Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ishwara Allah Tere Naam
Ishwara Allah Tere Naam
Ishwara Allah Tere Naam
Ebook329 pages2 hours

Ishwara Allah Tere Naam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹரிஜனங்களையெல்லாம் முஸ்லிம்களாக மாற்றுகிறார்கள் என்ற பெருங் கூப்பாடு கேட்டது. இந்தக் கூப்பாடு வலுவிழந்து போயினும் இதனுடைய ரீங்காரம் இப்போதும் அடிக்கடி கேட்கிறது.

'இதயம் பேசுகிறது' வார இதழில் என்னை ஒரு தொடர் கதை எழுதுமாறு கேட்டபோது இதைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கதை எழுத எண்ணினேன். மதமாற்றம் நடைபெற்ற ஊர்களுக்குச் சென்று மதம் மாறியவர்கள் பலரைச் சந்தித்தேன். ஒன்று புரிந்தது! இந்த மக்கள் தமது தேங்கிப்போன வாழ்க்கையில் ஒரு அடிப்படை மாற்றத்தை விழைகிறார்கள். அதற்கான பொருளாதார சமூக நியாயங்கள் நிறையவே இருக்கின்றன என்பதுதான் அது.

மக்கள் காண விரும்பும் மாற்றம் மெய்யாக சமூக பொருளாதார மாற்றமாகிவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிற சுரண்டும் கூட்டத்தினர் - அவர்கள் இந்து மத, மட அபிமானிகளாகவும், இஸ்லாமிய அராபிய பெட்ரோ டாலர் அபிமானிகளாகவும், கிறித்துவ ஆங்கிலோ அமெரிக்க ஐரோப்பிய அபிமானிகளாகவும் உள்ள - பணம் படைத்தவர்கள் திட்டமிட்டு நடத்திச் செய்தி பரப்பி, மக்களது மாற்றம் காணும் விழைவைத் திசை திருப்பி, வகுப்புக் கலவரமாக்கி விடுகிற காரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது தெளிவு.

இவ்விதம் நாமறிவது புதிதல்ல. மக்களைச் சார்ந்த மதங்களை மன்னரும் ஆளும் வர்க்கத்தினரும் கைப்பற்றிக் கொண்டு மதச்சண்டைகளை நடத்தியதே மதங்களின் வரலாறு. அதுபோலவே இக்கால ஜனநாயக உரிமைகளின் பேரால் அன்னியர்களின் தலையீட்டுடன் இத்தகு மதக்கலவரங்கள் உற்சாகமாய்த் தூண்டப்படுகின்றன. இதில் ஒன்றுமறியா மனிதாபிமானிகளும் சிக்கி விடுகின்றனர்.

உழைக்கும் மக்களின், பெண் மக்களின் அவல நிலையையும் அடிமைத்தனத்தையும் அகற்றித் தீர்க்கிற உண்மையான மார்க்கம் எதையும் இதுகாறும் நமது தொன்மை மதங்கள் எதுவும் காட்டவில்லை. மேலும் உழைக்கும் மக்களின் நலன்களையும், பெண் மக்களின் மேன்மைகளையும் சிதைப்பதற்கும் சீரழிப்பதற்கும் உலகில் உள்ள எல்லா மதங்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இத்தகைய அவலங்களைக் குறித்துக் கண்மூடிக் கிடக்கும் இந்த மதங்களாலேயே இந்திய வாழ்க்கையில் மாற்றங்கள் காண முடியும் என்று நம்பிய ஞானிகள் பலர். அவர்களில் நாமறிந்த நம் காலத்திய ஞானி மகாத்மா காந்தியடிகள். அவரது வழியில் இதற்குத் தீர்வுகாண முயலும் ஆதி இந்த நாவலுக்காக மட்டும் பிறந்தவர் அல்ல.

ஜய ஜய சங்கர நாவல் தொடங்கி இன்னும் பிற படைப்புகளிலும் ஆதி என்கிற இந்தப் பாத்திரம் இடையறாது தோன்றி காந்திய அணுகல் முறையை சிபாரிசு செய்தே வருகிறார்.

