Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appavin Mithivandi
Appavin Mithivandi
Appavin Mithivandi
Ebook306 pages1 hour

Appavin Mithivandi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காணாமல் போன தன் அப்பாவின் மிதிவண்டி பற்றிய சிறுகதை. இச்சிறுகதை அமுத சுரபி மாத இதழில், வை.மு. கோதை நாயகியம்மாள் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு 5,000 பெற்ற சிறுகதை.

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580165509789
Appavin Mithivandi

Read more from Subramania Pandian

Related to Appavin Mithivandi

Related ebooks

Reviews for Appavin Mithivandi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appavin Mithivandi - Subramania Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அப்பாவின் மிதிவண்டி

    (சிறுகதைத் தொகுப்பு)

    Appavin Mithivandi

    (Sirukathai Thoguppu)

    Author:

    சுப்ரமணிய பாண்டியன்

    Subramania Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/subramania-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    1. மந்திரச் சொல்

    2. இட ஒதுக்கீடு

    3. அய்யனாளு

    4. வளர்த்த பாசம்

    5. வலை வீச்சு

    6. மாப்பிள்ளை மன்னார்சாமி

    7. தலைச்சுமை

    8. உயிர்ப்பு

    9. விடியல்

    10. அப்பாவின் மிதிவண்டி

    11. கண்ணி வலை

    12. பனித்திரை

    13. குள வாரிசு

    14. அடக்கம்

    15. காவலுக்குன்னா இங்க வரவேணாம்...!

    16. சொரக் குடுக்கை

    17. என்ன சொல்லப் போகிறாள்...?

    18. அருள் வாக்கு

    19. ஊத்துக்கண்

    20. மொகம்

    21. சாமிக்கெடா

    என் வாழ்வியல் அனுபவங்களே என் படைப்புலகம்.

    மொழியும் எழுத்தும் இலக்கியத்தின் இரு கண்கள். நாம் வாழும் வாழ்வியல் முறைகளையும் வாழ்க்கை பயணத்தையும் பதிவு செய்வதே இலக்கியம் என்கிறார்கள் அறிஞர்கள். அப்பதிவுகள் எல்லோர் மனதுக்கும் உண்டு. அதில் ஒரு சிலரே அதை எழுத்து பூர்வமாக வெளி உலகுக்கு கொண்டு வருகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

    சிறு வயதிலிருந்து பார்த்தது, கேட்டது, ரசித்தது மட்டுமில்லாமல், நான் கடந்து வந்த கரடு முரடான வாழ்க்கைப் பாதைகளில் ஏற்பட்ட இன்ப துன்பங்கள் மனதிற்குள் போட்டு மூடி மூடி வைத்ததன் விளைவோ... அல்லது சிறுவயதில் சாப்பிடும்போதும் தூங்கும்போதும் அம்மா கமலம், அப்பா சுப்ரமணியன், பஞ்சவர்ணம் ஆச்சி இவர்கள் சொன்ன கதைகள், என் கற்பனைக்கு உணவாகயிருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. பின்னாளில் அவை நகைச்சுவை துணுக்குகளாகவும், சிறுகதைகளாகவும் பரிணாம வளர்ச்சி பெற்று ஊற்றுக்கண்களாக அங்கிருந்து சுரக்க தொடங்கின.

    நாளுக்கு நாள் நல்ல நல்ல விஷயங்கள் பேச்சு வழியாக பெருக்கெடுத்து, காற்றோடு காற்றாக எங்கோ ஓடி ஒளிந்து கொண்டிருந்தன. அவற்றை அவ்வப்போது நினைத்துப்பார்க்கும்போது, சிலது ஞாபகத்திற்கு வரும், சிலதை மறந்து விடுவேன். நல்ல நல்ல சிந்தனைகளையும் எண்ணங்களையும் விட்டுவிட்டு பின்னர் யோசித்துப் பார்க்கும்போது அவை முழுமையான வரிகளாகவோ வார்த்தைகளாகவோ கிடைக்காது. சிலர் என்னப்பா... உன்னுடைய கற்பனைதானே அது எப்படித் திரும்ப வராமல் போகும் என்பர். திரும்ப வரும் அதேபோல் வார்த்தைகள் வராது என்பது என் எண்ணம். இதற்கு ஒரே வழி எழுதி வைப்பதுதான் சிறந்தது என்றெண்ணி அவற்றை குறிப்பெடுக்கத் துவங்கினேன்.

