Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aavana Padangal - Oru Arimugam
Aavana Padangal - Oru Arimugam
Aavana Padangal - Oru Arimugam
Ebook172 pages56 minutes

Aavana Padangal - Oru Arimugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமூகத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. பல சம்பவங்கள் பதியப்படாமலே, பேசப்படாமலே போயுள்ளன. ஆவணப்படத் துறை ஆவணப்படங்கள் மூலம் காலத்தால் மறைந்த, மறைக்கப்பட்ட பல பிரச்சனைகளை பதிவு செய்து மக்கள் பார்வைக்கு சிந்தனைக்கு வைத்துள்ளது. ஆவணப்படுத்துதல் மட்டுமல்லாமல் கோரிக்கையும் வைத்துள்ளது. கவனத்தை ஈர்த்துள்ளது. கவிதை, கதை, கட்டுரைகளை விமர்சித்து வரும் பொன். குமார் ஆவணப்படங்களை பார்வையிட்டு விமர்சனங்கள் எழுதி 'ஆவணப்படங்கள் ஓர் அறிமுகம்' என்னும் தொகுப்பாக்கித் தந்துள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580159410024
Aavana Padangal - Oru Arimugam

Read more from Pon. Kumar

Related to Aavana Padangal - Oru Arimugam

Related ebooks

Reviews for Aavana Padangal - Oru Arimugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aavana Padangal - Oru Arimugam - Pon. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆவணப் படங்கள் - ஓர் அறிமுகம்

    (ஆவணப்படங்கள் குறித்த விமர்சனங்கள்)

    Aavana Padangal - Oru Arimugam

    Author:

    பொன். குமார்

    Pon. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pon-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. லெனின் - குருசாமி மயில்வாகனன்

    2. சுப்பிமணிய சிவா - தாரகை

    3. 21-இ சுடலை மாடன் தெரு திருநெல்வேலி டவுன் தி.க.சி - ஒரு மானுட ஆவணம் - எஸ். ராஜகுமாரன்

    4. ஜெயகாந்தன் - சா. கந்தசாமி

    5. ஆவணப்படம் செந்தமிழ்க்கோ கோ.பெ.நா. - தமிழ் இயலன்

    6. இடைசெவல் - புதுவை இளவேனில்

    7. உலகப் பெருந்தமிழர் - தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் - வாழ்வும் பணியும் - ந. செல்வன்

    8. வரகவி மா. இராமக்கிருட்டின பாரதி - புதுவை யுகபாரதி

    9. அஃறிணைகள் - பி. இளங்கோவன்

    10. ராமய்யாவின் குடிசை - பாரதி கிருஷ்ணகுமார்

    11. என்று தணியும்? - பாரதி கிருஷ்ண குமார்

    12. ஒரு சிற்பத்தின் கதை - ந. செல்வன்

    13. ரேகை - தினகரன் ஜெய்

    14. விளிம்பில் - சிவகுமார் மோகன்

    15. அகவிழி - பி.என்.எஸ். பாண்டியன்

    16. இரவுகள் உடையும் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

    17. விரல்கள் - ஜி. கோபால், ஆ. சுபாஷ், இரா. தமிழ் செல்வம்

    18. என் பெயர் பாலாறு - ஆர்.ஆர். சீனிவாசன்

    19. கொஞ்சம் கொஞ்சமாய்... - சொர்ண பாரதி

    20. செக்கடி குப்பம் - கோவி

    21. தொம்பறை - புவனராஜன்

    22. வித்தை - புவனராஜன்

    23. விடியும் வரை - நிறைமதி

    24. செருப்பு - அமுதன் ஆர்.பி.

    25. பீ... - அமுதன் R.P.

    26. மயானக் குறிப்புகள் - அமுதன் R.P.

    27. சிட்டு - கோவை சதாசிவம்

    28. மண் - கோவை சதாசிவம்

    29. மயிலு - கோவை சதாசிவம்

    30. இப்படிக்கு இயற்கை - அந்தோனி சைமன்

    31. தும்பலில் இன்று குடியரசு தினம் -ஆண்டோ

    32. புலி யாருக்கு? - ஆண்டோ

    33. படையல் - ஆண்டோ

    34. கனவுப் பாலம் - ஆண்டோ

    35. நாங்க படிக்கிறோம் - ஆண்டோ

    36. எழுத்து – சேலம் சிவா

    37. மருது பாண்டியர்கள் யார்? - ஆவணப்படம் மீதான விமர்சனங்கள் - தொகுப்பு - குருசாமி மயில்வாகனன்

    38. வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு – திலகபாமா

    39. இருட்டறை வெளிச்சங்கள் - ந. செல்வன்

    சமர்ப்பணம்

    ஆவணப்பட களஞ்சியம்

    ஆண்டோ அவர்களுக்கு

    இந்நூல்.

