Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manida Siragugal
Manida Siragugal
Manida Siragugal
Ebook244 pages1 hour

Manida Siragugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீர்க் குமிழியாய் வாழ்ந்து மடியாமல் வைரக் குன்றாய் வாழ்ந்து வளர்வாரை வையகமும் போற்றுகிறது. 'அறிவு அற்றங் காக்கும் கருவி' என்பார் வள்ளுவர்.

அறிவினால் அறிந்து அகிலத்தை வென்றோர் பலர்; நற்செயல்களைச் செய்து அச்செயலால் உயர்ந்தோர் பலர்; கடமை பெரிதென அரிதின் முயன்று தனக்கும், தன்னைச் சார்ந்தோருக்கும் பயன் பெற்றுயர்வோர் சிலர்! தான் பெற்ற பெருமைகளை மற்றவர்களுக்கும் தந்து பயன் பெற்றுயர்வோர் சிலர்! என வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களை பற்றிய கட்டுரைகளே இந்நூல்.

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580174710649
Manida Siragugal

Related to Manida Siragugal

Related ebooks

Reviews for Manida Siragugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manida Siragugal - Pulavar K. Raveendran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மானிடச் சிறகுகள்

    Manida Siragugal

    Author:

    புலவர் கு. இரவீந்திரன்

    Pulavar K. Raveendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pulavar-k-raveendran

    என்னுரை

    மானிடச் சிறகுகள் மனதில் பூத்த சிந்தனைத் துளிகளின் வெளிப்பாடுகள் அன்றி வேறில்லை. காலச்சூழலில் கண்டதும், கேட்டதும், கற்றதும் ஆகியச் செய்திகள் எண்ணத்தில் தோன்றி விதைத்தவை. விதைகள் உறங்குவதில்லை; விதைத்தவன் உறங்குவான். எண்ண விதைகள், எழுச்சி உரைகளாய்த் தோன்றி விதைக்கப்படுவதால் புரட்சிகளும் தோன்றி மாற்றத்தை விதைத்துச் செல்கின்றன.

    அறிவுப் புரட்சி, அறிவியல் புரட்சி, மக்கள் புரட்சி, விடுதலைப் புரட்சி, அரசியல் புரட்சி, பொருளாதாரப் புரட்சி எனக் காலந்தோறும் புரட்சிகள் வளர்ந்து மானிடம் புரட்சியாய் வளர்ந்து வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

    அப்புரட்சியே வானை அளந்தது; கடல் மீனை அளந்தது; மண்ணை அளந்தது; மானிட அறிவை அளந்தது; காற்றைக் கடந்தது; காலத்தை வென்றது.

    அணுவின் ஆற்றல் அணுகுண்டுகளாய் மாறியபோது அதிர்வும், அச்சமும் தோன்றி வளர்ந்தது. பிணக்கும் பகையும் மூண்டு வளர்ந்தன. முட்செடிகளிலும் ஆங்காங்கே நறுமணமும், பேரழகும் கொண்ட மலர்கள் மலர்ந்து மணம் வீசுவதுண்டு. அதுபோலவே மானிடச் சிறகுகளால் மகத்துவமிக்க மானிடர்கள் மண்ணில் தோன்றி மண்ணை வளப்படுத்துவதுண்டு. காந்தியடிகளின் அகிம்சை ஏகாதிபத்தியங்களின் எதிர்வினைகளைக் களைந்து மக்களாட்சியில் மலர்ந்த மகத்துவம் ஆனது.

    ஆபிரகாம் லிங்கனின் புரட்சி, நிறப்பாகுபாடுகளின் மூடத்தனத்தை முட்டறுத்து மானிடச் சமுதாயத்தை மக்களாட்சியின் கீழ் அணிவகுத்து அழகு பெறச் செய்தது. நெப்போலியனும், அலெக்சாண்டரும் நாடு பிடிக்கும் ஆசையால் கொண்ட வெற்றிகள் யாவும் வெறுமையாய்ப் போனது.

