Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Vaarpugal
Puthiya Vaarpugal
Puthiya Vaarpugal
Ebook210 pages1 hour

Puthiya Vaarpugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனது கதைகளில் பல நயங்களை, உணர்ச்சிகளை, அர்த்தங்களை நான் அமைதியாக அதே சமயத்தில் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறேன். இந்தத் தொகுதியில் விரவி வரும் கதைகளிலும், வரிகளிலும் அவற்றின் உள்ளாகவும் அவற்றை ஊடுருவிப் பார்த்தும், நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனது முன்னுரைகள் அதற்கு உதவியாக அமையும். இலக்கியத்திற்கு ஒரு நோக்கமுண்டு என்று நம்புகிறவர்களுக்கு, ‘வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கு எனது முன்னுரைகள் ஓரளவு பயன்படும். இதை மறுப்பவர்களுக்கு எனது முன்னுரைகள் மட்டுமல்ல, எனது எழுத்துக்கள் அனைத்துமே பயனற்றுப் போவது குறித்துக்கூட எனக்குக் கவலை இல்லை. இந்தத் தொகுதியிலுள்ள கதைகளில் புதிய வார்ப்புகள், விளக்கு எரிகிறது, ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில், எத்தனை கோணம் எத்தனை பார்வை முதலிய கதைகள் அனந்தவிகடனிலும், மற்றவை சரஸ்வதி, புதுமை, தாமரை ஆகிய பத்திரிகைகளிலும் பிரசுரமானவை. இக்கதைகளைப் புத்தகவடிவில் தர அனுமதியளித்த அவ்வாசிரியர்களுக்கும், புத்தகமாய்த் தருகின்றவர்களுக்கும் நான் நன்றியுடையேன்.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580103906931
Puthiya Vaarpugal

Read more from Jayakanthan

Related to Puthiya Vaarpugal

Related ebooks

Reviews for Puthiya Vaarpugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Vaarpugal - Jayakanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புதிய வார்ப்புகள்

    Puthiya Vaarpugal

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    எனது முன்னுரைகளில் நான் கதைக்குச் சம்பந்தமில்லாத அதிகப் பிரசங்கித்தனம் செய்வதாய் என்னிடம் நண்பரொருவர் ஒரு சின்னப் பிரசங்கம் செய்தார். எனினும் முன்னுரைகள் எழுதுவதில் எனக்கு சலிப்பே இல்லை. ஏனெனில் அவற்றைப் படிக்கும் எனது ரசிகர்களும் சலிப்படைவதில்லை. என்னை எழுத்தாளன் என்று ஏற்றுக் கொள்வதின் மூலமாகவே அவ்விதம் ஏற்றுக் கொண்டவர்களுக்கு எனது அதிகப் பிரசங்கித்தனம்கூட இலக்கியமாக அல்லது இலக்கிய முக்கியத்துவம் உடையதாக ஆகிவிடுகிறது. அதற்கு நான் என்ன செய்யட்டும்?

    நான் எந்தவொரு காரியத்தையும் ஓர் அர்த்தத்துடனே செய்கிறேன். எனக்கு எது சிறப்பு என்று தோன்றுகிறதோ அதைத்தான் அதை மட்டுமேநான் செய்கிறேன்.

    கலை விஷயத்தில் அர்த்தமே உருவத்தைச் சமைக்கிறது. அர்த்தத்தின் மூலம் இந்த உருவம் வலுவும் அழகும் பெறுவதாலேயே புதிய புதிய கருத்து வளர்ச்சிகளுக்கேற்ப புதிய புதிய உருவ வார்ப்புகளும் ஏற்படுகின்றன.

    பொதுவாக வாழ்க்கையே சிக்கல் மிகுந்தது என்பது, ஒரு புரியாத சூத்திரம் அல்ல. சிக்கல் மிகுவதனாலேயே வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் அதன் மீதொரு பற்றும் நமக்கு அதிகரிக்கிறதென்பது சற்று சிந்தித்தால் புரிகிற விஷயம். எவ்வளவுதான் சிக்கல் மிகுந்திருந்த போதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனையிலும் முரண்பாடுகளே மலிந்திருப்பினும் மனித வாழ்க்கையின் பொதுவான கதி உன்னதமாய்த்தான் இருக்கிறது என்பது வாழ்க்கையை ஒரு வெறியோடு வாழ்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமே உணரத்தக்க ஒரு ஞானம்.

