Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Sankara Vijayam
Meendum Sankara Vijayam
Meendum Sankara Vijayam
Ebook305 pages1 hour

Meendum Sankara Vijayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீகாஞ்சிமுனிவர் மகாசுவாமிகள் சுமார் நூறாண்டு காலம் நம்மிடையே வாழ்ந்தபோது, உடன் இருந்து அவர்களைத் தரிசித்து அவர்களுடன் சமகாலத்தில் சேர்ந்து வாழும் பேற்றைப் பெற்ற நாம் எல்லோருமே பாக்கியசாலிகள். அந்த மாமுனிவரின் வாழ்க்கையை முக்தி அடைந்த நாள் வரை முழுமையாக இந்த நூலில் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். வருங்காலத்தில் நமது குழந்தைகள், மகாசுவாமிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள, இந்து மதத்தின் பெருமையை அவர்களுக்கு விளக்கிக்கூற, இந்த நூல் பெரிதும் உதவும்.

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580127507050
Meendum Sankara Vijayam

Read more from Lakshmi Subramaniam

Related to Meendum Sankara Vijayam

Related ebooks

Reviews for Meendum Sankara Vijayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Sankara Vijayam - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    மீண்டும் சங்கர விஜயம்

    Meendum Sankara Vijayam

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    Paramacharya

    The life history of Sri Chandrasekharendra Saraswati of Kanchi Kamakoti Peetam who was amidst us till recently, is a source of great moral strength for innumerable disciples and admirers. The nation's Presidents, Prime Ministers, Chief Ministers, foreign dignitaries and several outstanding scholars have met him to derive advice, wisdom and clarifications. For people, he was a living God radiating a powerful influence on them. His memory was astounding and his mastery of various arts and sciences was phenomenal. Several books dealing with various aspects of his life, a compilation of his simple but profound utterances, souvenirs highlighting his achievements, and accounts of their personal association by several eminent public figures, (both in English and Tamil) have appeared.

    This book is a detailed biography of the late Paramacharya covering from his birth till he attained Mukthi. It elaborates the wide range of interest which the Acharya evinced in various fields religious, social and economic. The facts mentioned are revealing. His meeting with Gandhi at Palakkad, his concern for the circus artists, his vow to wear Khadi, his message to soldiers when the country faced threat from enemies, his concern for the downtrodden, his interest in photography, his zeal to encourage the study of the vedas and his assistance to promote folk arts have all been explained.

    The Acharya's tour of the entire country from his early days, construction of shrines and temples, the reforms he wanted people to adopt in their daily lives and his advice to them to avoid extravagant expendi ture during marriages and his administrative efficiency have been narrated in simple Tamil. How he chose the two successors and trained them reveals his vision. Another fact that is not known to many is his deep knowledge of music. Till 90, the Acharya was on his tours to give spiritual solace to people. His passing away from our midst quietly has created avoid. The author refers to the proposal to establish a university at Kanchi. Those desirous of recalling the Acharya's service to humanity can obtain vast amount of information from this volume.

    MEENDUM SANKARA VIJAYAM (Tamil):

    S. Lakshmi Subramaniam,

    13, Deenadayalu Street,

    T. Nagar,

    Madras 600017.

    முன்னுரை

    காஞ்சி முனிவர் மகா சுவாமிகளின் நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டபோது, அவருடைய வாழ்க்கை வரலாற்றை வீடியோ சித்திரமாக அமைக்க, ஆசிரியர் மணியன் முற்பட்டார். அப்போது என்னையும் அழைத்துக் கொண்டு, காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தார். ஆசிகளை வழங்கிய போது ஆசிரியர் மணியனிடம் என்ன பெயரிடப் போகிறாய்? என்று சுவாமிகள் கேட்டார்.

    ஆதிசங்கரர் அன்று நாடு முழுவதும் திக்விஜய யாத்திரை செய்து, இந்துமதம் தழைக்கவும், ஆன்மீக உணர்வு செழிக்கவும் பாடுபட்டதைப் போல, மகா சுவாமிகள் இந்த நூற்றாண்டில் தொண்டாற்றி இருக்கிறார்கள். இது காலம் காலமாக நிலைத்து நின்று புகழ் சேர்க்கக்கூடியது. ஆகையால் மகாசுவாமிகள் வாழ்க்கையை மீண்டும் சங்கர விஜயம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எனது பணிவான அபிப்பிராயம்! என்று சொன்னார் மணியன். சுவாமிகள் அதை ஆமோதித்து ஆசிகளை வழங்கினார்கள். அதே தலைப்பில் மகா சுவாமிகளின் வரலாற்றை, 'இதயம் பேசுகிறது' வார இதழில் தொடர் கட்டுரையாக நான் எழுதுவதற்கும் ஆசிகளைப் பெற்று வந்தோம்.