    ஹிட்லரும், முசோலினியும் ஆணவத்தால் அன்பற்று மானுடத்தை அழித்து முன்னேறிய காட்சிகள் யாவும் வரலாறு வரைபடம் ஆக்கியது.

    பிழைப்புக்காக மட்டும் வாழ்வது வாழ்வன்று‌‌ வாழ்வதற்காகவே வாழ்வு என வாழ்ந்து காட்டிய வல்லாண்மை மிக்க ஒரு வாழ்வு உயிர்நீர் போல் என்றும் நிலைத்து உலகிற்கு வழிகாட்டியது.

    வழிகாட்டிச் சென்றோரால் உலகம் நல்வாழ்வு பெறுகிறது. செம்மையிற் சிறந்து செயலாற்றுகிறது. செம்மை செயலாகும் போதுதான் வறுமை இல்லாத உலகம் மகிழ்ச்சி கொள்கிறது. அம்மகிழ்ச்சி மானிடத்தின் மகிழ்ச்சியால் பெறத்தக்கது.

    இளமைப் பருவத்தில் இதிகாசம் படைக்கலாம் ஆகாயத்தில் கோட்டை கட்டலாம்...

    பாதாளத்தைக் குடைந்து பந்தாடலாம்... புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த போது நியூட்டனுக்கு வயது 24. உள்ளத்தை உருக்கும் திருவாசகத்தைப் படைத்தபோது மாணிக்கவாசகருக்கு அகவை 24. வானொலியைக் கண்டறிந்த போது மார்க்கோனிக்கு வயது 27. டெலிபோனைக் கண்டறிந்த போது கிரகாம்பெல்லுக்கு வயது 29. மானிடத் துயரத்தில் கவிதை புனைந்து மகத்துவம் கண்ட கவிஞர் கீட்சுக்கு வயது 29. மடமையைக் கொளுத்தி மக்கள் கவிஞராய் மக்களின் மனங்களில் மானிடத்தை விதைத்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாருக்கு வயது 29. பாட்டுக்கொரு புலவன், பைந்தமிழ் பாவலன் பாரதி கவிதைக் களத்தில் கால்தடம் பதித்த போது வயது 11.

    சாதனைச் சிகரத்தில் தடம் பதித்தவர்களால் மானிடச் சிறகுகள் வலிமை பெறுகின்றன. அவ்வலிமை வாழும் காலத்தில் இவ்வையகம் கண்டு உயர்வடைதல் வேண்டும் என்னும் உயர்நோக்கம் கருதியே மானிடச் சிறகுகளாய் இந்நூல் வடிவம் பெற்றது.

    இந்நூல் வளரத் துணைநின்ற நல்ல உள்ளங்களைப் பாராட்டி மகிழ்கிறேன். இந்நூல் வளர தட்டச்சு செய்து உதவிய உஷா அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்த கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசானும், அம்பைத் தமிழிலக்கியப் பேரவையின் ஆற்றல்மிகு தலைவராயும் விளங்கித் தமிழுக்குத் உயர்வளிக்கும் தகைமையாளர் புலமைமிகு புலவர் நீ. ஐயப்பன் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இந்நூலை வெளியிட்ட புஸ்தகா பதிப்பகத்தாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    வாழ்த்துரை

    புலவர் நீ. ஐயப்பன், எம்.ஏ, எம்.எட்,

    தலைவர், அம்பை தமிழ் இலக்கியப் பேரவை,

    கல்லிடைக்குறிச்சி

    ஆலமரம் அதன் விழுதுகளால் நிலைபெறும். நற்கனி அரம்பை, தன் இனக்கன்றுகளால் குலத்தை விருத்தி செய்யும். நறுமலர்களோ மணமும், சுவையும் தந்து உயிர்களை வசப்படுத்தும். மானிடத்தின் மேன்மை நன்னூல்களைப் பயின்று அவ்வழி நடப்பதால் உயர்வடையும். அனைவரும் இவ்வுயர்வு பெற வேண்டும் என்னும் உயரிய நோக்கில், நூல் பலயாத்து தமிழுக்கும், தமிழ் உலகுக்கும் தொண்டு செய்து வருபவர் புலவர் கு. இரவீந்திரன் அவர்கள். அவர் தம் சிந்தனையாக்கத்தில் உருவான மானிடச் சிறகுகள் என்னும் நூலினைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.

