Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ainthaam Vedham
Ainthaam Vedham
Ainthaam Vedham
Ebook281 pages1 hour

Ainthaam Vedham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“ரிக்வேதம், யஜீர்வேதம், சாமவேதம், அதர்வன்னவேதம் ஆகிய நான்கு வேதங்களைவிட அதிக சக்தி வாய்ந்தது காதல் என்கிற ஐந்தாவது வேதம்! மணவை பொன் மாணிக்கத்தின் இந்த ஐந்தாம் வேதம் தொகுப்பு ஒரு காகித தாஜ்மஹால். மொத்தம் பதின்மூன்று மும்தாஜ்கள், இதில் வருகின்றனர். எல்லோருக்கும் மணவையே ஷாஜகானாக இருந்து அவர்களின் அழகை தீட்டியிருக்கிறார். ஆக்ராவில் அல்ல இந்த ஐந்தாம் வேதத்தில்.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580163909692
Ainthaam Vedham

Read more from Kalaimamani Manavai Pon. Manickam

Related to Ainthaam Vedham

Related ebooks

Reviews for Ainthaam Vedham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ainthaam Vedham - Kalaimamani Manavai Pon. manickam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஐந்தாம் வேதம்

    (சிறுகதைகள்)

    Ainthaam Vedham

    (Sirukathaigal)

    Author:

    கலைமாமணி மணவை பொன். மாணிக்கம்

    Kalaimamani Manavai Pon. Manickam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-manavai-pon-manickam

    பொருளடக்கம்

    என்னுரை

    உயர்ந்த மனுஷன்

    வாழ்த்து

    வேதத்தை மறுப்பவன் நான்

    இதயத்தில் இடம் தேடிக் கொடுக்கிறது

    எங்களில் ஒருவர்

    இது புனித நதியாகும் பூ முத்தம்

    ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு முத்தம்

    புழுதி மண் படிந்த என் தந்தையின் முகம் தெரிகிறது!

    நான் கவிதை படிக்கிறவன் கவிதை படைக்கிறவன்

    உரைநடையில் ஒரு காதல் காவியம்

    எழுத்து ராட்சசனின் முகவரி தெரிகிறது!

    பேனா முனையில் கேமிரா!

    காதல் ஆய்வறிக்கை!

    ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்

    உணர்வில் கலந்தவை!

    சிறகடிக்கிற திசைதோறும்!

    உணர்வுகளின் மொழி பெயர்ப்பு

    பிளாட்டின மகுடம்

    அனைவரும் கடந்து செல்லும் பனைமரச் சாலை!

    ‘எந்தக் கதை சொந்தக் கதை’

    மனசின் மணல்வெளியில் மணவையின் ஈரச் சுவடுகள்

    அறிவிக்கப்பட்ட ‘ஐந்தாம் வேதம்’

    1. நவீன அம்பிகாபதி - அமராவதி

    2. நவீன பிருதிவிராஜ் - சம்யுக்தா

    3. நவீன ரோமியோ - ஜூலியட்

    4. நவீன லைலா - மஜ்னு

    5. நவீன ஷாஜகான் - மும்தாஜ்

    6. நவீன ராணி விக்டோரியா - பிரின்ஸ் ஆல்பர்ட்

    7. நவீன ஆண்டனி - கிளியோபாட்ரா

    8. நவீன ஒத்தெல்லோ - டெஸ்டிமோனா

    9. நவீன சலீம் - அனார்கலி

    10. நவீன நெப்போலியன் - ஜோஸ்பின்

    11. நவீன உதயணன் - மணிமேகலை

    12. நவீன ஜகாங்கீர் - நூர்ஜஹான்

    13. நவீன அக்பர் - ஜோதாபாய்

    C:\Users\inpand\Downloads\IV 1-min.png

    "காவியத் தாயின் இளைய மகன்

    காதல் பெண்களின் பெருந்தலைவன்

    பாமர ஜாதியில் தனிமனிதன் - நான்

    படைப்பதினால் என் பெயர் இறைவன்..."

    என்று எழுதி இறவாப் புகழ்பெற்ற எங்கள் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நினைவாக இந்த காதல் வேதம்...