    பொது மக்களிடையே மகாசுவாமிகளின் வாழ்க்கையில் பொதுவாகத் தெரிந்திருக்க முடியாத மேன்மையான அம்சங்கள் பலவற்றையும் எடுத்துக்காட்டி எழுதுவது என்று முடிவு செய்து கொண்டோம். அதன்படி வாரம்தோறும் வந்த தொடர் கட்டுரையில், சுவாமிகள் கதராடையே உடுத்தி தேசபக்தி உணர்வை ஆதரித்தது முதல், சீனப்போரில் தேசத்தொண்டு செய்த ஜவான்களுக்கு ஆசிகளை வழங்கிப் பரிசுகள் அளித்தது வரை, பல நயமான தகவல்களையும் எழுதிவந்தேன்.

    மகா சுவாமிகள் கிராம நலத் திட்டங்களில் பங்கு கொண்டிருக்கிறார். தீண்டாமை என்ற பாகுபாடின்றி ஹரிஜனங்களுக்கும் வெள்ளத் துயர் துடைப்பு உதவிகளைச் செய்திருக்கிறார். நுண் கலைகளில் ஆர்வம் கொண்டு காமிராவில் படம் பிடிப்பது முதல் இசை, நாடகம், தெருக்கூத்து வரை ஒவ்வொரு கலையையும் ஊக்குவித்து ஆதரித்து வந்திருக்கிறார். சர்க்கஸ் தொழிலாளர்களைப் பாராட்டி உதவி இருக்கிறார். ரெயில் பெட்டித் தொழிற்சாலை, இரும்பு உருக்காலை போன்ற தொழிலகங்களுக்குச் சென்று நுட்பமான தகவல்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார். சிறைக் கைதிகளிடம் அனுதாபம் காட்டி அருளி அவர்களுடைய மனத்தைப் பக்குவப்படுத்தி இருக்கிறார். இந்து மதம் கடைப்பிடிக்கப்படாத ஜெர்மனி போன்ற நாடுகளில் கூடக் குழந்தைகள் மன அமைதி பெற இறைவனை வேண்டும் சுலோகங்களை அளித்திருக்கிறார். காப்பி சாப்பிடுவது, கோயிலில் தூய்மை, வரதட்சிணை கொடுப்பது போன்ற சமூகப் பிரச்சினைகளிலும் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

    இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி ஜகத்குருவாக விளங்கிய மகாசுவாமிகள், உண்மையாகவே உலக நன்மைக்குரிய பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு காட்டி, நமக்கெல்லாம் அறிவுரை கூறி, நல்ல முறையில் வாழ வழிகாட்டி இருக்கிறார்கள் என்பதை, வாசகர்களுக்கு உணர்த்தும் பணியைச் சிரமேற்கொண்டு, நான் வாரந்தோறும் எழுதி வந்தேன்.

    இந்தத் தொடரை நான் எழுதி வந்தபோது பலமுறை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளைத் தரிசித்ததுண்டு. அப்போதெல்லாம் அவர்கள் எனக்கு ஆசிகளை அருளி, குறிப்பாக இந்தத் தொடரைப்பற்றிச் சொல்லிப் பாராட்டி இருக்கிறார்கள். ஒருமுறை என்னுடைய தொடர் கட்டுரையை வாரந்தோறும் தவறாமல் படித்து வருவதாகக் கூறிப் பாராட்டித் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள யோகிராம் சூரத்குமார் சுவாமிகள் சொல்லியனுப்பியதை, என்னுடன் பணிபுரிந்து வரும் துணை ஆசிரியர் சுபாஷிணி வந்து கூறியது, என்னால் மறக்க முடியாத அநுபவம்.