அத்தகு பார்வையில் நமது மதங்களுக்கிடையே இசைவும், சமுதாயத்தில் பொருளாதார சமத்துவமும் நிகழ காந்திய வாழ்வியல் முறைகளை மீண்டும் ஒரு முறை சித்த உறுதியுடன் நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தில் விளைந்த கதை இது.

- த. ஜெயகாந்தன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103904078
Ishwara Allah Tere Naam

Read more from Jayakanthan

Related to Ishwara Allah Tere Naam

Related ebooks

Reviews for Ishwara Allah Tere Naam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ishwara Allah Tere Naam - Jayakanthan

    http://www.pustaka.co.in

    ஈஸ்வர அல்லா தேரே நாம்

    Ishwara Allah Tere Naam

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    முன்னுரை

    இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹரிஜனங்களையெல்லாம் முஸ்லிம்களாக மாற்றுகிறார்கள் என்ற பெருங் கூப்பாடு கேட்டது. இந்தக் கூப்பாடு வலுவிழந்து போயினும் இதனுடைய ரீங்காரம் இப்போதும் அடிக்கடி கேட்கிறது.

    'இதயம் பேசுகிறது' வார இதழில் என்னை ஒரு தொடர் கதை எழுதுமாறு கேட்டபோது இதைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கதை எழுத எண்ணினேன். மதமாற்றம் நடைபெற்ற ஊர்களுக்குச் சென்று மதம் மாறியவர்கள் பலரைச் சந்தித்தேன். ஒன்று புரிந்தது! இந்த மக்கள் தமது தேங்கிப்போன வாழ்க்கையில் ஒரு அடிப்படை மாற்றத்தை விழைகிறார்கள். அதற்கான பொருளாதார சமூக நியாயங்கள் நிறையவே இருக்கின்றன என்பதுதான் அது.

    மக்கள் காண விரும்பும் மாற்றம் மெய்யாக சமூக பொருளாதார மாற்றமாகிவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிற சுரண்டும் கூட்டத்தினர் - அவர்கள் இந்து மத, மட அபிமானிகளாகவும், இஸ்லாமிய அராபிய பெட்ரோ டாலர் அபிமானிகளாகவும், கிறித்துவ ஆங்கிலோ அமெரிக்க ஐரோப்பிய அபிமானிகளாகவும் உள்ள - பணம் படைத்தவர்கள் திட்டமிட்டு நடத்திச் செய்தி பரப்பி, மக்களது மாற்றம் காணும் விழைவைத் திசை திருப்பி, வகுப்புக் கலவரமாக்கி விடுகிற காரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது தெளிவு.

    இவ்விதம் நாமறிவது புதிதல்ல. மக்களைச் சார்ந்த மதங்களை மன்னரும் ஆளும் வர்க்கத்தினரும் கைப்பற்றிக் கொண்டு மதச்சண்டைகளை நடத்தியதே மதங்களின் வரலாறு. அதுபோலவே இக்கால ஜனநாயக உரிமைகளின் பேரால் அன்னியர்களின் தலையீட்டுடன் இத்தகு மதக்கலவரங்கள் உற்சாகமாய்த் தூண்டப்படுகின்றன. இதில் ஒன்றுமறியா மனிதாபிமானிகளும் சிக்கி விடுகின்றனர்.

    உழைக்கும் மக்களின், பெண் மக்களின் அவல நிலையையும் அடிமைத்தனத்தையும் அகற்றித் தீர்க்கிற உண்மையான மார்க்கம் எதையும் இதுகாறும் நமது தொன்மை மதங்கள் எதுவும் காட்டவில்லை. மேலும் உழைக்கும் மக்களின் நலன்களையும், பெண் மக்களின் மேன்மைகளையும் சிதைப்பதற்கும் சீரழிப்பதற்கும் உலகில் உள்ள எல்லா மதங்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன.

    இத்தகைய அவலங்களைக் குறித்துக் கண்மூடிக் கிடக்கும் இந்த மதங்களாலேயே இந்திய வாழ்க்கையில் மாற்றங்கள் காண முடியும் என்று நம்பிய ஞானிகள் பலர். அவர்களில் நாமறிந்த நம் காலத்திய ஞானி மகாத்மா காந்தியடிகள். அவரது வழியில் இதற்குத் தீர்வுகாண முயலும் ஆதி இந்த நாவலுக்காக மட்டும் பிறந்தவர் அல்ல.

