Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Satyajit Ray - Vaazhvum Vazhiyum
Satyajit Ray - Vaazhvum Vazhiyum
Satyajit Ray - Vaazhvum Vazhiyum
Ebook337 pages2 hours

Satyajit Ray - Vaazhvum Vazhiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரைப்பட உலகின் ‘மகத்தானவர்’ அவரென்றே நான் கருதுகிறேன். ரேயின் திரைப்படங்களை பார்க்காதவர்கள் சூரியனையோ, சந்திரனையோ காணாது உலகில் வாழ்வதைப் போன்றவர்களே – அகிரா குரசோவா (ஜப்பான்)

இந்திய சினிமாவின் வரலாறு சத்யஜித் ரேயிலிருந்தே துவங்குகிறது – அடூர் கோபாலகிருஷ்ணன் (மலையாளம்)

சலனப் படக் கலையில் அவருக்கிருந்த மிக அரிதான திறமையை, உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட இயக்குநர்கள், பார்வையாளர்களிடையே அழிக்கமுடியாத செல்வாக்கை செலுத்திய அவரது ஆழ்ந்த மனிதநேயக் கண்ணோட்டத்தை அங்கீகரிக்கும் வகையிலேயே (வாழ்நாள் சாதனைக்கான) இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. – ஆஸ்கர் விருதுக்கான புகழுரை

விரிவான உலகப் பார்வை, உயரிய தார்மீக மதிப்பு ஆகியவற்றுக்கான பிரதிநிதியாக, இந்தியாவின் பாரம்பரியத்தில் மிகச் சிறந்தவற்றை தனதாகக் கொண்டிருந்த ஒருபுறத்தில் ஆழமாக இந்தியத் தன்மைகொண்டதாக, அதே நேரத்தில் உலகக் கண்ணோட்டம் கொண்டதாக இருந்த, இந்தியாவில் 19, 20ஆம் நூற்றாண்டுகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் ரே தான் இறுதியானவர். – சிதானந்த தாஸ் குப்தா (திரைப்பட விமர்சகர்)

இந்நூலாசிரியர் வீ. பா. கணேசன் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், மக்கள் தொடர்பு-இதழியலில் பட்டயமும் பெற்றவர். ‘The Hindu’ நாளிதழில் 6 ஆண்டுகள் முதுநிலை உதவி ஆசிரியராகவும், 25 ஆண்டுகள் மேற்கு வங்க அரசில் உதவி செய்தி இயக்குநராகவும், 3 ஆண்டுகள் சென்னை வானொலி நிலையத்தில் செய்திவாசிப்பாளர்-மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். கடந்த 38 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். மிருணாள் சென், ஜோதிபாசு, சுகுமால் சென், எட்கர் ஸ்நோ, ஜியார்ஜி டிமிட்ரோவ், ஃபிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மாண்டேலா ஆகியோரின் எழுத்துக்களை தமிழில் தந்துள்ளார். சத்யஜித் ரேயின் ஃபெலுடா துப்பறியும் கதைகள் 35-இல் 20 கதைகள் இவரது மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளன. சத்யஜித் ரே சினிமா குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான Deep Focus என்ற நூலை (ஆழ்ந்த பார்வை) தமிழில் மொழிபெயர்த்துள்ளார். The Hindu நாளிதழில் இதுவரை 16 புத்தக விமர்சனங்களை எழுதியுள்ளார். ‘தி இந்து’ நாளிதழிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். தாய் மொழியான தமிழ் தவிர, ஆங்கிலம், வங்காளி ஆகிய மொழிகளிலும் நீண்ட அனுபவமிக்கவர். வங்கதேச அறிஞர் அப்துல் கரீம் சாகித்ய விஷாரத், வங்காள திரைப்பட இயக்குநர் ரித்விக் கட்டாக் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580173910580
Satyajit Ray - Vaazhvum Vazhiyum

Related to Satyajit Ray - Vaazhvum Vazhiyum

Related ebooks

Reviews for Satyajit Ray - Vaazhvum Vazhiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Satyajit Ray - Vaazhvum Vazhiyum - V.B. Ganesan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சத்யஜித் ரே - வாழ்வும் வழியும்

    Satyajit Ray - Vaazhvum Vazhiyum

    Author:

    வீ.பா. கணேசன்

    V.B. Ganesan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vb-ganesan

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    சகலகலா வல்ல சத்யஜித் ரே

    வாழையடி வாழையாய்...

