Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaivugal Niraintha Vettridam
Ninaivugal Niraintha Vettridam
Ninaivugal Niraintha Vettridam
Ebook165 pages1 hour

Ninaivugal Niraintha Vettridam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமூகக் கொடுமைகள், வன்முறைகள், பெண் இழிவுகள், புரிதல்கொண்ட காதல்கள், வீட்டு வேலைக்கு வந்த பெண்ணைப் பாலியல் சீண்டுதல் செய்யும் அயோக்கியர்கள் என்று பலதரப்பட்ட கதைகள் இத்தொகுப்புக்குள் இருக்கின்றன. அவற்றை நாமும் வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580127310792
Ninaivugal Niraintha Vettridam

Read more from G. Meenakshi

Related to Ninaivugal Niraintha Vettridam

Related ebooks

Reviews for Ninaivugal Niraintha Vettridam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaivugal Niraintha Vettridam - G. Meenakshi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

    Ninaivugal Niraintha Vettridam

    Author:

    ஜி. மீனாட்சி

    G. Meenakshi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-meenakshi

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. பிறவிப் பெரும்பயன்!

    2. அன்பு அம்மாவுக்கு, பாப்பு எழுதறேன்!

    3. வாத்தியாரய்யா

    4. ஆசை

    5. நினைவுகள் நிறைந்த வெற்றிடம்!

    6. வண்ணங்களின் மத்தாப்பு

    7. காதலின் நிறம் சிவப்பு!

    8. புதிய பாடம்

    9. சங்கரா என்றொரு மனுஷி!

    10. பொங்கல் போனஸ்

    11. நேசம் தேடும் நெஞ்சங்கள்

    12. மலரினும் மெல்லியது!

    அணிந்துரை

    நீங்கள் ஒருவரைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெயரைப் பிறகு சொல்கிறேனே. பெயர் அவர் அல்லவே. இருந்தாலும் பிறகு சொல்கிறேன். அவர் ஒருநாள், கடையில் ஏதோ வாங்கிவிட்டுத் தன் வண்டியை நோக்கிப் படி இறங்குகிறார். குறுக்காக எவரோ தன் வண்டியை நிறுத்தி இருக்கிறார். அவருக்கு எரிச்சல் வருகிறது. அந்த முட்டாள் யாராக இருக்கும்? மீண்டும் கடைக்குள் சென்று, அந்த வண்டிக்கு உரிமையாளர் யார்? என்கிறார். படித்தவன் போலும், நாகரிகம் உடையவன் போன்ற ஆடையுடன் ஒருவன் வந்து எதிரில் நிற்கிறான். உங்கள் வண்டியை நான் தாண்டிக் குதித்துச் செல்ல வேண்டுமா? என்கிறார் நம் நண்பர். அந்த முட்டாள் முகத்தில் அசடு மற்றும் அறிவிலித்தனம் வழிகிறது. சரவணபவனில் காபிக்குச் சீட்டு வாங்க நிற்கையில் ஒரு முட்டாள் நம் இடுப்புக்குக் குறுக்காகக் கையை நுழைத்து தின்ன எதையோ கேட்கிறான். அவனுக்கு முன்னால் நின்றிருக்கும் மனிதர்கள் பற்றி அக்கறை இல்லை. ஆனால் அந்த முட்டாள், மனிதன் மாதிரிதான் இருக்கிறான்.

    நாம் மூடர்கள் மத்தியில்தான் வாழ்கிறோம். அடுத்தவரைப் பொருட்டாக மதிக்காத அ-மனிதத்தனம் விஷக்காளான்கள் போல் பரவிக் கொண்டிருக்கிறது. வீட்டுக்குள்ளும் இப்படித்தான் இருக்கிறது. வெளியிலும் அப்படித்தான் இருக்கிறது. கணவன் என்பவனும், மனைவி என்பவளும் இரு தீவுகளாக ஒரு கூரையின்கீழ் வாழ்கிறார்கள். பெற்றோர் போஷிப்போ பராமரிப்போ கவனிப்போ இல்லாமல் காட்டுச் செடிபோலக் குழந்தைகள் வளர்கிறார்கள். தெருவில், மனிதர்கள் ஒரு காரணமுமின்றிப் பகைக்கிறார்கள். மேனேஜர்கள் என்கிற விசித்திரப் பிறவிகள் எண்ணெய் ஊற்றிக் கொள்ளாமலே எரிகிறார்கள். உடல் உழைப்பாளர்கள் ‘வெள்ளைக் காலர்’ மனிதர்கள் பட்டியலில் இல்லை. இப்படியெல்லாம் அந்த நபர் சிந்திக்கிறார். ‘நாம் ஏன் இப்படி ஆனோம்?’

    நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு நபரைச் சொன்னேனே, அவர் வேறு யாரும் இல்லை. இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் ஜி. மீனாட்சிதான் அவர்.