    ஸ்ரீகாஞ்சிமுனிவர் மகாசுவாமிகள் சுமார் நூறாண்டு காலம் நம்மிடையே வாழ்ந்தபோது, உடன் இருந்து அவர்களைத் தரிசித்து அவர்களுடன் சமகாலத்தில் சேர்ந்து வாழும் பேற்றைப் பெற்ற நாம் எல்லோருமே பாக்கியசாலிகள். அந்த மாமுனிவரின் வாழ்க்கையை முக்தி அடைந்த நாள் வரை முழுமையாக இந்த நூலில் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். வருங்காலத்தில் நமது குழந்தைகள், மகாசுவாமிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள, இந்து மதத்தின் பெருமையை அவர்களுக்கு விளக்கிக்கூற, இந்த நூல் பெரிதும் உதவும்.

    இதற்கு உதவியாக இருந்து என்னை ஊக்கிய ஞானபூமி ஆசிரியர் மணியன் அவர்களுக்கு எனது நன்றி. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின நற்பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பக்தர் ஸ்ரீவானதி திருநாவுக்கரசு செட்டியார் அவர்கள் கொடுத்த ஆதரவுக்கும், இந்த நூலைச் சிறந்த முறையில் தொகுத்து வெளியிட்டமைக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

    சமயத்துக்கும், சமூகத்துக்கும், பெரியோர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் வழிகாட்டும் ஞான தீபமாக விளங்கிவரும் ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் பாதார விந்தங்களில், இந்த எளிய நூலைக் காணிக்கையாகச் சமர்ப்பித்து வணங்குகிறேன்.

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    எம். 89/2

    பெசண்ட் நகர்

    சென்னை 600090

    1

    விழுப்புரம் என்ற பெயருக்கு விழிப்புப்புரம் என்றும் பொருள் சொல்லலாம். நமது மக்களுக்கு நல்வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி தேவையாக இருந்தபோது, விழிப்பு உணர்வைக் கொடுக்க ஒரு மகான் அங்கே அவதரித்தார். உலகம் போற்றும் ஞானி ஆதிசங்கரர் வழியில், அவர் அமைத்துத் தந்த மடத்தின் அதிபதியாகப் பொறுப்பு ஏற்று, அருளாளராக வாழ்ந்து நமக்கெல்லாம் வழிகாட்டுபவர் அவர். அந்தப் பெரியவரின் பெற்றோர் விழுப்புரத்தில்தான் அப்போது இருந்தார்கள். அது 1894ம் ஆண்டு மே மாதம் இருபதாம் தேதி...

    மகாலட்சுமி ஓர் ஆண் குழந்தையைப் பிரசவிச்சுட்டா! நீ அடிக்கடி வேண்டிக் கொள்ளுவாயே சுவாமிநாத சுவாமிகிட்டே? அந்த சுவாமிநாதனுடைய அருளாலே உனக்கு இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. குழந்தை தேஜஸோட பார்க்க அழகா இருக்கான்! என்று சொன்னாள் அந்த மூதாட்டி.

    வாசலில் திண்ணையில் அமர்ந்திருந்த சுப்பிரமணிய சாஸ்திரிகளின் நெஞ்சில் மகிழ்ச்சி பூத்தது. கண்களை மூடி சுவாமிமலை நாதனை, தந்தைக்கு உபதேசம் செய்த சிவகுருநாதனை, பிரணவத்துக்குப் பொருள் சொன்ன பாலகுமாரனை ஒரு கணம் எண்ணிக் கொண்டார். நெஞ்சில் சுரந்த நன்றி கண்களிலும் பூத்தது. அப்பா சுவாமிநாதா! எல்லாம் உன்னுடைய லீலை!" என்று சொல்லிக் கைகளைக் குவித்துக் கும்பிட்டார்.

    அக்கிரகாரத்தில் கோவிந்தராயர் வீடு என்ற பெயருடன் விளங்கி வந்த அந்த இல்லம், ஊரில் மக்களுடைய மரியாதைக்கு உரியது. எல்லோரிடமும் கருணை காட்டி, ஊரில் நல்லது நடக்க வழிகாட்டி, அன்புக்கு அடையாளமாக வாழ்ந்து வந்தவர்கள் சுப்பிரமணிய சாஸ்திரிகளும், மகாலட்சுமி அம்மையாரும். அவர்களுக்கு மூத்த குழந்தையாக ஒரு புதல்வன் இருந்தான். இரண்டாவது புதல்வனாகப் பிறந்தவனே இந்த அருட்செல்வன். அது அனுஷ நட்சத்திரம் கூடிய சுபதினம்.