    ஜய ஜய சங்கர நாவல் தொடங்கி இன்னும் பிற படைப்புகளிலும் ஆதி என்கிற இந்தப் பாத்திரம் இடையறாது தோன்றி காந்திய அணுகல் முறையை சிபாரிசு செய்தே வருகிறார்.

    அத்தகு பார்வையில் நமது மதங்களுக்கிடையே இசைவும், சமுதாயத்தில் பொருளாதார சமத்துவமும் நிகழ காந்திய வாழ்வியல் முறைகளை மீண்டும் ஒரு முறை சித்த உறுதியுடன் நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தில் விளைந்த கதை இது.

    4.1.1983

    சென்னை-78.

    த. ஜெயகாந்தன்

    *****

    1

    இங்கு நிலவும் குழப்பங்கள் - போராட்டங்களிலிருந்து விடுபட்டு, புகழ் மிகுந்த, வெல்லற்கரிய ஒரு நாடாக இந்தியா-இஸ்லாமிய மதம் அதன் உடலாகவும், இந்து மதம் அதன் மூளையாகவும் கொண்டு, எழுவதை என் மனக்கண்களில் காண்கிறேன்.

    - சுவாமி விவேகானந்தர் தமது முஸ்லிம் நண்பருக்கு அல்மோராவிலிருந்து 10-6-1888இல் எழுதிய கடிதத்திலிருந்து.

    சங்கரபுரத்தைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

    ககனமார்க்கமாய் ஒரு பறவையின் பார்வையோடு அந்த ஊரை நினைத்துப் பார்க்கையில் கால ஓட்டத்தில் ஒரு நாகரிகத்தின் வாழ்க்கையே பொய்யாயிற்றோ, கதையாயிற்றோ, கனவாயிற்றோ என்ற கலக்கம் ஏற்படுகிறது. ஆனால் இன்னும், இப்போதும் இறந்த காலத்தின் எலும்புக் கூடுபோல் ஆகிப் போனாலும் இந்த எலும்புக் கூடு சுவாசித்துக் கொண்டிருக்கிறது. உழைக்கிறது; உற்பத்தி செய்கிறது, வஞ்சிக்கப்படுகிறது; வஞ்சிக்கிறது. நல்லதும் கெட்டதும் எங்கும் போல் அங்கும் நிறைந்திருக்கிறது. எனினும் சங்கரபுரத்துக்கு இருக்கவேண்டிய - விதி வசத்தால் கர்மபயனால் அதை இழந்திருந்தபோதிலும், இழக்கவொண்ணா அந்த ஆத்மாவை மீண்டும் அது பெற வேண்டும் என்ற ஆதங்கத்தாலேயே அவ்வாறு அது விளிக்கப்பட்டது; விளிக்கப்படுகிறது.

    ஒரு ஜன சமுதாயத்தின் ஆத்மாவுக்கு என்ன பெயர்? சமயம்! ஆம்; அதுவே சங்கரபுரத்தின் கலாசாரப் பாசறை! இந்து சமயம் புது வீறு பெற வேண்டும் என்று பேசாத, உணராத இந்து உண்டா? அப்படிப்பட்ட மாபெரும் இந்துக்கள் பலர் இவ்வூரில் அவதாரம் செய்திருக்கிறார்கள். மகான்களின் ஞானிகளின் ஆசிபெற்ற ஆதித்தலம் இந்த சங்கரபுரம்.

    ஊரின் நடுநாயகம் கோயில், கோயிலைச் சுற்றிச் சுற்றி தாமரை இதழ் வரிசைகள் போல் பரந்த தெருக்கள்; அந்தணர், வணிகர், உழைப்போர் என்ற வட்டங்களில் விகசித்த ஊரின் நடுவே புகுந்து போகும் சங்கராபரணம் எனும் நதி.