    உபேந்திரகிஷோர்

    நையாண்டிக் கவிதைகளின் அரசன்

    அறியாப் பருவத்திலே...

    சாந்தி நிகேதனில்...

    கலைஞராய்... விமர்சகராய்...

    பதேர் பாஞ்சாலி உருவாகிறது...

    உலகைக் குலுக்கிய அபுவின் உலகம்

    தீர்க்கமான முயற்சிகள்

    எழுத்தும் செயலும்

    துருவ நட்சத்திரமாய்...

    சத்யஜித் ரே இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்

    சத்யஜித் ரே பெற்ற விருதுகள்

    முன்னுரை

    ஒரு வகையில் சொல்வதானால், இந்த வாழ்க்கைச் சரிதம் நான் செய்யும் பிராயச்சித்தம் என்றே கூறிவிடலாம். 1970களின் பிற்பகுதியில் சென்னையில் திரைப்படக் கழகச் செயல் பாடுகளில் ஈடுபட்டு வந்த நேரத்தில், திரைப்படக் கழக கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவராக சத்யஜித் ரே இருந்தார். அவர் திரைப்பட வேலைகளுக்காகச் சென்னைக்கு வந்த நாட்களில் அவரோடு தொடர்பில் இருந்தபோது, மற்றொரு வங்காள இயக்குநரும் கூட்டமைப்பின் உதவித் தலைவருமான மிர்ணாள் சென் எழுதிய Views on Cinema என்ற ஆங்கில நூலை சினிமா ஒரு பார்வை என்ற பெயரில் (உலக, இந்திய சினிமா பற்றி தமிழில் வெளிவந்த முதல் நூல் அதுதான் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்) மோ. சிவகுமார், அருள்நந்தி சிவராஜ் ஆகிய இரு நண்பர்களோடு நான் தமிழில் மொழிபெயர்த்ததை அவரிடம் தெரிவித்தபோது, தன்னுடைய Our Films, Their Films என்ற ஆங்கில நூலையும் தமிழில் கொண்டுவரவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அதன்பிறகு மேற்கு வங்க அரசில் நான் பணிபுரிந்து வந்த காலத்தில் கல்கத்தாவிலும் சென்னையிலும் அவரை சந்திக்கும் நேரத்தில் எல்லாம் அவர் இதைப் பற்றி வினவிக் கொண்டேதான் இருந்தார். எனினும் பல்வேறு காரணங்களால் அவரது அந்த சின்னஞ்சிறிய ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமலே போனது.

    அவர் மறைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்செயலாக அவரது ஃபெலுடா சிறுவர் கதைகளை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சென்னை திரைப்படக் கழகத்தில் நான் செயல்பட்டு வந்தபோது எனக்கு அறிமுகமானவரும், புகழ்பெற்ற ஆவணப்பட, திரைப்பட இயக்குநருமான நண்பர் அம்ஷன் குமார்தான் இதற்குக் காரணமாக இருந்தார். இந்தக் கதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான காப்புரிமையை சத்யஜித் ரேயின் மகனும் திரைப்பட இயக்குநருமான சந்தீப் ரேயிடம் பெற்று அதில் ஒரு பகுதியை எழுதி முடித்த பின்னர்தான் சிறந்த திரைப்பட இயக்குநராக மட்டுமே (மேற்கு வங்க மாநிலம் தவிர) வெளியுலகில் அறியப்பட்டிருந்த அவரது மேதமையின் பன்முகத் தோற்றத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது.

    இதற்கிடையே சத்யஜித் ரே விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்களை பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 1949-ம் ஆண்டு முதல் அவர் மறைந்த 1992-ம் ஆண்டு வரை திரைப்படம் பற்றி பல்வேறு இதழ்களில் சத்யஜித் ரே எழுதிய கட்டுரைகள், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள் ஆகியவை அவரது மகன் சந்தீப் ரேயின் தொகுப்பில் ஆழ்ந்த பார்வை (Deep Focus) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்தபிறகு அதைத் தமிழில் வெளிக்கொண்டு வர காலச்சுவடு பதிப்பகம் முனைந்தபோது இந்த நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பும் நண்பர் அம்ஷன்குமார் மூலமாக மீண்டும் எனக்குக் கிடைத்தது.

