Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thappu Kanakku
Thappu Kanakku
Thappu Kanakku
Ebook145 pages57 minutes

Thappu Kanakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் சிறுகதை எழுத நேர்ந்தது ஒரு விபத்துபோல் நிகழ்ந்தது. வெகு ஜனத்திரள் நடுவே முகமற்றுப் போகிற சாதாரண மனிதர்களைப் பற்றி என் முதல் சிறுகதை அமைந்தது. அதுவே என்னின் இன்னொரு முகமும் ஆயிற்று.

இந்தக் கதைகள் வாழ்வின் மீது எனக்குள்ள காதலை மட்டுமல்ல, என் எழுத்தின் பருவங்களையும் பதிவு செய்கின்றன. நான் எழுதத் துவங்கிய புதிதில், நுட்பங்கள் நிறைந்த நாகலிங்கப்பூவைப் போலத் தோன்றியது வாழ்க்கை. அந்த நுட்பங்களுக்குரிய அழகு, அதற்கேற்ற நடையைத் தேர்ந்து கொண்டன.

என் கதைகள், நம் சமகால வாழ்க்கை நமக்கு வீசிய கேள்விகளைப் பற்றிய ஓர் உரத்த சிந்தனை. ஆனால் அவை உங்களுக்கு எந்த சித்தாந்தத்தையும் சிபாரிசு செய்வதில்லை. இந்தக் கதைகளில் சில உங்களைப் பரவசப்படுத்தலாம். சில துன்புறுத்தலாம். சில சிரிக்க வைக்கலாம். சில ஆத்திரமூட்டலாம். சில புதிய தரிசனங்களைத் தரலாம். சில விமர்சனங்களை எழுப்பலாம். சில உங்களை என் கருத்துக்களோடு உங்களை உடன்படவைக்கலாம். சில முரண்படச் செய்யலாம். ஆனால் அவற்றின் நோக்கம் அதுவல்ல. உங்களை உங்களது மூளையைக் கொண்டே சிந்திக்க வைப்பதுதான் அவற்றின் நோக்கம். ஒரு படைப்பாளியின் மூளையை விட வாசகனின் முளை எந்த விதத்திலும் குறைவானதல்ல.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115401889
Thappu Kanakku

Read more from Maalan

Related to Thappu Kanakku

Related ebooks

Reviews for Thappu Kanakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thappu Kanakku - Maalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தப்புக் கணக்கு

    Thappu Kanakku

    Author:

    மாலன்

    Maalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நானும் என் கதைகளும்

    அறம்

    இறகுகளும் பாறைகளும்

    தப்புக் கணக்கு

    வித்வான்

    ஆயுதம்

    எங்கள் வாழ்வும்

    ராசி

    கடமை

    இதெல்லாம் யாருடைய தப்பு?

    முகங்கள்

    நானும் என் கதைகளும்

    மாலன்

    என் ஜன்னலுக்கு வெளியே சற்றே மரம் போல் தழைத்துவிட்ட போகன்வில்லா செடியில் வந்து அமர்கிறது அந்த வண்ணத்துப்பூச்சி. அதுவே ஒரு பூவைப் போல அழகாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் செடியில் மலர்ந்திருக்கும் பூவைவிட அது அழகாக இருக்கிறது. உயிர்ப்போடும் இருக்கிறது. பல திசைகளைப் பார்த்து வந்த அனுபவம் அதன் சிறகில் படிந்திருக்கிறது. ஆனாலும் ஏனோ அது அந்தச் செடிக்கு ஏற்ற ‘பூவாக’ இல்லை. பாந்தமாக இல்லை. எதனாலோ செயற்கையாக இருக்கிறது.

    போகன்வில்லாவும் இங்கிருந்தோ இந்த மண்ணுக்கு வந்ததுதான். ஆனால் அது இங்கேயே தழைத்து இந்த மண்ணுக்கே உரியதாக ஆகிவிட்டது. இந்த மண்ணில் வேர் கொண்டு, அதன் சாரங்களை உள்வாங்கிக் கொண்டு செழித்தது. இந்தச் சூழலுக்கே உரிய நோய்களை எதிர்கொண்டு போராடித், தன்னைத் தற்காத்துக் கொண்டது. முட்களுக்கு நடுவே பூத்துக் கொண்டும் இருக்கிறது. நான் வாழும் இடத்தை அடையாளம்காட்ட அந்தப் பூக்கள் உதவியாக இருக்கின்றன.

    நான் எழுத வந்த காலத்தில் நவீன இலக்கியம் என்பது என் வீட்டு போகன்வில்லாச் செடியைப் போலிருந்தது. அன்று பரவலாகக் கையாளப்பட்ட சிறுகதை வடிவமும் சரி, புதுக்கவிதை என்றழைக்கப்பட்ட கவிதைகளும் சரி, இங்குள்ள பாரம்பரியத்தின் தொடர்ச்சி இல்லை. வெளியிலிருந்து வந்ததுதான். ஆனால் இந்த மண்ணில் வேரூன்றிச் செழித்து, இந்த மண்ணுக்கே உரியதாகிவிட்டது. இன்று, நவீனம் அந்த வண்ணத்துப் பூச்சியைப் போல ஆகிவிட்டது.

