Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Keladi Kanmani
Keladi Kanmani
Keladi Kanmani
Ebook293 pages1 hour

Keladi Kanmani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இயக்குனர் பாலுமகேந்திராவின் வீடு திரைப்படம் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. சொந்த வீடு கட்டி குடியேற நினைக்கும் ஒரு சாமானியனின் துயரங்களை பெரும் காவியமாக வடித்திருப்பார் பாலுமகேந்திரா. இதே அடிப்படையில் குடும்பம் என்கிற அமைப்பை பற்றிய முக்கியமான படம் வஸந்த்தின் கேளடி கண்மணி. வீடு என்கிற குடும்ப அமைப்பின் சிக்கல்கள், அதில் பெண்ணின் பங்கு, குழந்தைகளின் மனநிலை என ஒரு முக்கோண கதையை வெகு நேர்த்தியாக ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து அதனை இசை. எனும் நரப்புகளால் கோர்த்து படைக்கப்பட்ட மிக சிறந்த படம் கேளடி கண்மணி. இந்த திரைப்படமும் வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

வஸந்ததின் முதல் திரைப்படம் என்கிற எவ்வித அடையாளமும் அற்று ஒரு தேர்ந்த கலைஞனின் பெரும் படைப்பாகவே இன்றுவரை கேளடி கண்மணி திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த புத்தகத்தில் அத்திரைப்படத்தின் திரைக்கதை மட்டுமின்றி, அந்த படம் எடுத்த விதம் குறித்த தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார், ஒரு உதவி இயக்குனர் இயக்குனரிடம் நேரடியாக கற்று தெரிந்துக் கொள்ள முடியாத பல விஷயங்களை இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். வாசிப்பு எப்படி ஒருவனை பெரும் கலைஞனாக மாற்றும் என்பதையும் இந்நூலை வாசித்தே அறியலாம்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124803375
Keladi Kanmani

Read more from Director Vasanth

Related to Keladi Kanmani

Related ebooks

Reviews for Keladi Kanmani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Keladi Kanmani - Director Vasanth

    http://www.pustaka.co.in

    கேளடி கண்மணி

    Keladi Kanmani

    Author:

    இயக்குநர் வஸந்த்

    Director Vasanth
    For more books

    http://www.pustaka.co.in/home/author/vasanth

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    திரைக்கதையும்

    திரைப்படம் உருவான

    அனுபவங்களும்

    இயக்குநர் வஸந்த்

    இயக்குனர் பாலுமகேந்திராவின் வீடு திரைப்படம் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. சொந்த வீடு கட்டி குடியேற நினைக்கும் ஒரு சாமானியனின் துயரங்களை பெரும் காவியமாக வடித்திருப்பார் பாலுமகேந்திரா. இதே அடிப்படையில் குடும்பம் என்கிற அமைப்பை பற்றிய முக்கியமான படம் வஸந்த்தின் கேளடி கண்மணி. வீடு என்கிற குடும்ப அமைப்பின் சிக்கல்கள், அதில் பெண்ணின் பங்கு, குழந்தைகளின் மனநிலை என ஒரு முக்கோண கதையை வெகு நேர்த்தியாக ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து அதனை இசை. எனும் நரப்புகளால் கோர்த்து படைக்கப்பட்ட மிக சிறந்த படம் கேளடி கண்மணி. இந்த திரைப்படமும் வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

    வஸந்ததின் முதல் திரைப்படம் என்கிற எவ்வித அடையாளமும் அற்று ஒரு தேர்ந்த கலைஞனின் பெரும் படைப்பாகவே இன்றுவரை கேளடி கண்மணி திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த புத்தகத்தில் அத்திரைப்படத்தின் திரைக்கதை மட்டுமின்றி, அந்த படம் எடுத்த விதம் குறித்த தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார், ஒரு உதவி இயக்குனர் இயக்குனரிடம் நேரடியாக கற்று தெரிந்துக் கொள்ள முடியாத பல விஷயங்களை இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். வாசிப்பு எப்படி ஒருவனை பெரும் கலைஞனாக மாற்றும் என்பதையும் இந்நூலை வாசித்தே அறியலாம்.