    அவருடன் பழகவும், அவரது நூல்களை (வங்காளியிலும், ஆங்கிலத்திலும்) படிக்கவும், தமிழில் மொழிபெயர்க்கவும் எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்புகள் சத்யஜித் ரேயின் உலகை மேலும் நெருக்கத்தில் சென்று தரிசிக்க எனக்கு உதவி செய்தன. இந்த தரிசனம்தான் அவரது வாழ்க்கைச் சித்திரத்தை தமிழில் வடிக்க வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்தியது.

    இந்தியாவில் திரைப்பட ரசனையை வேர்விடச் செய்த, இந்திய சினிமாவைப் பற்றி உலகைப் பேசவைத்த, உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களின், ரசிகர்களின் பாராட்டுமழையில் நனைந்த, சாதாரண மனிதர்களின் அசாதாரணமான வாழ்க்கையை புதிய பரிமாணத்துடன் படமாக்கிய, எழுத்தில் வடித்த, எண்ணற்ற இந்திய இயக்குநர்களுக்கு ஆதர்சமாக விளங்கிய சத்யஜித் ரேயின் பன்முகத் திறமை அதிகம் பேர் அறியாத ஒன்றாகும்.

    ஒரு திரைப்பட மேதையாக மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டுள்ள சத்யஜித் ரேயின் சகலகலா வல்லமையை தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறும் நோக்கத்துடனேயே இந்த நூல் எழுதப்பட்டு உங்கள் கைகளில் இப்போது தவழ்கிறது. வங்காளி மொழியின் புகழ்பெற்ற இலக்கிய வார இதழான தேஷ் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில், மரபணு மீது தமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்றும், தனது இத்தகைய பன்முகத் திறமைகள் அனைத்தும் மரபணுவின் வெளிப்பாடுகள்தான் என்று தாம் நம்புவதாகவும் சத்யஜித் ரே குறிப்பிட்டிருந்தார். அதிலிருந்தே அவரது திறமைகளுக்கும் அவரது முன்னோர்களுக்கும் இடையே இருந்த வரலாற்றுத் தொடர்பை சற்று விரிவாக எடுத்துக் கூறுவது அவசியம் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்த வகையில்தான் இந்த நூலில் சத்யஜித் ரேயின் முன்னோர்களைப் பற்றிய பகுதி சற்று விரிவாகவே அமைந்திருக்கும். ரேயின் பன்முகத் திறமைகளுக்கு எவரெல்லாம் அடித்தளமாக இருந்தார்கள் என்பதை வாசகர்கள் உணரும் வகையில் இந்தப் பகுதி அமையும்

    முதன்முதலில் ரேயின் முன்னோர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை பிரிட்டிஷ் திரைப்பட ஆய்வாளர் மேரி சேட்டன் தான் தனது Portrait of a Director என்ற நூலில் எழுதினார். இந்த நூலுக்காக அவர் கல்கத்தாவில் ரேயின் வீட்டில் தங்கியிருந்தபோது ரேயின் அம்மாவும் சித்தப்பாவும் உயிரோடு இருந்தனர். அவர்களிடம் தெரிந்து கொண்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிமுகத்தை அவர் எழுதியிருந்தார். அதன்பிறகு மற்றொரு பிரிட்டிஷ் திரைப்பட ஆய்வாளரான ஆண்ட்ரூ ராபின்சன் தனது Inner Eye என்ற நூலில் அதை சற்றே விரித்து எழுதியிருந்தார். இந்த இரு நூல்களில் இருந்த விவரங்களோடு சமீபத்தில் பேராசிரியர் சந்தோக் சென்குப்தா எழுதிய The Rays Before Satyajit என்ற நூலில் கிடைத்த மேலும் பல விவரங்கள், ரே தன் சிறுபிள்ளைப் பருவம் குறித்து வங்காளியில் எழுதிய நூல் (ஜொக்கொன் சோட்டோ சிலாம்), பார்த்த பாசு எழுதி வங்காளி அகாதெமி வெளியிட்ட சத்யஜித் ரேயின் வாழ்க்கை வரலாறு, புகழ்பெற்ற வங்காளி இதழ்களில், சிற்றிதழ்களில் அவர் அளித்த பல்வேறு பேட்டிகளில் தன் முன்னோர்களைப் பற்றிக் கூறிய விவரங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய வகையிலேயே இந்நூலில் சத்யஜித் ரேயின் முன்னோர்களைப் பற்றிய பிரிவு அமைந்துள்ளது.