    எல்லாம் நன்றாகவே இருக்கிறது. நடந்தது எல்லாம் நல்லபடியாக நடந்தது என்கிற மாபெரும் பொய்கள் யாருக்கு உபயோகப்படுகிறதோ இல்லையோ, எழுதுகிறவர்களுக்கு நிச்சயம் உதவாது. எழுத்தாளர்கள் எப்போதும் நிகழ்ச்சிகளைக் கடந்து, நிகழ்ச்சிகளின் பின்னணியைக் காண வேண்டியவர்கள். முகம் அல்ல, முதுகைப் பார்க்கிறார்கள் எழுத்தாளர்கள். ஜி. மீனாட்சி தன் பார்வையில் படுகிற நேர்காணல்களை எழுதுகிறார். வழுக்கள் களையப்பட வேண்டும் என்கிறார். தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்கிறார். சரிகளைப் பாராட்டவும் செய்கிறார். ‘எல்லாம் கெட்டுப் போச்சி சார்’ என்று கெட்டவர்களே சொல்கிறார்கள். எல்லாம் கெடவில்லை, கெடக்கூடாது என்று சொல்லவே எழுதுகிறார்கள், எழுத்தாளர்கள். ஜி. மீனாட்சி அந்த ரகம்.

    இந்தத் தொகுப்பில் ‘புதிய பாடம்’ என்றொரு கதை. எனக்கு அது பிடித்திருக்கிறது. கிராமங்களிலிருந்து நகரத்துக்கு வந்து எழுதுபவர்கள் பலரும், கிராமங்கள் உன்னதம் என்பார்கள். நகரம், நரகம் என்பார்கள். அப்படி அல்ல. வாழிடம், எப்போதும் தனக்கென்று சில விதிகளை, நடைமுறைகளை வைத்திருக்கிறது. கால்பந்து முதல் கைப்பந்து விளையாட்டுக்கள் வரை விதி இருக்கிறது என்றால், வாழிடம் விதி இல்லாமல் இருக்க முடியாது. நகரம் சாவகாசம் அற்றது. ஆற அமர அமர்ந்து ஒரு வாய் வெற்றிலை போட்டுக்கொண்டு துப்பிவிட்டு ஏறும் வரைக்கும் பேருந்து காத்திருக்காது. நகரம் என்பது இயக்கம். கிராமத்திலிருந்து கணவனை இழந்து, மகனே கதியென்று நகரத்துக்கு வந்த அந்த அம்மாள், எப்படித் தன்னை நகரத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டாள் என்பதே அக்கதை. மகன் தன் பணிக்குச் செல்கிறான். மருமகள் அவள் வேலைக்கு, பிள்ளைகள் பள்ளிக்கு. அவரவரும் இரவில் சந்திக்கிறார்கள். சந்திக்காமல் இருக்கவும் நேர்கிறது. கணவன் பணி முடித்துத் திரும்பும்போது, கால் கழுவச் சொம்புத் தண்ணீர் கொடுக்கும் மனைவிக்கு இங்கு வேலை இல்லை. நகரம், அந்த அம்மாவிடம் ஒரு கேள்வி கேட்கிறது. வாளி என்று ஒன்று. சொம்பு என்று ஒன்று. இரண்டுமே இருக்கும்போது, எடுத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதானே? சொம்பு எடுத்துக் கொடுக்க பெண்டாட்டி தேவையா? அவரவரும் பறக்கிறார்கள். உண்மைதான். ஆனால், நெஞ்சில் மற்றவரை, உறவைச் சுமந்துகொண்டு பறக்கிறார்கள். அது முக்கியம். யாரும் மற்றவர் விஷயத்தில் குறுக்கிட நேரமும் இல்லை. அவசியமும் இல்லை. வம்புக்கும், புறம் பேசவும் நேரம் இல்லை. ஃபிரெஞ்ச் மொழி படிக்கப் போகும் மருமகள், இதைத் தகவலாகவே மாமியாரிடம் சொல்கிறாள். அனுமதி கேட்கவில்லை. பல வகைகளில் நாகரிகம் செயல்படுகிற இடமாக நகரம் இருக்கிறது. நீ தனிதான். ஆனால் தனியும் இல்லை. உனக்காக யோசிக்க மனிதர் உண்டு. அதைச் சொல்லிக் கொண்டிருக்க நகரத்தின் நகர்வு அனுமதிப்பதில்லை. அதன் இயல்பு அது. அந்த அம்மாள் கற்ற புதிய பாடம் அது.

    இன்னுமொரு கதையைப் பற்றியும் பேச எனக்கு விருப்பமாகிறது. ‘வண்ணங்களின் மத்தாப்பு’ என்பது அக்கதை. ஊட்டிக்கு சுற்றிப் பார்க்க மாணவிகள் போகிறார்கள். அஞ்சு, மிகவும் ஆர்வமுடன் கலந்து கொள்கிறாள். மலர்கள், மலர்கள், வண்ணங்கள் எல்லாவற்றையும் மனசில் சுமந்துகொண்டு திரும்புகிறாள். உண்மையில் அஞ்சு, அங்குப் போகவில்லை. மகிழ் உலா ஏதோ காரணமாக ‘கேன்சல்’ ஆகிவிடுகிறது. அந்தப் பெண் படுக்கைக்குள் அழுகிறாள். அவள் கண்டது கனவு. அதோடு கண் தெரியாத பெண் அவள்.