    அதில் ஐந்து நகைச்சுவை துணுக்குகள் தினத்தந்தி நாளிதழ்களிலும், இதயம் பேசுகிறது வார இதழிலும் வெளிவந்தது. அவற்றை படித்துப் பார்த்து மகிழ்ந்த நண்பரும் எழுத்தாளருமான பா.மனோகரன் அவர்கள் நகைச்சுவை எழுதறவங்களால சிறுகதை எழுத முடியும். சிறுகதை எழுதறவங்களால நகைச்சுவை எழுதறது கொஞ்சம் கஷ்டம். ஒங்களுக்கு நல்ல சிந்தனைகளும் எண்ணங்களும் இருக்கு, அதை சிறுகதையில் பயன்படுத்துங்க என்று என்னை சிறுகதைகளை எழுத அன்புடன் பணித்தவரை இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    நான் எழுதிய சிறுகதைகளில் ஏராளமான விமர்சன கடிதங்கள் வந்திருந்த போதிலும் அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

    மந்திரச்சொல் சிறுகதை விறு விறுப்பாக இருந்தது. சுப்ரமணிய பாண்டியன் முந்திரிப் பழ தோப்பின் இயல்புகளை அப்படியே எழுத்தால் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். சிறு வயதில் நானும் அப்படியே மச்சராசுவைப் போலவே முந்திரி பழச் சுவைக்கு அடிமைப்பட்டு அலைந்த நினைவுகள் நெஞ்சில் வந்து போனது. முந்திரி பழ நறுமணமத்தை எழுத்திலே கொண்டு வந்து சேர்த்த ஆசிரியருக்கு நன்றி’ என்று தினமணி கதிர் (10.05.2015) இதழில் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்த முகம் தெரியாத நண்பர் வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    திட்டமிட்டு தவறு செய்பவன் மட்டும் குற்றவாளியல்ல. அதற்குத் துணைபோவதும் குற்றமே என்பதை கிராமிய மணத்துடன் ஜனரஞ்சகமாய் உணர்த்தியது மந்திரச்சொல் சிறுகதை என்று தினமணி கதிர் (10.05.2015) இதழில் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்த முகம் தெரியாத நண்பர் எச்.ஷாஹுல் ஹமீது, திட்டக்குடி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