    சத்யஜித் ரேயின் எழுத்துலகத்திற்குள் நான் சென்று வர முதலில் உதவிய சென்னை புக் ஹவுஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் எனது கல்லூரித் தோழனுமான இரா. பாண்டியன், அவரைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தை நடத்தி வந்த நண்பர் பாலாஜி, சென்னை திரைப்படக் கழக நண்பர்கள், குறிப்பாக சமீபத்தில் மறைந்த நண்பர் கல்யாணராமன் (தென் இந்திய திரைப்படக் கழகத்தின் செயலாளர் இதழின் ஆசிரியர்), திரைப்பட- ஆவணப்பட இயக்குநரும் திரைப்படக் கல்லூரி பேராசிரியருமான நண்பர் மோ. சிவக்குமார், நண்பர் அருள்நந்தி சிவராஜ் ஆகியோருடன் இப்பணியில் என்னை கால் ஊன்றச் செய்த நண்பரும், திரைப்பட ஆவணப்பட இயக்குநருமான அம்ஷன் குமார், திரைப்படக் கழகச் செயல்பாடுகளில் எனக்கு ஊக்கம் தந்து உதவிய தென் இந்திய திரைப்படக் கழகத்தின் அன்றைய செயலாளர் வி. சுப்ரமணியன் (அறந்தை மணியன்), நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்னை எழுத்துப்பணிக்கு இழுத்து வந்த அலைகள் வெளியீட்டக நிறுவனர் பெ.நா. சிவம், அதன் பின்னர் என் எழுத்துகளுக்கு ஊக்கமளித்து வந்த கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி, நண்பர் மருதன், பாரதி புத்தகாலய நிர்வாகி நாகராஜன், எனது பல்வேறு வகைப்பட்ட எழுத்துப் பணிகளுக்கு தொடர்ந்து விமர்சகர்களாக இருந்து, ஆலோசனை வழங்கி, இன்றளவும் ஊக்குவித்து வரும் எனது சக ஊழியர்கள் (The Hindu) மகாலக்ஷ்மி ஜெயராம், தீபலக்ஷ்மி, நசீர் அகமத், ஸ்ரீஜித், பாரத் குமார், ஷாரிகா, சோயேஷ் ராவுத்தர் ஆகியோருடன், துவக்கத்திலிருந்தே எனது எழுத்துலக முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் தந்து, என்னை இன்றும் இயக்கி, நிலைநிறுத்தி வரும் என் குடும்பத்தினருக்கும் இத்தருணத்தில் என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    சென்னை

    07/12/2016

    வீ.பா. கணேசன்

    vbganesan@gmail.com

    வீ.பா. கணேசன்

    தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், மக்கள் தொடர்பு- இதழியலில் பட்டயமும் பெற்றவர். ‘The Hindu’ நாளிதழில் 6 ஆண்டுகள் முதுநிலை உதவி ஆசிரியராகவும், 25 ஆண்டுகள் மேற்கு வங்க அரசில் உதவி செய்தி இயக்குநராகவும், 3 ஆண்டுகள் சென்னை வானொலி நிலையத்தில் செய்திவாசிப்பாளர்- மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். கடந்த 38 ஆண்டு களாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். மிருணாள் சென். ஜோதிபாசு, சுகுமால் சென், எட்கர் ஸ்நோ, ஜியார்ஜி டிமிட்ரோவ், ஃபிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மாண்டேலா ஆகியோரின் எழுத்துக்களை தமிழில் தந்துள்ளார். சத்யஜித் ரேயின் ஃபெலுடா துப்பறியும் கதைகள் 35-ல் 20 கதைகள் இவரது மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளன.

    சத்யஜித் ரே சினிமா குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான Deep Focus என்ற நூலை (ஆழ்ந்த பார்வை) தமிழில் மொழி பெயர்த்துள்ளார். The Hindu நாளிதழில் இதுவரை 16 புத்தக விமர்சனங்களை எழுதியுள்ளார். ‘தி இந்து’ நாளிதழிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். தாய்மொழியான தமிழ் தவிர, ஆங்கிலம், வங்காளி ஆகிய மொழிகளிலும் நீண்ட அனுபவமிக்கவர். வங்கதேச அறிஞர் அப்துல் கரீம் சாகித்ய விஷாரத், வங்காள திரைப்பட இயக்குநர் ரித்விக் கட்டாக், பன்மொழி அறிஞர் ராகுல சாங்கிருத்யாயன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார்.