    வாழ்வாங்கு வாழ்ந்துச் சிறந்த நல்லோர்களின் வாழ்வியல் முறைகள் பலவும் வகுத்தும், தொகுத்தும் சுவைப்பட எழுதிய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. கைவண்ணத்தால் சமையல் கலை சுவை பெறுகிறது. எழுத்து வண்ணத்தில் எழுத்துலகும் ஏற்றம் பெறுகிறது.

    உவமையும் பொருளும் இடையிடையே வந்து, காதலும் - வீரமும், அறமும் - மறமும், அறிவும் - அன்பும், பக்தியும் - சக்தியும், கடமையும் - கண்ணியமும், நீதியும் - அநீதியும், பக்தி - பாகமும் கலந்த ஓர் இனிய கலவையின் கலப்பாய் இந்நூல் நல்லோர்களையும், வல்லோர்களையும் படமாக்கி நூலில் காட்சிப்படுத்தியச் சிறப்பு கற்றோரைக் களிப்படையச் செய்யும் என்பது மிகையில்லை. இளைஞர்களை இளஞ்சூரியனாய் உதித்தெழச் செய்த பாரத ரத்னா மேதகு அப்துல் கலாம் தொடங்கி, பாரதத்தை நல்வழியில் நடத்திச் செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரையிலான நல்லோர் தம் நற்செயல்களைச் சுட்டிக்காட்டி விடுதலையும் தியாகமும் இழுமெனப் பாய்ந்தோடும் நதி வெள்ளம் போல நூல் முழுவதும் படிப்போர்க்கு எழுச்சியும் வளர்ச்சியும் தோன்றுவதாய் நூல் வளர்ந்து செல்வது கண்டு பெருமை கொண்டேன்.

    இந்நூலைப் படிப்போர்க்கு உலகம் ஒன்றே என்னும் உயர் சிந்தனை மேலோங்கும். அன்பும், அறனும், அமைதியில் இன்பம் காணும் அருட்செயல்களும் படிப்பார் தம் எண்ணத்தில் தோன்றி எழுச்சி பெறும். இளைஞர்களை ஆர்த்தெழச் செய்த வீர துறவியின் மனத்திட்பமும், அமைதியில் ஆட்சிக் கட்டிலேறிய ராபர்ட் புரூசும், இன்சொலால் கொடிய போரினை தடுத்த தமிழ் மூதாட்டி ஔவையும், அந்நியர் தம் ஆதிக்க வெறியிலிருந்து அகிலத்தை மீட்டெடுக்கப் போராடிய சத்ரபதியும், பகத்சிங்கும், மருது சகோதரர்களும் நாம் நினைந்து நினைந்து போற்றத்தக்கவர்களே.

    வறுமையில் பற்றிப் படர்ந்த நிலையில் பாராமுகமாயிருந்த உலகத்தை எண்ணி எண்ணி உள்ளங்கசிந்த கார்ல் மார்க்ஸின் மூலதனமும், அந்நியரின் ஏகாதிபத்தியத்தில் கட்டுண்டுக் கதறிய பாரதத்தின் நிலை கண்டு புரட்சி முழக்கமிட்டுப் பாடிய பைந்தமிழ் பாரதியும் நூலுக்குப் பொருண்மை சேர்ப்பது நூல் ஆசிரியரின் மதிநுட்பத்தை காட்டுவதாய் அமைந்துள்ளது.