    'கூறு சங்கு தோல்முரசம் கொட்டோசை அல்லாமல் சோறு கண்ட மூளி யார் சொல்' என்று சங்கர லிங்கேஸ்வரர் புலம்பி அழாமல் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம், சதம் போடக் காத்திருக்கும் அப்பையக் குருக்கள். அவர் சங்கரபுரத்தில் ஒரு கேள்விக்குறி போல் இன்னும் உலவி வருகிறார். அவர் தொண்ணூறின் பிற்பகுதிக்கு வந்துவிட்டார். சிவனுக்குச் செய்கிற தொண்டினால் போலும் அவரது ஜீவன் உறுதியாய் அந்த எலும்புக் கூட்டில் தொற்றிக்கொண்டு இன்னும் ஒளி மங்காமல் சுடர்கிறது. அவருக்குப் புத்திர பாக்கியம் இல்லாதது சிவன் செய்த பாக்கியம் என்று ஊரில் பேசிக் கொள்வார்கள்!

    ஆமாம்! குழந்தைகள் இருந்திருந்தால் இறக்கைகள் முளைத்துப் பட்டணத்துக்கோ, பம்பாய்க்கோ, டில்லிக்கோ, முடிந்தால் அமெரிக்காவுக்கோ போயிருக்குமாம். அப்பையக் குருக்களும், அவர் மனைவியும் பல் இல்லாத குழந்தைகளாக எப்போதாவது 'சண்டை' போட்டுக் கொள்ளும்போது பார்க்கவேண்டும். இவர்கள் மாதிரி நம் காலக் குழந்தைகள் ரசமாக வாழ்ந்து, இவ்வளவு மேன்மையாகச் 'சண்டை' போட்டுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான். பூஜை, பக்திப் பாடல்கள், கோலம் போடுவது, சமையல் செய்வது, ஆத்துக்காரர் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற கற்பு நெறிகள் யாவும் ஐந்து வயதில் அப்பையரின் சகதர்மணி கற்றுக்கொண்ட கலைகள்! இந்த வயதிலும் தலைநடுங்க, கை நடுங்க கன்னாபின்னாவென்று கோவிலின் முன்னாலும், வீட்டு முன்னாலும் கோலம் இழைக்கிறாள் சாரதாம்பாள். குரல் நடுக்கத்தோடு பாடினாலும் அதில் உள்ள குழைவு கேட்போர் நெஞ்சைக் குழைத்துவிடும். கோயிலிலும் வீட்டிலும் இடிபாடுகளினூடே எட்டிப் பார்க்கும் சூரியனின் கிரணங்கள் கருங்கல் தளவரிசையில் சதுரம் இழைத்து விளையாடியவாறு அவளது குரலையும் கோலங்களையும் ரசிக்கின்றன. கோவில் கேணியில் சங்கிலி போட்ட ராட்டினம் கடகடக்கிறது. அண்ணாந்து சூரிய கிரணங்களுக்காக இமைகளைச் சுருக்கிக்கொண்டு மலர் கொய்கிறபொழுது அப்பையக் குருக்களின் ஒரு கண்ணில் சில்லென்ற பனித்துளி விழுகிறது.

    சங்கரலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், வஸ்திர மாற்றல், சிவலிங்கத்தின் நெற்றியில் ஒரு சந்தனக் கண், அதன் நடுவே குங்குமச் செவ்விழி. விளக்கு ஏற்றப்படுகிறது. புஷ்பம் போடுகிறார். வேதம் ஓதுகிறார். கை கூப்பி நின்று கண்ணீர் வடிக்கிறார். வெங்கலப்பானையில் வெள்ளைச் சோறு சிரியோ சிரியென்று சிரிக்கிறது. சிவனின் மொழி சிரிப்புத்தானே? கோயிலிலிருந்து வெளியே வரும்போது எதிரில் பார்க்கிறார்.

    கோவிலுக்கு நேரே குட்டிச்சுவரில் எழுதி வைத்திருக்கிறது - கடவுள் இல்லை - இல்லை; இல்லவே இல்லை அதைப் படித்து ஆமோதிப்பது போலக் கழுதையொன்று கத்துகிறது. ஒரு காலத்தில் வேத அத்யயனம் நடக்கிற சங்கரமடம், விவசாய ஆபீஸாக, உரக் கிடங்காக கொஞ்ச நாள் இருந்தது. இப்போது குடும்ப நலத்திட்ட அலுவலகமாக மாறி, சிவப்பு முக்கோணங்களும், குடும்பநல கோஷங்களுமாகப் புதுக்கோலம் பூண்டு நிற்கிறது.

