந்து வேதகாலத்திலிருந்து அவர்களுக்கு மிக உயர்ந்த இடத்தை அளித்தனர்.

    எங்கு பெண்கள் பூஜிக்கப்படுகின்றனரோ அங்கு இறைவன் வசிக்கிறார் என்று வேதம் மொழிகின்றது.

    தான் நன்கு வாழ வேண்டும் என்று எந்த ஆண்மகன் நினைக்கிறானோ, அவன் தன்னைச் சார்ந்த பெண்மணிகளிடம் தந்தையாக, அண்ணனாக, தம்பியாக, கணவனாக, கொழுந்தனாக அவரவர்க்கு வாய்த்தபடி போற்ற வேண்டும். எங்கு பெண்கள் கௌரவிக்கப்படுகின்றனரோ அங்கு இறைவன் மகிழ்ச்சியுறுகிறான். எங்கு மதிக்கப்படுவதில்லையோ அங்கு எந்தப் பூஜையும் பலனளிக்காது. எந்த வீட்டில் சுற்றத்தாரால் பெண் சரியாக நடத்தப்படுவதில்லையோ, மதிக்கப்படுவதில்லையோ அங்கு அவர்கள் முற்றிலும் அழிந்து விடுகின்றனர். ஏதோ ஒரு மாயாஜாலம்போல, ஒரு நொடியில் அனைத்தும் அழிந்து விடும் என்று மனுஸ்ம்ருதி கூறுகின்றது.

    இராவணனின் விதி என்பது என்று அவன் ஒரு பெண்ணுக்குத் தீங்கு விளைவித்தானோ அன்றே தீர்மானிக்கப்பட்டு விட்டது. வேதவதி எனும் பெண்ணை இராவணன் ஓர் ஆஸ்ரமத்தில் கண்டான். வேதவதி ஸ்ரீ மகாவிஷ்ணுவைக் கைப்பிடிக்க வேண்டுமெனத் தவம் செய்து கொண்டிருந்தாள். இராவணன் வேதவதியை அடைய வேண்டுமென எண்ணினான். ஆனால், வேதவதி அவனை வெறுத்து ஒதுக்கினாள். அதனால் கோபம் அடைந்த இராவணன் வேதவதியின் தலை முடியைப் பற்றி இழுத்தான். கோபமும், அவமானமும் தாக்க, வேதவதி தன் நீண்ட தலைமுடியை வெட்டி எறிந்து கொழுந்து விட்டு எரியும் தீயில் குதித்துத் தன்னை மாய்த்துக் கொண்டாள்.

    வேதவதி தான் சீதாதேவியாக மறுஜென்மம் எடுத்து, இராவணனின் முடிவுக்குக் காரணமானாள். ஸ்ரீராமன் மூலமாக இராவணன் செய்த கொடிய பாவத்திற்கு உரிய தண்டனைக்குக் காரணமானாள் சீதா பிராட்டி.

    ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னால் ஒரு பெண்மணி இருக்கிறாள் என்பது ஆங்கிலப் பழமொழி. இதுவே வேதகாலத்தில் குறிப்பிட்டுள்ள சிவ-சக்தி ஐக்கியமாகும்.

    கிறிஸ்துவ மதத்தின் தேவதூதனான ஜீஸஸ் மதர் மேரியிடமிருந்து ஞான ஒளி பெற்றார். சரித்திரத்தில் தனக்கென்று ஓர் இடம் பெற்றுள்ள வீர சிவாஜியை ஒரு வீரனாக்கிய பெருமை அவருடைய தாய் ஜீஜாபாய்க்குத்தான் உரியது. பக்த காளிதாசன் தன் மனைவியால் ஒதுக்கப்பட்டவுடன், அவளுடைய தூண்டுதலினால், காளிதேவியிடம் தஞ்சம் புகுந்தார். பிறகு மாபெரும் கவிஞரானார்.

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒரு பெரும் துரோகத்தைத் தன் மனைவிக்கும், குடும்பத்திற்கும் செய்துவிட்டார். ஆனால், அவருடைய மனைவி ஹிலாரி கிளின்டனின் முழு ஆதரவினால் மீண்டும் ஜனாதிபதி ஆனார்.

    சரித்திர ஏடுகளைப் புரட்டினால், எண்ணற்ற பெண்கள் தங்களின் அதீத மனசக்தி, பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு ஆகியவற்றாலும், அன்பாலும், தாமரை இலைத்தண்ணீர் போன்ற போக்கினாலும் பல விஷயங்களைச் சாதித்துள்ளனர்.

