Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanthaanga Jeichaanga…
Vanthaanga Jeichaanga…
Vanthaanga Jeichaanga…
Ebook297 pages1 hour

Vanthaanga Jeichaanga…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறப்பான திரைக்கதைக்கான ஏராளமான விதைகள், ஆழமான பாத்திரப் படைப்புகள், நெருடலான தாக்கமான சூழல்கள், மனதைத் தொடும் சம்பவ சம்பாஷணைகள், உங்கள் திரைக்கதையில் இருக்கிறதா தேடுங்கள்? இருந்தால் நாளைய திரையில் நீங்களும் வெற்றியாளர்கள் என்பது உத்தரவாதம்! திரைக்கு வரும் முயற்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் உயரத் துடிப்பவர்களுக்கும் மணவையின் ‘வந்தாங்க ஜெயிச்சாங்க’ புத்தகம் ஒரு வரப்பிரசாதமாக அமைவதை வாசித்து அறிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580163909691
Vanthaanga Jeichaanga…

Read more from Kalaimamani Manavai Pon. Manickam

Related to Vanthaanga Jeichaanga…

Related ebooks

Reviews for Vanthaanga Jeichaanga…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanthaanga Jeichaanga… - Kalaimamani Manavai Pon. manickam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வந்தாங்க ஜெயிச்சாங்க...

    (பிரபலங்கள் மனசுல என்ற நூலின் பெயர் மாற்றப்பட்ட மறுபதிப்பு)

    Vanthaanga Jeichaanga…

    Author:

    கலைமாமணி மணவை பொன். மாணிக்கம்

    Kalaimamani Manavai Pon. Manickam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-manavai-pon-manickam

    பொருளடக்கம்

    என் மனசுல பதிஞ்ச மணவையின் வந்தாங்க ஜெயிச்சாங்க

    அணிந்துரை

    என்னுரை

    1. கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து

    2. கவிஞர் பழநிபாரதி

    3. கவிஞர் பா. விஜய்

    4. டாக்டர் வைகைச் செல்வன் M.L.A., M.A.B.L., D.Litt., D.Ed., Ph.D.,

    5. டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர்

    6. நடிகர் சிவக்குமார்

    7. நடிகர் சத்யராஜ்

    8. நடிகர் விக்ரம்

    9. நடிகர் சூர்யா

    10. நடிகர் மாதவன்

    11. டைரக்டர் எஸ்.பி. முத்துராமன்

    12. டைரக்டர் மிஷ்கின்

    13. பெப்சி உமா

    14. கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன்

    15. பட்டுக்கோட்டை பிரபாகர்

    16. நடிகர் விசு

    17. நடிகர் சார்லி

    18. இரா. கண்ணன்

    19. நடிகர் பார்த்திபன்

    20. டைரக்டர் A.L. விஜய்

    21. இயக்குனர் விக்ரமன்

    22. நடிகர் மதன்பாப்

    23. ரபிபெர்னாட்

    24. நடிகர் ராதாரவி

    25. லொடுக்கு பாண்டி கருணாஸ்

    26. இயக்குனர் ஆர்.கே. செல்வமணி

    27. இயக்குனர் பாலா

    28. நடிகர் ஸ்ரீகாந்த்

    29. பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம்

    30. லாரன்ஸ் ராகவேந்திரா

    31. டைரக்டர் லிங்குசாமி

    32. இசையமைப்பாளர் பரத்வாஜ்

    33. இயக்குனர் டி.பி. கஜேந்திரன்

    34. டாக்டர் C. விஜயபாஸ்கர், M.L.A.,M.B.B.S., B.L.,

    35. முனைவர் டைரக்டர் V. ஜெயப்ரகாஷ்

    36. இயக்குனர் இராஜகுமாரன்

    37. கவிஞர் சிநேகன்

    38. டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்

    39. பாட்டுக்குயில் பவதாரணி

    40. நடிகர், இயக்குனர் தோழன் மு. களஞ்சியம்

    41. டைரக்டர் மகாபிரபு வெங்கடேஷ்

    42. டைரக்டர் ஷக்தி சிதம்பரம்

    43. பலகுரல் மன்னன் நடிகர் தாமு

    44. இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார்

    45. வைகைப்புயல் வடிவேல்

    46. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்

    47. நடிகர் ராஜேஷ்

    48. நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனி

    49. டைரக்டர் சுந்தர் சி.