    பல தளத்தில் இக்கதையை எடுத்துச் செல்லலாம். குருட்டுப் பெண், பூக்களை எப்படிக் காண முடியும்? முடியாதுதான். ஆனால் உணர முடியுமே? அஞ்சுவுக்கு முகவிழிகள் இல்லை. அகவிழிகள் இருக்கின்றன. அவைகளால் அஞ்சு பார்க்கிறாள்.

    இந்தத் தரத்தில் பல கதைகள் தொகுப்பில் இருக்கின்றன. சமூகக் கொடுமைகள், வன்முறைகள், பெண் இழிவுகள், புரிதல்கொண்ட காதல்கள், வீட்டு வேலைக்கு வந்த பெண்ணைப் பாலியல் சீண்டுதல் செய்யும் அயோக்கியர்கள் என்று பலதரப்பட்ட கதைகள் தொகுப்புக்குள் இருக்கின்றன. நேராகக் கதை சொல்லும் பாணி, ஜி. மீனாட்சியுடையது. உத்திகள், வேறு வகையாக மாற்றிச் சொல்லுதல் முதலான நவீன தடத்தில் அவர் செல்ல முயலவில்லை. அப்படிக் கதை சொல்ல அவர் விரும்பாமல் இருக்கக்கூடும். எளிமையான மொழி, கதைக்குள் செல்ல உதவியாக இருக்கிறது. வீண் அலட்டல்கள் இல்லாத, முடிவை அலம்பல் இல்லாமல் சென்று சேரும் கதைகள். சிறுகதைகள், கொஞ்சமான பக்கங்களில்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கூடுதல் தகவல்கள், கூடுதல் பரிமாணங்களில் முயல ஜி. மீனாட்சியின் கதைகளுக்கும் சக்தி இருக்கின்றன.

    சரியானதின், நியாயத்தின், மனிதத்தனத்தின் பக்கம் நிற்கிற ஜி. மீனாட்சியின் பார்வையும், பக்குவமும், அவைகளையே எழுதுவது என்கிற நிச்சயமும் எனக்கு மிகவும் திருப்தி தருகிறது. வாசகர்களும் இந்த மகிழ்ச்சியை, திருப்தியைப் பெறுவார்கள்.

    பிரபஞ்சன்

    எழுத்தாளர்

    சென்னை

    16-6-2014

    என்னுரை

    அச்சில் நம் எழுத்துக்களைப் பார்ப்பது, ஆகாசத்தில் பறப்பதைப்போலப் பரவசத்தைத் தருவது. தம் படைப்புகளை பெரும்பாலானோர் படிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு எழுத்தாளனின் விருப்பமாக உள்ளது. சிறுகதையோ அல்லது கட்டுரையோ எழுதியனுப்பிவிட்டு, குறிப்பிட்ட பத்திரிகையில் அவை பிரசுரமாகும் நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பது, பிரசவ நாளுக்காகக் காத்திருப்பதுபோல ஆவலைத் தூண்டக்கூடியது. அந்த ஆவலை எனக்கு ஏற்படுத்தியவை இந்தக் கதைகள். 2009 முதல் 2013 வரை நான் எழுதி, பிரபல பத்திரிகைகளில் பிரசுரமான சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

    என்னுடைய முதல் சிறுகதையான ‘அன்புள்ள மலரே’, கோவை வானொலியில் முதன்முதலாக என்னுடைய 12-வது வயதில், என் சொந்தக் குரலிலேயே ஒலிவலம் வந்தது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். அதற்குப் பிறகு மேலும் ஒரு சிறுகதை கோவை வானொலியிலேயே ஒலிபரப்பானது. பின்னர் ‘தினமணி’ நாளிதழில் என் பத்திரிகைப் பணியைத் துவங்கிய காலத்தில் ‘தினமணிக் கதிரில்’ ஒரு சிறுகதை வெளியானது. பிறகு ஏனோ ஒரு நீண்ட இடைவெளி...

    14 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-இல் ‘பொங்கல் போனஸ்’ தினமணி நாளிதழில் பிரசுரமானது. சில மாத இடைவெளியில் ஆசை, வண்ணங்களின் மத்தாப்பு, பிறவிப் பெரும் பயன் போன்ற கதைகள் வெளியாயின. பின்னர் பிற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலும் 2013- கல்கி தீபாவளி மலர் குறித்த விளம்பரத்தில் பிரபல எழுத்தாளர்களின் பெயர்களுடன் என் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே இட்டுச் சென்றது. ‘கல்கி’ போன்ற தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையில் என் படைப்புகள் வெளியாகி வருவது, மேலும் நல்ல படைப்புகளை உருவாக்கத் தூண்டுகோலாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல...

    தினமலர், ஓம்சக்தி, கவிதை உறவு இதழ்களில் வெளியான கதைகளால் பெரும்பாலானோரின் பாராட்டுகளைப் பெற்றது

    Enjoying the preview?
    Page 1 of 1