    பக்த மீராபாய் துணிவு மற்றும் தீராத அன்பினால் வெற்றி கண்டவர். வீர லக்ஷ்மிபாய் தன் கற்பின் உயர்வு மற்றும் திடமான நம்பிக்கையினால் வெற்றிக் கொடியை நாட்டியவர்.

    இந்தியப் பெண்கள் தன் கணவரைக் காப்பாற்ற சாவித்திரியாகவும் மாறி உள்ளனர். தன் அன்புக் கணவரோடு உடன்கட்டை ஏற ‘சதி'களாகவும் மாறியுள்ளனர்.

    எங்கெல்லாம் சிவபெருமானுக்கும் சக்திதேவிக்கும் பிரிவு ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் பொறுப்பு மாற்றம் ஏற்படுகின்றது. சீதை 'லக்ஷ்மண ரேகை'யைத் தாண்டிய பிறகுதான் இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டாள். சக்தி தேவியான சதி தன் கணவன் சிவபெருமானின் பேச்சைக் கேளாமல் தன் தந்தையின் யாகத்திற்குச் சென்றாள். அங்கு தன் கணவருக்குச் செய்யப்படும் துரோகத்தை எண்ணிக் கோபமுற்று நெருப்பில் குதித்தாள்.

    காந்தாரி எடுத்துக் கூறியும் கேளாமல் துரியோதனன் உடைவாள் ஏந்தியதால் உயிரை இழந்தான்.

    இன்று நம்மைச் சுற்றிப் பல எதிர்மறை எண்ணங்களும், விஷயங்களும் உள்ளன. இதனால் ஆண் - பெண் இருவரிடையே தோன்றும் மனவேறுபாடுகள் அழிவைத் தருகின்றன.

    கற்பழிப்பு, பெண் சிசுக் கொலை, இருபாலருக்கும் சம உரிமை இல்லாமை, சம அந்தஸ்து இல்லாமை. வரதட்சணைக் கொடுமை, அடக்கி வைத்தல் ஆகியவை அதிகமாக உள்ளன.

    விதைப்பதுதானே முளைக்கும்? அன்பு, மன்னிப்பு, விட்டுக் கொடுத்தல் ஆகியவைக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பயந்தாங்குளித்தனம், துரோகம், பேராசை ஆகியவை அதிகரித்துள்ளன.

    பெண்களிடம் குடி கொண்டுள்ள அந்தச் சக்தியைப் போற்றிப் பாராட்டி இச்சமூகத்திற்குப் பெரும் நன்மையை நாம் ஏற்படுத்த வேண்டும்

    இப்படிப் பெண் சக்தியைப் போற்றுவதனால் பி.டி. உஷா, சானியாமிர்சா போன்றவர்களின் முழுத் திறமைகளும் லதா மங்கேஷ்கர் மற்றும் அம்ருதாப்ரீதம் போன்றோரின் கலை உணர்வும் மதர் தெரஸாவின் பரிபூரண அன்புடன் கூடிய சேவையுணர்வும், கிரண்பேடி மற்றும் சரோஜினி நாயுடுவின் துணிவும் முதலானவற்றைத் தொடர்ந்து பெற இயலும்.

    இன்றும் பெண்கள் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் தன்னை நிலை நாட்டுவதில் வெற்றி பெற்று வருகின்றனர். இந்திரா லூயி, அருணாசாயிராம், டென்னிஸ் வீராங்கனை சிந்து என்று கூறிக் கொண்டே போகலாம். பெண் எனும் மகாசக்தியை போற்றுவோம்.

    2. முன்னேறும் உடல் நலம்!

    உடல் நலத்திற்காகப் பின்னோக்கி நடக்கும் சீன நாட்டுப் பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த பழக்கம் இன்று புதுமையான உடல்நல விஷயமாக ஆகிவிட்டது.

    கயிறு கொண்டு குதிப்பது, உடல் நலத்திற்காக மூலை முடுக்குகளிலெல்லாம் புதிதாக முளைத்திருக்கும் ஜிம்கள், பளு தூக்குதல் இவை அனைத்தையும் மறந்து விடுங்கள். அதற்குப் பதிலாக இன்று உடல் நலத்திற்குப் புது மந்திரமாக இருப்பது பூங்கா நடைப்பயிற்சி! இது பின்னோக்கி நடப்பது!

    நிதானமாகப் பின்னோக்கி நடப்பது உடல் நலத்தை உயர்த்துகிறது.