    வீட்டில் புண்ணியாகவசனம் செய்து தொட்டிலிலும் போட்டார்கள். நாமகரணம் செய்ய என்ன பெயர் வைக்கலாம் என்ற யோசனையே எழவில்லை. சுவாமிமலை நாதனின் அருளோடு பிறந்தவன் அல்லவா? சுவாமிநாதன் என்ற பெயர் தானே பொருத்தமாக இருக்கும்? தொட்டிலில்... குழந்தையைப் போட்டுத் தாலாட்டி, அடியில் மணலில் பெயரை சுவாமிநாதன் என்று எழுதினார்கள்.

    சுப்பிரமணிய சாஸ்திரிகளின் மூத்த புத்திரனுக்கு கணபதி என்று பெயர். தம்பிக்கு சுவாமிநாதன் என்ற பெயரே வெகு பொருத்தமாக இருக்கும் அல்லவா? அன்னை மகாலட்சுமி தஞ்சை மாவட்டத்தில் காவேரிக் கரையில் அமைந்த திருவையாற்றிலிருந்து நான்கு மைல்கள் தொலைவில் உள்ள, ஈச்சங்குடியில் வசித்த நாகேசுவர சாஸ்திரிகள் என்ற பெரியவருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் புதல்வியாகப் பிறந்தவர்.

    நாகேசுவர சாஸ்திரிகள் ரிக்வேதத்தை முறைப்படி அத்யயனம் செய்து, தர்ம சாஸ்திரங்களிலும், பிரயோகங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். கும்பகோணத்திலும், திருவையாற்றிலும் பல குடும்பங்கள் அவரை ஆசாரியராக அடைந்து மதிப்புடன் போற்றி வந்தார்கள். மகாலட்சுமிக்கு ஏழு வயதாக இருந்தபோது, தனது மகளை சுப்பிரமணிய சாஸ்திரிகளது பதினெட்டாவது வயதில், ஈச்சங்குடியில் திருமணம் செய்து வைத்தார் அவர். சுவாமிமலைக்கு அடிக்கடி சென்று முருகப் பெருமானை அவரும் தரிசனம் செய்து வருவது வழக்கம்.

    மகாலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம். தகவல் வந்திருக்கு! சுவாமிநாதன் பெயரை வைக்கலாம்னு நினைச்சேன். மாப்பிள்ளையும் அப்படியே வைக்கப் போறதா சொல்லி அனுப்பிச்சிருக்கா. அவாளுடைய குல தெய்வத்தின் பெயராச்சே? பையன் சுவாமிநாத சுவாமியைப் போல புத்திசாலியா உலகத்துக்கே உபதேசம் செய்த பெரியவர்களின் வழியில் ஞானவானா தீர்க்காயுசா இருக்கணும்! என்று சொல்லி, மானசீகமாகச் சிவகுருநாதனை வணங்கி மகிழ்ந்தார் நாகேசுவர சாஸ்திரிகள்.

    மகாலட்சுமி அம்மாளுக்கு சுவாமிநாதன் செல்லக் குழந்தை மடியில் வைத்துக் குழந்தைக்குச் சாதம் ஊட்டும் போதே சுலோகங்களைச் சொல்லுவாள். தூளியில் போட்டுக் குழந்தையைத் தூங்கச் செய்யும் போது அம்பாளின் மீது ஸ்தோத்திரங்களை இனிமையாகப் பாடுவாள். அன்னையின் குரலும், அம்பாளின் அருளும் தாலாட்ட, அமைதியாகத் தூங்கிப் போவான் குழந்தை.

    குழந்தை பேசத் தொடங்கியதும், தந்தை அவனைப் பூஜை அறையில் உடன் அமர்த்தி சுலோகங்களைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளில் தோத்திரப் பாடல்களைப் பாடிக் காட்டுவார். அவற்றைக் கவனித்த குழந்தைக்குப் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் ஏற்பட்டது; தெய்வ பக்தியும் உள்ளத்தில் மலர்ந்தது.

    குழந்தை சிரத்தையாக எல்லாத்தையும் கவனிக்கிறான். ஆசையோடு எல்லாத்தையும் கத்துக்க ஆசைப்படறான். இப்போ அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டாம்னு நினைக்கிறேன். இருக்கவே இருக்கு ஆங்கிலப் படிப்பும் கணக்குப் பாடமும்! என்று சொன்னார் தந்தை.