    50. கவிஞர் இளைய கம்பன்

    51. டைரக்டர் ராஜகோபால்

    52. ஆத்தா சி.ஆர். சரஸ்வதி

    53. நகைச்சுவை நடிகர் மயில்சாமி

    54. இசையமைப்பாளர் பரணி

    55. கிங்மேக்கர் டாக்டர் S. ராஜசேகர்

    56. தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன்

    57. இசையமைப்பாளர் சிற்பி

    58. இயக்குனர் V. பிரபாகரன்

    59. ஏ.வி. ரமணன்

    60. டைரக்டர் சுசி. கணேசன்

    61. இயக்குனர் இராஜராஜ சோழன், USA

    62. கலைமாமணி வெண்ணிற ஆடை மூர்த்தி

    63. இசைக்கவிஞன் சௌந்தர்யன்

    64. யுகபாரதி

    ‘வாழ்ந்து காட்டி வழிகாட்டு’

    என்னும் தாரக மந்திரத்தை தன் வாழ்வியல் தத்துவமாகக் கொண்டு வாழும் எனது வழிகாட்டி.

    மனிதநேயத்தின் மறுபதிப்பாய்த் திகழும் வணக்கத்துக்குரிய மாநகரத் தந்தை அண்ணன் சைதை சா. துரைசாமி அவர்களுக்கு அன்புடன் இந்நூல்...

    என் மனசுல பதிஞ்ச மணவையின் வந்தாங்க ஜெயிச்சாங்க

    கடவுள் கிருபையால் என்னை அறியாமலே எனக்குள் திரைக்கதை அமைக்கும் யுக்தி வளர்ந்திருக்கிறது. அதன் சிறப்பைக் கூறி பிறர் பாராட்டும்போதெல்லாம், எனக்கு வந்த இந்தக் கலை, என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மற்றும் சினிமாவை நோக்கி வர உள்ள இளைய சமுதாயத்தினருக்கும் உதவும் வகையிலும், வளரும் வகையிலும் வெளிப்படுத்த நினைத்தே, ‘வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்’ என்ற புத்தகத்தை எழுதினேன். அந்தப் புத்தகத்தின் மற்றொரு கோணமாக, மணவை பொன். மாணிக்கத்தின் ‘வந்தாங்க ஜெயிச்சாங்க’ என்ற புத்தகம் அமைந்துள்ளது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

    மேலோட்டமாகப் பார்த்தால் நான் சொல்வது சம்பந்தமில்லாதது போல் தோன்றும். ஆனால், அப்புத்தகத்தை உள்ளூர ஒன்றிப் படித்து அசை போட்டால் அது உண்மை என்பது விளங்கும்.

    எப்படியெனில், நான் எனது உதவியாளர்களுக்கு நல்ல சினிமா, நல்ல திரைக்கதை குறித்து கூறும் கருத்தில் உள்ள முக்கிய சாராம்சம், ‘கதையின் களம் முழுக்க முழுக்க கற்பனையாக இருப்பதைவிட, பார்த்த அல்லது கேள்விப்பட்ட அதாவது நடைமுறைக்குட்பட்டதாக இருக்க வேண்டியது மிக முக்கியமென்பேன். அடுத்து கதாபாத்திரங்களின் குணாதிசயம் மனதில் பதியும் வண்ணம் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பேன். காட்சிகளின் அமைப்பு எதார்த்தமான அன்றாட நடைமுறையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால், அது சிறப்பம்சமாக கைகொடுக்குமென்பேன். களம் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரப் படைப்பு எளிதில் பதியும் எதார்த்தமான நடைமுறை சம்பவங்களாக காட்சிகள் இப்படி அமைந்து விட்டால், அடுத்த அம்சமான வசனம் என்பது அலங்கார வார்த்தைகளின் தேடலுக்கு சிரமமின்றி அதுவாகவே உணர்வுப்பூர்வமாக வந்து விழுமென்பது உத்தரவாதம் என்பேன்.’