    "தொண்ணூறு

    வயதிலும்

    காதல் மனைவியை

    தொட்டுக் கொண்டே

    தூங்க வேண்டும்..."

    "மரணிக்கும்

    வரையிலும்...

    காதல் மனைவியின்

    வாசனையோடு

    வாழ வேண்டும்..."

    சமர்ப்பணம்

    எதை

    எதையோ

    எதிர்பார்த்து

    எதிர்பார்த்து...

    இறுதியில்

    நலம் விசாரிக்கும்

    கடிதம் மட்டுமே

    எதிர்பார்த்து...

    இறுதி மூச்சு விட்ட

    என் தாய் தந்தையர்க்கு...

    மணவை பொன். மாணிக்கம்

    எனக்கு யாதுமாய் இருந்து வரும் வணக்கத்திற்குரிய எனது ஆசான், என்னை தாய்போல் அரவணைக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர்களின் ஆசியுடன்...

    நன்றி

    27.9.2018ல் எனது புகழ்மணச் செம்மல் எம்.ஜி.ஆர் நூலை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும்...

    13.8.2019ல் தமிழக அரசு ‘கலைமாமணி விருது’ கொடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும்...

    என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் மூலம் பாடலாசிரியனாக அறிமுகப்படுத்திய டைரக்டர் ராஜகுமாரன் அவர்களுக்கும்...

    என்னுரை

    ரிக் வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம், இந்த நான்கு வேதங்களும் வாழ்வியல் நல்லொழுக்கத்தை வலியுறுத்தி வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அதே வழிகாட்டுதலில், சாதி, மதம், இனம், மொழி பார்க்காமல், வலுத்தவன், இளைத்தவன், ஏழை, பணக்காரன் என்று வகை பிரித்துப் பார்க்காமல் ஏற்படும் புனிதக் காதலை மட்டுமே இங்கே ஐந்தாம் வேதமாக ஆராதித்து இருக்கிறேன்.

    ஒருமுறை இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள், மணப்பாறைக்கு எனது இனிய நண்பர் கல்வியாளர் அரிமா சௌமா ராஜரத்னம் அவர்களின் கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்தார். நானும் உடன் வந்திருந்தேன்.

    சில மாதங்கள் கழித்து சென்னை நாரதகான சபாவில் எனது காதலும் வீரமும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் எனது ஆசான் வணக்கத்துக்குரிய பல்கலை வேந்தர் டைரக்டர் கே. பாக்யராஜ், வணக்கத்துக்குரிய இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் கலையுலக பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

    சொந்த மண்ணில் சூரியனுக்குக்கூட மரியாதை இருக்காது. ஆனால், மணப்பாறையில், மணவை பொன் மாணிக்கத்துக்கு இருந்த மரியாதையைப் பார்த்து பிரமித்துப் போனேன் என்று பேசினார்.

    அந்த கணமே நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் எம் மண்ணின் பெருமைகளுடன் காதல் சார்ந்த வாழ்வியலை எழுதத் தீர்மானித்தேன்.

    அதை பாக்யாவில் எழுதுவதற்கு, எனது ஆசான் அவர்களிடம் ஒப்புதல் பெற்று கண்ணில்பட்ட காதல் கிளிகள் என்ற தலைப்பில் தொடராக எழுதினேன். வாசகர்களிடம் நல்ல வரவேற்பு.

    இதன் சாராம்சத்தைப் பற்றிச் சொல்வதென்றால் எனது ‘காதலும் வீரமும்’ கவிதை நூலில்,

    "என்

    மௌனத்தைப் புரிந்து கொள்ளாத நீ

    நான்

    பேசியா புரிந்து கொள்ளப் போகிறாய்"

    நான் எழுதிய கவிதையின் விரிவாக்கம்தான் இந்த ஐந்தாம் வேதம்.

    இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் 12 கதைகளில் எந்தக் கதையிலும்,

    "நான் உன்னை காதலிக்கிறேன்’’, I Love you நீ என்னை காதலிக்கிறாயா? Do you Love Me.

    என்கிற அசிங்கமான, அபத்தமான கொச்சையான வார்த்தைகளை எந்த இடத்திலும் ஆணோ, பெண்ணோ பிரயோகித்து இருக்கமாட்டார்கள்.

