Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jayakanthan
Jayakanthan
Jayakanthan
Ebook69 pages24 minutes

Jayakanthan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டு வாசகர்களை தமது எழுத்துக்களால் போதைகொள்ளச் செய்தவர் ஜெயகாந்தன். அவர் எழுத்துக்களில் கிறங்கி மயங்காதவர்கள் உண்டா என்ன வாழ்க்கையைச் சமமான நோக்குடன் ஒரே மாதிரி காணவும், கருத்து ஒருமிக்கவும் அந்தக் கருத்துக்களுக்காக வாழவும் தன்னையும் அர்ப்பணித்துக்கொள்கிற இன்னொரு ஆத்மாவின் துணை வேண்டும். அந்தத் துணைதான் முதல் வாசகர். இறுதி வாசகரும்கூட என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580141909911
Jayakanthan

Read more from M. Kamalavelan

Related to Jayakanthan

Related ebooks

Reviews for Jayakanthan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jayakanthan - M. Kamalavelan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    Author:

    மா.கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. உன்னைப்போல் ஒருவன்

    2. வாழ்க்கை அழைக்கிறது

    3. ரிஷிமூலம்

    4. சமூகம் என்பது நாலுபேர்

    5. நான் இருக்கிறேன்

    6. இரண்டு சிறுகதைகள்

    முன்னுரை

    திருவாவடுதுறையில் பிறந்த நாதஸ்வர சக்கரவர்த்தி திரு. இராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வரக் கலைஞர்கள் எல்லாருக்குமே உரிய மரியாதையைப் பெற்றுத் தந்தவர். அதுபோலவே திருப்பாதிரிப் புலியூரில் (கடலூர்) பிறந்த திரு. த. ஜெயகாந்தன் அவர்கள் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தனி மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தந்தவராவார்.

    என்றும் என்னை எழுதத் தூண்டிக் கொண்டேயிருந்தவர் இறவாப் புகழ் பெற்ற மணிவாசகர் பதிப்பக நிறுவனர், பேராசிரியர் முனைவர் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் ஆவார்.

    எழுத்து, எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் பற்றிய உரையாடலாகத்தான் பெரும்பாலும் எங்கள் பேச்சுக்கள் அமையும். பதிப்புச் செம்மல் அவர்களே ஒரு சிறந்த படைப்பாளி ஆவார்.

    மெய்யப்பனார் அவர்கள் மேலை நாட்டு இலக்கியங்களையும் அதிகம் படித்தவர். அந்த அனுபவங்களின் பின்னணியில் அவர் சொல்லுவார்,

    கமலவேலன் உங்கள் சிறுகதைகள் நாடகமாக ஆக்கப்பட வேண்டும். நாவலாக விரிவு பெற வேண்டும். இது அவரது அவா.

    நான் மெளனமாய் சிரித்து மழுப்பிவிடுவேன்.

    மேலை நாட்டு எழுத்துக்களைப் பாருங்கள். புகழ் பெற்ற சிறுகதை என்றால், அது விரைவில் நாவலாக வளரும்; நாடகமாக மலரும்; திரைப்படமாகக்கூட ஒளிரும்... அவையும் இலக்கிய வகைகளே; வடிவங்களே என்று உறுதிபடக் கூறுவார்.

    தமிழ்நாட்டு வாசகர்களை தமது எழுத்துக்களால் போதைகொள்ளச் செய்தவர் ஜெயகாந்தன். அவர் எழுத்துக்களில் கிறங்கி மயங்காதவர்கள் உண்டா என்ன?

    200 சிறுகதைகள், 35 குறு நாவல்கள், 15 நாவல்கள், 550 கட்டுரைகள் என எழுத்து வேள்வி நடத்தியவர்.

    பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியவர். திரைப்பட வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர். சிறந்த கவிஞரும்கூட.

    சாகித்ய அகாதமிவிருது, சோவியத் நாடு நேருவிருது, ராஜராஜன் விருது, பாரதீய பாஷா பரிஷத்விருது, முரசொலி அறக்கட்டளை விருது, எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் ஞானபீட விருது... ஜெயகாந்தனின் படைப்புகளுக்காக வரிசையில் அணிவகுத்து வந்த விருதுகள் இவை!

    அக்கினிப் பிரவேசம் என்ற சிறுகதை ஆனந்த விகடனில் பிரசுரமாயிற்று. அதே கதையின் முடிவை மாற்றி தினமணிக் கதிரில் வேறொரு கதை எழுதினார். அந்தக் கதைதான் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று நாவலாக விரிவுபெற்றது. அதே நாவல் பின்நாளில் திரைப்படமாகவும் வெளிவந்தது. கைவிலங்கு என்ற தலைப்பில் அவர் எழுதிய குறுநவால், காவல் தெய்வம் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

    பதிப்புச் செம்மல் அன்று சொன்ன வார்த்தைகளை ஜெயகாந்தன் மறைவின்போது நினைத்துக்கொண்டேன். மெய்யப்பனார் அவர்கள் ஒரு தீர்க்கதரிசி. நல்ல படைப்புகள் வேறுவிதக் கலை வடிவங்களைப் பெற வேண்டும் என்ற அவர் சிந்தனை ஜெயகாந்தன் படைப்புகளில் செயல்வடிவம் பெற்றிருக்கிறது.

    ஜெயகாந்தன் படைப்புகள் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    ஜெயகாந்தன் பற்றி என் உள்ளக் கிடக்கையை ‘தமிழ் கூறும்

    Enjoying the preview?
    Page 1 of 1