    போகன்வில்லாவைப் போல, இந்த மண்ணில் கால்கொண்டு தழைப்பதா அல்லது அந்த வண்ணத்துப்பூச்சியைப் போல திசைகள் தோறும் திரிவதா என்று தேர்ந்து கொள்கிற வாய்ப்பு இன்று எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு இருக்கிறது. அடையாளமாக ஆவதா அல்லது கணநேர வியப்பாக இருப்பதா என்று தேர்ந்து கொள்கிற வாய்ப்பு இன்று எழுத வருகிறவர்களுக்கு இருக்கிறது.

    இப்படியெல்லாம் திட்டமிட்டுத் தேர்ந்து கொண்டு நான் எழுத்தாள வரவில்லை. நானும் சிறுகதை எழுத நேர்ந்தது ஒரு விபத்துபோல் நிகழ்ந்தது. வெகு ஜனத்திரள் நடுவே முகமற்றுப் போகிற சாதாரண மனிதர்களைப் பற்றி என் முதல் சிறுகதை அமைந்தது. அதுவே என்னின் இன்னொரு முகமும் ஆயிற்று.

    இந்த முகம் தேடல்தான் என்னுடைய எழுத்துக்களில் அது சிறுகதையானாலும் சரி, பத்திரிகையானாலும் சரி, பத்திரிகைப் பத்தியானாலும் சரி நடந்து கொண்டிருக்கிறது. தனி மனிதர்களுடைய முகங்களை மட்டுமல்ல. சமூகம் கொண்டிருந்த முகங்களையும், தொலைத்துவிட்ட முகங்களையும்கூட அவை தேடுகின்றன; ஆராய்கின்றன. இதைக் குறித்து நான் மகிழ்ச்சியே அடைகிறேன். நம்முடைய முகங்களையும், நம்மைச் சூழ்ந்துள்ள முகங்களையும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் முகங்களையும் அறிந்து கொள்வதும், ஆராய்ந்து தெளிவதும், ஆரத் தழுவிக் கொள்வதும், எத்தனை ஆனந்தமான விஷயம்! முகங்கள் எவ்வாறாயினும் அவையே நம்முடைய அடையாளங்கள் அல்லவா?

    சிறுகதைகளுக்குப் பெயர் பெற்ற சி.சு. செல்லப்பா என் முதல் கவிதையையும், கவிதைகளுக்குப் புகழ்பெற்ற கண்ணதாசன் என் முதல் சிறுகதையையும் தத்தம் இதழ்களில் வெளியிட்டதை இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இதுவும் இன்னொரு விபத்தோ?

    எழுத்துலகில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் விபத்துக்களைத் தவிர்க்க முடிவதில்லை. தவிர்ப்பதற்கான முயற்சிகள் எதையும் நான் மேற்கொண்டதுமில்லை. உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஏற்பட்ட விபத்துக்கள் என்னை முறித்துவிடவில்லை. மாறாகப் புதிய தரிசனங்களைத் தந்திருக்கின்றன. அவை வாழ்க்கையை மேலும் நேசிக்கத் சொல்கின்றன.

    வாழ்க்கையின் மீதுள்ள நேசத்தினால்தான் (இலக்கியத்தின் மீதுள்ள காதலினால் மட்டும் அல்ல) இந்தக் கதைகளை எழுதினேன். என் மீதுள்ள நேசத்தினால்தான் (நேரமின்மையின் காரணமாக மட்டும் அல்ல) சில காலம் எழுதாமலும் இருந்திருக்கிறேன். ஒருவன் எழுதுவதற்கு முயல்வதைப் போலவே எழுதாதிருக்கவும் பயில வேண்டும். அதுவும் எழுத்தையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டவனுக்கு அந்த முதிர்வு வேண்டும். வாழ்வில் ஒரு பருவத்தில் எதையாவது எழுதிவிட வேண்டும் என்ற தவிப்பு ஏற்படுவதைப் போலவே எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்ற நம்பிக்கையும் ஒரு பருவத்தில் ஏற்படும். அந்த நம்பிக்கை வந்தபின் எழுதாமல் இருப்பதே பொறுப்புள்ள செயல்.

    நான் எழுதும்போதும், எழுதாமலிருக்க முடிவு செய்த போதும் ஒரே மாதிரி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியே தருகிறது. லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடையக் கூடிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பில் இருந்திருக்கிறேன். நான் எழுதுவதையெல்லாம் பிரசுரித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு என் வசம் இருந்தது. ஆனால் அதை நான் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. இந்தத் தொகுப்பில் நீங்கள் காணும் கதைகளில் நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்தபோது எழுதப்பட்ட கதைகள் ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அநேகமாக இல்லை என்றேதான் சொல்ல வேண்டும்.

