Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidiyatha Iravugal
Vidiyatha Iravugal
Vidiyatha Iravugal
Ebook152 pages1 hour

Vidiyatha Iravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையில் ஒரு பெரிய கம்பெனி நடத்தி வருகிறார் கதிரொளி. அதில் மணிமொழி வேலை பார்த்து வருகிறாள். தன் முதலாளி கதிரொளியின் ரகசியம் ஒன்றை அறிந்துக் கொள்கிறாள். அதன்பின் அவள் மர்மமான முறையில் இறந்துவிடுகிறாள். அந்த மர்மத்தை கண்டுப்பிடிக்க சங்கர்லால்-ஐ வரவழைக்கிறார்கள். அவள் எப்படி இறந்தாள்? அவள் அறிந்துக்கொண்ட முதலாளியின் ரகசியம் என்ன? அதை சங்கர்லால் விறுவிறுப்பாக எவ்வாறு துப்பறிகிறார் என்பதை தமிழ்வாணனின் நடையில் படியுங்கள்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138505883
Vidiyatha Iravugal

Read more from Lena Tamilvanan

Related to Vidiyatha Iravugal

Related ebooks

Reviews for Vidiyatha Iravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidiyatha Iravugal - Lena Tamilvanan

    http://www.pustaka.co.in

    விடியாத இரவுகள்

    Vidiyatha Iravugal

    Author:

    லேனா தமிழ்வாணன்

    Lena Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lena-tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    சென்னையின் வயிற்றுப் பகுதியில் பெருங்குடலாய் இருந்த மெரினாக் கடற்கரைச் சாலை கூட்டமின்றிக் காணப்பட்டது நியாயம்தான். மக்கள் மார்கழிக் குளிர் காற்றுக்குப் பயந்து கொண்டு வீட்டினுள் முடங்கிக் கிடந்தார்கள். ஆனால் அந்தக் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல் சூடான விஷயங்களைப் பேசக் காதலர்களும் வேறு சில மனிதர்களும் வந்தார்கள். மாலையா இரவா என்று சொல்ல முடியாத மயக்கப் பொழுது அது.

    வயிற்றைக் கெடுக்கும் வண்டிகள் கூடக் கடற்கரையில் குறைவாகவே இருந்தன. சுண்டல் விற்கிறேன் பேர்வழி என்று சின்னஞ் சிறுசுகளின் கொஞ்சல்களைக் கடைக்கண்ணால் இரசித்துக் கொண்டிருந்தார்கள் சுண்டல் பையன்கள். கையும் நிரம்பாமல் நடக்கவும் முடியாமல் சோம்பல் தனமாய்ப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது ஒரு பட்டாளம்!

    வருங்கால கவாஸ்கர்களும், கபில்தேவ்களும் கடற்கரைக்குள் இருக்கும் சாலைப் பகுதிகளைச் சேப்பாக்கங்களாக எண்ணிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். பேட்ஸ்மேன்கள் வெளிச்சம் போதவில்லை என்று அம்பயர்களிடம் முறையிடாமல் முடிந்தவரை ‘காஜி' அடித்துக் கொண்டிருந்தார்கள்.

    கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் சாலைவிதிகளை மீறிக்கொண்டு வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன.

    உலகின் இரண்டாவது அழகான கடற்கரையை நாலாந்தரக் கடற்கரையாக மாற்றுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டதைப் போல் சிலர் நடந்து கொண்டார்கள்.

    இடையின்மீது இருந்த ஒரு காதலனின் கை வேறு பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

    வேலை நிறுத்தம் செய்த மேகங்கள் கடற்கரைக்கு வந்திருந்த சிலரையும் பயங்காட்டிக் கொண்டிருந்தன.

    இதோ -

    இந்தக் காட்சிகளின் நடுவே கொத்தி எடுக்கிற மாதிரி இரண்டு அழகான அபூர்வப் படைப்புகள் இருக்கின்றனவே கொஞ்சம் கவனிப்போமா?

    ஒருத்தி முக்கியமானவர். பெயர் மணிமொழி. கூட இருப்பவள் யார்? எழிலரசி. அவளது பக்கத்து வீட்டுத் தோழி.

    இந்த அந்திப் பொழுதில் இவர்களிருவருக்கும் இங்கு என்ன வேலை?