    ***

    சிவகாமி C.T. சோமையா K. பாலசந்தர்

    மாதா பிதா குருவுக்கு

    ***

    காலம் கலை கலைஞன்

    சி. மோகன்

    வஸந்தின் கேளடி கண்மணி

    இயங்கும் காட்சிப் படிமங்களின் நகர்வின் வழியே சினிமா ஒரு படைப்புலகை சிருஷ்டிக்கிறது. இந்த சிருஷ்டிகாரத்தை சாத்தியமாக்குவதில் திரைக்கதை எனும் இலக்கியப் பிரதியும் சினிமாவில் வலுவான பங்கு வகிக்கிறது. உலகமெங்கும் பல திரைக்கதைகள் புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழில் இன்றளவும் இது ஆபூர்வ நிகழ்வாகவே இருந்து வருகிறது. திரைக்கதை புத்தக வடிவம் பெறும்போது, அது ஓர் இலக்கியப் பிரதியாக, வாசிப்பு அனுபவத்துக்கும் அதன் விளைவுகளுக்கும் உள்ளாகிறது. அதற்கும் மேலாக, அத்திரைப்படத்தை மேலும் நுட்பமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் அணுக அது உதவுகிறது.

    ஏனென்றால், புத்தகம் என்பது நிதானமான வாசிப்புக்குரியதாக நம்முன் இருக்கிறது. அவசியமானால் அதன் எந்தப் பகுதியையும் நாம் மீண்டும் படிக்கலாம். போதுமான அவகாசம் எடுத்துக்கொண்டு அதை நாம் புரிந்துகொள்ளலாம். வாசகனுக்கும் புத்தகத்துக்குமான உறவு அத்தகையது. ஆனால், பார்வையாளனுக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவு வேறானது. காட்சிப் படிமங்களின் சீரான நகர்வில் சினிமா இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் இயக்கத்தோடு இணைந்தே நாம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னிலையில் நம் கவனகுவிப்பின் ஆற்றலைப் பொறுத்தே, அதற்கும் நமக்குமான உறவும், உள்வாங்குதலும், புரிதலும் நிகழ்கிறது. இதன் காரணமாக, பல நுட்பங்களை நாம் அனுபவிக்க முடியாமல் இழந்துவிடுவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. அதேசமயம், அதன் திரைக்கதைப் பிரதி நம் வாசிப்புக்குக் கிடைக்குமென்றால் அதன்மூலம் நாம் அடையும் பேரு அலாதியானது. அப்போது திரைப்பட அனுபவம் நமக்குச் செழுமையானதாகவும் முழுமையானதாகவும் அமைய வாய்ப்பு கிடைக்கிறது, இதை என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன்.

    இவ்வகையில் வஸந்த் உருவாக்கிய மூன்று குறிப்பிடத்தகுந்த படங்களின் திரைக்கதைகள் புத்தகங்களாக வெளிவந்திருப்பது தமிழ்ச் சூழலில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.

    தமிழ்ச் சினிமாவின் சிறந்த படங்கள் எல்லாமே வெகுஜன ரசனைக்குரிய காட்சி அமைப்புகளையும், மனித உறவுகள் சார்ந்து மலரும் நெகிழ்ச்சியான காட்சிப் படிமங்களையும் ஒரு லயத்தோடு இணைக்கும் புனைவுகளாகவே உருவாகியிருக்கின்றன.

    பொதுப் புத்தியையும் மொன்னையான தர்க்கத்தையும் முன்னிறுத்தும் கலைப் புனைவுகளற்ற யதார்த்த பாணி படங்களை விடவும் இவை மேலானவை. தமிழ்ப் படங்களின் உயிரம்சமாக இருக்கும் நெகிழ்ச்சியினை வெறும் sentiments என ஐரோப்பிய கல்வித்துறை விமர்சன மரபின் பிடியில் சிக்குண்டிருக்கும் விமர்சகர்கள், தமிழ் வாழ்வின் உயிர்ப்பினை அறியாது பிதற்றும் கொடுமை இன்னமும் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நெகிழ்ச்சியில் கசிந்துருகி வாழ்வின் மேன்மையை ஸ்பரிசிக்கும் மனங்கள் நம்முடைய இதன் அருமை அறியாத விமர்சனங்கள் வெறும் பொக்குகளே.