    இதைச் சொல்வதற்குக் காரணம், நான் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பொருட்டோ, எனக்கு பிரபலம் தேடிக் கொள்ளும் விருப்பிலோ என்னுடைய கதைகளை எழுதியதில்லை. இந்தக் கதைகளில் பல பத்திரிகைகளின் அழைப்பில் எழுதப்பட்டவை. ஆனால் அவை எதுவும் எந்த நிர்ப்பந்தத்தின் பேரிலும் எழுதப்பட்டவை அல்ல. பெண்கள் படங்களைப் பிரசுரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக, சிறுகதைகளை வாரப் பத்திரிகைகள் பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்திலேயே, நான் அந்த ஊடகங்களில், பெண் பாத்திரங்கள் இல்லாமலே கதைகள் எழுதியிருக்கிறேன். தணிக்கை அமலில் இருந்த அவசர நிலைக் காலத்தில் மனிதப் பாத்திரங்களே இல்லாமல் கூடக் கதைகள் எழுதியிருக்கிறேன். மனிதப் பாத்திரங்கள் இல்லாத கதைகள் என்ற போதிலும் அவை மனிதர்கள் குறித்த கதைகளே!

    நான் அரசியல் குறித்தும், சமூகம் குறித்தும், பத்திரிகைகள் குறித்தும், கலாசாரம் குறித்தும், காதல் குறித்தும், கல்யாணங்கள் குறித்தும், ஏன் கடவுள் குறித்து எழுதுவதற்கும் கூட மனிதர்களும் அவர்கள் மீது நான் கொண்டுள்ள அன்பும், நம்பிக்கையுமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும், இந்த வாழ்க்கையும் அதன் மீது நான் கொண்டுள்ள காதலுமே காரணமாக இருக்கிறது.

    இந்தக் கதைகள் வாழ்வின் மீது எனக்குள்ள காதலை மட்டுமல்ல, என் எழுத்தின் பருவங்களையும் பதிவு செய்கின்றன. நான் எழுதத் துவங்கிய புதிதில், நுட்பங்கள் நிறைந்த நாகலிங்கப்பூவைப் போலத் தோன்றியது வாழ்க்கை. அந்த நுட்பங்களுக்குரிய அழகு, அதற்கேற்ற நடையைத் தேர்ந்து கொண்டன. மகாகவி பாரதியை மீண்டும் மீண்டும் படிக்கத் தலைப்பட்டபோது ஓர் உண்மை பொட்டில் அறைந்தது. எழுத்தில் இரண்டு வகை. பூப்பூவாக எழுதுவது ஒரு ரகம். நகாசு வேலைகள் இல்லாமல், நறுவிசு செய்யாமல், மட்டைக்கு இரண்டு கீற்று என்று எழுதுவது ஒரு பாணி. மகாகவி இந்த இரண்டாவது பாணியை உணர்வு பூர்வமாகவே, மனம் ஒப்பியே, வித்தியாசங்களை அறிந்தே இந்த இரண்டாவது பாணியைத் தேர்ந்து கொண்டிருந்தது யோசிக்க வைத்தது. மகாகவிக்கு மொழியின் மீதுள்ள காதலும், ஆளுமையும் அவனுள் பொலிந்த கவிமனமும் நாகலிங்கப்பூவைப் போல அழகும் நுட்பமும் மணமும் கவர்ச்சியும் கொண்ட ஒரு நடையை அவனுக்கு அளித்திருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம். ஆனாலும் அவன் அதை உதறித்தள்ளி நான்கு முழ வேட்டியைப்போல நுட்பங்கள் ஏதுமில்லாத ஒரு எளிமையை மேற்கொண்டது என்னை யோசிக்க வைத்தது. இலக்கணங்களை உதறிய புதுக்கவிதைக்கும், அலங்காரங்களை மறுதலித்த உரைநடைக்கும் அடிப்படை ஒன்றேதான். மரபுக் கவிதைகளில் ஆரம்பித்து, புதுக்கவிதைக்கு மாறி வந்த என்னை, இந்த உண்மை ஈர்த்தது. வெடிப்புறப் பேசு என்ற மகாகவியின் வார்த்தைகள் மனத்தை வெகுகாலம் மொய்த்துக் கொண்டிருந்தது. அது வாழ்க்கையின் மீது ஓர் இளைஞனுக்குரிய கோபங்களும் விமர்சனங்களும் எழுந்த பருவம். என் நடை மாறியது. இந்த இரண்டு நடைகளையும் நீங்கள் இந்தத் தொகுப்பில் காணலாம். வியப்போடு பார்த்தபோதும் சரி, தகிப்போடு பார்த்தபோதும் சரி எனக்கு வாழ்வின்மீது காதல் இருந்ததைப்போலவே,

    Enjoying the preview?
    Page 1 of 1