    அன்புள்ளங்களுக்கு வணக்கம்.

    ஆவணப் படம் என்பது நடந்த ஒன்றை, நிகழ்ந்த சம்பவத்தை காட்சிப்படுத்துதல் மட்டுமல்ல மக்களுக்கு எடுத்துக்காட்டுவதும், கூறுவதுமாகும். ஆவணப்படுத்துதலிலும் பலவகை உண்டு. வரலாற்றைக் கூறும் படங்களும் ஆவணப்படுத்துவதில் சேரும். ஆனால் திரைப்படங்கள் ஆவணப்படமாகாது.

    திரைப்படங்களில் திரைப்படம் பார்க்கச் சென்றவர்களுக்கு ஓர் அனுபவம் இருக்கும். நினைவும் இருக்கும். திரைப்படம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு சிறு படம் காட்டப்படும். அதை INR அதாவது Indian News Review என்னும் நிறுவனத்தால் வெளியிடப்படுவதாகும். அதில் புகைப்பிடிப்பதால் புற்றுநோய் வரும், மது அருந்துவது நாட்டுக்குக் கேடு, வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என பல படங்கள் காட்டப்படும். பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கும். கறுப்பு வெள்ளையில் காட்சி அளிக்கும். இப்படங்களும் ஆவணப்படங்களே.

    தமிழில் ஏராளமான ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. 1967இல் நாற்பதாண்டுகளுக்கு முன் நடந்த வெண்மணி சம்பவத்தை காட்டும் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் குற்றப்பரம்பரை கொடுமையைத் தற்போது எடுத்துக் கூறியுள்ளனர். குடந்தையில் பள்ளிக்குழந்தைகள் எரிந்து போனதை அம்பலப்படுத்தியுள்ளனர். ஒரு நதி நாசமாக்கப்பட்டதை, ஒரு குளம் கெடுக்கப்பட்டதை, சுற்றுச்சூழல் சுத்தமில்லாமல் ஆக்கப்பட்டதை, மண் மலடாக்கப்பட்டதை என பல ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டன. மகாகவி பாரதி, ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளின் வாழ்வையும் ஆவணப்படுத்திக் காட்டியுள்ளனர். எனக்கும் ஆவணப்படங்கள் சில அனுப்பப்பட்டன. நானும் பார்த்து பார்த்து என் பார்வையை விமர்சனமாக எழுதினேன். கனவு, தாரகை, நவீன அகம், புறம் போன்ற சிற்றிதழ்களிலும் வெளியாகின. தற்போது ‘ஆவணப்படங்கள் - ஓர் அறிமுகம்’ என்னும் தலைப்பில் தொகுப்பாகியுள்ளது.

    ஆவணப்படங்கள் தவிர குறும்படங்களும் எடுக்கப்பட்டன. அப்படங்களுக்கு எழுதப்பட்ட விமர்சனங்கள் தனித் தொகுப்பாக்கத் திட்டம்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் வி.ஜி. ஆண்டோ. இவரை ஆவணப்படங்களின் களஞ்சியம் எனலாம். அவரும் ஏராளமான ஆவணப்படங்களை எடுத்துள்ளார். அவர் பல படங்களை தந்து பார்க்கச் செய்தார். எழுதுவதற்கும் ஊக்குவிப்பு தந்தார். அவரின் இறப்பு ஆவணப்பட உலகத்திற்கு உண்மையிலேயே பெரும் இழப்புதான். எனக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பு. அவரை இங்கு நன்றியுடன் நினைவுக்கூர்கிறேன். அவர் படங்களுக்கு எழுதிய விமர்சனங்களும் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

    ஆவணப்படங்களின் விமர்சனங்களைத் தொகுக்கும் முயற்சியில் முன்னோட்டமாக முகநூலில் முகநூல்வாசிகளின் வாசிப்புக்கும் விமர்சனத்துக்கும் பதிவேற்றம் செய்யப்பட்டன. பெரும்பாலானோர் பார்த்திருந்தாலும் கண்டும் காணாமல் கடந்து சென்றிருந்தாலும் விருப்பக்குறியிட்டுள்ளனர் வெகுசிலர். சிலரில் சிலர் மட்டுமே கருத்துரைத்துள்ளனர்.