    காதல் என்பது ஆத்மாவின் உணர்தல்தானே தவிர வார்த்தைகளால் சொல்லி ஊர்ஜிதப்படுத்தி கொள்வதல்ல. இதை நான் ஏதோ திட்டமிட்டு மெனக்கெட்டு அந்த வார்த்தைகள் வராமல் பார்த்துக்கொள்ளவில்லை என்பது சத்தியம்.

    அடுத்து, குடிநீருக்காக ஏங்கும் கடலோரத்து மக்களைப்போல, எம் மண் காவிரி ஆறு ஓடும் மாவட்டமாக இருந்தாலும் ஒதுக்குப்புறமாக வானம் பார்த்த பூமியாகவே பூகோளத்தில் வரையறுக்கப்பட்டது.

    அந்த வானம் பார்த்த பூமியை வாழ்விக்க கருமுத்து தியாகராஜ செட்டியார் நிறுவிய தியாகேசர் ஆலை பஞ்சுமில் மற்றும் மணப்பாறை முறுக்கு, மாட்டுச்சந்தை, சிறுசிறு தொழில்கள், சிறிய அளவிலான விவசாயம் ஆகியவற்றாலும் எம்மண், கலை, கல்வி, இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் மேலோங்கி நிற்பதை மேலோட்டமாக பதிவு செய்திருக்கிறேன்.

    இந்த நூல் சிறக்க, உட்பக்க படங்கள் கொடுத்து உதவிய ஓவியர் குப்புசாமி, நட்சத்திர மேனேஜர் திரு. கிரி மற்றும் திரு. அழகர் VAO, திரு. மணவை ஜேம்ஸ், திரு. உறந்தை அசோக் பாண்டியன், வழக்கறிஞர் திரு. குழந்தை, கவிஞர் அம்பத்தூர் சோலை, திருவாரூர் T. மாணிக்கம், பாசமிகு பத்திரிகையாளர்கள், மதிப்புமிகு சினிமா மக்கள் தொடர்பாளர்கள், சமூக ஆர்வலர் அரிமா டாக்டர் கோவிந்தன், ரம்யா மாடர்ன் கிச்சன் - இன்டீரியர்ஸ், மேன்பவர் பீர்முகமது, காரைக்குடி தமிழ்த்தாய் கலைக்கூடும், வெள்ளைமனம் வெள்ளைச்சாமி, சிப்பி அறிவுடை நம்பி, A.R. கலை மன்றம் A.R. ரமேஷ், கதாசிரியர் ஆறு கலைவாணன், டைரக்டர் புதுகை மாரிசா, ஓவியர் ராஜ், போட்டோகிராபர் ருக்மாங்கதன், பிழை திருத்திய என் பிள்ளைகள் மதன் மோகன், விஷ்ணுப்ரியா, வாணிஸ்ரீ ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

    கலைமாமணி மணவை பொன் மாணிக்கம்

    எனக்கும், என் காதல் மனைவி பவானிக்கும் சொந்த ஊர் திருவள்ளூர்தான். நான் சென்னை புதுக் கல்லூரியில் படிக்கும்போது பவானி மருத்துவப் படிப்பு படித்து வந்தாள். அந்த காலகட்டத்தில் எங்களுக்குள் காதல் உருவானது. படிப்பை முடித்தவுடன் எங்கள் காதலை இருவர் வீட்டிலும் தெரிவித்தோம். ஆனால், இருவர் வீட்டிலும் ஒத்துக்கொள்ளவில்லை.

    காரணம் நான் முஸ்லீம் மதம், பவானி இந்து மத நாடார். ஒரே ஆறுதல், அரவணைப்பு பவானியின் தந்தை திரு. சிவசக்தி முருகன், எங்கள் காதலை ஏற்றுக்கொண்டு, கோவளம் தர்காவில் அவர் மட்டும் வந்திருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். என் கரம் பற்றி வந்த பவானி, பவானி முபினாவாக மனமுவந்து மாறினாள்.

    மதம் எங்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்துவிட்டதே என்று மன உளைச்சல்பட்டு சோர்ந்துவிடவில்லை. வாழ்ந்து காட்டி, பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இரவு பகல் பார்க்காமல் உழைத்தேன். சினிமா, அரசியல், பிசினஸ் எனக்கு கைகொடுத்தது. மனைவி வந்த நேரம் மளமளவென்று முன்னேறினேன்.