    சுப்ரமணிய பாண்டியன் எழுதிய வளர்த்த பாசம் சிறுகதை மனதை நெகிழ வைத்தது. பெற்ற தாயே தன் குழந்தைகளைக் கொல்கின்ற இன்றைய சமுதாயத்தில் பார்த்துப் பார்த்து வளர்த்த பசுவின் மீது தம்பதியர் காட்டும் பாசம் ‘ஆன்ம நேயம்’ இன்னும் மடிந்து விடவில்லை என்பதை எடுத்துக்காட்டியது. பாராட்டுகள் என்று தினமணி கதிர் (16.09.2018) இதழில் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்த முகம் தெரியாத நண்பர் ரா. புனிதவதி, பொள்ளாச்சி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    வளர்த்த பாசம் அதன் பிரிவுத் துயரில் மனிதனை எப்படி எப்படியெல்லாம் வாட்டுகிறது என்பதை ஆறுதல் பரிசு பெற்ற கதை உணர்வுப்பூர்வமாகப் பிரதிபலிக்கிறது என்று தினமணி கதிர் (16.09.2018) இதழில் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்த முகம் தெரியாத நண்பர் கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    சுப்ரமணிய பாண்டியன் எழுதிய குளவாரிசு சிறுகதைபடித்தேன். அருமை தாமரைக் குளத்தை முன்னிலைப்படுத்தியும், அதை எக்காரணம் கொண்டும் விற்கக்கூடாது என்பதனை கிராமத்துப் பாணியில் மிக அழகாக அழுத்தம்திருத்தமாக எடுத்து இயம்பியது அற்புதம். இந்த கருத்தாழமிகுந்த கதையை எழுதிய எழுத்தாளருக்கு எனது நன்றியும் பாராட்டும் உரித்தாகுக என்று தினமணி கதிர் (25.10.2015) இதழில் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்த முகம் தெரியாத நண்பர் க.மீ.நஜ்முதீன், காயல்பட்டினம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தலைமுறை தலைமுறையாக மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தாமரைக்குளம் எப்போதும் அமுதசுரபியாக விளங்கியதை அதன் அழகியல் தொன்மை மறைந்து விடாமல் அழுத்தமாக வலியுறுத்தியிருந்த குளவாரிசு சிறுகதை இருகரம் தூக்கிகும்பிடச்செய்ய வைத்து விட்டது என்று தினமணி கதிர் (25.10.2015) இதழில் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்த முகம் தெரியாத நண்பர் பாரதி முருகன், மணலூர் பேட்டை அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    நெய்வேலி சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற தலைச்சுமை சிறுகதைபடித்தேன். அன்றாடம் அலுவலகங்களில் இடைநிலை ஊழியரின் நிலை, அவரின் எண்ண ஓட்டங்களை இயல்பாக தெளிவுபடுத்தியவிதம் அருமை என்று தினமணிகதிர் (10.09.2017) இதழில் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்த முகம் தெரியாத நண்பர் இ.ராஜீ நரசிம்மன், சென்னை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    வெகு நாட்களுக்குப் பிறகு கதிரில் அருமையான நகைச்சுவைக் கதையைப் படித்தேன். தனது ஆபீசரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வண்டியை ஓட்டிய மச்சராஜ் பாத்திரம் ஒரு சாகசமான நகைச்சுவை பாத்திரம்.படிக்கபடிக்க சிரிப்பை அடக்க முடியவில்லை. தலைச்சுமை சிறுகதை எழுதிய சுப்ரமணிய பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் என்று தினமணிகதிர் (10.09.2017) இதழில் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்த முகம் தெரியாத நண்பர் இரெ.இராமமூர்த்தி, சிதம்பரம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் நடத்தி வைக்கணும் என்பர். ஆனால் பெண்ணின் வயதைக் குறைத்துச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் மன அவஸ்தைகளை சுப்ரமணிய பாண்டியன் எழுதிய சொரக்குடுக்கை அற்புதமாக வெளிப்படுத்தியது. பாராட்டுகள் என்று தினமணிகதிர் (07.07.2019) இதழில் விமர்சனம் எழுதி பாராட்டியிருந்த முகம் தெரியாத நண்பர் க. நஞ்சையன், பொள்ளாச்சி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இப்படியாக வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறான சமூக சிந்தனையுள்ள கதைகளை படைத்திருக்கின்றேன்.

    கதைகளை எழுதி முடித்ததும் அதை ஆனந்தமாக வாங்கி,படித்துப் பார்த்து நிறை குறைகளை சுட்டிக்காட்டி எனது இலக்கியம் வேர் பிடித்து வளர, உயிர் தண்ணீராக என்றும் இருந்து வரும் எனது நண்பர், சிந்தனையாளர், விமர்சகர், எழுத்தாளர் ஊத்தங்கால் ப. கோவிந்தராசு அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    தமிழக அரசு விருது பெற்ற பன்முக எழுத்தாளர் ப. ஜீவகாருண்யன் அவர்கள் மிகுந்த பணிச்சுமைக்கு மத்தியில் என்னுடைய இருபது கதைகளையும் வாசித்து அவற்றை பகுத்தாய்ந்து சிறப்பானதொரு அணிந்துரையையும், நல் ஆலோசனைகளையும் வழங்கிய இலக்கிய பிதாமகருக்கு என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    என்னுடைய இலக்கிய பணிக்கு பெரும் பங்காற்றிய எழுத்தாளர்களில் நெய்வேலி பாரதி குமார் முக்கிய பங்கு வகிப்பவர். அவரிடம் அவ்வப்பொழுது இலக்கியத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது கதைக்கு எவ்வாறு தலைப்பு வைக்க வேண்டும் என்று புதிய இலக்கணமே எனக்கு கற்று தந்தார். அது மட்டுமில்லாமல் இந்த தொகுப்பு வெளி வர பெரிதும் உதவியாக இருந்தமைக்கு எனது மானசீகமான நன்றிகள்.