    தீயவன் என்று அனைவராலும் தீர்ப்பளிக்கப்பட்டவன் கூடத் தீமையை வெறுப்பதில் அதை நிதர்சனமாய்க் காணலாம். அறிவுபூர்வமாக மட்டுமல்ல; உணர்வுபூர்வமாககூட மனிதன் நல்லதையே நாடுகிறான். இதைச் சாதாரண சமூக வாழ்க்கையின் சகல கோணங்களிலும் நான் தரிசிக்கிறேன். நான் எப்படித் தரிச்சிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும் முயற்சியே எனது கதைகள். இந்த நோக்கத்தை ஓர் அர்த்தம் என்று கொண்டால் எனது கதைகளை எல்லாம் அந்த அர்த்தத்தின் பல உருவங்கள் என்று கொள்ளலாம்.

    கலை உருவங்கள் அப்பட்டமாக அர்த்தத்தைப் பறையடிக்க வேண்டுமென்பதில்லை. உருவத்தில் விளையும் அதை மட்டும் ரசிப்பதில் குற்றமில்லை. உருவங்களுக்குப் பின்னால் பொதிந்துள்ள அர்த்தத்திலோ அல்லது பொதிந்துள்ளதாக நீங்கள் பாவித்துக்கொண்ட ஏதோ ஓர் அர்த்தத்தின் மகத்துவத்திலோ நீங்கள் ஆழ்ந்து போவதானாலும் எனக்கு அதில் ஆட்சேபனையில்லை.

    உருவத்துக்குப் புறம்பு, அல்லது அந்த உருவம் வரம்புக்கு மீறியது என்ற தீர்மானத்தில் நானே ஒதுக்கிக் கொண்டது சில அர்த்தமுள்ள விஷயங்களைப் பேசுவதற்கான உரிமையை இந்த முன்னுரைகளின் மூலம் எனக்கு நானே அளித்துக் கொள்கிறேன். ஒரு பொதுவான அர்த்தத்தின் உந்துதலினாலேயே பல குறிப்பான உருவங்கள் தோன்றினாலும் ஒவ்வொரு குறிப்பிட்ட உருவத்திலும் இவ்வளவுதான் என்று எல்லையை நானே நிர்ணயித்துக் கொள்வதால் ‘கூடாது’ என்ற தடைவிதிப்பும், ‘வேண்டும்’ என்ற உரிமை அளிப்பும் எனக்கு அவசியமாகிறது. ஆகவேதான் ஒவ்வொரு கதைக்கும் புறம்பு என்று நான் அதுக்கிய விஷயங்களை அந்த எல்லாக் கதைகளின் தொகுதியின் முன்னுரைகளில் பேசிவிட வேண்டும் என்ற அரிப்பு என்னுள் மிகுகின்றது. ஆனால் அதனை யாரும் எந்தவொரு கதையோடும் நேரடியாகத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாது. முடிந்திருந்தால் நானே கதைகளில் செய்திருப்பேன். நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது என்பதனால் முன்னுரையில் கண்ட விஷயங்களுக்கும் தொகுதியில் உள்ள கதைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது அறியாமை.

    இந்த அறியாமை காரணமாகவே பொதுவான அர்த்தத்தையும் குறிப்பான உருவங்களையும் இணைக்க முயன்று குழம்பிப்போன அந்த நண்பர் ‘முன்னுரை அதிகப் பிரசங்கித்தனம்’ என்ற முடிவிற்கு வந்திருக்கலாம்.

    இவ்வளவு அர்த்த, உருவப் பிரக்ஞையோடு எழுதப்படும் எனது கதைகளை எந்தப் பிரக்ஞையுமில்லாத இன்னொரு விமர்சக நண்பர், நான் கதையைவிட அதிகமாகத் தத்துவ விளக்கங்களும் இதோபதேசமும் செய்வதாகக் கருதுகிறார். இதோபதேசம் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்களை நான் வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். அவர்களைக் கதாபாத்திரமாக ஆக்கக் கூடாதா? இன்னும் சற்று ஆழ்ந்து கவனியுங்கள்; வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு எதையோ உபதேசம் செய்து கொண்டிருக்கிறான் என்பது புலனாகும். ஏன்? இந்த நண்பர் எனக்குச் செய்ய முயல்வதும் அதுதான்! சமூக வாழ்க்கையில் தனி மனிதனின் நடைமுறையும் இதுதான்; சமூக ஜீவிகளின் கூட்டான இலட்சியமும் இதுதான்.