    இந்த அக்ரஹாரமும் இந்தக் கோவிலும் எவனோ ஒரு சோழன் காலத்திலே கட்டினதாம். காலடியில் பிறந்து கைலாச சிகரம் தொட்டுப் பாரதத்தின் எட்டுத் திசைகளிலும் சிவலிங்கங்களையே அரணாக அமைத்த ஆதி சங்கரரே சங்கரலிங்கேஸ்வரரையும் பிரதிஷ்டை செய்ததாக ஓர் ஐதீகம்.

    ஆசாரிய ஸ்வாமிகள் திரு அவதாரம் செய்தது இந்தத் திருத்தலம்தான். வாழைநார் வைத்துப் பின்னிய தலையோடு ஒரு காலத்தில் சங்கராபரண நதிக்கரையில் உள்ள அரசமரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த பாலப் பருவத்திலேயே அவரை அப்பையர் அறிவார்.

    தெய்வம் எத்தனையோ வடிவங்களில் வரும். பஞ்சு போல் நரைத்து, பழுத்து முதிர்ந்த ஆசாரிய சுவாமிகளை இவருக்கு வாழை நார் வைத்துப் பின்னிய சிறுவன் வடிவத்தில்தான் கண்டு தொழ முடிகிறது.

    ஒரு காலத்தில் சங்கராபரணம் ஜீவநதியாக இருந்து இப்போது அகண்ட மார்பில் கிடக்கும் யக்ஞோபவீதம் போல் - நமது நாகரிகத்தின் உயிரோட்டம் போல, ஊரிலிருந்து வரும் கழிவுநீரின் தயவால் ஓடிக்கொண்டு தானிருக்கிறது.

    மேற்கே ஒரு அணை கட்டிய காலத்திலிருந்து அணை நிரம்பி வழிய வெள்ளம் வந்தால்தான் சங்கராபரணத்தின் இரு கரைகளையும் தொட்டுத் தண்ணீர் புரள்கிறது. வெள்ளம் வந்து வடிந்த பிறகு சிறிது காலம் மண்ணில் தோண்டினால் ஊற்று நீர் சுரக்கும். பெண்கள் குடமும், ஊற்று வெட்டுகிற கருவியுமாக வருவார்கள். இப்போது வெள்ளம் வந்துகூட ரொம்ப நாளாகி விட்டது.

    அப்பையக் குருக்கள் நீரில்லா ஆற்றின் நீண்ட படித்துறையில் நின்று, ஆற்றில் அலையும் கானலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். படித்துறையில் நிழல் பரப்பும் அரசமரம் அவரது உள்ளத்து உணர்ச்சிகளை தனது ஆயிரம் நாவுகளால் பேசுவது போல் சலசலத்துக் கொண்டிருக்கிறது. அரசமரத்தடிப் பிள்ளையாருக்குக் காற்று வீசுகிறபோதெல்லாம் நாகலிங்க புஷ்பார்ச்சனைதான்!

    ஆற்றுக்கு அக்கரையில் உள்ள சேரி ஒரு காலத்தில் என்னமாய்ப் பசுமை கொழிக்கும்! இப்போது வறண்ட நிலத்தை வறட்டு மாடுகள் பிராண்டிக் கொண்டிருக்கின்றன. நாம் கோசம்ரட்சணம் செய்கிற லட்சணம் - இந்த மாடுகளே சாட்சி! என்று குருக்களின் உதடுகள் முனகுகின்றன.