    நெகிழ்வின் அற்புத கணங்களைக் காட்சிப் படிமங்களாக இயங்கச் செய்திருக்கும் தமிழ் சினிமாக்களின் வரிசையில் ஒரு முக்கியமான படம் 'கேளடி கண்மணி'. இது வஸந்தின் படைப்பு மனோபாவத்தையும் படைப் பாற்றலையும் உறுதி செய்த படம்.

    இப்படத்திலிருந்து ஒரே ஒரு காட்சியை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சாரதா டீச்சரும் ARR-உம் திருமணம் செய்துகொள்ள எடுத்திருந்த முடிவை அனுவின் குழந்தைமை முரண்டினால் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இனி, தங்கள் மகளுக்குத் திருமணம் நடக்கப் போவதில்லை என அறிந்த சாரதா டீச்சரின் காது கேளா ஊமைப் பெற்றோர்கள் தற்கொலை செய்துகொண்டு விடுகின்றனர். அக்காட்சியில் கூடத்தில் பெற்றோரின் சடலங்கள் இருக்கின்றன. வெடித்துச் சிதறுவதற்காக உள்ளார்ந்து திரண்டு கொண்டிருக்கும் கேவல்களோடு விக்கித்து உறைந்து நின்று கொண்டிருக்கிறார் சாராத டீச்சர், இதை அறியாமல், தொட்டுப் பிடித்து விளையாடும் தெருக் குழந்தைகளில் ஒன்று அங்கு ஒளிந்துகொள்ள உள்ளே நுழைகிறது. இன்னொரு குழந்தை உள் நுழைந்து ஒளிந்த குழந்தையைக் கண்டுபிடித்துக் கூட்டிப் போகிறது. ஏதோ விசாரிக்க அங்கு வந்த தெருவில் இருக்கும் ஓர் அம்மாள் ஏதுமறியாது சாரதா டீச்சரின் தோளைத் தொடும் போதுதான் நிலைமையை உணர்கிறார். உறைந்து நின்றிருந்த சாரதா டீச்சரின் திரண்ட கேவல்கள் குமுறி வெடிக்கின்றன, அப்போது ஒரு குழந்தை ஒளியவோ அல்லது ஒளிந்ததைத் தேடியோ நுழைகிறது. அது திக்கித்துப்போய் அப்படியே பின் வாங்குகிறது. அதனைத் தொடர்ந்து தெருக்காரர்கள் வர ஆரம்பிக்கிறார்கள்.

    பல நுட்பமான தளங்கள் ஒன்றையொன்று மேவி உருக்கொண்டிருக்கும் காட்சி இது. வாழ்வும் மரணமும் ஒரே கணத்தில் ஒரே இடத்தில முயங்கும் காட்சி, மனித உறவுகளும், மனித மனங்களின் நெகிழ்ச்சிகளும் உறவாடிக் கலங்க வைக்கும் காட்சி. ஒரு அபூர்வமான படைப்பாளியிடம் மட்டுமே உருத் திரளக்கூடிய காட்சி.

    இப்படம் முழுவதும் முதலிலிருந்து கடைசி வரை, மனித மனங்களின் உள்ளுணர்வு சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்த கேள்வியும் புதிரும் இழையோடிக் கொண்டிருக்கிறது. மொன்னையான, பொதுப் புத்தி சார்ந்த, தர்க்கரீதியான பதில்கள் மூலம் கேள்விகளையும் புதிர்களையும் காயடிக்காமல் அவற்றை வாழ்வின் அகண்ட வெளியில் விந்தையோடும், வியப்போடும், புதிரோடும் பார்த்துக்கொண்டிருக்கிறார் வஸந்த். ஒரு படைப்பாளிக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடிய ஸ்திதி இது.