    கணவரின் விருப்பப்படியே இல்லறத்தை நன்கு. நடத்தி வந்த தாயின் விருப்பமும் அதுவாகவே அமைந்தது. சுப்பிரமணிய சாஸ்திரிகள் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் முதலாவதாகத் தேறியவர். பின்பு கும்பகோணத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னால் அரசாங்கப் பணியில், கல்வித்துறையில் முதல் ஆசிரியராகவும், பிறகு சூப்பர்வைசராகவும் இருந்து பணியாற்றியவர். சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், மகா வைத்யநாத. ஐயரின் கச்சேரிகளை ஆவலோடு கேட்பார். அவரே நன்றாகப் பாடுவார். இந்தப் பண்புகளெல்லாம் குழந்தையிடமும் இருந்தன. கல்வி கற்கும் ஆர்வமும், கலாரசனையும் இயல்பாகவே ரத்தத்தில் ஊறி இருந்தன. பள்ளிக்கூடத்துக்குப் போகாமலேயே ஞானவானாக வளர்ந்தான் சுவாமிநாதன்.

    ***

    சுவாமிநாதனின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் இரண்டை பரமாச்சாரிய சுவாமிகளே குறிப்பிடுகிறார்...

    "எங்கள் வீட்டில் ஒரு மரநாய் புகுந்து விட்டது. உறியில் தொங்கிய வெல்லப் பாகின் வாசனையை முகர்ந்து, அதை ருசி பார்க்க விரும்பியது. எப்படியோ மேலே ஏறி அந்தச் செம்புப் பாத்திரத்தில் தலையை விட்டு விட்டது. அந்தக் குறுகலான பாத்திரத்தின் வாயில், அதன் தலை நன்றாகச் சிக்கிக் கொண்டு விட்டது...

    தனது தலையை விடுவித்துக் கொள்ள மரநாய் இரவு முழுவதும் பாடுபட்டது. பார்வை மறைக்கப்பட்டிருந்ததால் அதற்கு வெளியே போகவும் வழி தெரியவில்லை. அங்குமிங்கும் மோதிக் கொண்டு ரொம்பச் சிரமப்பட்டது. அது எழுப்பிய சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரோ ஒரு திருடன் வீட்டுக்குள் புகுந்து விட்டதாக எண்ணிக் கொண்டார்கள். ஆளுக்கு ஒரு தடியை எடுத்துக் கொண்டு அடிக்க வந்து விட்டார்கள். சத்தம் கிளம்பக் காரணமாக இருந்தது மரநாய்தான் என்று தெரிந்து கொண்டதும் அதை விரட்டிப் பிடித்துக் கம்பத்தில் கயிற்றால் கட்டிவிட்டார்கள். கழுத்து வலியிலும், கட்டிப் போட்ட வேதனையிலும் அது புலம்பி ஊளையிட்டவண்ணம் இருந்தது. காலையில் அனுபவம் வாய்ந்த சிலர் வந்து மரநாயின் தலையை எப்படியோ விடுவித்தார்கள்! மிகுந்த வலியுடன் அது ஓடிப் பிழைத்துக் கொண்டது. அந்த மரநாயின் வேதனைக்கு என்ன காரணம்? பேராசையினால் அல்லவா அதற்கு அவ்வளவு சிரமமும் ஏற்பட்டது? அந்த ஆசையினால் ஏற்பட்ட அவஸ்தை அது தன் தூக்கத்தை இரவெல்லாம் இழந்து விட்டதே?"

    அந்தச் சிறு வயதிலேயே குழந்தைக்கு வாழ்க்கையில் ஆசைகள் அளவாக இருக்க வேண்டும் என்ற தத்துவம் அனுபவப் பாடமாக வந்து விட்டது...

    இன்னொரு அனுபவம்...

    "கையில் தங்கவளையலுடன் நான் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். என் கையில் வளையல் இறுக்கமாகப் படிந்திருந்தது. அதனால் அதை யாராவது கழற்றி விரிவுபடுத்திக் கொடுப்பார்களா என்று நான் காத்துக் கொண்டிருந்தேன். தெருவில் போய்க் கொண்டிருந்த ஒருவன் என்னையும் என் தங்கவளையலையும் பார்த்துவிட்டு என்னிடம் வந்தான். என்னிடம் அவன் அன்பொழுகப் பேசினான். என்னிடம் வளையலைக் கேட்டான். என்னுடைய வளையலின் கொக்கிகளைப் பார்த்து, அவற்றைச்

    Enjoying the preview?
    Page 1 of 1