    ஒரு காலத்தில் சங்கரபுரத்தைச் சேர்ந்த மகா கல்விமானும் பிராமண சிரேஷ்டருமான சதாசிவ ஐயர் காந்தி குல்லாயோடு 'வந்தேமாதரம்' என்று தேவநாகரி எழுத்துக்கள் பதித்த மூவர்ணக் கொடியைத் தோளில் தூக்கிக்கொண்டு, அந்தச் சேரியில் திரிந்ததை அந்தக் கானலினூடே நினைவில் கண்டார் குருக்கள். அந்த அரிஜனங்களைச் சங்கரபுரத்துக் கோவிலில் ஆலயப் பிரவேசம் செய்வதற்குச் சதாசிவ ஐயர்தான் திரட்டிக் கொண்டு வந்தார். அப்போது ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க ஒரு மூங்கில் பாலம் உண்டு. அந்த மூங்கில் பாலத்தின் மீது சேரி மக்கள் எல்லாம் 'மகாத்மா காந்திக்கு ஜே! வந்தேமாதரம்!' என்று கோஷித்துக் கொண்டு அணி அணியாய் வந்த காட்சியும், கோஷமும் இப்போது நிகழ்வது போலவே இருந்தது அவருக்கு. காந்தி சீடரான சதாசிவ ஐயர் அந்தச் சேரியில் ஓர் ஆஸ்ரமம் கட்டினார். அந்த ஆலயப் பிரவேசத்துக்குப் பிறகு தேசத்தையும் இந்து மதத்தையும் சார்ந்த பீடையே ஒழிந்தது போல அவர்கள் அக்காலத்தில் பெருமைப்பட்டுக் கொண்டார்கள், திருப்தியும், நிறைவும் கண்டார்கள். மனிதன் சம்பந்தப்பட்ட எல்லாமே மாயைதானே...!

    அக்காலத்தில் மகாத்மா காந்தியும், அதற்கு முன்னால் விவேகானந்தரும் கூட இந்த ஊருக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அந்த ஊரில்தான் பிராமணர்களை நோக்கி, 'ஏ இறந்த காலத்தின் எலும்புக் கூடுகளே!' என்று விவேகானந்தர் மிக கோபமாகக் கேட்டது எதிரொலித்து முழங்கியது. அது அப்பையக் குருக்கள் காதிலும் அக்காலத்தில் விழுந்திருக்கிறது. 'அந்தச் சந்நியாசிதான் என்னமாய் எங்களைச் சபித்தார். நம்மையெல்லாம் அவர் பைத்தியக் காரர்கள் என்றார். நமது மாநிலத்தையே ஒரு பைத்தியக்கார விடுதி என்றார். ஏ பிராமணர்களே. எலும்புக்கூடான உங்கள் விரல்களில் நீங்கள் அணிந்து கொண்டிருக்கிற வேத - சாஸ்திர வைர வைடூர்யங்களை இந்தக் கணமே என் முன்னால் கழற்றி எறிந்துவிட்டு நீங்கள் புழுதியோடு தஞ்சமுறுவதே எனக்குச் சந்தோஷம் தரும்' என்றுகூடச் சொன்னார் - அப்பையக் குருக்களின் கலங்கிய பார்வை மறுபடியும் சேரியின் மேல் நிலைத்தது.

    'இதற்கு நாங்கள் என்ன செய்வோம்?' - அவர் மனம் நடுங்கியவாறே முனகியது. 'ஆஸ்ரமம் போச்சு... காந்தியும் போனார். இந்தச் சேரி மக்களை கைதூக்கி விடணும்னு கங்கணம் கட்டிண்டு வந்தவங்க எல்லாரும் போயாச்சு... இப்பவும் இவங்களைக் கை தூக்கணும்னு புதுப்புதுச் சட்டங்கள், கல்வி, உத்தியோகம் எல்லாவற்றிலும் சலுகை, முன்னுரிமை... எதையாவது செய்து இவர்களைக் கரையேற்றுங்கள்... வேண்டாமென்றோமா? எதற்காவது ஆசி தராமல் இருந்தோமா?"