    எழிலரசிக்குத் தன் மாமியார் நாத்தனார் படுத்தும் பாடுகளையெல்லாம் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டிருக்கிறது. புகார்ப் பட்டியலை வாசித்தால் மணிமொழி ஏதேனும் சில வழிகளைச் சொல்லித் தரக்கூடும். அதோடு கொஞ்சம் அனுதாபத்தோடு எதையும் கேட்பாள். ஆறுதலும் சொல்வாள். பக்கத்தில் சாந்தோமில்தான் வீடு. நடந்தே வந்து விட்டிருக்கிறார்கள்.

    மணிமொழிக்கு எக்ஸலண்ட் எலக்ட்ரிகல் ஒயர் மேனு பேக்சரிங் கம்பெனியில் வேலை. கம்பெனியா அது? பெரிய கடல். முதலாளி கதிரொளியின் பர்சனல் அஸிஸ்டெண்ட் அவள். கதைகளில் படித்து, சிவப்பு ரோஜாக்கள் பார்த்து, முதலாளி - ஸ்டெனோ உறவு என்றாலே சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

    பி.எஸ்.ஸி பட்டதாரி, சிபாரிசு தேவையற்ற அவளது முக அழகிற்கு முதல் இன்டர்வியூலேயே வேலை கிடைத்துவிட்டது. முதலில் கிளார்க் வேலைதான். ஆனால் அவளது புத்திசாலித்தனமும் அவளது அழகும் அவளுக்கு விரைவிலேயே பதவி உயர்வை வாங்கித் தந்தது. பர்சனல் அசிஸ்டெண்ட் வேலைதான்.

    எழிலரசி மாமியார் புராணத்தை முடித்து நாத்தனார் புராணத்தை ஆரம்பித்திருந்தாள். மணிமொழிக்கு அலுப்புத் தட்டினாலும் தனக்கு இது வருங்காலத்தில் பாடமாக இருக்கும் என்று எண்ணியபடி கேட்டுக் கொண்டிருந்தாள். எவ்வளவோ பேரை விட்டு விட்டுத் தன்னிடம் கூறி ஆறுதல் பெற எண்ணிய அந்த நைந்த அவள் உள்ளத்தைப் புறக்கணித்துப் புண்படுத்த விரும்பவில்லை. காது அவள் வார்த்தைகளை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தபோதும் மணிமொழியின் கண்கள் மட்டும் சற்றுச் சுழன்று வேறு திசையில் அடிக்கொரு முறை பார்த்துக் கொண்டிருந்தன.

    திடீரென்று அவள் கண்கள் அகல விரிந்தன.

    டாட்சன் கார் ஒன்றிலிருந்து கதிரொளி இறங்கிக் கொண்டிருந்தார். முன்சீட்டிலிருந்து வேறு ஒருவன் இறங்கினான்.

    கடந்த மூன்று வருட அனுபவத்தில் கதிரொளியின் நெருங்கிய உறவினர்கள் முதல், நண்பர்கள், தொழில் தொடர்பானவர்கள் வரை அத்தனை பேரையும் அவளுக்குத் தெரியும். ஆனால் இவர் - புதியவர்.

    முற்றிலும் புதியவர்.

    மணிமொழியின் பார்வை நிலைத்து ஒரே திசையைக் கவனிக்க ஆரம்பித்ததும் எழிலரசியும் தன் பேச்சை நிறுத்தியபடி அந்தத் திசையை நோக்கிப் பார்த்தாள்.

    மணிமொழி எதைப் பார்க்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க நேரம் ஆகவில்லை. அவளது ஊகங்கள் பலவாக ஆக வேறு ஒன்றும் அங்கு காணப்படவில்லை.

    கதிரொளியும் புதியவரும் மண்ணை நோக்கி நடக்க, டிரைவர் இரண்டு நாற்காலிகளை டிக்கியிலிருந்து எடுத்துக் கொண்டு பின்னாலே நடந்தான்.

    ஏய் மணிமொழி, என்ன அப்படிப் பார்க்கிறாய்?

    அவர்தான் என் முதலாளி.

    அவள் குரலில் கொஞ்சம் பெருமை கலந்திருந்தது.

    யார்? பேண்ட்டும் சர்ட்டுமாய் வருகிறாரே அவரா?

    ஆமாம்.

    கூட வருபவர்?

    தெரியவில்லை

    என்னடி, உங்கள் முதலாளி கடற்கரைக்குக்கூட நாற்காலியெல்லாம் கொண்டு வருகிறார்? கொஞ்சம் கேலித்தொனியில் கேட்டாள் எழிலரசி.