    ஏழ்மையும், வறுமையும் கல்விக்குத் துணை செய்யும் என்பதால் உணர்ந்து கற்றுச் சிறந்த செயல்வீரர்கள் பலரும் நூலை அழகு செய்திருக்கிறார்கள். காலச்சூழலில் சிக்குண்டு சிதிலமடையச் செய்தோரும் சிந்தனையால் சிந்தித்துக் கற்றுயர்ந்த பாங்கு படித்து இன்புறத்தக்கதாய்ப் படைத்து நூலை அழகு செய்திருக்கிறார் ஆசிரியர்...

    இளமையின் ஆர்ப்பரிப்பில் இன்பநிலை காணும் இன்றைய இளையோர் உலகுக்கு இந்நூல் ஓர் ஏற்றமுறச் செய்யும் ஏணியாய் உதவும் என்று நான் நம்புகிறேன்.

    இந்நூலை வாங்கிப் படிப்போர் யாவருக்கும் தன்னம்பிக்கையும், துணிவும் தானாகவே தோன்றி வளர்ந்து வாழ்வைச் செம்மைப்படுத்தும் என நான் முழுமையாக நம்புகிறேன்.

    புலவர் கு. இரவீந்திரன் அவர்களின் படைப்புகள் யாவும் படிப்போர்க்கு இன்பம் பயப்பனவே. அவர் மேலும் பல படைப்புகளைப் படைத்து தமிழுக்கும், தமிழ் உலகுக்கும் அணி சேர்ப்பார் ஆகுக என வாழ்த்துகிறேன்.

    அன்பன்,

    புலவர் நீ. ஐயப்பன், எம். ஏ, எம். எட்,

    தலைவர்,

    அம்பை தமிழ் இலக்கியப் பேரவை,

    கல்லிடைக்குறிச்சி

    27 - 11- 2023

    மானிடச் சிறகுகள்

    அளவில் சிறியவை; எனினும் ஆற்றலில் பெரியவை. பறக்கும் பறவைக்கு அதன் சிறகுகளே காரணிகள்.

    நாடு, மொழி, இனங்கடந்து வாழும் இன்பப் பறவைகள் அமைதியின் அடையாளங்கள்! இன்பத்தின் இனிய காட்சிகள்!

    வானத்தில் வட்டமிட்டுப் பறக்கும் உயர்குணம் உடையவை பறவைகள். காடும், காடு சார்ந்த நிலமும் வளம் பெற்றுயரக் காரணமானவை.

    சேர்த்து வைக்கத் தெரியாததால் விதைகளைத் தூவிக் காடுகளின் உற்பத்திக்குக் காரணமாய் விளங்குபவை.

    கூடி வாழவும், பகையின்றி வாழவும் கற்றுக் கொண்டவை. மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் துணை நிற்பவை.

    அன்று, அவர் ஓர் தொடக்கப் பள்ளி மாணவர். தாயின் கரத்தைப் பற்றியவாறு அந்திமாலைப் பொழுதில் ஒற்றையடிப் பாதை வழியே சென்றார்.

    அவர் கண்கள் வானத்தைப் பார்த்தன. அம்மா! என வியப்புடன் தாயை அழைத்தார்.

    என்னடா? எனக் கேட்டாள் அன்னை. அம்மா! அதோ வானத்தைப் பார்! என்றார் அவர்.

    அவள் அண்ணாந்து பார்த்தாள்... பறவைகள் வட்டமிட்டுப் பறக்கும் காட்சியைக் கண்டாள்.

    ஆனால் அந்தி மாலையின் அழகைக் கண்டவள் அகண்ட பாரதத்தின் ஆற்றலைக் கண்டாளில்லை!

    அம்மா! இச்சிறு பறவைகளால் உயரமான வானத்தில் எப்படியம்மா பறக்க முடிகிறது? அவர் கேட்டார்.

    சிறகுகள் இருப்பதால் பறவைகள் பறக்கின்றன மகனே! என்றாள் அவள்.

    நானும் வானத்தில் உயரமாகப் பறப்பேனா அம்மா? எனக்கு ஆசையாக இருக்கிறது என்றார் அவர்.