    நான் சினிமாவிற்கு வரும்முன், வெற்றி பெற்ற பல திறமைசாலிகளின் படைப்புகளைப் பரிசீலித்தே இவைகளைப் பட்டியலிட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். பின்னாளில், எனது படங்களில் திரைக்கதை முடிவு செய்யப்பட்டவுடன், பட்டியலிட்ட விஷயங்கள் அதில் உள்ளதா என்பதை அலசி ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொண்டவுடன் அதன் வெற்றியையும் நம்பிக்கையுடன் தீர்மானித்துக் கொள்வேன். இதுவரை இந்த என் திரைக்கதைக்கான ஃபார்முலாவின் கணக்கு, எனது ஒன்றிரண்டு படங்களைத் தவிர மீதி அனைத்துப் படங்களிலும் பிசகாமல் வெற்றித் தந்திருக்கிறது. அந்த ஒன்றிரண்டு என் கணிப்பில் தவறியதும், என் கணிப்பில் நேர்ந்த கவனக்குறைவே ஒழிய, ஃபார்முலாவின் குறை அல்ல. இது நூறு சதவீதம் உண்மை.

    மணவையின் ‘வந்தாங்க ஜெயிச்சாங்க’ புத்தகத்தில்...

    தன் மகன் கடன் வாங்கும் கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடக் கூடாதென அவனைத் திருத்த அவன் மனதில் ஆழப்பதியும் வண்ணம் தன் கைக்கு சூடு போட்டுக் கொண்ட பா. விஜய்யின் தாய், எவ்வளவு சிறப்பம்சமான கதாபாத்திரம்!

    வாடகை வீட்ல இருக்கும் போதாவது அப்பாவை தோட்டத்து பாத்ரூமுக்குப் போகும் போது பார்க்க முடிந்தது. புது வீடு கட்டினவுடனே, அப்பா ராத்திரி வரும்போது தூங்கிட்டிருக்கோம். அதிகாலையில் அவர் ரூம்லயே குளிச்சுட்டு புறப்படும்போது தூங்கிட்டிருக்கோம். அப்பாவைப் பார்க்க முடியலை டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் சாரின் குழந்தைகளின் இந்த ஏக்கம். அப்பாவாக அவரது பிள்ளைகளுக்கு அவர் கொடுக்கத் தவறிய இறுக்கமான பாசநெருடல் அல்லவா?

    நான் பஸ்ல போறது எனக்கு கேவலம் இல்லை. ஆனா, ஒரு நடிகரோட தம்பி பஸ்ல போறது உனக்குத்தான் கேவலம் தம்பி கார்த்திக்கின் இந்த இயல்பான எதார்த்தமான வசனம் எவ்வளவு தூரம் தாக்கத்தை உண்டாக்கியிருந்தால் அண்ணன் சூர்யாவை உடனடியாக தன் சினிமா சம்பாத்தியத்தில் தம்பிக்கு கார் வாங்கிக் கொடுக்க வைத்திருக்கும்?

