Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ezhuchiyuttum Ulaga Thinangal!
Ezhuchiyuttum Ulaga Thinangal!
Ezhuchiyuttum Ulaga Thinangal!
Ebook109 pages42 minutes

Ezhuchiyuttum Ulaga Thinangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெறுதற்கரிய இந்த மனிதப்பிறவியைப் பெற்ற நாம், நம்மை வாழ வைக்கும் புவி, ஆகாயம்,, வாயு, அக்னி, நீர் ஆகிய பஞ்ச பூதங்களையும் போற்றி அவற்றின் தூய்மை கெடாதபடி பாதுகாக்க வேண்டியதை நமது தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். உலகின் தட்ப வெப்ப நிலை கெடாதபடியும், காற்று, நீர், பூமி,, ஆகாயம் ஆகியவற்றை சிறப்பாகக் காப்பதுடன் நம்முடன் கூட வாழும் இதர மனிதர்களை வறுமைப் பிடியிலிருந்து அகற்ற வேண்டுவதும், பெண்குலத்தைப் போற்றி சம உரிமை கொடுப்பதும் நமது கடமை இதற்காக பல பெரியோர்களால் உலக தினங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் கீழ்க்கண்ட ஒன்பது உலக தினங்களைப் பற்றிய அரிய விவரங்களை இந்த நூல் தருகிறது.

உலக மகளிர் தினம் - மார்ச் 8

உலக பூமி தினம் - ஏப்ரல் 22

உலக சுற்றுப்புறச்சூழல் தினம் - ஜூன் 5

உலக யோகா தினம் - ஜூன் 21

உலக மக்கள்தொகை தினம் - ஜுலை 11

உலக சந்திர தினம் - ஜூலை 20

உலக ஓஸோன் தினம் - செப்டம்பர் 16

உலக நதிகள் தினம் - செப்டம்பர் 24

உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17

அத்தோடு நமக்கு வழிகாட்டிகளாகத் திகழும் ஸ்வாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், மஹாத்மா காந்திஜியின் ஜெயந்தி மற்றும் நினைவு தினங்களுக்காக எழுதப்பட்ட கட்டுரைகளும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. இதை பரிசாக அளித்து மற்றவருக்கும் விழிப்புணர்ச்சி ஊட்டலாம்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580151010915
Ezhuchiyuttum Ulaga Thinangal!

Read more from S. Nagarajan

Related to Ezhuchiyuttum Ulaga Thinangal!

Related ebooks

Reviews for Ezhuchiyuttum Ulaga Thinangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ezhuchiyuttum Ulaga Thinangal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எழுச்சியூட்டும் உலக தினங்கள்!

    Ezhuchiyuttum Ulaga Thinangal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. உலக மகளிர் தினம் - மார்ச் 8

    2. உலக பூமி தினம் - ஏப்ரல் 22

    3. உலக சுற்றுப்புறச்சூழல் தினம் - ஜூன் 5

    4. உலக யோகா தினம் - ஜூன் 21

    5. உலக மக்கள்தொகை தினம் - ஜுலை 11

    6. உலக சந்திர தினம்! - ஜூலை 20

    7. உலக ஓஸோன் தினம் - செப்டம்பர் 16

    8. உலக நதிகள் தினம் - செப்டம்பர் 24

    9. உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17

    10. விவேகானந்தர் ஜெயந்தி தினம் - ஜனவரி 12

    11. மகாகவி பாரதியார் நினைவு தினம் - செப்டம்பர் 11

    12. காந்தி ஜெயந்தி தினம் - அக்டோபர் 2

    முன்னுரை

    அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஔவையார். ‘ஜந்தூனாம் நர ஜன்மம் துர்லபம்’ என்றார் ஆதி சங்கரர்.

    பெறுதற்கரிய இந்த மனித ஜென்மத்தைப் பெற்ற நாம், நம்மை வாழ வைக்கும் புவி, ஆகாயம்,, வாயு, அக்னி, நீர் ஆகிய பஞ்ச பூதங்களையும் போற்றி அவற்றின் தூய்மை கெடாதபடி பாதுகாக்க வேண்டியதை நமது தலையாய கடமையாகக் கொள்ள வேண்டுமல்லவா?

    உலகின் தட்ப வெப்ப நிலை கெடாதபடியும், காற்று, நீர், பூமி,, ஆகாயம் ஆகியவற்றை சிறப்பாகக் காப்பதுடன் நம்முடன் கூட வாழும் இதர மனிதர்களை வறுமைப் பிடியிலிருந்து அகற்ற வேண்டுவதும், பெண்குலத்தைப் போற்றி சம உரிமை கொடுப்பதும் நமது கடமை.

    இதற்காக பல பெரியோர்களால் உலக தினங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. விழிப்புணர்ச்சி தினங்களாகக் கருத வேண்டிய இந்த தினங்களைப் பற்றி 2019-லிருந்து மாலைமலர் இதழில் அவ்வப்பொழுது எழுதி வந்தேன். கோகுலம் கதிர் இதழிலும் எனது கட்டுரைகள் வெளியாகின.

    அத்தோடு நமக்கு வழிகாட்டிகளாகத் திகழும் ஸ்வாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், மஹாத்மா காந்திஜியின் ஜெயந்தி மற்றும் நினைவு தினங்களுக்காக எழுதப்பட்ட கட்டுரைகளும் மாலைமலரில் வெளியாயின.

    அவை அனைத்தின் தொகுப்பாக மலர்கிறது இந்த நூல்.

