Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pakka Balam
Pakka Balam
Pakka Balam
Ebook92 pages27 minutes

Pakka Balam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனுபவங்களின் மூலம், தங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்வது சாத்தியமாகிறது. அத்துடன், மற்றவர்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தக்கூடிய நல்ல கருத்துக்களை, பேச்சுகள் மூலமும் எழுத்துகள் வாயிலாகவும் எடுத்துக்கூறவும் முடிகிறது.

அத்தகைய ஆற்றலைப் பெற்றிருப்பவர்களில் நண்பர் கமலவேலன் அவர்களும் ஒருவர் ஆவார். வாழ்க்கையில் அவர் கண்டும் கேட்டும் அனுபவித்தும் அறிந்த பல்வேறு விஷயங்களை அழகிய சிறுகதைகளாகவும், பயனுள்ள நாடகங்களாகவும், வாழ்க்கை வரலாறுகளாகவும் பதிவு செய்திருக்கிறார். இப்போது அவர் தமது அனுபவ சிந்தனைகளை, கற்பனை மெருகு சேர்த்து, சின்னச் சின்னக் கட்டுரைகளாக வழங்குகிறார்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580141907048
Pakka Balam

Read more from M. Kamalavelan

Related to Pakka Balam

Related ebooks

Reviews for Pakka Balam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pakka Balam - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    பக்கபலம்

    Pakka Balam

    Author:

    மா. கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    பக்கம் பயனுள்ளதாக இருந்தால் பத்திரிகை தரம் உள்ளது என்று சொல்லுவார்கள். அது அந்தக்காலம்.

    பக்கம் படம் உள்ளதாக - பளபளப்பாக - கவர்ச்சியாக இருந்தால் பத்திரிகை பரபரப்பாய் விற்பனை ஆகும். அது இந்தக்காலம்.

    காலம் எதுவாயினும் பத்திரிகையின் வளர்ச்சிக்குப் பக்கங்களே துணை நிற்கின்றன.

    முதல் பக்கம் தலையங்கம்,

    நடுப்பக்கம் கவர்ச்சி நங்கை.

    கடைசிப்பக்கம் பிரபலமானவர்களின் கை வண்ணம்.

    கவியரசர் கண்ணதாசன் ‘கல்கி’யில் கடைசிப் பக்கத்தைக் காவியமாக்கிய காலம் உண்டு.

    சிலம்புச் செல்வர் ம.பொ.சிக்கு ‘கல்கி’ தன் கடைசிப் பக்கத்தைக் கட்டம் கட்டித் தந்தது உண்டு.

    ஏர்வாடியார் ‘எனது பக்கம்’ வெளியிட்டுள்ளார்; விமர்சனம் பார்த்ததுண்டு.

    ‘கலைஞர் பக்கம்’ குங்குமம் இதழில் கற்கண்டு சொற்கொண்டு கலைநயத்துடன் வந்து கொண்டிருக்கிறது.

    பக்கம் பற்றிய சிந்தனை என்னையும் பற்றிக்கொண்டது. பக்கம் பக்கமாய் எழுத என்னை இப்பக்கத்தில் பழக்கிக்கொள்கிறேன்.

    பக்கம் பக்கமாய்ச் சொல்லுவதை விடப் பக்குவமாய்ச் சொல்லத் தெரிந்தவனே இலக்கிய உலகில் இறவாப் புகழ் பெறுகிறான். அதையும் உணர்கிறேன்.

    எப்பக்கம் திரும்பினும் எழில் பக்கமாய் இருக்க வேண்டும். எல்லோரது கருத்தையும் ஈர்க்கும் பக்கமாய் இருக்க வேண்டும். காப்பி என் பலம் எது என்று எனக்குத் தெரியும். தன் பலம் தெரியாமல் தறிகெட்டுப் போனவர்கள் வாழ்க்கையை நான் அறிவேன்.

    எனது வாழ்க்கைப் பாதை -

    எனது அனுபவ சிந்தனைகள் -

    எனது கற்பனைக் கோட்டைகள் -

    நான் பார்த்த -

    பழகிய

    கேட்டறிந்த

    மனித மனங்களின் விசித்திர இயல்புகள் -

    அழகிய மனிதர்கள்

    அழுகிய மனிதர்கள்

    ஆர்ப்பாட்ட மனிதர்கள்

    அடக்கமான மனிதர்கள்

    இன்னும் பல்வேறு படிமானங்களில் - பரிமாணங்களில் படைக்க விரும்புகிறேன்.

    இவற்றிற்கெல்லாம் பக்கபலம் நான் பயின்ற தமிழ் - என்னை ஈன்ற தாய்தந்தையர் - எல்லாரையும் வாழ வைக்கும் அன்னை அபிராமி!

    எனது உயர்வுக்கோ தாழ்வுக்கோ காரணமானவர்களும் இப்பக்கங்களில் நடமாடக் காணலாம்.

    இருபது கட்டுரைகள் கொண்ட நூல். இது ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ எழுதி முடிக்கப்பட்டவை அல்ல. பதினான்கு ஆண்டுக்காலப் பதிவுகள்.

    நினைவில் வாழும் பதிப்புச்செம்மல் முனைவர் ச. மெய்யப்பன் அவர்களின் அருமைப் புதல்வர் - அன்பு இளவல் திரு. ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்கள் இந்நூலை மணிவாசகர் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளார்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நூலின் வடிவம், வண்ணம் சிறப்பாக அமையக் காரணமானவர் பதிப்பக மேலாளர் இனிய நண்பர் திரு. இரா. குருமூர்த்தி ஆவார்கள். அவருக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

    சிறுகதை எழுத்தாளர் சந்தனத்தேவன் (இரயில்வே நாராயணன்) மதிப்புரை வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார். அவரைப் பணிவுடன் வணங்குகிறேன்.

    முழுமையாகப் படித்து. அருமையானதோர் அணிந்துரை நல்கியுள்ள மூத்த எழுத்தாளர் - படைப்பாளிகள் படைப்பாளி – எழுத்து ஞானி - வல்லிக்கண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்.

    இந்நூல் படிப்பவர்களுக்கு வழிகாட்டியாக, பக்கபலமாக நின்று வளம் சேர்க்கும்; பக்கபலம் அவர்களுக்குத் தக்க பலம் சேர்க்கும்.

    அன்பன்,

    மா. கமலவேலன்

    அணிந்துரை

    ஊரும் உலகமும் வாழ்க்கையும் நாள்தோறும் மனிதருக்கு எத்தனையோ விஷயங்களைக் கற்றுத் தந்தவாறு இயங்குகின்றன. அதனாலேயே இந்த உலகம் அரியதொரு பல்கலைக்கழகம் ஆகும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

    மனிதர்கள் அறிவு விழிப்பு ஏற்படுத்தக்கூடிய பாடநூல்களாகவும்,

    Enjoying the preview?
    Page 1 of 1