    ஆனால் கதையில் மட்டும் அது கூடாது என்ற கூற்று இந்த நண்பரின் ஏதேச்சையான கருத்து அல்ல; அதற்கு ஒரு கொடி உண்டு: அதுவே ஒரு கோஷம்!

    உண்மை என்ன தெரியுமா? எனது இதோபதேசம் அவருக்கு உடன்பாடல்ல. ஆனால் அதைப் பகிரங்கமாகச் சொல்ல முடியாது. எதிர்மறைக் கருத்துகள் எதுவும் பகிரங்கமாக வெளியே வருவதில்லை. இலக்கியம் என்பதே பொழுது போக்குத்தான் என்ற ஒரு போர்வையில் அந்தப் பொய் நம்மிடையே உலவுகின்றது.

    ‘ஒருவிதக் கடமையுமில்லாமல் நாளை எண்ணி நான் உயிர் வாழ்கிறேன்’ என்று கூறுவது எவ்வளவு பொய்யோ எவ்வளவு தீமையோ அவ்வளவு பொய், அவ்வளவு தீமை ‘இலக்கியம் பொழுது போக்கிற்கு மட்டுமே’ என்கிற வாதம்.

    இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கை என்னும் ‘பொழுதில்’ அடைந்த பயனென்ன, அளித்த பயனென்ன? என்று உணரவும் உணர்விக்கவும் வாழ்வதே மனித வாழ்க்கை!

    ஜனனம் - மரணம் என்ற நியதிக்குள்ளே முடிவு கண்டு விடுவதுதான் பொதுவான உயிர் வாழ்க்கை. இந்த நியதிக்கு உட்பட்ட போதிலும், ஸ்திதி என்ற நிலையை சாஸ்வதப்படுத்தி, வளர்ச்சி என்ற பதாகையை நிரந்தரமாய்ச் சுமந்து கொண்டு காலத்தைப் போலவே எல்லையும் முடிவுமற்று, நீண்டு நீண்டு, மேலே மேலே போய்க் கொண்டிருக்கும் ஒரு மகா யாத்திரையே மனித வாழ்க்கை!

    வம்சாவளி என்ற சங்கிலித் தொடரால் மனிதனைப் போலவே எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை நிரந்தரமாக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ‘வளர்ச்சி’ என்னும் தன்மையை விலங்கினம் பெறவில்லை. மனிதனைத் தவிர மற்ற உயிர்களின் வாழ்க்கை பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பு எப்படியோ அப்படித்தான் இப்பொழுதும். இதற்குக் காரணமென்ன? பொழுதைப் பயன்படுத்திக் கொள்ளும் இயல்பு அவற்றுக்கு இல்லை என்பதுதான். விலங்கினத்தின் சகல நியதிகட்கும் உட்பட்ட ஜீவனான மனிதன் ஏதோ ஒரு வகையில் விலகி வழி நடக்கலானான்.

    ஓ!... அந்த ஏதோ ஓர் வழிதான் எவ்வளவு மகத்தான வழி!