    பின்னணி இசையும் பாடல்களும் இப்படத்துக்குப் பெரும் கொடையாக அமைந்திருக்கின்றன. இளையராஜாவின் மேதமையில் உருவான அற்புத சிருஷ்டிகள், திரைப்படப் பாடல்களுக்கும் நம் வாழ்வுக்குமுள்ள உறவு அபாரமானது. நினைவுகளின் சேகரம் ஒரு நதியென நம்முள் சலனித்துக் கொண்டிருக்கிறது. நதியில் ஒரு கல் விடப்படும்போது அது நீரின் மேல் மட்டத்தில் குமிழிகளையும் வளையங்களையும் உருவாக்கியபடியே உள்ளிறங்குகிறது. அது போலத்தான், காலங்களைக் கடந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஒரு பழைய திரைப்படப் பாடலைக் கேட்க நேரிடும் போது, நம்முள் சலனித்துக் கொண்டிருக்கும் நதியில் ஒரு கல்லென அது உள்ளிறங்கி ஏதேதோ அலைவுகளை நம்முள் நிகழ்த்தத் தொடங்கிவிடுகிறது, நம் வாழ்வின் காலத்தைக் கலைத்துப் போட்டு, நினைவுகளின் நதியோட்டத்தில் நம்மை முக்குளிக்கச் செய்யும் பொக்கிஷங்களாக பல பாடல்களை நாம் கொண்டிருக்கிறோம். நம் பொக்கிஷ சேகரத்துக்கு இளையராஜா அளித்திருக்கும் கொடையாக இப்படத்தின் பாடல்கள் இருக்கின்றன. குறிப்பாக 'மண்ணில் இந்தக் காதலன்றி...'

    கனவுகள் மிக்கவர் வஸந்த். உலகின் சிறந்த படங்களிலிருந்து அறிவு பெற்றவர். அவருடைய கனவுகளும் ஞானமும் படைப்பு மனோபாவமும் ஒத்திசைந்து மிகச் சிறந்த படங்களைத் தர இன்றைய தமிழ் சினிமா சூழல் எந்த அளவுக்கு அவருக்கு இணக்கமாக இருக்குமென்று தெரியவில்லை. அதே சமயம் காலம் அவர்முன் விரிந்து கிடக்கிறது, தன் கனவுகளை விரித்தபடியே படைப்பு மனோபாவத்தோடு அவர் தொடர்ந்து இயங்கிவரும் பட்சத்தில் அவருடைய கனவுகள் படைப்புகளாக வசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    சி. மோகன்

    ***

    கதையிலிருந்து கதையை எடுத்துவிடுவதே சிறந்த கதை

    இயக்குநர் வஸந்த் S.சாய்

    புத்தகம் படிப்பது சிறுவயதிலிருந்தே எனக்கிருக்கும் ஆர்வம். அதைவைத்துப் பார்க்கையில் நான் ஒரு எழுத்தாளராகத்தான் மாறப்போகிறேன் என்று நினைத்தேன். எழுத்தின் மீது அந்தளவிற்கு தீராக்காதல் இருந்தது. எழுத்தாளர்களைக் கொண்டாடுவது, அவர்களைச் சென்று பார்ப்பது, அவர்களுடன் பேசுவது, அவர்கள் சொல்கிற புத்தகங்களைப் படிப்பது இதெல்லாம்தான் என் பதின்பருவத்தில் கிளர்ச்சியூட்டக்கூடிய விஷயம். என் வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் மற்றொரு மிக முக்கியமான மனிதர் ரமணீயன். எழுத்தாளர்.

    என்னுடைய பதினாறு வயதிலிருந்தே ரமணியன் சார் நல்ல பழக்கம். வானொலிகளில் ஒலிபரப்பாகிற சிறுவர் சோலை, கண்மணிப் பூங்கா போன்ற நிகழ்ச்சிகளில் நான் சிறுவனாகயிருந்த பொழுதே கலந்து கொண்டிருக்கிறேன். அவற்றில் என் பங்களிப்பும் ஏதோவொரு விதத்தில் இருக்கும். பாரதிபாலர் கலையரங்கம் நடத்திய எஸ்.வஜ்ரவேலு அண்ணா மூலமாக, அவருடன் எனக்கு முதல் தொடர்பு ஏற்பட்டு, அவருக்கும் எனக்குமிடையே நல்ல புரிதலும், அன்பும் அதிகமாகி, நான் இன்றைக்கு நானாக இருப்பதற்கு ரமணீயனை முக்கியமான காரணமாகச் சொல்வேன். என்னுடைய நண்பர், தத்துவாசிரியர், வழிகாட்டி எல்லாமே அவர்தான். அதுவும், என் ஆரம்ப காலத்தில் பெரியளவில் எனக்கு உதவிகள் செய்த மனிதர். எம்மாதிரியான புத்தகங்கள் படிக்க வேண்டும்? எந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும்? இப்படி உலகத்தைப் பார்க்கிற பார்வையிலிருந்து, பொது அறிவு, உலக நடப்பு, கலை என சகலத்தையும் அறிமுகப்படுத்தியவர். எனக்கு சுயமுன்னேற்றப் புத்தகங்களின் மேல் ஆர்வம் வருவதற்கு முக்கியமான காரணகர்த்தா. ரமணியன் சுயமுன்னேற்றப் புத்தகங்களை அதிகமாக எழுதியவரும் கூட.