    எழுதிய கதைகளை எந்த நேரத்தில் எடுத்துச்சென்றாலும் வாங்க... பாண்டியன் என்று புன்முறுவலோடு வரவேற்று வரி வரியாக கதையைப் படித்துப் பார்த்து மனம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து எழுத ஆரம்ப காலகட்டத்தில் ஆர்வத்தை தூண்டி விட்டவரும், புதுவை வானொலிக்கு விடியல் சிறுகதையை அனுப்பி ஒலியலையாக சென்று மக்கள் மனதை நெகிழச்செய்த எழுத்தாளர் ம. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    அதே வரிசையில் கவிஞர்கள் மு. சுப்ரமணி, ஆனந்தவேலு, த. அறிவழகன், இலக்கிய ஆர்வலர் நெய்வேலி கி. அசோக்குமார், தமிழறிஞர் மா.ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சாதித்தவர்களுடைய அறிவுரை என்னுடைய படைப்பிலக்கியம் செழுமையடைய செய்தது.

    வேர்கள் மு.இராமலிங்கம், கண்மணி குணசேகரன், ராஜன் பொன் ராஜ், விஜயராஜ், பா.சத்தியமோகன், நா. கிருஷ்ணமூர்த்தி போன்ற எழுத்தாளர்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்தி எங்களுடைய இலக்கிய வட்டத்தை விரிவுபடுத்த முயன்ற மறைந்த எழுத்தாளர் குந்தன் அவர்களுக்கும் நன்றி.

    பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும் வரும் சிறுகதைப்போட்டிகளை நினைவுபடுத்துவது மட்டுமில்லாமல் அவற்றில் பங்கெடுக்கவும் என்னை ஆர்வமூட்டிய எழுத்தாளர்கள் மாலா உத்தண்டராமன், தேன் தமிழன், தீபக் ராஜ் அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனது சிறுகதைகளைப் பிரசுரித்து என்னைப் பெருமைப்படுத்திய இதழ்கள் நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழு, புதுவை வானொலி, தினமணிகதிர், கங்கைகொண்டான் ஜீனியர் சேம்பர் மற்றும் கங்கைகொண்டான் அரசு நூலகம், அமுதசுரபி போன்ற இதழ்களின் ஆசிரியர்களுக்கும் அவர்தம் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்தும் சிறுகதைப் போட்டியில்தான் என்னை எழுத்தாளன் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தி இதுவரை பத்து சிறுகதைகளை பிரசுரித்து கௌரவித்துள்ள அக்குழுவிற்கு என்றென்றும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கும் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும் உயரதிகாரிகளுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