    வயிற்றுப் பசி வம்சவிருத்தி என்ற இரண்டு உணர்ச்சிகளும் தீர்ந்த பிறகு இருக்கும் பொழுதில் மனிதனால் சும்மா இருக்க முடியாது. குறைந்தபட்சம் அவன் சிந்தித்தான்; அல்லது கனவு கண்டான். இந்தச் ‘சும்மாயிருக்க முடியாமை’ என்ற ஒரு குணத்தில்தான் மனிதனின் பெருமையே அடங்கிக் கிடக்கிறது. அந்த முதல் மனிதன் ஒரு கல்லை எடுத்துத் தீட்டி அது கூர்மையாவது கண்டு குதூகலித்தானே அதுதான் முதல் விஞ்ஞானம். முதல் கலை. அந்தக் குதூகலம்தான் முதல் கலாரசனை. அந்தச் செயல் அத்துடன் நின்றுவிடவில்லை. அதன் தொடர்ச்சியே இன்றைய சகல மனித சாதனைகளும். இடையில்தான் எவ்வளவு ‘பொழுது’ கழிந்திருக்கிறது! காலத்தைக் கழிக்கவும் பொழுதைப் போக்கவுமா மனிதன் இவற்றைக் கைக்கொண்டான்? மனிதனை இருந்த இடம் தெரியாமல் அழித்து, மறைத்துப் போய்க்கொண்டிருந்த பொழுது அவனால் பார்க்க முடியாத, அவனது சந்ததியாருக்காக அவனது செயல்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது. அவ்விதம் தரப்பட்டவைதான் மனித குலத்தின் கலாசாரங்கள். அதில் ஒரு பிரிவே கலை. கலைகளில் ஒரு கூறே இலக்கியம். இந்த மகத்தான காரியம், இருந்து பொழுதைக் கழிக்கவும், உயிர் சுமந்து நாட்களைப் போக்கவுமான ஒரு செயலற்ற தன்மைக்குப் பலியாவது எங்ஙனம்?

    ‘பொழுது போக்கு இலக்கியம்’ என்ற வார்த்தைத் தொடரும், ‘பொழுதைப் போக்க மட்டுமே இலக்கியம் பிறந்தது’ என்று நிலவி வரும் ஒரு கருத்தும் வளர்ச்சியை மறுக்கும், எதிர்க்கும், இயன்றவரை தேக்கும் ஒரு போக்காகும். எழுதுபவனுக்கு எவ்வளவு பொறுப்பு உண்டோ அவ்வளவு பொறுப்பு வாசகர்களுக்கும் வேண்டும். எழுதுவதெல்லாம் எவ்விதம் சிறந்த எழுத்தாகி விடுவதில்லையோ அதேபோல் வாசிப்பதெல்லாம் தேர்ந்த ரசனையாகி விடாது. பொழுது போக்கிற்காக நான் ஒரு எழுத்தைக் கூட எழுதியதில்லை. சிக்கலான புதிர்களையோ, ஜாலங்கள் எனும் கழைக்கூத்தாடித் தனத்தையோ, க்ஷண நேரத்தில் துடிப்பு என்ற திருப்பங்களையோ, தித்திப்பை நாக்கில் தடவும் வர்ணனைகளையோ, உடைகளைகிற நிலைவரை உடன் சென்று குறிப்பெழுதும் ‘மார்க்கெட்’ விவகாரங்களையோ எனது வாசகர் என்னிடம் எதிர்பார்க்க மாட்டாரென்று நம்புகிறேன்.

    எனது கதைகளில் பல நயங்களை, உணர்ச்சிகளை, அர்த்தங்களை நான் அமைதியாக அதே சமயத்தில் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறேன். இந்தத் தொகுதியில் விரவி வரும் கதைகளிலும், வரிகளிலும் அவற்றின் உள்ளாகவும் அவற்றை ஊடுருவிப் பார்த்தும், நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனது முன்னுரைகள் அதற்கு உதவியாக அமையும்.

    இலக்கியத்திற்கு ஒரு நோக்கமுண்டு என்று நம்புகிறவர்களுக்கு, ‘வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கு எனது முன்னுரைகள் ஓரளவு பயன்படும். இதை மறுப்பவர்களுக்கு எனது முன்னுரைகள் மட்டுமல்ல, எனது எழுத்துக்கள் அனைத்துமே பயனற்றுப் போவது குறித்துக்கூட எனக்குக் கவலை இல்லை.

    இந்தத் தொகுதியிலுள்ள கதைகளில் புதிய வார்ப்புகள், விளக்கு எரிகிறது, ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில், எத்தனை கோணம் எத்தனை பார்வை முதலிய கதைகள் அனந்தவிகடனிலும், மற்றவை சரஸ்வதி, புதுமை, தாமரை ஆகிய பத்திரிகைகளிலும் பிரசுரமானவை. இக்கதைகளைப் புத்தகவடிவில் தர அனுமதியளித்த அவ்வாசிரியர்களுக்கும், புத்தகமாய்த் தருகின்றவர்களுக்கும் நான் நன்றியுடையேன்.