    பொதுவாக பள்ளிக்கூடங்கள்ல வாத்தியார் பாடத்துல கேள்வி கேட்டு, பதில் தெரிஞ்சவங்க கை தூக்குங்க என்று சொல்வதைத்தான் பார்த்திருப்போம். ஆனால், நான் படித்த பள்ளியில் ‘இரண்டு ஆள் உயர அண்டாவில் தண்ணி அடித்து நிரப்ப விரும்புகிறவர்கள் கை தூங்குங்கள்’ என்று ஆசிரியர் கேட்பார். யாரும் கையைத் தூக்க மாட்டார்கள். நான் கையைத் தூக்குவேன். காரணம், பொன்மனச் செம்மலின் சத்துணவுச் சாப்பாட்டை வயிறு நிறைய என்னைச் சாப்பிடவிட்டு, தட்டு நிறைய என் அப்பா அம்மாவுக்கும் கொடுத்து அனுப்புவார்கள் லாரன்ஸ் ராகவேந்திரா.

    இப்படி ஒரு பிள்ளையைப் பெற்ற அவரது பெற்றோர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்?

    மெட்ராசில் நான் கடன்பட்டு ஊர் செல்லும் போதெல்லாம் அம்மா, அண்ணி, பெரிய அண்ணன், சின்ன அண்ணன் ஆகியோர் அடுத்தவருக்குத் தெரியாமல் தனித் தனியே பணத்தை கைக்குள் சுருட்டிக் கொடுத்தது இதுதானே டைரக்டர் லிங்குசாமியின் ‘ஆனந்தம்’ படத்திற்கு ஆழமான அன்பு அஸ்திவாரம்.

    ‘புதிய மன்னர்கள்’ படம் தோல்விக்குப் பிறகு காரை விற்றுவிட்டு, அதுவரை காரில் அழைத்துச் சென்ற என் மகனை, ஆட்டோவில் கூட்டிச் சென்றது. ‘பூவே உனக்காக’ வெற்றிக்குப் பின் லேன்சர் காரில் மீண்டும் அழைத்துச் சென்று சந்தோஷப்பட்டது. கனத்த மனதோடு வாழ்க்கையின் மேடு, பள்ளங்களை ஜீரணித்த டைரக்டர் விக்ரமனின் சோதனைகளின் சாதனை.

    இப்படி... இப்படி... சிறப்பான திரைக்கதைக்கான ஏராளமான விதைகள் ‘வந்தாங்க ஜெயிச்சாங்க’ புத்தகம் முழுக்க! இவைகளைப் போல் ஆழமான பாத்திரப் படைப்புகள், நெருடலான தாக்கமான சூழல்கள், மனதைத் தொடும் சம்பவ சம்பாஷணைகள், உங்கள் திரைக்கதையில் இருக்கிறதா தேடுங்கள்? இருந்தால் நாளைய திரையில் நீங்களும் வெற்றியாளர்கள் என்பது உத்தரவாதம்! திரைக்கு வரும் முயற்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் உயரத் துடிப்பவர்களுக்கும் மணவையின் ‘வந்தாங்க ஜெயிச்சாங்க’ புத்தகம் ஒரு வரப்பிரசாதம். எதிர்கால சாதனையாளர்களுக்கு செம்மையான பாதை அமைத்துக் கொடுத்த மணவை என் ‘பாக்யா’ குடும்பத்தவர் என்பது மிகப்பெரிய பெருமையாக, கௌரவமாக உள்ளது.

    ஆத்மார்த்தமான

    அன்பு நல்வாழ்த்துக்களுடன்...

    உங்கள்

    கே. பாக்யராஜ்

    அணிந்துரை

    திரு. லேனா தமிழ்வாணன்,

    பத்திரிகையாளர் பதிப்பாளர்

    நண்பர் மணவை பொன் மாணிக்கத்தை ‘தாய்’ வார இதழின் காலத்திலிருந்தே உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். காரணம் அவரது படைப்புகளில், நேர் காணல்களில் ஒரு மூன்றாவது கண் இருக்கும். கூர்மையான பார்வை கொண்ட பத்திரிகையாளர் என்பதையே இப்படிக் குறிப்பிடுகிறேன்.