    இவற்றை மாலைமலரில் வெளியிட்ட மாலைமலர் அதிபர் திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், மாலைமலர் CEO திரு ரவீந்திரன் அவர்களுக்கும், திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட மாலைமலர் ஆசிரியக் குழுவினருக்கும் கோகுலம் கதிர் ஆசிரியர் திருமதி கமலி ஶ்ரீபால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    இந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் டாக்டர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    எனது நூல்களைப் படித்து அவ்வப்பொழுது ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி வரும் வாசகப் பெருமக்களுக்கு எனது இதயம் கலந்த நன்றி உரித்தாகுக.

    நன்றி.

    14-3-2024

    ச. நாகராஜன்

    பங்களூரு

    1. உலக மகளிர் தினம் - மார்ச் 8

    பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்!

    உலக மகளிர் தினம்

    மார்ச் 8-ம் நாள் உலக மகளிர் தினம்.

    2024ஆம் ஆண்டின் கோஷமாக முன்னிலைப்படுத்தப்படுவது : பெண்கள் முன்னேற்றத்தில் முதலீடு செய்யுங்கள்; முன்னேற்றத்தை துரிதப் படுத்துங்கள்.(Invest in women; Accelerate progress)

    உலக ஜனத்தொகை 810 கோடி என்ற எண்ணிக்கையை 2024இல் எட்டி விட்டது. இதில் மகளிரின் எண்ணிக்கை 49%

    பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதாக அனைவரும் கூறி வந்த போதிலும் உலகில் சுமார் 8 சதவிகித பெண்கள் அன்றாட

    உணவிற்கே அல்லல் படும் நிலையில் இருக்கின்றனர்.

    ஆகவே சுருக்கமாகச் சொல்லப் போனால், போகுமிடம் வெகு தூரம் ; போக வேண்டும் நெடு நேரம் என்பதே பெண்களின் சம உரிமைப் போராட்டத்தின் இன்றைய நிலை.

    பெண்கள் இன்றிருக்கும் நிலையைக் கூடத் தாமாகப் பெறவில்லை. அதற்கென ஆங்காங்கே உரிமைப் போர்கள் நடைபெற்றே வந்தன.

    பெண்கள் போராடிப் பெற்ற ஓட்டுரிமை

    பெண்கள் சாதாரணமாகப் பெறவில்லை ஓட்டுரிமையை! மிகுந்த போராட்டம் அதற்காகவே பிரிட்டனில் வெடித்தது. பெண்கள் ஓட்டுரிமை வேண்டும் என்று கேட்ட போது பைத்தியக்காரத்தனமான, சூழ்ச்சி நிறைந்த முட்டாள் பெண்கள் கேட்கும் உரிமை இது என்று கூறிய விக்டோரியா மகாராணியார் ஒரு பெண்ணிற்கு சாட்டையால் அடித்து தண்டனை தர ஆணையிட்டார்.

    ஆனால் பெண்கள் அசரவில்லை. 1901ஆம் ஆண்டு ஏழாம் எட்வர்ட் பட்டம் சூட்டிய போது எமிலின் பங்கர்ஸ்ட் என்ற பெண்மணியின் தலைமையில் கூட்டம் கூட்டமாகப் பெண்களின் அணி திரண்டது. ஆண்கள் கூட்டம் போடும் இடங்களிலெல்லாம் அவர்கள் திடீரென வந்து குதித்தனர். மேடை மீது ஏறி மெகா போன் வாயிலாக எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்று கோஷமிட்டனர். உண்ணாவிரதம் இருந்தனர். சிறைக்கும் சென்றனர்.

    இந்தியாவில் வைசிராயாக இருந்த லார்ட் கர்ஸான் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக பதினைந்து காரணங்களைப் பட்டியலிட்டார். ராயல் கமிஷனோ ‘ ஒரு பெண்ணின் மூளை எதையும் சமாளித்து ஈடு கொடுக்க வல்லதா" என்று ஆராய முற்பட்டது.

    ஆனால் பெண்கள் அயர்ந்து போகவில்லை.

    முதலாம் உலக மகாயுத்தம் 1914-ல் ஆரம்பிக்கவே ஆண்கள் போர்க்களம் செல்லவே, அனைத்து வேலைகளையும் பெண்கள் மேற்கொண்டு தங்கள் திறனைக் காண்பித்தனர். டிராம் விடுவது, கார்களை ஓட்டுவது, மெகானிக்குகளாக அனைத்து வாகனங்களையும் பழுதுபார்ப்பது உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்து காட்டவே உலகமே பிரமித்தது. 1918இல் யுத்தம் முடிந்தது. பிரதம மந்திரி ஜார்ஜ் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கினார்.

    போராட்டம் உலகெங்கும் வலுக்கவே இன்னும் 28 நாடுகள் பெண்களுக்கு உரிமையை வழங்கின. 1952இல் களமிறங்கிய ஐ.நா. உலகெங்கும் ஆண்களுக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்குக் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

    முன்னோடிகள்

    பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஏராளமான அதிசயப் பெண்மணிகள் உள்ளனர். எடுத்துக்காட்டிற்கு எலினார் ரூஸ்வெல்டைச் சொல்லலாம். அமெரிக்க ஜனாதிபதியாக நான்கு முறை பதவி வகித்து சாதனை புரிந்த ப்ராங்ளின் ரூஸ்வெல்டின் மனைவியான இவர்,

    Enjoying the preview?
    Page 1 of 1