    இதற்கு அடுத்து தினமணி கதிரில் ஆறு சிறுகதைகள் பிரசுரமாகி என் எழுத்துக்கு அங்கீகாரமளித்து, மக்கள் மன்றத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை இவர்களையும் சாரும். அதில் தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் தலைச் சுமை, வளர்த்த பாசம் ஆகிய இரண்டு சிறுகதைகளும் இரண்டு முறை ஆறுதல் பரிசு ரூபாய் 1250 பெற்று, பெருமைகளை பல தேடித் தந்த தினமணி ஆசிரியர்க்கும் அதன் தேர்வுக் குழுவினற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    அமுதசுரபி மாத இதழில் வை.மு.கோதைநாயகி நினைவு சிறுகதைப்போட்டியில் அப்பாவின் மிதிவண்டி முதல் பரிசு ரூபாய் 5000 பெற்று பெரும் சிறப்பை தேடித்தந்தது. அவற்றிற்கு மகுடம் சூட்டி அழகு பார்த்த ஆசிரியர்க்கும் அதன் தேர்வுக் குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அப்பாவின் மிதிவண்டி சிறுகதை பெண்மணி மாத இதழில் மறுபிரசுரம் செய்து கௌரவித்த அப்பத்திரிகையின் ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் அவர்தம் குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சிறுகதைச் செம்மல் விருது வழங்கி கௌரவித்த தமிழ் இலக்கிய ஆய்வு மையம் மற்றும் தர்ஷிணி பதிப்பகத்தாருக்கும் அதன் தேர்வு குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அழகுக்கு மேலும் அழகு சேர்த்தாற்போல் தொகுப்பை கனகச்சிதமாக வடிவமைத்த நிவேதிதா பதிப்பகத்தார், கவிஞர்.ஆர். தேவகி அவர்களுக்கும் தட்டச்சு செய்தவருக்கும், அட்டையை வடிவமைத்த ஓவியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    எனது எழுத்துப் பணிக்கு எப்போதும் உதவியாகவும், கதைகளை கேட்டு நல் ஆலோசனைகளையும், அன்பையும் வழங்கி வரும் பெரியப்பா த.மணி, அம்மா கமலம்சுப்ரமணியன், மனைவி ச.ஜோதி, மகள் பா.ஜோ.பூஜாஸ்ரீ மற்றும் சகோதர சகோதரிகள், மைத்துனர்கள் கே. ராஜூ, ஆர்.திருமுருகன், ச.ஸ்ரீஸ்கந்தன் இன்னும் இதன் தொடர்ச்சியாக மனதிற்குள் நீண்டு கொண்டேயிருக்கும் அனைத்து சொந்த பந்தங்களுக்கும் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    இலக்கிய உலகில் சிறுகதையாளனாக அடியெடுத்து வைத்திருக்கும் என்னை, இலக்கிய அன்பர்களும், நண்பர்களும் அப்பாவின் மிதிவண்டி என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இருபத்தொரு சிறுகதைகளையும் நவரத்தினங்களாக பாவித்து அவற்றை படித்துப் பார்த்து பரவசமடைந்து, அதிலுள்ள நிறை குறைகளை எடுத்துக்கூறி எனது இலக்கிய மரக்கன்று வேராகவும், விழுதாகவும் தழைத்தோங்க வழிவகை காண்பீர்கள் என்று நம்புகிறேன்.

    என்றும் எழுத்துடன்,

    சுப்ரமணிய பாண்டியன்

    எண் 8 F, வகை 1 குடியிருப்பு,

    வட்டம் - 19,

    நெய்வேலி - 607 803.

    கடலூர் மாவட்டம்

    9442865869,

    8072445456.

    அணிந்துரை

    பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற நடைபெற்றுவரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனப் புத்தகக் கண்காட்சியின் மூலம் கவிஞர்களாக, சிறுகதையாளர்களாகப் பரிணமித்த பலருள், இன்று பெயர் சொல்லக்கூடிய சிறுகதையாளர் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் சுப்ரமணிய பாண்டியன் அவர்கள்.

    நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் பிரசுரித்த சிறுகதைத் தொகுப்புகள், தினமணி கதிர், அமுதசுரபி, புதுவை வானொலி ஆகியவற்றின் வழியில் அடையாளப் பட்டவைகளாக இருபத்தொரு கதைகள் அடங்கிய சுப்ரமணிய பாண்டியனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளான வ.வே.சு.ஐயர், அ.மாதவையா, மகாகவி பாரதி தொடர்ச்சியில் தத்தம் சிறுகதைகளால் தமிழுக்கு அணி செய்திருக்கின்ற பல படைப்பாளிகளின் அடியொற்றி பல நூறு பூக்கள் மலர்ந்துள்ள தமிழ்ச் சிறுகதைச்சோலையுள் இன்று தனக்கென ஓர் இடம் பிடித்துள்ளது.

    சுப்ரமணிய பாண்டியனின் கதைகளைப் பொறுத்தவரையில் பாரதி கவிதைக்கென குறித்துச் சொன்ன ‘பாமரரும் விரும்பும் எளிமைப் பாங்கு’ வழியில் இவருடைய சிறுகதைகள் யாவும் வாசகரை மிரட்டாத வகையில், சலிப்பின்றி படித்துவிடும் தன்மையில் எளிமை கொண்டு துலங்குகின்றன. கதைகளின் கருப்பொருள்களும், கதைக் களங்களும் எளிமையான மனிதர்கள் குறித்தவைகளாகவும், கதாசிரியர் பிறந்து, வளர்ந்து, வாழுகின்ற கடலூர் மாவட்டத்தை மையம் கொண்டவைகளாகவும் விளங்குகின்றன.