    என் மனைவிக்குக்கூட சொல்லாமல், வளசரவாக்கத்தில் பலகோடி ரூபாய் மதிப்பில் நட்சத்திர ஒட்டல் சொகுசு அறைகள் போல் வடிவமைத்து ஒரு பிரமாண்டமான மாளிகை கட்டினேன்.

    ஒரு நாள் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான பட்டு வேஷ்டி, சட்டை, ஒரே மாதிரியான பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்து, நாளை அதிகாலை என் நண்பன் வீட்டு விசேஷத்துக்கு போகவேண்டும் எல்லோரும் ரெடியாக இருங்கள் என்றேன்.

    விடிந்ததும் எல்லோரையும் கார்களில் அழைத்துக்கொண்டு அந்த மாளிகை வாசலை அடைந்தோம். அங்கே அய்யர் மாட்டைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தார். அப்பொழுதுகூட இது நம்ம வீட்டு கிரஹப்பிரவேசம் என்று சொல்லவில்லை. நண்பனின் வீடுதான் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தார்கள்.

    பிறகுதான் எனது தந்தை S.M. ஜமால் அவர்களையும், எனது தாயார் பாத்திமாபீவி அவர்களையும், என் காதல் மனைவி பவானியையும் ஒன்றாக நிற்க வைத்து, அவர்கள் கையில் சாவியைக் கொடுத்து இது நம்ம வீடுதான் என்று செல்லி சஸ்பென்ஸை உடைத்தேன். எல்லோரும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தனர்.

    அண்ணன் மணவை பொன் மாணிக்கம் அவர்களின் ஐந்தாம் வேதம் நூலைப் படித்தபோது, இது எங்கள் கதை என்றே உணர்ந்தேன். இதில் உள்ள வரம்புமீறாத, கலாச்சாரம், பண்பாடு சிதையாத பன்னிரெண்டு கதைகளும், படிக்கப் படிக்க பரவசத்தை ஏற்படுத்தியது. அண்ணனுக்கு பாராட்டுக்கள். மணவை என்ற பட்டம் இன்னும் வானளாவப் பறக்க வாழ்த்துகிறேன்.

    J.M. பஷீர் - J.M. பவானி முபினா பஷீர்

    இந்த இனிய காதல் தம்பதிகளுக்கு இந்த ஐந்தாம் வேதத்தை சமர்ப்பிக்கிறேன்...

    மனநிறைவுடன்

    மணவை பொன் மாணிக்கம்

    உயர்ந்த மனுஷன்

    ‘வசீகர வார்த்தை சொல்லாளன்’ கவிஞர் வைகைச் செல்வன்

    ஏன்டா மூக்கொலிக்கிட்டு இருப்பானே!

    காயாம்பூ! அவனாடா!

    அந்தப் பொண்ணுபாரு?

    அதான் நம்ம மேலவீட்டு குருசாமி பொண்ணு?

    ஏன்டா - ஊமக்கோடங்கியா இருக்குமே!

    அதுவாப்பா?

    பெறகு, காயம்பூ மட்டும் என்னவாம்?

    குனிஞ்ச தலை நிமிறமாட்டான்?

    சாமத்தில் ஓடிப்போச்சுங்க!

    நாளைக்கு பஞ்சாயத்து?

    இனி என்ன பண்றது.

    தீப்பட்டி ஆபிஸ்ல, இரண்டு கழுதைகளும்

    வேலை செஞ்சப்பவே...

    ஏதோ கோக்கு, மாக்கு ஆகிப்போச்சு;

    நல்லா வச்சு காப்பாத்துன? சரித்தான்

    இது கிராமப்புறங்களில் பேசிய பேச்சு...

    ஒன்னும் தெரியாத சின்னக் குழந்தப்பா எம் பொண்ணு?

    எப்படியோ? ஏமாந்துருக்கு...

    ஏம்! பையன் அப்பாவி பையம்பா?

    பாவி! மவ. என்ன மாயம் செஞ்சாலோ,

    மருந்து வச்சாளோ!