    'குமுதம்' போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதியவர். தவிர சொந்தமாக புத்தகங்கள் பதிப்பிக்க 'நால்வர் நூலகம்' என்ற பதிப்பகத்தையும் நடத்திவந்தார். கோப்மேயர், நார்மன் வின்செண்ட் பீல், டேல் கார்னிகி என சுயமுன்னேற்றப் புத்தகங்களின் பிதாமகர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது ரமணீயன்.

    அப்போது நான் படித்துக்கொண்டிருந்த, பச்சையப்பன் கல்லூரியில் மதியத்திற்கு மேல் பல சமயங்களில் வகுப்புகள் நடக்காது. அந்நேரத்திலெல்லாம் யோசிக்காமல் நான் கிளம்பிச் செல்கிற இடம் ரமணியன் சார் வீடு. 357, கோவிந்தப்பநாயக்கன் தெரு என்பதுதான் வீட்டு முகவரி. அந்தத் தெரு முழுவதுமே மனிதத்தலைகள் நிரம்பியிருக்கும். பாரீஸ் கார்னரில், கோவிந்தப்ப நாயக்கன் தெரு, அங்குள்ள ஆரியபவன் ஹோட்டல், பின்னர் ஒத்தவாடை தியேட்டர் என அனைத்தையும் நாங்கள் சுற்றி வருவோம். எனக்குப் பதினாறு வயது, அவருக்கு 45 வயதிருக்கும். எவ்வளவு வயது வித்தியாசங்கள்? எதுவும் எங்கள் கருத்துப் பரிமாற்றங்களுக்கு தடையாக இருந்ததில்லை. ஒத்தவாடை தியேட்டரில்தான் கணேசனாக இருந்தவருக்கு பெரியார், சிவாஜி என பெயர் வைத்து, சிவாஜி கணேசனாக மாற்றினார் என்பது வரைக்கும் பல தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார்.

    இப்படி அவருடனேயே என் இளமைக்காலங்கள் கழிந்தன. எப்பொழுது நான் பாலச்சந்தர் சாரிடம் உதவியாளனாக இருந்துவிட்டு, ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்று வந்தேனோ, அப்போது ரமணீயன் சார் எனக்கு உதவியாக என் திரைப்படங்களில் வேலை செய்தார். கேளடி கண்மணி, நீ பாதி நான் பாதி என்ற என் திரைப்படங்களின் திரைக்கதையில் பெரும் பங்களிப்பைச் செய்தவர் ரமணியன் சார்.

    பத்திரிக்கை - கவிதாலயா:

    எழுத்தாளர்களின் பிறந்தநாள் மட்டுமல்ல, எனக்கு பிறந்தநாள் வந்தால்கூட எழுத்தாளர்களைச் சென்று பார்த்து, அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். அப்படி திரு.அசோகமித்ரனை தாமோதரன் சாலையில் நான் சென்று சந்தித்தது நினைவில் அழியாமல் உள்ளது. அவர்களோடெல்லாம் பழகிப்பழகியே என்னை நானே எழுத்தாளர் என்று நினைத்துக்கொண்டேன். வான்கோழி - மயில் கதைதான்!

    இருந்தாலும், நானும் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு, அமுதசுரபியில் ஒருமுறை முதல்பரிசு என்றெல்லாம் வாங்கியிருக்கிறேன். விகடன், குமுதம் முதலான பத்திரிக்கைகளில் கதையும், கட்டுரையும் எழுதியிருக்கிறேன். திரு. கே. பாலச்சந்தர் அவர்களைச் சந்திப்பதற்கு முன்பு வரை என்னை ஒரு பத்திரிக்கையாளனாகத்தான் நினைத்திருந்தேன்.

    கே.பாலச்சந்தரை நான் சந்திக்கிற வாய்ப்பும் இந்த பத்திரிக்கைத்துறை வாயிலாகத்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1