    ஓ! பறக்கலாமே! என்றவள் பறவைகளுக்குச் சிறகுகள் போலவே மனிதனுக்கு இறைவன் அறிவு, தன்னம்பிக்கை என இரண்டு சிறகுகளைத் தந்திருக்கிறார் மகனே என்றார் அவர்.

    அமைதியானார் மகன்; தாயின் நம்பிக்கையில், அமைதியின் ஆழத்தில், பின்னாளில் விண்வெளி ஞானத்தின் விடிவெள்ளி ஆனார்.

    கரடுமுரடான கற்கள் சிற்பியின் கூரிய உளிகளால் சிற்பமாகின்றன. துருப்பிடித்த இரும்புத் துண்டுகளும் கூரிய அரங்களால் கூர்மையாக்கப்படுகின்றன!

    பட்டை தீட்டப்படுவதால் கலை நயமிக்கக் கற்கள் மாணிக்க மணிகளாய் ஒளி வீசுகின்றன.

    அம்மாவின் நம்பிக்கையான வார்த்தைகள் அவரை அறிவியல் உலகுக்கு அடையாளம் காட்டியது.

    தணியாத தாகம் கல்வி ஞானத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையானது.

    ஏரோ நாட்டிக்கல் பொறித்துறை படிப்பை முடித்தவருக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பணி வழங்கியது.

    விஞ்ஞானியாக தம் ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கியவர் தம் கூரிய தொழில்நுட்ப அறிவால் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் பலதுறைப் பணிகளில் படிப்படியாக முன்னேறினார்.

    பொக்ரான் அணு ஆயுதச் சோதனையில் அவர் ஆற்றலை உலகம் கண்டு கொண்டது.

    அக்னிச்சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய நூல்கள் அவர் தம் முயற்சிகளை அணிவகுத்துக் காட்டின. விண்வெளித் துறையில் வியத்தகு விந்தைகளைச் செய்து பாரத நாட்டின் உயர்விருதாளர் ஆனார். இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவராய் உயர்ந்தார். மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதும், நம்பிக்கையூட்டுவதும் அவர்தம் உயர் பணியானது. நனவு நிலையில் கனவு காணுங்கள் என மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை விதைத்தார்.

    விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என உரக்கக் கூறி விண்வெளி விஞ்ஞானத்தின் உயர் மகன் ஆனார்.

    "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

    தள்ளினும் தள்ளாமை நீர்த்து"

    என்னும் வள்ளுவர் குறளுக்குத் தப்பாத உயர்குணம் உடைய அவர் பாரத ரத்னா மேதகு. ஏ.பி.ஜே அப்துல்கலாம்.

    அவனுக்கு வயது முப்பது. சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன். தந்தையார் வழக்குரைஞர் ஆயினும் ஏழ்மைக்கிரங்கும் தயாள குணமுடையவர்.

    நீதிமன்றத்திலிருந்து வீட்டிற்கு வரும்போது, அவர் வெறுங்கையோடு வருவதைப் பழக்கமாக்கியிருந்தார்.

    தாய் புவனேஸ்வரியின் அன்பும், அரவணைப்பும் அவனை நற்பண்புகளோடு ஆளாக்கி வளர்த்திருந்தது.

    அறிவுசார்ந்த வரலாறுகளையும், அன்பு நிறைந்த புத்தகங்களையும் அவனைப் படித்தறியச் செய்தாள் அவள்.

    மெய்யறிவுடையாரின் சொற்பொழிவுகளைக் கேட்டறியச் செய்தாள்.

    வீரர்களின் வரலாறுகளையும், தேசபக்தர்களின் வாழ்வியல் சாதனைகளையும் படித்தறியச் செய்தாள்.

    அதனால் அவன் இளமையிலே தன்னை அறியும் அறிவினை அறியத் துணிந்தான்.

    நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? என் கடமை என்ன? என்பனவற்றை

    Enjoying the preview?
    Page 1 of 1