    இந்த நூல்...

    மனித ரித இனத்தின் மேன்மைக்காக, ஒற்றுமைக்காகப் பாடுபடும் அனைவருக்கும்...

    என்னுரை

    ஒருவகையில் சொல்வதானால், இந்த வாழ்க்கைச் சரிதம் நான் செய்யும் பிராயச்சித்தம் என்றே கூறிவிடலாம். 1970களின் பிற்பகுதியில் சென்னையில் திரைப்படக் கழகச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த நேரத்தில், திரைப்படக் கழக கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவராக சத்யஜித் ரே இருந்தார். அவர் திரைப்பட வேலைகளுக்காக சென்னைக்கு வந்த நாட்களில் அவரோடு தொடர்பில் இருந்தபோது மற்றொரு வங்காள இயக்குநரும் கூட்டமைப்பின் உதவித் தலைவருமான மிர்ணாள் சென் எழுதிய Views on Cinema என்ற ஆங்கில நூலை சினிமா ஒரு பார்வை என்ற பெயரில் (உலக, இந்திய சினிமா பற்றி தமிழில் வெளிவந்த முதல் நூல் அதுதான் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்) மோ.சிவகுமார், அருள்நந்தி சிவராஜ் ஆகிய இரு நண்பர்களோடு நான் தமிழில் மொழிபெயர்த்ததை அவரிடம் தெரிவித்தபோது, தன்னுடைய Our Films, Their Films என்ற ஆங்கில நூலையும் தமிழில் கொண்டுவரவேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார். அதன்பிறகு மேற்கு வங்க அரசில் நான் பணிபுரிந்து வந்த காலத்தில் கல்கத்தாவிலும் சென்னையிலும் அவரை சந்திக்கும் நேரத்தில் எல்லாம் அவர் இதைப் பற்றி வினவிக் கொண்டேதான் இருந்தார். எனினும் பல்வேறு காரணங்களால் அவரின் அந்த சின்னஞ்சிறிய ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமலே போனது.

    அவர் மறைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவரின் ஃபெலுடா சிறுவர் கதைகளை தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு தற்செயலாக எனக்குக் கிடைத்தது. சென்னை திரைப்படக் கழகத்தில் நான் செயல்பட்டு வந்தபோது எனக்கு அறிமுகமானவரும், புகழ்பெற்ற ஆவணப்பட, திரைப்பட இயக்குநருமான நண்பர் அம்ஷன் குமார்தான் இதற்குக் காரணமாக இருந்தார். இந்தக் கதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான காப்புரிமையை சத்யஜித் ரேயின் மகனும் திரைப்பட இயக்குநருமான சந்தீப் ரேயிடம் பெற்று அதில் ஒரு பகுதியை எழுதி முடித்த பின்னர்தான் சிறந்த திரைப்பட இயக்குநராக மட்டுமே (மேற்கு வங்க மாநிலம் தவிர) வெளியுலகில் அறியப்பட்டிருந்த அவரின் மேதமையின் பன்முகத் தோற்றத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது.

    இதற்கிடையே சத்யஜித் ரே விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்களை பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 1949ஆம் ஆண்டு முதல் அவர் மறைந்த 1992ஆம் ஆண்டு வரை திரைப்படம் பற்றி பல்வேறு இதழ்களில் சத்யஜித் ரே எழுதிய கட்டுரைகள், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள் ஆகியவை அவரது மகன் சந்தீப் ரேயின் தொகுப்பில் ஆழ்ந்த பார்வை (Deep Focus) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்தபிறகு அதைத் தமிழில் வெளிக்கொண்டு வர காலச்சுவடு பதிப்பகம் முனைந்தபோது, இந்த நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பும் நண்பர் அம்ஷன் குமார் மூலமாக மீண்டும் எனக்குக் கிடைத்தது.

    அவருடன் பழகவும், அவரின் நூல்களை (வங்காளியிலும், ஆங்கிலத்திலும்) படிக்கவும், தமிழில் மொழிபெயர்க்கவும் எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்புகள் சத்யஜித் ரேயின் உலகை மேலும் நெருக்கத்தில் சென்று தரிசிக்க எனக்கு உதவி செய்தன. இந்த தரிசனம்தான் அவரின் வாழ்க்கைச் சித்திரத்தை தமிழில் வடிக்க வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்தியது.