    ஜப்பான் நாட்டில் மிகவும் பிரபலமடைந்து விட்ட இந்த நடை கொழுப்புச் சத்தை வேகமாகக் குறைக்கிறது. இரண்டு கால்களாலும் சமச்சீராக நடக்க வைக்கிறது. உலகம் முழுவதும் இருபது இடங்களில் பின்னோக்கி நடைப் பயிற்சி வெற்றி பெற்று, அதற்கென்று ஓர் இயக்கம்கூட ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

    வேறு பல கடினமான உடல் சக்தியை உபயோகிக்கும் விளையாட்டுகளில் மாரடைப்பு நோய்க்கான ஆபத்து அதிகமாக இருப்பதால், இப்படிப்பட்ட பின்னோக்கி நடைப்பயிற்சி சரியான மென்மையான பயிற்சி ஆகிறது என்று பிரபல இதய நோய் நிபுணர், உயர் மருத்துவர் ஹஸ்முக்ரவத் கூறுகிறார்.

    மிகக்கடினமான பயிற்சிகள் இதய தசை நார்களைத் தாக்கிப் பல உயிரிழப்பு ஏற்படுகிறது என்று எச்சரிக்கிறார். ‘ஆட்ரேன லைன்' எனும் இரசாயனத் திரவம் மிக அதிகமாக ஓர் உடலில் சுரக்கும் பொழுது, அதாவது மிக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யும் பொழுது இப்படிப்பட்ட திரவம் சுரக்கிறது, அப்பொழுது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள் சுருங்கி விடுகின்றன. இதனால் இதயத்திற்குள் இரத்தம் போகாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    அதனால் இந்த நடைப்பயிற்சி நல்லது என்றுதான் கூற வேண்டும். ஆனால், அப்படிப் பின்னோக்கி நடக்கும்பொழுது கால்களை மடக்காதீர்கள். நடக்கும் வழியில் தடுக்கும் பொருட்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    பின்னோக்கி நடப்பது உடலைக் கச்சிதமாக வைத்துக் கொள்ள மிகவும் உதவுகிறது. ஏனெனில் இது செய்வதற்கு உடல் கடின உழைப்பை ஏற்றுக் கொள்கிறது. அது மட்டுமல்ல, இதனால் கொழுப்புச் சத்து மிக வேகமாகக் கரைகிறது. உங்களுடைய மற்ற புலன்கள் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன. குறுகலான அடிகளை வைப்பதால் மூட்டுகளுக்குச் சிறிதளவு பளு மட்டுமே அளிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் திறந்த வெளிகள் அதிகமாக இல்லை. இதை ஓர் உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யலாம். நீங்கள் உங்களுடன் ஒரு நண்பனை உங்கள் கண்களாக இருக்கும்படிக் கூறலாம் என்று பிரபல உடற்பயிற்சி நிபுணர் ஜனரன் வாட்சன் கூறுகிறார்.

    நடிகை பெரிசாத் கொராபியா, மறைந்துவிட்ட என் தாத்தா ஒருமுறை விடுமுறைக்காக மணாலி சென்றிருந்தபொழுது அங்கு இந்தப் பின்னோக்கி நடைப்பயிற்சிபற்றிக் கூறினார்கள் என்று நினைவு கூர்ந்தார்.

    அவருக்கு இதய நோய் இருந்தது. அப்பொழுது மலைச் சரிவில் பின்னோக்கி நடக்குமாறு கூறினார். ஏனெனில் இது இதயத்திற்குக் குறைவாக வேலையை அளிக்கிறது. நான் இதயத்தின் சீரான இயக்கத்திற்காகப் பலவித உடற்பயிற்சிகளைச் செய்கிறேன். என்றாலும் ஒரு மாறுதலுக்காகப் பின்னோக்கி நடக்க ஆசைப்படுகிறேன். ஆனால், மக்கள் மிகக் கடுமையான உடற் பயிற்சிகளைச் செய்வது பற்றித்தான் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதால் இந்தப் பின்னோக்கி நடை மற்றும் அதன் சிறப்புகள் மக்களிடையே பரவ பல நாட்கள் ஆகும் என்கிறார்.

    பின்னோக்கி நடையின் ஆதாயங்கள்:

    100 அடிகள் பின்னோக்கி நடையில் எடுத்து வைத்தால், அது நேராக நாம் நடப்பதில் 1000 அடிகளுக்குச் சமமாகும்.

    நடைமாற்றத்தை முற்றிலும் நீக்கி, கண்பார்வையைச் சீராக்குகிறது.

    இடுப்பு எலும்புக் கால்கள் மற்றும் இடுப்பிற்கு, கீழ்ப் பகுதிகள் பலம் பெறுகின்றன.

    மூளையை மிக அதிகமாகத் தெளிவாக்குகிறது.