    அருமை அய்யா. தோழர் இளவேனில் கலையாளுமை சமூகத்தின் முக்கிய கவனத்திற்குறியது. எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

    எனது மணவிழாவின் புகைப்படங்களும் வீடியோ பதிவும் அவரின் கைவரிசைக்கு அகப்பட்ட அன்பின் நட்பு அழகியல். இப்போதும் எப்போதும் இதயத்தின் ரத்த ஈரப்பசை... இருவருக்கும் வாழ்த்துகள். என இடை செவல் ஆவணப்படம் குறித்த தன் கருத்தை தோழர் இளவேனில் பதிவு செய்துள்ளார் ஓவியக்கவிஞர் ஆ. உமாபதி. ‘நல்ல பதிவு ஐயா’ என நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் திருநங்கை தோழி கே. சரண்யா.

    விடியும் வரை என்னும் ஆவணப்படம் குறித்து விஸ்வநாதன் பழனிச்சாமியின் கருத்து விடியும் வரை இன்னொரு தோட்டியின் மகன். அக கண்ணில் வந்து செல்லும். வாழ்த்துக்கள் என வாழ்த்தியுள்ளார்.

    தொம்பரை என்பது நெல் அல்லது தானியம் சேமித்து வைக்கும் ஒரு பெரிய பானை போன்றது எனலாம். இப்படம் குறித்து கவிஞர் அழகு பாண்டி அரசப்பன் நானும் தேடியபோது இந்த மாதிரியான விளக்கங்கள் கிடைத்தது. ஆனால் முத்துலாபுரத்தில் தொம்பற என்றால் மொத்தமாய் கிடைத்த நாத்து அல்லது கருகருவென வேர்க்கோர்த்த நாத்துகள் அடங்கிய கொத்து என அறிகிறேன் அண்ணா என ஒரு புதிய விசயத்தை பதிவிடுகிறார்.

    சிறப்பான பார்வை. அழிவின் விளிம்பில் இருக்கும் கலையை மீட்டெடுப்போம் என குடக்கூத்து என்னும் ஆவணப்படம் குறித்த தன் கருத்தை பதிவு செய்துள்ளார் கவிஞர் முருகன்.

    மிக நல்ல ஆவணப்படம். இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே புதுவை திரைப்பட விழாவில் பார்த்து வியந்தேன் என தான் வியந்ததை பகிர்ந்துள்ளார் திரு. ஞானசேகர்.

    மிக சிறப்பான முயற்சி. அதிகளவு இளைஞர்களிடம் இதை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வேண்டியுள்ளார் ராமைய்யாவின் குடிசை விமர்சனம் வாசித்த கவிஞர் கரன் கார்க்கி.

    கோ.பெ.நா. என்னும் ஆவணப்படம் குறித்து அதன் இயக்குநரான தமிழ் இயலன்,

    முழுமையான திறனாய்வுக்கு நன்றி என நன்றியைத் தெரிவித்துள்ளார்.

    எனவே ஆவணப்படங்கள் - ஓர் அறிமுகம் என்னும் இத்தொகுப்பிலுள்ள விமர்சனங்களை வாசித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

    எழுதுங்கள்!

    எழுதுகிறேன்!

    எழுதுவோம்!

    என்றும் அன்புடன்,

    பொன். குமார்

    21/15 புதிய திருச்சிக் கிளை,

    வடக்குத் தெரு,

    லைன்மேடு,

    சேலம் 636006 9003344742

    1. லெனின் - குருசாமி மயில்வாகனன்

    ‘மருதிருவர்’ என்னும் ஆவணப்படம் மீதான விமர்சனங்களை, எதிர்வினைகளைத் தொகுத்து ‘மருது பாண்டியர் யார்?’ என்னும் தொகுப்பை வெளியிட்ட குருசாமி மயில்வாகனன்

    Enjoying the preview?
    Page 1 of 1