    இந்தியாவில் திரைப்பட ரசனையை வேர்விடச் செய்த, இந்திய சினிமாவைப் பற்றி உலகைப் பேசவைத்த, உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களின், ரசிகர்களின் பாராட்டுமழையில் நனைந்த, சாதாரண மனிதர்களின் அசாதாரணமான வாழ்க்கையை புதிய பரிமாணத்துடன் படமாக்கிய, எழுத்தில் வடித்த, எண்ணற்ற இந்திய இயக்குநர்களுக்கு ஆதர்சமாக விளங்கிய சத்யஜித் ரேயின் பன்முகத் திறமை அதிகம் பேர் அறியாத ஒன்றாகும்.

    ஒரு திரைப்பட மேதையாக மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டுள்ள சத்யஜித் ரேயின் சகலகலா வல்லமையை தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறும் நோக்கத்துடனேயே இந்த நூல் எழுதப்பட்டு உங்கள் கைகளில் இப்போது தவழ்கிறது. வங்காளி மொழியின் புகழ்பெற்ற இலக்கிய வார இதழான தேஷ் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில், மரபணு மீது தமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்றும், தனது இத்தகைய பன்முகத் திறமைகள் அனைத்தும் மரபணுவின் வெளிப்பாடுகள்தான் என்று தாம் நம்புவதாகவும் சத்யஜித் ரே குறிப்பிட்டிருந்தார். அதிலிருந்தே அவரின் திறமைகளுக்கும் அவரின் முன்னோர்களுக்கும் இடையே இருந்த வரலாற்றுத் தொடர்பை சற்று விரிவாக எடுத்துக் கூறுவது அவசியம் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்த வகையில்தான் இந்த நூலில் சத்யஜித் ரேயின் முன்னோர்களைப் பற்றிய பகுதி சற்று விரிவாகவே அமைந்திருக்கும். ரேயின் பன்முகத் திறமைகளுக்கு எவரெல்லாம் அடித்தளமாக இருந்தார்கள் என்பதை வாசகர்கள் உணரும் வகையில் இந்தப் பகுதி அமையும்.

    முதன்முதலில் ரேயின் முன்னோர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை பிரிட்டிஷ் திரைப்பட ஆய்வாளர் மேரி சேட்டன் தான் தனது Portrait of a Director என்ற நூலில் எழுதினார். இந்த நூலுக்காக அவர் கல்கத்தாவில் ரேயின் வீட்டில் தங்கியிருந்தபோது ரேயின் அம்மாவும் சித்தப்பாவும் உயிரோடு இருந்தனர். அவர்களிடம் தெரிந்து கொண்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிமுகத்தை அவர் எழுதியிருந்தார். அதன்பிறகு மற்றொரு பிரிட்டிஷ் திரைப்பட ஆய்வாளரான ஆண்ட்ரூ ராபின்சன் தனது Inner Eye என்ற நூலில் அதை சற்றே விரித்து எழுதியிருந்தார். இந்த இரு நூல்களில் இருந்த விவரங்களோடு சமீபத்தில் பேராசிரியர் சந்தோக் சென்குப்தா எழுதிய The Rays Before Satyajit என்ற நூலில் கிடைத்த மேலும் பல விவரங்கள், ரே தன் சிறுபிள்ளைப் பருவம் குறித்து வங்காளியில் எழுதிய நூல் (ஜொக்கொன் சோட்டோ சிலாம்), பார்த்த பாசு எழுதி வங்காளி அகாதெமி வெளியிட்ட சத்யஜித் ரேயின் வாழ்க்கை வரலாறு, புகழ்பெற்ற வங்காளி இதழ்களில், சிற்றிதழ்களில் அவர் அளித்த பல்வேறு பேட்டிகளில் தன் முன்னோர்களைப் பற்றிக் கூறிய விவரங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய வகையிலேயே இந்நூலில் சத்யஜித் ரேயின் முன்னோர்களைப் பற்றிய பிரிவு அமைந்துள்ளது.