    இன்று பல பார்க்குகளில் பின்னோக்கி நடப்பதற்கான இடங்கள் உள்ளன.

    3. பெற்றோர்களை நலமாகப் பாதுகாப்போம்!

    நமக்கு உயிரும், உணவும், வாழ்வும் அளித்த பெற்றவர்கள் மீது அளவு கடந்த பாசம் நம் எல்லோருக்குள்ளும் புதைந்து கிடக்கின்றது.

    அவர்களுக்கு நிறையச் செய்ய வேண்டும் எனும் ஆசை ஒருபுறம், நம் அன்றாட வாழ்க்கையின் ஓட்டம் ஒரு புறம் என்று இன்று தவிப்பவர்கள் ஏராளம்.

    அன்று, ஏன் 25 ஆண்டுகளுக்கு முன்புகூட மூத்த குடிமக்கள் தனியாக வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. ஆனால், இன்று குடும்பத்துடன் வாழும் முதியவர்களின் எண்ணிக்கை குறைந்து முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன.

    இன்றைய வேகமாக ஓடும் வாழ்க்கை முறையில் பெற்றோர்களைப் பேணுதல் என்பது சற்றே இரண்டாம் பட்ச இடத்தைப் பிடிக்கின்றது. அவர்கள் உடல் நலக்கேடு அடைந்து தவிக்கையில் அவர்களுக்கு இணையாக நாமும் தவித்து நம் பி.பி, சுகர் போன்றவற்றை அதிகரித்துக் கொள்கிறோம்.

    தனியாக வசிக்கும் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை:

    1. திருட்டு, கொலை, கொள்ளை இவற்றிலிருந்து முழுப் பாதுகாப்பு:

    வீட்டுக் கதவுகளின் தாழ்ப்பாள், பூட்டு, சாவி போன்றவை பத்திரமான இடத்தில் இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் மறுசாவி கட்டாயம் இருக்க வேண்டும்.

    முக்கியமான தொலைபேசி எண்களைப் பெரிய அளவில் எழுதி வீட்டில் ஆங்காங்கு ஒட்டி வைக்கவும்.

    2. சம வயதுடைய சிநேகிதர்கள்:

    தனிமை விரும்பிகளாக உங்கள் பெற்றோர் இருந்தாலும், அவர்களுக்கு ஏற்ற சிநேகிதர்களை அமைத்துக் கொடுங்கள். தனிமை கொடுமையானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.

    3. வீட்டிற்குள் பாதுகாப்புடன் நடமாட:

    கீழே விழுந்து எலும்புகள் முறிந்து அவதிப்படுபவர்கள் மிக அதிகம். இதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்வது தலையாய கடமை.

    கால் உடைந்த முக்காலிகள், சேர்கள் போன்றவற்றை உடனுக்குடன் சரி செய்யுங்கள் அல்லது தூக்கி எறியுங்கள்.

    தரையில் மின்சார வயர்கள், கேபிள் வயர்கள் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    டி. விக்குச் சற்று தூரத்தில் ஒரு கட்டில் அவசியம் தேவை.

    மாடிப்படிகள், வீட்டின் வாயிற்படிகளில் பிடித்துக்கொண்டு ஏறுவதற்கு உரிய வகையில் இருபுறமும் கெட்டியான இரும்புக் கம்பிகளைப் பொருத்துங்கள்.

    வீட்டில் நடமாடும் இடங்களில் குழந்தைகளின் பொம்மைகள், புத்தகங்கள் போன்றவை இறைந்து கிடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    அவர்கள் உபயோகிக்கும் செருப்புகள் தேய்ந்து போனால் உடனே மாற்ற ஏற்பாடு செய்யுங்கள்.

    குளிக்கும் அறை, கழிவறை வாயில்களில் கெட்டியான ரப்பர் மிதியடிகளைப் போடுங்கள்.

    வீட்டில் பல இடங்களில், குறிப்பாக, குளியல் அறையில் அவர்கள் பிடித்துக் கொள்ள வசதியாக கம்பிகளைப் பொருத்துங்கள்.

    குளியலறையில் ஒரு முக்காலி அவசியம்.

    எந்த ஃபர்னிச்சராக இருந்தாலும் சரி, அது இடுப்புக்கு மேல் உயரமானதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். (முடக்கு வாதம், மூட்டுவலி உள்ளவர்களுக்கு இது மிகவும் அவசியம்).

    உணவு:

    60 வயதைத் தாண்டிய ஆண் மகன் 2,400 கலோரி உணவும், பெண்ணாக இருந்தால், 1,800 கலோரி

    Enjoying the preview?
    Page 1 of 1