    பத்திரிகையாளர்கள் சிலரிடம் இல்லாத சில நற்பண்புகள் இவரிடத்தில் உள்ளதையும் நான் கவனிக்கத் தவறியதில்லை. யாருடன் இருக்கிறோமோ அவருடன், எந்த நிறுவனத்தைச் சார்ந்து இருக்கிறோமோ அதனுடன் உண்மையாகவும், நாள்படவும் இருப்பது இவற்றுள் தலையாயது.

    சிறுசிறு தூண்டல்களுக்கு இரையாகி இதழுக்கு இதழ் தாவாதிருப்பதும், வளர்த்து விட்டவர்களை நெஞ்சில் வைத்துப் போற்றுவதும் இவரது தனிச்சிறப்பு.

    யாரிடமிருந்து என்ன தெரிந்து கொள்ளலாம் என்றும், அவற்றிலிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம் என்றும் என்பதும்; அவற்றில் எதையெதைத் தொடர்ந்து பின்பற்றலாம் என்பதும் இவரது தேடல் பார்வைகள். இந்தக் குணம்தான் இத்தகைய ஒரு வித்தியாசமான படைப்பிற்குக் காரணம் என எண்ணுகிறேன்.

    70 புகழ்மிக்க புள்ளிகளின் வாழ்வைச் சாறாக்கிப் பிழிந்து நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரிப் பத்துப்பத்தாகத் தந்திருக்கிறார்.

    வளவள வாக்கியங்கள் இந்நூலில் இல்லை. கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராதபடி பக்கங்கள் விரைந்து ஓடுகின்றன. படிக்கப் படிக்கப் புது விளக்கங்களைத் தந்து கொண்டே இருக்கும் நூல் இது. இந்தப் பிரபலங்கள்தாம் எவ்வளவு சாதுரியக்காரர்கள்! எவ்வளவு அர்த்தங்களைப் புதைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

    தான் வியக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியனே தன்னை வியக்கும்படி செய்த மயில்சாமி; என்னையா மேடையிலிருந்து இறக்கிவிட்டாய்? எத்துணை மேடைகளில் ஏறுகிறேன் பார் என்று அவமானத்தைக் கூட வெகுமானமாக மாற்றிக் கொண்ட என் இருபத்தைந்து ஆண்டுக் கால நண்பர் ஸ்ருதி லக்ஷ்மன், இந்த வாய்ப்பை சுயபுராணம் பாடப் பயன்படுத்திக் கொள்ளாமல் நன்றியறிவிப்புக் களமாகப் பயன்படுத்திக் கொண்ட பண்பாளர் சார்லி; மதுக்கடையில் வேலை பார்த்ததை மறைக்காமல் சொல்லி இன்று மயக்கும் மனிதராக வளர்ந்து இருக்கும் பி.எல். தேனப்பன்; அறிவியல் ஆசிரியர் சபித்ததையே உரமாக்கிக் கொண்ட இசையுலகச் சிற்பி, என்ன சாப்பிடுறீங்க; தர்மத்தைத் தள்ளிப் போடாதே என்று அம்மா பேச்சுக் கேட்டு (மறைந்தாலும்) அதன்படி வாழ்ந்த டாக்டர் மாத்ருபூதம், அப்பாவுக்குச் சென்னையைச் சுட்டிக்காட்டியதை அப்படியே பாடலாக்கிய கவியரசு கண்ணதாசன், நெகிழ்ச்சியோடு குறிப்பிடும் என் மாமியார் ஊர்க்காரர் பழநிபாரதி என்று இந்நூலில்தான் எத்துணை மறக்க இயலாத அற்புதப் பாத்திரங்கள் செய்திகள்!

    பத்திரிகைகள் மதிப்புமிக்கவை என்றாலும் இவற்றின் பதிவுகள் கால ஓட்டத்தில் மறக்கப்படக் கூடும். ஆனால் நூல் வடிவம் என்பது அப்படி இல்லை. காலம் கடந்து நிற்கும் கல்வெட்டுப் போன்றது.