    'ஏ... திக்கற்ற குழந்தைகளே... உங்களுக்கன்றோ எமது முன்னோர்கள் எல்லாரும் உழைத்தனர். பாடுபட்டனர். எம்மையும் அந்தப் பணிக்கே சித்தப்படுத்தினர். ராமானுஜர் உங்களைத் 'திருக்குலம்' என்று அழைத்தார். மகாத்மா உங்களை 'ஹரிஜன்' என்று உயர்த்தினார். ஏதோ மகாத்மா காந்தி ஆலயப்பிரவேசம் செய்து வெச்சுட்டா இவாளெல்லாம் பக்த சிரோமணிகள் ஆயிடுவான்னு நினைச்சார் போலிருக்கு. அன்னிக்கு ஒரு நாள் கொடி தோரணம் தாரை தப்பையோடு வந்து போனதோட சரி, இப்போ...? இதோ இங்கேருந்தே தெரியறதே... பூட்டியிருக்கிற கோயில் வாசப்படியிலே உக்காந்துண்டு பீடி குடிச்சு குப்பை போடறதுகள். இன்னும் சின்ன வாண்டுகள் அந்தக் குப்பையிலே பீடி பொறுக்கறதுகள். மகாத்மா காந்தி மறுபடியும் வந்து பார்க்கணும் இந்தக் காட்சியை... ஐயோ 'இன்னும் நீங்கள் இவ்வாறே இருப்பதற்கு என்ன காரணம்?' என்று அவர்களைப் பார்த்தவாறே யோசித்தார் அப்பையக் குருக்கள். சிவலிங்கத்துடன் நேர்ந்த நட்பினால் தானும் ஒரு நடமாடும் ஜடம்போல் 'சிவனே' என்று வாழ்ந்திருக்கும் அப்பையக் குருக்களுக்குக்கூட இப்போது யோசிப்பதற்கான 'சக்தி' வந்திருக்கிறது.

    ஏனெனில் இந்த சங்கரபுரத்தைப் பற்றி ஒரு ஸ்தல புராணம்தான் உண்டு. அதற்குப் பிறகு இந்த ஊரைப்பற்றி யாரோ ஒருவன் ஒரு கதை எழுதினானாம். அதைத் தவிர இந்த ஊருக்கு வந்து போனவர்களுக்குத்தான் சங்கர புரத்தின் பெருமைகளைப் பற்றித் தெரியும்.

    இப்போது சில மாதங்களாக இந்தச் சங்கரபுரம் சர்வதேச பிராபல்யம் அடைந்துவிட்டது. மந்திரிகள் வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் வருகிறார்கள். பத்திரிகைக்காரர்கள் வருகிறார்கள். மடாதிபதிகள் வருகிறார்கள். இந்தச் சமீபகால நிகழ்ச்சிகளில் அப்பையக் குருக்களுக்குச் சில வியக்கத்தக்க அனுபவங்களும் நேர்ந்தன. அதில் ஒன்று சங்கரபுரத்துக்கு ஒரு வெள்ளைக் காரனும் வெள்ளைக்காரிச்சியும் 'ராமா...! கிருஷ்ணா...!' என்று கூறிக்கொண்டு, நம்மால் எல்லாம் காப்பாற்ற முடியாத நமது மதத்தைக் காப்பாற்றியே தீர்ப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சில நாட்களாக இங்கே வந்து முகாமிட்டிருக்கிற விஷயம்... அவர்கள் அடிக்கடி கோயிலுக்கும் வருகிறார்கள். குருக்களையும் தேடி வந்து விடுகிறார்கள்.

    அத்துவானக் காடாய் இருந்த சங்கரபுரம் ஜன நெரிசல் கொள்ள ஆரம்பித்துவிட்டது. புதுப்புது முகங்கள்; வெளியூர் முகங்கள்; வெளிநாட்டு முகங்கள் கூட. சங்கர புரத்துக்கு மேற்கே ஒரு சின்னஞ்சிறு மசூதி. இஸ்லாம் இந்த மண்ணில் பரவிய காலம் தொட்டே இங்கே இருந்தது... இருக்கிறது. இப்போது புதுப்பொலிவுடன் அதோ...

    ஆற்றின் படித்துறையில் இரண்டு படிகள் மேலேறி அக்ரஹாரத்துக்குப் பின்னால், மேற்கே வெகுதூரத்தில் தெரிகிற, புதுப்பிக்கப்பட்டிருக்கும் மசூதியின் பூர்ண கும்பம் போன்ற சிகரத்தைக் கண்டார். அப்பையக் குருக்கள். அங்கேயும் மக்கள் ஆண்டவனைத் தொழுகிறார்கள். அங்கே போய் எவனாவது எழுதி வைப்பானா? 'அல்லா இல்லை' என்று எழுதத் துணிவானா? கழுதைகளை மேய விடுவானா? கட்டுப்பாடுகளும் மீறுவோர்க்குக் கடும் தண்டனைகளும் இல்லாததால், நமது மதம் ஒருவேளை ஒரு மதத்திற்குரிய மரியாதையை தன் மக்களிடமே இழந்து போயிற்றோ? என்ன காரணமோ? சங்கரபுரத்தைச் சுற்றியுள்ள அரிஜனங்களில் பலர், நூற்றுக் கணக்கானோர் இந்து மதத்தில்தானே கடவுள் இல்லை என்பதால் இஸ்லாம் மதத்தில் கடவுளைத் தேடிக் கொண்டு, இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவி விட்டார்களாம்... ‘இது ஏன் நம்மில் பலருக்கு நமது இந்து மதத்தின் தலையில் இடி விழுந்தது போல் இருக்கிறது...' என்று அப்பையக் குருக்களுக்குப் புரியவே இல்லை.