    த. ஜெயகாந்தன்

    30.3.65

    சென்னை - 8

    பொருளடக்கம்

    புதிய வார்ப்புகள்

    விளக்கு எரிகிறது

    சாளரம்

    திரஸ்காரம்

    போர்வை

    அபாயம்

    புதிய கதை

    ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்

    எத்தனை கோணம்! எத்தனை பார்வை!

    புதிய வார்ப்புகள்

    மாடியறையில் இந்துவைக் காணாமல் அவளது செல்லப் பூனை குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டு இருந்தது. வராந்தா வழியாக அவளைத் தேடியவாறு சுவரோரமாய் நடந்து மாடிப் படியருகே வந்து நின்று, கீழே ஹாலைக் குனிந்து பார்த்தது அந்தக் கறுப்புப் பூனை.

    பொழுது மங்கி வெகுநேரம் ஆகியும் விளக்கைப் பொருத்த வேண்டுமென்ற உணர்வுகூட அற்றவளாய், முன் ஹாலின் இருண்ட மூலையில் கிடந்த ஸ்டூல் ஒன்றில், யாருக்கோ அஞ்சிப் பதுங்கியவள் மாதிரி உட்கார்ந்திருந்த இந்துவின் தாய் குஞ்சம்மாள், தலை நிமிர்த்தி மாடி வராந்தாவைப் பார்த்தாள்.

    இருளில் ஜொலிக்கின்ற அந்தக் கறுப்புப் பூனையின் இரண்டு கொள்ளிக் கண்களையும் காண அவள் அச்சம் கொண்டாள். அந்தப் பூனையும் ‘இந்து எங்கே?... இந்து எங்கே...’ என்று சினம் மிகுந்து அவள் மீது பாய்ந்து குதறுவது போல் அலறியவாறு மாடிப் படிகளில் வாலை நெளித்துச் சுழற்றிய வண்ணம் இறங்கி வந்துகொண்டு இருந்தது.

    அந்தப் பூனையின் அலறல் மனிதக் குரல் போல் அவளுக்கு ‘உருவகம்’ கொண்டது. குஞ்சம்மாள் தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள். அவள் கண்களுக்கு அந்தப் பூனையின் விழிகள், தன் கணவரின் விழிகளைப் போன்று அச்சம் விளைவித்தன.

    இந்தச் சமயத்தில் தன் கணவரின் பிரசன்னத்தைக் கற்பனை செய்தே அவள் உடல் நடுங்கினாள்.

    மாடிப் படிகளில் அலறியவாறே இறங்கி வந்த கறுப்புப் பூனை, குஞ்சம்மாளின் காலைச் சுற்றிச் சுற்றிப் பரிதாபமாய் அழுதது. குஞ்சம்மாள் குனிந்து பூனையைக் கையில் எடுத்தாள். முகத்தோடு அணைத்துக் கொண்டு அழுதாள். தன்னைக் காணும்போதெல்லாம் விரட்டித் துரத்தும் அவளது இந்தப் புதிய செய்கையில் அந்தப் பூனை ஆச்சரியம் கொண்டதுபோல் அமைதியடைந்தது.

    இந்தப் பூனையின் தவிப்பை அவள் உதாசீனப்படுத்தி விடலாம். இதுபோல் மற்றவர்களின் தவிப்பை உதாசீனப்படுத்த தனக்கு அதிகாரம் இல்லை என்றாலும், சமாதானப்படுத்தி அவர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதிலாவது தான் வெற்றி காணமுடியுமா என்று எண்ணிய போது, அவள் மலைத்துப் போய்க் குழம்பினாள்.

    அந்தக் குழப்பத்திலும் மலைப்பிலும் அவள் கையிலிருந்து நழுவிக் குதித்த பூனை, மீண்டும் இந்துவைத் தேடி அழைத்தவாறு ஒரு குழந்தைபோல் பின்கட்டை நோக்கி ஓடிற்று.

    அந்தப் பூனையின் குரல் குஞ்சம்மாள் நெஞ்சைக் குடைந்தது.

    பாவம்,

    Enjoying the preview?
    Page 1 of 1