    இது பையன் வீட்டுக்காரரும் - பேசிய பேச்சுங்க!

    நாட்கள் நகர்கிறது... ஆண்டுகள் உருள்கிறது

    பொண்ணுக்கு அப்பா, குழந்தையை கொஞ்ச,

    அப்படியே அவங்க அப்பத்தாவை உறிச்சு வைச்சிருக்கா?

    ஏய்! நிறுத்துப்பா? பையனுடைய அய்யா?

    எம், தங்கச்சி சின்ன

    வயசிலேயே சாமிகிட்ட போயிருச்சு.

    அந்த முத்துப் பேச்சியே பிறந்திருக்குப்பா?

    என்று - ஒண்ணும் மண்ணுமாய்

    அன்னம், தண்ணி பொழங்குது இன்னைக்கு இந்த குடும்பம்

    எல்லாம் எளவு காதல்தான்?

    என்று கோபப்பட்ட குடும்பம்?

    வேறு, வேறு சாதி சனமாய் இருந்த குடும்பம்?

    இன்னைக்கு ஒரே தலைக்கட்டாய்

    ஊர் திருவிழாவிற்கு வரிகட்டுகிறது

    இது காதல் செஞ்ச மாயம் இல்லையா?

    இது போன்ற அற்புதங்களை,

    ஒவ்வொரு கதையிலும், உணர்வுப் பூர்வமாக

    சொல்லுகிறார் கவிஞர் மணவை. பொன்மாணிக்கம்

    அவர் யார்?

    கவிஞரா, எழுத்தாளரா, பத்திரிக்கையாளரா,

    கட்டுரையாளரா, பாடலாசிரியரா, நடிகரா,

    இவை எல்லாம், எனக்குத் தெரியவில்லை.

    என் கண்முன்னால் தெரிவதெல்லாம்

    இவர் ஒரு உயர்ந்த மனுசன் என்பதுதான்.

    அவர் தொகுத்த இந்த தொகுப்பும்கூட

    அப்படித்தான்.

    வாழ்த்து

    கவிப்பேரரசு வைரமுத்து

    நண்பர் மணவைக்குள்ளிருக்கும் கவிஞனைக் காதலும் வீரமும் நூலில் நேற்று அடையாளம் கண்டேன். அந்தக் கவிஞனுக்குள் உள்ள கதாசிரியனை ஐந்தாம் வேதத்தில் இன்று அடையாளம் கண்டு ஆனந்தப்படுகிறேன்.

    காதலை இன்னும் இந்த மண்ணில் யாரும் சரியாகப் பார்க்கவில்லை.

    மொழி அதை வெறும் வார்த்தையாய்ப் பார்க்கிறது. விஞ்ஞானம் அதை வெறும் ஹார்மோன்களாய்ப் பார்க்கிறது. மதம் அதை வலக்கையால் தண்டித்துவிட்டு இடக்கையால் ஆசீர்வதிக்கிறது.

    தத்துவம் அதைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்று இன்னும் தீர்மானம் போடவில்லை.

    பெற்றோர்கள் காதலைத் தங்களோடு முடிந்துவிட்ட சமாச்சாரமாகவே கருதுகிறார்கள். சமூகம் இன்னும் அதை ஒர் ஒழுக்கக்கேடு என்றே உறுதியாக நம்புகிறது. எனவே இந்தியாவில் காதல் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது காதலர்கள் மீதுதான்.

    அவர்கள் மட்டுமே அறிவார்கள் அது சக்தி என்று. அதன் அவஸ்தைகள். சந்தோஷங்கள் எல்லாம் எரிபொருள்கள். எரிய எரிய வாழ்க்கை வண்டி நகருகிறது. அது மனிதனைத் தோலுரித்து மாற்றுகிறது.

    காதலால் அப்படி ஒரு மாற்றம் அடைந்தவர்களில் ஒருவர் இந்த நூலின் ஆசிரியர் மணவை பொன்மாணிக்கம் என்பதற்கு ஐந்தாம் வேதம் ஒரு அழகான சாட்சி.

    இன்று அவர் ஒரு படைப்பாளராக பரிமளிப்பதற்கு அவரது காதலே ஓர் ஆழமான

    Enjoying the preview?
    Page 1 of 1