    *****

    2

    ... கூறுகின்ற சமயமெல்லாம் தங்களெல்லாம் பிடித்துக் கூவுகின்றார், பலன் ஒன்றும் கொண்டறியார் வீணே நீறுகின்றார், மண்ணாகி நாறுகின்றார்...

    - திருவருட்பா

    சங்கரபுரத்துக்கு மேற்கே அதையொட்டியும் - அதன் ஒரு பகுதியாகவும் தொன்றுதொட்டு விளங்கி வருகிறது முஸ்லிம்கள் வாழும் அந்தப் பிரதேசம். அதோ தெரிகிற அந்த மசூதிப் பிரதேசம் தனக்கென தனியே ஒரு பெயரைத் தரித்துக் கொள்ளவில்லை. 'சங்கரபுரம் மசூதித் தெரு' அல்லது 'பள்ளிவாசல் தெரு' என்ற விலாசத்தில் இன்றளவும் அது விளங்கி வருகிறது.

    அங்கு பள்ளிவாசலில் பணிபுரிவோர் தவிர - நெசவு நெய்வோர், வியாபாரம் செய்வோர், விவசாயம் செய்வோர், கசாப்புப் பணிபுரிவோர், வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகள், யூனானி மருத்துவர்கள், தையற்காரர்கள், பாய்முடைவோர், சாணை பிடிப்போர், மிட்டாக்கள் - மிராசுகள், வெளிநாடு சென்றோர் - வந்தோர் என்று, இந்து சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் போலவே தொழில் அடிப்படையில் பிரிந்தும் கூடியும், சர்வ மதத்தினரோடும் செளஜன்யமாயும் வாழ்ந்து வருகின்றனர் அந்த முஸ்லிம்கள்.

    நேரம் தவறாமல் சங்கரலிங்கேஸ்வரருக்கு சர்வ ஹிந்துக்களின் சார்பாக அப்பையக் குருக்கள் மெலிந்த ஓசை எழுப்பும் கைமணியை அடித்துப் பூஜை நடத்தி வருகிறார்.

    முன்பெல்லாம் கோயிலில் உள்ள பெரிய கண்டா மணி முழங்கும். இப்பொழுது அந்த முரட்டு வடத்தைப் பற்றி இழுப்பதற்கு அப்பையருக்கு உடம்பில் வலு இல்லை. கோவில் வாசல் படியில் உட்கார்ந்திருக்கும் சோம்பேறிச் சிறுவர்களில் யாரையாவது சமயத்தில் அன்பு காட்டி அழைத்து, இந்த ஈஸ்வர கைங்கரியத்தில் ஈடுபடுத்துவார்.

    மணியோசையும், தீபாராதனையும், நைவேத்தியமும் ஈஸ்வரன் கேட்கிறானா? மனிதன் பழக்கம் பண்ணி விட்டால் கல்லும் கூடக் கேட்கும் போலும்! அப்படித் தான் சில நாட்களில் கொஞ்சம் நேரமாகி விட்டால், கைக் குழந்தைக்கு நேரம் தவறிப் பால் புகட்டப் போகும் தாய் போல் பதைபதைத்துப் போவார் குருக்கள்.

    குளிரோ, மழையோ, வெயிலோ, பனியோ - எதனாலும், மாறாத வேறு பல பிரபஞ்ச நியதிகள்போல், இந்தச் சிவலிங்கத்திற்கு நடக்கிற அபிஷேகமும் பூஜையும் இங்கு நேர்ந்து நிலைபெற்று

    Enjoying the preview?
    Page 1 of 1