    தொகுப்பில் ‘மந்திரச் சொல்’ முதற்கொண்டு ‘சாமிக்கெடா’ வரையான கதைகளில், ‘மந்திரச் சொல்’ சென்னையிலிருந்து உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு பண்ருட்டி வந்த சிறுவன், தன்னிலும் பெரியவர்களான பையன்களுடன் கூட்டுச் சேர்ந்து முந்திரித் தோப்பில் திருட்டுத்தனமாக பழம் பறித்துச் சாப்பிடச் சென்று தோப்புக்காரரிடம் தனியே அகப்பட்டுக்கொள்கிறான். மரத்தில் கட்டப்படுகிறான். பிறகு ஊர் முக்கியஸ்தர் ஒருவரின் தலையீட்டில்திருமணத்தில், ‘மாப்பிள்ளைத் தோழனாக செல்ல வேண்டியவன்’ என்னும் குறிப்புடன் விடுதலை பெறுகிறான். ‘பெரிய பையன்களோடு துணையாக வந்து பட்ட பாடுபோதும். இன்னும் மாப்பிள்ளைத் தோழனாகவா, துணையாகவா?’ என்னும் மனப் பொருமலுடன் சிறுவன் மிரண்டு போவதாக கதை முடிகிறது.

    பௌர்ணமி நாளில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகை தரும்திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில், தரையில் வண்ண ஓவியம் வரைந்து பிழைப்புச் செய்யும் ஏழைப் பெண்ணைப் பற்றிய கதை ‘என்ன சொல்லப் போகிறாள்?’

    தீபாவளிக்கு மயில் பார்டர் போட்ட பாவாடை, சட்டை கேட்கும் ஒற்றை மகளுக்கு பௌர்ணமி தின வருவாய் மூலம் அவற்றை வாங்கித்தருவதாக வாக்களித்து கிரிவலப் பாதையில் குபேர லிங்கம் இருக்கும் இடத்துக்கருகில் அண்ணாமலையாரை வண்ண லிங்கேஸ்வரராக வடிவப்படுத்தும் விதவை ஏழைப் பெண், அந்த இடத்தை ஆக்ரமித்து உடல் நலிவுற்றவனாக பக்தர்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஒருவனை (கட்டையன்) எதிர்கொள்கிறாள். வரைந்து முடித்த ஓவியத்திற்கு வருவாய் எதிர்பார்க்கும் வேளையில், அந்தப் பாதையில் அரசியல் பிரமுகர் ஒருவர் வரப் போவதாகவும், இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று காவலர் ஒருவர் வலியுறுத்துகிறார். அந்த நேரத்தில் எங்கிருந்தோ அங்கே வந்தடையும் கட்டையன், ‘சார், இந்த இடத்துல படம் வரையாதன்னு நான் எவ்வளவோ சொன்னன் சார். ஆனா கேக்கல’ என்று காவலரிடம் குழைகிறான். காவலரின் உத்தரவில் பக்கத்துக் கடையிலிருந்து கட்டையன் எடுத்து வரும் வாளித் தண்ணீரால் ஓவியம் அழிக்கப்படுகிறது. ‘ஓவிய வருவாய் மூலம் மகளுக்கு மயில் பார்டர் பாவாடை& சட்டை வாங்கித் தந்து விடலாம்.’ என எண்ணம் கொண்டிருந்த ஏழைப் பெண் தனது மகளுக்கு ‘என்ன (பதில்) சொல்லப் போகிறாள்?’ என்னும் கேள்வியை ஆசிரியர் வாசகர் நம் முன் வைத்து கதையை முடிக்கிறார்.

    தொகுப்பின் தலைப்புக் கதையாக இடம் பெற்றுள்ள ‘அப்பாவின் மிதி வண்டி’ அமுதசுரபியின் வை.மு.கோதைநாயகி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது.

    சித்தாள், வாட்ச்மேன், கணக்குப்பிள்ளை என பல தொழில் செய்து அப்பா சிரமப்பட்டு வாங்கி, பொன்போல பாதுகாத்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1