    சீ பாவம்! அவரைக் கேலி செய்யாதே! அவருக்கு மூலத் தொந்தரவு, நாற்காலி போட்டு அதில் வெங்காயத்தோல் திண்டு இட்டு அதில்தான் அவரால் அமரமுடியும்.

    பணக்கார வியாதி என்று சொல்.

    போதும் உன் கேலி!

    மணிமொழியின் வாய் போலித்தனமாய் செயல்பட்டுக் கொண்டிருந்ததே தவிர அவள் எண்ணமெல்லாம் அந்தப் புதியவரைப் பற்றியே இருந்தது.

    'யார் அவர்?'

    ‘சீ! யார் அவன்?’

    ‘அவனைப் பார்த்தால் நல்லவனாகத் தெரியவில்லையே!'

    தன் மனைவியை வேறோர் ஆடவனுடன் பார்த்த கணவனுக்கு ஏற்படும் உணர்வுகளே அவளுக்குத் தோன்றின.

    கதிரொளி அவனிடம் ஏதோ சிரித்துக் கொண்டே கூறியபோது அவளுக்குப் பொறாமையாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

    ஏய் மணிமொழி! போய்ப் பேசேன்!

    அவள் சிந்தனை பலவாறாக வேலை செய்தது.

    'பேசலாமா வேண்டாமா? பேசுகிற சாக்கில் அந்தப் புதியவனைப் பற்றித் தெரிந்து கொண்டு விடலாம்.'

    'விரும்புவாரோ மாட்டாரோ?’

    'ஏன் வந்தாய் என்று கேட்டால் பிள்ளையார் சுழி போட்டு அனைத்தையும் சொல்லியாக வேண்டும். சொல்லாவிட்டால் ஏன் தனியாக அமர்ந்திருக்கிறீர்கள்? இங்கு வந்து அமருங்கள் என்பார். எழிலரசியோ நானோ விரும்பத் தகாத சூழ்நிலையை உருவாக்கிவிடும். நான் கொண்டுபோய் வீட்டில் இறக்கி விடுகிறேன் என்பார். உன் வீட்டைப் பார்க்கலாமா? என்பார். கட்டிவரும் புடவைகளையும் என் தோற்றத்தையும் வைத்து என்னைப்பற்றி உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறார். என் வீட்டையோ என் சித்தியையோ பார்த்தால் அல்லது என் அண்ணனைப் பற்றி அறிய நேர்ந்தால் அவரது நினைப்பெல்லாம் தரைமட்டம் ஆகிவிடும்' மணிமொழியின் சிந்தனைகள் இப்படி ஓட...

    ஏய், நான் சொன்னது காதில் விழுந்ததா?

    எழிலரசி மீண்டும் கேட்க, எண்ண உலகிலிருந்து கடற்கரைக்குத் திரும்பினாள் மணிமொழி.

    வேண்டாம்.

    சரி போ, எனக்கென்ன?

    நாத்தனார் புராணத்தின் நடு அத்தியாயம் பிரசங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது

    வாடி கொஞ்சம் தள்ளிப் போய் உட்காரலாம். பார்த்தால் விடமாட்டார்.

    மறுப்புச் சொல்லாமல் எழுந்தாள் எழிலரசி.

    கொஞ்ச தூரம் நடந்து சென்று அமர்ந்து கொண்டார்கள்.

    கதிரொளியால் நிச்சயமாய் அவர்களைப் பார்க்க முடியாது. ஆனால் அவள் முன்னதாகவே அடையாளம் கண்டு கொண்டதால் அவர்கள் ஒவ்வோர் அசைவும் அவளுக்குத் தெரிந்தது.

    நன்கு இருட்டி விட்டது. எங்கேயோ தெரிந்த சில விளக்குகளின் வெளிச்சத்தில் உருவங்கள் மங்கலாய்த் தெரிந்தன.

    எழிலரசி மங்களம் பாட, மணிமொழி ஏதோ அறிவுரைகள் கூற, புறப்படலாம் என அவர்கள் எழுந்தபோதுதான் ஒரு வியப்பான சம்பவம் நடந்தது.

    ஓர் அம்பாசிடர் காரில் இருந்து மூன்று பேர் இறங்கினார்கள், கதிரொளியை நோக்கி நடந்தார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1