    எனவே இந்த அருமையான மனிதர்களின் இரசனைகளுக்கு நிரந்தர வடிவம் கொடுத்த முயற்சி அருமையான முயற்சி.

    பத்திரிக்கையாளர் என்கிற எல்லையைக் கடந்து எழுத்தாளனாகவும், தம்முடைய முந்தைய படைப்புகள் மூலம் தம்மை நிலைநாட்டிக் கொண்டு விட்ட நண்பர் மணவையைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். வாழ்த்துகிறேன்.

    அன்பன்,

    லேனா தமிழ்வாணன்

    என்னுரை

    ஒரு மனிதனுக்கு நிறைய கஷ்டங்கள் வந்தால் அவன் சரியான பாதையில் செல்கிறான் என்று அர்த்தம்... எங்கோ படித்தது...

    திருவனந்தபுரம் கிளிமானூர் கிராமத்தில் ராஜ குடும்பத்தில் பிறந்தவர் பிரபல ஓவியர் ரவிவர்மா. திருவாங்கூர் சமஸ்தானத்தில் அரண்மனை ஓவியராக இருந்த ராமசாமி நாயக்கரிடம் தனக்கு ஓவியக்கலை கற்றுத் தருமாறு கேட்கிறார் ரவிவர்மா. அவரோ அந்த சமஸ்தானத்தில் தன்னைத் தவிர எவரும் உருவாகக் கூடாது என்கிற நோக்கில் சேர்க்க மறுக்கிறார்.

    ரவிவர்மாவின் ஓவியத் திறமையை பார்த்த ராமசாமி நாயக்கரின் உதவியாளர் தன் குரு வுக்குத் தெரியாமலேயே கற்றுத் தருகிறார். காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. 1873ல் சென்னையில் நுண்கலை கண்காட்சியில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் ரவிவர்மா கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெறுகிறார். தோற்றுப் போனவர்களில் தனக்கு ஓவியக் கலையை கற்றுத்தர மறுத்த ராமசாமி நாயக்கரும் ஒரு வர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படித்தான் ஒவ்வொரு வெற்றியாளரும், தூக்கி விடுபவன் உன் தகுதியை அறிந்தவர். தூக்கி எறிபவன் உன் தகுதியை அறிய விரும்புபவன் என்பதை உணர்ந்து இருவருக்கும் நன்றி சொல்லி உன் பயணத்தை தொடர்ந்து செய் என்கிற கருத்தைத்தான் வலியுறுத்துகிறது இந்த நூல். இந்த நூலில் பெரும்பாலும் கலைத்துறையில் இருப்பவர்களின் வாழ்வியல் பின்னணி மட்டும் சொல்லப்பட்டிருந்தாலும், இது எந்தத் துறையைச் சார்ந்தவருக்கும் இது பொருந்தும் என்றே நம்புகிறேன்.

    பாக்யா வார இதழில் இதை தொடராக எழுத பணித்த எனது ஆசான் பல்கலைவேந்தர் டைரக்டர் பாக்யராஜ் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    மனசுல

    மணவை பொன் மாணிக்கம்

    63, ஐந்தாவது தெரு, மேற்கு விஜயராகவபுரம்,

    சாலிகிராமம், சென்னை 600093.

    99404 95579

    சமர்ப்பணம்

    திருமிகு. பொன்னன் திருமதி. லட்சுமி

    * எதை எதையோ எதிர்பார்த்து எதிர்பார்த்து...

    * இறுதியில் நலம் விசாரிக்கும் கடிதம் மட்டுமே எதிர்பார்த்து...

    * இறுதி மூச்சு விட்ட என் தாய் தந்தையர்க்கு...

    - மணவை பொன். மாணிக்கம்

    1. கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1