    சத்யஜித் ரேயின் எழுத்துலகத்திற்குள் நான் சென்று வர முதலில் உதவிய சென்னை புக் ஹவுஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் எனது கல்லூரித் தோழனுமான இரா. பாண்டியன், சென்னை திரைப்படக் கழக நண்பர்கள், குறிப்பாக சமீபத்தில் மறைந்த நண்பர் கல்யாணராமன் (தென் இந்திய திரைப்படக் கழகத்தின் செயலாளர் – சலனம் இதழின் ஆசிரியர்), திரைப்பட- ஆவணப்பட இயக்குநரும் திரைப்படக் கல்லூரி பேராசிரியருமான நண்பர் மோ. சிவக்குமார், நண்பர் அருள்நந்தி சிவராஜ் ஆகியோருடன் இப்பணியில் என்னை கால் ஊன்றச் செய்த நண்பரும், திரைப்பட- ஆவணப்பட இயக்குநருமான அம்ஷன் குமார், திரைப்படக் கழகச் செயல்பாடுகளில் எனக்கு ஊக்கம் தந்து உதவிய தென் இந்திய திரைப்படக் கழகத்தின் அன்றைய செயலாளர் வி. சுப்ரமணியன் (அறந்தை மணியன்), நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்னை எழுத்துப்பணிக்கு இழுத்து வந்த அலைகள் வெளியீட்டக நிறுவனர் பெ. நா. சிவம், அதன் பின்னர் என் எழுத்துகளுக்கு ஊக்கமளித்து வந்த கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி, நண்பர் மருதன், பாரதி புத்தகாலய நிர்வாகி நாகராஜன், எனது பல்வேறு வகைப்பட்ட எழுத்துப் பணிகளுக்கு தொடர்ந்து விமர்சகர்களாக இருந்து, ஆலோசனை வழங்கி, இன்றளவும் ஊக்குவித்து வரும் எனது சக ஊழியர்கள் (The Hindu) மகாலக்ஷ்மி ஜெயராம், தீபலக்ஷ்மி, நசீர் அகமத், ஸ்ரீஜித், பாரத் குமார், ஷாரிகா, சோயேஷ் ராவுத்தர் ஆகியோருடன், துவக்கத்திலிருந்தே எனது எழுத்துலக முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் தந்து, என்னை இன்றும் இயக்கி, நிலைநிறுத்தி வரும் என் குடும்பத்தினருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    சென்னை

    07/12/2016

    வீ.பா. கணேசன்

    சகலகலா வல்ல சத்யஜித் ரே

    1992-ம் ஆண்டின் துவக்கம். உத்தாரண் (தடைபட்ட பயணம்) என்ற தான் எழுதிய கதைக்கு திரைக்கதையை எழுதி, அதைத் திரைப்படமாக எடுப்பதற்கான வேலைகளில் மூழ்கியிருந்தார் சத்யஜித் ரே. இந்தியாவிலேயே முதன்முறையாக சினிமா ஸ்டூடியோக்களின் பக்கமே போகாமல் முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பிலேயே தனது முதல் படமான ‘பாதேர் பாஞ்சாலி’யை உருவாக்கி, இந்தியத் திரையுலகிற்கு ஒரு புதிய பாதையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் உலகப் புகழ் பெற்றிருந்த அவர், இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், ஸ்டூடியோவின் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே, அவசர மருத்துவ ஏற்பாடுகளுக்கு இடையே, தனது திரைப்படத்தை உருவாக்க வேண்டிய நிலையில் இருந்த நேரம் அது.

    அதற்கு முன்பு 1991 ஆண்டு இறுதியில் கல்கத்தா வானொலி நிலையம் மேற்கத்திய இசை மாமேதைகளில் ஒருவரான உல்ஃப்காங் மொஸார்ட் மறைந்து இரு நூற்றாண்டுகள் ஆனதை நினைவு கூரும் வகையில் சத்யஜித் ரே ஆற்றிய உரையை பதிவு செய்தது. அந்த நேரத்தில்தான் திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளை வழங்கும் அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட் அன்ட் சயின்ஸ் அமைப்பு திரைப்படத் துறைக்கு அவர் வழங்கிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கார் விருதை சத்யஜித் ரேவிற்கு வழங்குவது என முடிவு செய்து அறிவித்தது.

    இடையில் உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 30ஆம் தேதியன்று அமெரிக்காவில் நடைபெற இருந்த விழாவில் தன்னால் நேரடியாகப்

    Enjoying the preview?
    Page 1 of 1